இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 35

January 28, 2024

வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்த நூல் சாட்சி

 
கீழவெண்மணிக்கு சென்று அந்தப் போராட்டக் களத்தின் எஞ்சிய சாட்சியாக இருக்கும் தோழர் கோ.பழனிவேல் அவர்களை ஆளுநர் சந்திக்க இருப்பதாக செய்திகள் கசிவதையும்

தோழர் பழனிவேல் ஆளுனரைச் சந்திக்க தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள செய்தியையும் 28.01.2024 அன்று காலை நான் வாசித்ததும்


”மரிச்ஜாப்பி” நூலை எழுதிய தோழர் ஹரிலால் நாத் அவர்களின் முன்னுரையையும்
அதன் தமிழ் பெயர்ப்பாளர் தோழர் ஞா.சதீஸ்வரன் அவர்களின் முன்னுரையும்




இன்று இரவு வாசித்ததும் மிகவும் தற்செயலாகத்தான்
இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதையும், 
இன்றைய தீக்கதிரில் வந்த செய்தியை மிக எச்சரிக்கையோடு இடதுசாரிகள் அணுக வேண்டும் என்று இந்த இரண்டு முன்னுரைகளும் நமக்கு தருவதையும் என்னால் உணர முடிகிறது
‘மரிச்ஜாப்பி’ தமிழில் வருவதற்கு திருவாரூரில் நடந்த ஒரு படிப்பு வட்டத்தில் நடந்த ஒரு உரையாடலில் ஒரு குழந்தைக் கேட்ட ஒரு கேள்விதான் காரணமென்பது சில கோரிக்கைகளை நம்மிடம் வைக்கிறது
திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு படிப்பு வட்டத்தை நமது பிள்ளைகள் நடத்தி வருகிறார்கள்
ஒரு நாள் “கீழவெண்மணி” குறித்து உரையாடல் நடக்கிறது
அப்போது ஒரு குழந்தை “மரிச்ஜாப்பி”யில் லட்சக்கணக்கான அகதிகளை அன்றைய இடதுசாரி அரசாங்கம் கொன்று அழித்ததாமே என்ற ஒரு கேள்வியை வைக்கிறார்
அதுவரை,
அங்கிருந்தவர்களில் பலருக்கு மரிச்ஜாப்பி என்றால் என்னவென்றே தெரியாது
ஆக அந்தக் கேள்விதான் தோழர் சத்தீஸ்வரனை இதுநோக்கி உந்துகிறது
அந்தக் கேள்விதான் இந்த நூல் தமிழில் வருவதற்கு காரணமாக அமைகிறது
மாநிலத்தில் மம்தா அரசங்கமும்,
ஒன்றியத்தில் பாஜக அரசாங்கமும் வந்த பிறகு
மேற்கு வங்கத்தில் மரிச்ஜாப்பியில் அகதிகளை கொன்று அழித்ததாக குவியல் குவியலாக புனைந்து எழுதப்பட்ட வதந்திகள்தான் தோழர் ஹரிலால் நாத் அவர்களை இந்த நூலை எழுதத் தூண்டியது
ஆக வதந்திகள் இந்த மூல நூலையும்
வதந்திகளைக் குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்வி நூலின் தமிழாக்கத்தையும் கொண்டு வந்திருக்கிறது
வதந்திகளை கருத்தியல் ரீதியாக எப்படி எதிர்கொள்வது?
என்பதற்கு இந்த நூல் சாட்சி
உரையாடல்களை, கேள்விகளை ஊக்கப்படுத்துவோம்
ரவி கீழவெண்மணிக்குப் போக நினைப்பது என்பதே நாம் எச்சரிக்கையோடு அதன் வரலாற்றினை இன்னும் பேரதிகமாக உரத்து பேச வேண்டும் என்பதையும்  நமக்கு உணர்த்துகிறது 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2024 08:59

“ஒங்கமேல கோவங்கோவமா வருது அங்கிள்”

 
இப்போதெல்லாம் லேஷந்த் சார் மீண்டும் அடிக்கடி வீட்டிற்கு வருகிறார்

வீடே வெளிச்சமாகிறது

“ஒங்கமேல கோவங்கோவமா வருது அங்கிள்”

ஏன் சாமி?

”பின்ன, ஒங்களுக்கு மட்டும் சண்டே, மண்டே, ட்யூஸ்டே, எல்லா டேசும் லீவு தராங்க” 

கோவங்கோவமா = பொறாம பொறாமையா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2024 04:09

சுந்தர சோழன்

 
சுந்தர சோழன்
12/44 முதல் தளம்
தென் மேற்கு போக் சாலை
தி நகர்
சென்னை 600017
9840035470
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2024 04:02

January 27, 2024

38

 

வெளிச்சமாக இருக்கிறது எங்கும்
சர்ப்பம் தோலுரித்துபுதுத்தோல் எடுப்பதுபோல்
உன் பாசுர சுவர்உரசியுரசிஎன்னை உரித்துபுது நானான எனக்கு
வெளிச்சமும் வெப்பமும்கூச்சத்தையும் எரிச்சலையும் தருகிறது
கொஞ்சம் இருட்டாக வா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2024 21:07

January 26, 2024

39

 
நீ தந்த தண்ணீரில்
வளர்ந்தது
நீ தந்த தாகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2024 22:22

அது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான்

 

பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் “சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்” என்ற நூலின் தோழர் த.நீதிராஜன் அவர்கள் மொழிபெயர்க்க சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டிருக்கிறதுதனது மொழிபெயர்ப்பிற்கான தனது முன்னுரையில் தோழர் நீதிமணி சொல்பவற்றில் இரண்டு முக்கியமானவைஹிட்லர் இரண்டாம்தர மக்கள் என்று வகைப்படுத்திக் கொன்ற மக்களில் யூதர்களோடு ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உண்டு என்பது ஒன்றுஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சாதிய சமூகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஓடிப்போன இந்திய மக்களில் ஜெர்மனுக்கு போனவர்கள் அவர்கள்இரண்டாவதாக அவர் கூறுவது மிக முக்கியமானதுஇந்திய சனாதனத்தின் ஜூனியர்தான் நாஜிசம்சாதியாய் வகைப்படுத்தி இரண்டாந்தர மக்களாக சேரிக்குள் மக்களை அடைத்து வைக்கும் இந்தியக் கருத்தியல்தான் சனாதனம்இப்படித்தான் ஹிட்லரும் யூதர்களை செய்தான்இந்திய சனாதனத்தால் இந்தக் கருத்தியலை நிரந்தரப்படுத்த முடிந்ததுஅது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான் மிக நல்ல நூல்இப்போது எந்தப் பதிப்பகத்தின் வழி கிடைக்கிறது என்று தெரியவில்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2024 10:03

எத்தனை முறை யெச்சூரி திருச்சி வந்திருப்பார்

 

காலையில் இருந்து அன்ன ஆகாரம் ஏதும் இல்லைஎழுந்தால்தானேமுடியவில்லைஅதிகாலை விக்டோரியாவை பேர்ந்து ஏற்றிவிட்டு வந்து படுத்தால்ஜிகு ஜிகுவென்று ஜுரம்சளியால் தொண்டையில் சன்னமாக சிக்கல்திருச்சி மாவட்ட CPM செயலாளர் ஜெயசீலன் அழைத்துஇன்று நடைபெறும் விசிக மாநாட்டில் தோழர் யெச்சூரி உரையை மொழிபெயர்க்க வந்துடுமாறு அழைக்கிறார்நிலைமையை சொல்கிறேன்எத்தனை முறை யெச்சூரி திருச்சி வந்திருப்பார்உடம்பும் தொண்டையும் சரியில்லாதபோதுதான் அழைப்பு வர வேண்டுமா?இப்படி ஒரு வாய்ப்பு வரும்போதுதான் உடம்பு பழுதாக வேண்டுமா?என்னமோ போங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2024 02:13

January 25, 2024

40

 
யாரோ ஒருவன்
கொஞ்சம் கடல் அள்ளிகொண்டைக் கடலையாக்க
யாரோ ஒருவன்கொண்டைக் கடலையானஅந்தக் கொஞ்சம் கடலை சுண்டலாக்க
யாரோ ஒருவன்சுண்டலானஅந்தக் கொஞ்சம் கடலைஒருவாளியில் அடைக்க
கடல் பார்க்கப்போன நான்
பத்து ரூபாய்க்கு வாங்கியஒரு பொட்டல்ம்சுண்டலெனும் கொஞ்சம் கடலை
தின்னுவதாபருகுவதாகுழப்பத்தில் நிற்கிறேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2024 18:52

மயில்போல பொண்ணு ஒன்னு

 
மயில்போல
பொண்ணு ஒன்னு

ஏந்தாயிஏந்தாயி இப்படி



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2024 09:47

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.