இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 34
February 4, 2024
32
சிராய்ப்புத்
தழும்புகளின்
அழகை
ரசிப்போம்
சிராய்த்தவர்கள்
ஆசிர்வதிக்கப்படட்டும்
Published on February 04, 2024 23:40
நம்பிக்கையோடு எழுதுவோம்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இரவில் நானும் பொன்மலை ராஜாவும் கவிஞர் கௌதமனை அவர் வீடு சென்று சந்திக்கிறோம்அற்புதமான கவிஞர்அவரது கவிதைகள் குறித்து பேசுவதற்காக இப்போது அவரை நினைக்கவில்லை“எண்பது கோடியில் இவனும் ஒருவன்” என்ற அவரது கவிதை நூலுக்கான முன்னுரையில் அவர் வைத்திருந்த இரண்டு மூன்று வரிகளே அவரை இப்போது நினைவுபடுத்தியதுஎங்காவது தான் காணும் சமூக அவலங்களை ‘லெட்டர் டு தெ எடிட்டர்’ பகுதிக்கு எழுதுவதுபோல்தான் தனது கவிதைகள் என்று சொல்லி இருப்பார்அன்றில் இருந்து அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன்நம்முடைய இலக்கிய அந்தஸ்து அவ்வளவுதான்சென்ற டிசம்பர் இறுதியில் காரைக்குடியில் கும்பல் கும்பலாக குழந்தைகள் பிச்சை எடுப்பதைப் பார்த்து நொந்தவனாக முகநூல், ட்விட்டர், ப்ளாக், பேசக் கிடைப்பவர்கள் என்று கத்திக் கொண்டே இருந்தேன்நான் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை03.02.2024 அன்று மீண்டும் காரைக்குடி செல்கிறேன்பிச்சை எடுக்கும் எந்தக் குழந்தையும் என் கண்ணில் படவில்லைCITU ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான தோழர் வெங்கட்டிடம் கேட்டபோது பத்துப் பதினைந்து நாட்களாகவே தனது கண்ணில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் தட்டுப்படவில்லை என்கிறார்அப்படி ஒரு மகிழ்ச்சிஇடையில் ஒரு செய்தி கிடைத்ததுDRO வாக இருக்கும் திருமிகு ரேவதி அவர்கள் இந்தப் பதிவைப் படித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்அவர் நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் கூறியதாகவும் தகவல் கிட்டியது அவர் விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் வரவுள்ளவர்எப்படி வாழ்த்துவதுஒன்றுதான்எழுதுவோம்நம்பிக்கையோடு எழுதுவோம்படவேண்டியவர்கள் கண்களில் பட்டால் நல்லது நடக்கும்All reactions:
Published on February 04, 2024 22:34
33
மழையில் நனைந்து கொண்டே
அழுவதில் ஒரு சௌகர்யம்
ஏன் நனைகிறாய் என்றுதான்
கேள்வி வரும்
Published on February 04, 2024 00:34
February 3, 2024
இதை விஜய் தெளிவுப் படுத்தட்டும்
தான் “தமிழ் நாடு” என்று சொல்லப் போவதில்லைஎன்றும்
ஏன் எனில் இது நாடு அல்ல என்றும்தான் தமிழகம் என்று அழைப்பதைப் போலவே
மக்களும் ”தமிழகம்” என்றுதான் அழைக்க வேண்டும் என்று ஆளுனர் ரவி கூறினார்சென்ற ஆண்டு குடியரசுதின விழா தேநீர் விருந்திற்கான அழைப்பிதழில்கூட“தமிழக ஆளுனர்” அழைப்பதாகத்தான் அச்சடித்திருந்தார்மக்கள் கொதித்தப் பிறகு அதை மாற்றினார்அது விஷயத்தில் தன்னையும் மாற்றிக் கொண்டார்ஆளுனர் பயந்து பின்வாங்கிய விஷயத்தை விஜய் கையெடுக்கிறார்ஆளுனர் “தமிழகம்” என்றதற்குப் பின்னால் ஒரு சித்தாந்தம் இருந்ததுஅது தமிழர்களுக்கு எதிரான சித்தாந்தம்மூன்று இருக்கின்றனஅந்த சித்தாந்தத்தோடு விஜயும் உடன்படுகிறார் என்பது ஒன்றுதன்னால் முடியாததை விஜயை வைத்து ஆளுனர் முயற்சிக்கிறார்அல்லது,ஆளுனரால் முடியாததை விஜய் முயற்சித்துப் பார்க்கிறார் என்பது இரண்டுஏதோ ஒரு ப்ளோவில் இந்தப் பெயர் வந்துவிட்டது என்பது மூன்றுஇதை விஜய் தெளிவுப் படுத்தட்டும்மற்றபடி நடிகர் அரசிலுக்கு வரலாமா? என்பதெல்லாம் அபத்தம்இயங்கட்டும் அதை விமர்சிக்கலாம்All reactions
Published on February 03, 2024 21:39
February 1, 2024
34
ஏதோஏழெட்டு நாட்களுக்கு முன்பேவிடிந்தது போல்நீளமாய் நகர்கிறது எனது இன்று
ஒரு மணி போராட்டத்தில்ஒரு நொடி நகர்கிறது
அழுத்த அழுத்தகண்களை உடைத்துவிட வேண்டாமெனமரமல்லி மரம் போகிறேன்
நாலைந்து பூக்களைத் தலை சிரிந்துஆறுதலிக்கும் அந்த மரத்தாயைஅண்ணாந்து பார்க்கும் அந்தப் புள்ளியில்
காம்பைப் பிரிகிறது ஒரு பூ
காம்புகளைப்பிரியும்தான் பூக்கள்
ஆனாலும்
அந்தப் பூவைஅது காம்பைப் பிரியும்போதுபார்த்திருக்க வேண்டாம்
Published on February 01, 2024 20:00
January 31, 2024
January 30, 2024
January 29, 2024
இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது
”இந்த மனிதனுக்கு இயற்கையான மரணம் கிடைத்துவிடக் கூடாது என்ற வெறி என் நெஞ்சில் எழுந்தது” என்று
தனது வாக்குமூலத்தில் கோட்சே கூறியதாக தனது “கோட்சேயின் குருமார்கள் நூலின் 38 வது பக்கத்தில் தோழர் அருணன் கூறுகிறார்
ஏன் அந்தக் கிழவன் மீது இவ்வளவு வன்மம் அவனுக்கு?
அதற்கான காரணத்தையும் அவன் தனது வாக்குமூலத்தில் கூறுகிறான்
அதையும் தோழர் அருணன் அதே நூலின் 37 வது பக்கத்தில் வைத்திருக்கிறார்
இந்த தேசத்திற்கு காந்தி துரோகம் செய்துவிட்டதாகப் பொதுவான குற்றச்சாட்டை வைக்கும் அவன் அவர்மீது நான்கு குற்றச்சாட்டுகளை வைக்கிறான்
1 இந்தியை தேசிய மொழியாக முன்மொழிந்துவந்த காந்தி இஸ்லாமியர்களை திருப்த்திப்படுத்துவதற்காக இந்துஸ்தானியை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்
2 வந்தேமாதரம் பாடலை அவர் விரும்பவில்லை
3 பசு பாதுகாப்பிற்காக வாய்கிழிய பேசும் காந்தி உருப்படியாக எதுவும் செய்யவில்லை
4 அவரது உண்ணாவிரதங்கள் இந்துக்களை மிரட்டவும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவுமே இருக்கின்றன
ஆக, காந்தியின் கொலையில் மொழியும் உண்டு என்பது தெளிவாகிறது
இது குறித்தான ஒரு கட்டுரையை எனது “காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” நூலில் வைத்திருக்கிறேன்
மற்றக் குற்றச்சாட்டுகளே RSS அமைப்பின் இன்றைய கொள்கை நீட்சியாக உள்ளன
14.01.1948 அன்று காந்தியாரின் உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்
அன்று அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களில் படேலும் ஒருவர்
வந்தவர்கள் யாரும் காந்தியின் கோரிக்கையை (55 கோடி) ஏற்கவில்லை
காந்தியிடம் படேல் அவர்கள் கொஞ்சம் கோவப்பட்டதாகவே தோழர் அருணன்வழி நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது
நம்பிக்கை இழந்த கிழவன்
“நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல” என்று கூறுகிறார்
30.01.1948 அன்று பிற்பகல் காந்தியை கடைசியாக சந்திக்க வந்தவர் படேல்
“இப்போது நீங்கள் என்னைப் போகவிட வேண்டும்” என்று படேலிடம் விடைபெற்றுக்கொண்டு பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் புறப்படுகிறார்
சற்று நேரத்தில் அனைவரிடம் இருந்தும் அவரை விடைபெறச் செய்தான் கோட்சே
”நான் அறிந்திருந்த சர்தார் நீங்கள் அல்ல”
காந்தியின் இந்த சொற்கள் படேலின் இறுதி மூச்சுவரை அவரது காதில் ஒலித்துக் கொண்டேதான் இருந்திருக்கும்
இது RSS செயல் என்று நேரு சொன்னதைக்கூட விட்டுவிடலாம்
முள்ளாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரபிரசாத் அவர்கள் 13.10.1948 அன்று அன்றைய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்
அந்தக் கடிதத்தில் காந்தியைக் கொன்றவர்கள் வைக்கிற வாதங்கள் தம்மை காயப்படுத்துவதாகவும், கொலையாளியை ஒரு வீரநாயகனாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறுகிறார்
மே 14 அன்றும் அவர் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்
அதில்,
RSS கலகத்தை இஸ்லாமிய உடை அணிந்து நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தன்னிடம் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்
இதை கூறியவர் ராஜேந்திரப்பிரசாத்
இவை எல்லாம் நடக்கத் தொடங்கி இருக்கின்றன
இந்து ஆலயங்களி இறைச்சித் துண்டை வீசிவிட்டு இஸ்லாமியர்கள் வீசியதாகவும்
தங்கள் வீடுகளுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பழியை இஸ்லாமியர்கள்மீது போடுவதையும் செய்வதுகூட
ராஜேந்திரபிரசாத் அவர்கள் சொன்னதன் நீட்சிதான்
நல்வாய்ப்பாக இவர்கள் அவர்களாகவே அம்பலப்பட்டுப் போவதுதான்
வாக்குமூலத்தில்
சுதந்திரத்திற்கு காந்தி காரணமல்ல என்று கோட்சே கூறுகிறான்
அவனது பட்டியலில் படேலின் சகோதரர் விதல்பாய் படேலின் பெயரும் இருந்தது
அவன் அப்படிக் கூறுகிறான்
ரவியும் காந்தி காரணமல்ல என்கிறார். இப்பைப் பச்சையாக சொல்லமுடியாது என்பதால் காந்தி மட்டுமல்ல போசும்தான் என்கிறார்
03.02.1948 இல் இரண்டு காரணங்களுக்காக படேல் ராஜினாமா செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்
1 ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ஒரு வாசகர் காந்தியைக் காக்கத் தவறிய படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது
2 இதுகுறித்த தோழர் சுந்தரய்யாவின் பேச்சு
ஆக, கோட்சே என்ற RSS காரனால் காந்தி கொலைசெய்யப்பாட்டார் என்பது தெளிவு
அவன் விரும்பிய மதவெறிகொண்ட ஆட்சிக்கான பாசிச சக்திகள் இப்போது முயற்சி செய்து வருகிறார்கள்
அன்போடும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டியும் எதிர்கொள்வோம்

Published on January 29, 2024 22:41
“மாப்ள பேச்சைக் கேட்க வந்தீங்களா சார்”

தோழர் முத்துமாறன் ஒரு பேராசிரியர். ஆர்வத்தோடு இயங்கக்கூடியவர். எந்த நேரமும் புன்னகைத்தபடியே இருப்பவர்
27.01.2024 அன்று நடந்த புத்தகத் அறிமுகக் கூட்டத்தில் அவரும் உரையாற்றினார்
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் ”இவர் என் மாமனார்” என்று அவரை அறிமுகப் படுத்துகிறார்
வணங்கிவிட்டு, “மாப்ள பேச்சைக் கேட்க வந்தீங்களா சார்” என்று கிண்டலாக கேட்கிறேன்
“தான் எங்குப் பேசப் போனாலும் கேட்கத் தனது மாமனார் வந்துவிடுவார் என்ற செய்தியை அப்படி ஒரு மலர்ச்சியோடு முத்துமாறன் சொல்ல
அவர் பேசறது கேட்கப் பிடிக்கும் என்று சொல்லும்போது தோழர் முத்துமாறன் மாமனார் முகத்திலும் மலர்ச்சி
இது அபூர்வமாக வாய்ப்பது
இப்படியே மகிழ்ந்திருங்க
Published on January 29, 2024 06:36
January 28, 2024
37
அந்திக் கருக்கையில்
வெளிச்சத்தை
அள்ளிக்கொள்ள வேண்டுமென்ற
ஆதி நிபந்தனையோடுஎன் சாட்சியாகதாங்கள்நிழல் உலர்த்தும் இடம்போகமீதித் தோப்பைதன் வெளிச்சத்தை உலர்த்திக் கொள்வதற்கானசூரியனோடான ஒத்தியைநீட்டித்துக் கொண்டதுமூத்த மரம்
Published on January 28, 2024 20:31
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)