இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 30

April 13, 2024

இளைஞர்கள் இல்லாப் பாலக்கட்டைகளை …

மக்கு உரிய, நியாயமான, உரிமையான நிதிப் பங்கீட்டைக்கூட ஒன்றிய அரசு பிடிவாதமாக வழங்க மறுக்கிற சூழலில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு அறிக்கையை திமுக அரசு மாமன்றத்தில் வைத்திருக்கிறது.

இந்த வரவு செலவு அறிக்கை குறித்து உரையாடுகிற அளவிற்கு நமக்கு பொருளாதார அறிவு இல்லை எனவே. அதை நாம் செய்யப் போவது இல்லை.1) சமூக நீதி2) கடைக்கோடித் தமிழர் நலன்3) உலகை வெல்லும் இளைய தமிழகம்4) அறிவுசார் பொருளாதாரம்5) மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை6) பசுமைவழிப் பயணம்7) தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்ஆகிய ஏழு நோக்கங்களை மையப்படுத்துகிறது இந்த நிதிநிலை அறிக்கை.2023-2024 ஆம் நிதியாண்டைவிட இந்த ஆண்டின் நிதி வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு 37 ஆயிரத்து 640 கோடி என்ற அளவில் இருந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு 44,907 கோடி என்ற அளவிற்கு நகர்ந்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி என்ற தகவல்களை 20.02.2024 நாளிட்ட ‘தீக்கதிர்’ தருகிறது.இவை ஏன் இப்படி ஆயின? இவற்றை அரசு எப்படி எதிர் கொள்ளப் போகிறது? என்பதெல்லாம் வல்லுனர்கள் பாடு, அரசின் பாடு.ஆனாலும், 3.5 விழுக்காடாக இருக்க வேண்டிய நிதிப்பற்றாக்குறை 3.44 என்கிற அளவிற்குள் கட்டுப்படும் என்று நிதித்துறை செயலர் திரு உதயச்சந்திரன் கூறுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.பொருளாதார அறிவு என்பது ஏறத்தாழ இல்லை என்பதே உண்மை என்றாலும்,1) ஒன்றிய அரசின் வஞ்சகமான அணுகுமுறை கடந்து இரண்டு மிகப் பெரிய பேரிடர்களை எதிர்கொண்டது2) 10 வது நிதிக் குழுவில் 6.64 விழுக்காடாக இருந்த நிதிப் பகிர்வு 15 வது நிதிக் குழுவில் 4.8 விழுக்காடாகக் குறைந்துள்ளதுஎன்ற நிலையில் தமது கைகள் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதாரச் சூழலில்தான் அரசு இந்த வரவு செலவு அறிக்கையை முன்வைக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.அதனால்தான், தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தரப் படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளோடு “சவால்கள் நிறைந்த சூழலிலும் மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கை இது” என்று கூறுகிறார் CPM மாநிலச் செயலாளர் தோழர் K.பாலகிருஷ்ணன்வறுமை ஒழிப்புத் திட்டம், 5000 நீர்நிலைகளைப் புனரமைப்பது, 500 மின் பேருந்துகள், இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை போன்ற திட்டங்கள் குறித்து ஓரளவு நம்மால் பேச முடியும் என்றாலும் இன்னும் தெளிந்தவர்கள் அவற்றைப் பேசுவதற்கு வழிவிட்டு நகர்வோம்.1) அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும் காலைச் சிற்றுண்டி2) அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரைப் படித்த மாணவர்களுக்கும் உயர் கல்விக்காக மாதம் 1,000 ரூபாய்3) மூன்றாம் பாலினத்தவருக்கான கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்பதுஆகியத் திட்டங்கள் குறித்து இரண்டு நியாயமான கோரிக்கைகளோடு கொஞ்சம் உரையாட இருக்கிறது அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டித் திட்டம் என்பது இந்தத் திட்டம் அரசு மற்றும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட நாள்முதல் உள்ள கோரிக்கை.காலைச் சிற்றுண்டியின் அவசியம் குறித்து வெகு காலமாக கோரி வருகிறோம்.மதிய உணவுத் திட்டமாகத் தொடங்கி இன்று சத்துணவுத் திட்டமாக விரிந்துள்ள இந்தத் திட்டம் வருவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறதுஒருமுறை ஒரு பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அன்றைய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு கலந்து கொள்கிறார்அப்போது சில குழந்தைகள் மயக்கம் போட்டு விழுகிறார்கள். அது குறித்து ஆசிரியர்களிடம் அவர் விசாரிக்கிறார். காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் வரும் குழந்தைகள் இப்படி ஒவ்வொரு நாளும் மயக்கம் போட்டு விழுவது வாடிக்கைதான் என்று அறிகிறார்.1) வீட்டில் வசதி இல்லாமை2) வெள்ளனமே பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால் சமைக்க இயலாமைஆகிய காரணங்களால் குழந்தைகள் காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் பள்ளிக்கு வருவதை அவர் புரிந்து கொள்கிறார்.அன்றைய முதல்வரான காமராஜரோடு இது குறித்து உரையாடுகிறார். இருவரும் மற்ற அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக்கிறார்கள். இறுதியாக “மதிய உணவுத் திட்டம்” வருகிறது. பிறகு M.G.R அவர்கள் காலத்தில் ”சத்துணவுத் திட்டம்” என்று அது வளர்கிறது.இந்தத் திட்டங்கள் தமிழ்நாடுப் பள்ளிக் கல்வியில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. இன்றைக்கு மற்ற பல மாநிலங்களைப் போல இல்லாமல் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இந்த இரண்டு திட்டங்களின் பங்களிப்பு என்பது மிக அதிகம்.ஆனால், காலை உணவு எடுக்காததால் குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்ததற்காக மதிய உணவு எப்படி வந்ததது என்பதுதான் நமக்கு விளங்கவே இல்லை. ஆனால் அது மிக நல்ல விளைவுகளைத் தருகிறது என்பதோடு அது அவசியமானது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது..காலை உணவும் அவசியம்தான். மதிய உணவும் அவசியம்தான். ஆனால் காலை உணவின் அவசியம் என்பது மதிய உணவின் அவசியத்தைவிடக் கொஞ்சம் கூடுதலானது. இதை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.தொடர்ந்து இதைக் கேட்டுக் கொண்டே இருந்தோம். முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் இந்த இரண்டு குறித்தும் கவலைகள் இருந்திருக்க வேண்டும்1) காலை உணவு இன்றி பள்ளிக்கு வரும் குழந்தைகளின் உடல் நலன்2) காலை உணவு இல்லாததால் காலை பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகள்இவை அவருக்களித்த வலியின் விளைவாக ”காலை சிற்றுண்டித் திட்டம்” வருகிறது.1) திங்கள் - - - - - ரவை உப்புமா2) செவ்வாய் - - - சேமியாக் கிச்சடி3) புதன் - - - - - - அரிசிப் பொங்கல்4) வியாழன் - - - அரிசி உப்புமா5) வெள்ளி - - - - கோதுமை ரவா கிச்சடி அல்லது உப்புமாஇருபது குழந்தைகளுக்கு ஒரு கிலோ என்ற ரேஷன் அளவில் மிக நல்ல முறையில் செயல்படுகிறது.பல மாவட்டக் கல்வி அலுவலர்களும் முதன்மைக் கல்வி அலுவலர்களும் சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், தரமான சிற்றுண்டி வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் தீவிரமாகக் கண்காணிப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.இது மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தியதோடு அவர்களது உடல் நலனையும் இந்தத் திட்டம் உறுதிப்படுத்தியது.காலை உணவு இல்லாமல் வீடு தங்கும் மாணவர்கள் குண்டு விளையாடுவதில் ஆரம்பித்து சமூகச் சீரழிவுச் செயல்களை நோக்கி நகர்வதில் இருந்து அவர்களைப் பாதுகாத்தது.இப்போது அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது அரசு. இது மிக நல்ல விளைவுகளைத் தரும்.ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களது உயர் கல்விக்காக மாதம் ஆயிரம் ரூபாயை அரசு வழங்கி வருகிறது.இதனால் கல்லூரியில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.இதன் பிரமாண்டமான விளைவு இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் முழுமையாகத் தெரிய வரும்.இப்போது இந்தத் திட்டத்தை ஆண் குழந்தைகளுக்கும் விரிவு செய்திருக்கிறது அரசு.1) கட்டணமில்லாத பள்ளிக் கல்வி2) விலை இல்லாத புத்தகங்கள், நோட்டுகள் மற்ற பொருட்கள்3) விலை இல்லா மிதி வண்டி, கணினிஎன்று பள்ளிக் கல்வியை அவனது உரிமை ஆக்கிய அரசுஅவனது கல்லூரிப் படிப்புக்காக1) கட்டணம் இல்லாப் பேருந்து2) ஸ்காலர்ஷிப்இவற்றோடு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையையும் அறிவித்திருக்கிறது. இது இளைஞர்கள் இல்லாப் பாலக்கட்டைகளை உருவாக்கும்.இன்றைய சமூகச் சீர்கேடுகளுக்கு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் உள்புறங்களில் உள்ள பாலக்கட்டைகளின் பங்களிப்பு என்பது கனமானது.பாலக்கட்டைகளில் இருந்து இளைஞர்களை அப்புறப்படுத்தி விட்டால் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.எல்லா இளைஞர்களும் பாலக்கட்டைகளுக்கு வருகிறார்களா என்றால் இல்லை. பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்கள் மற்றும் பள்ளியோடு கல்வியை நிறுத்திக் கொண்டவர்களிடம் இருந்துதான் பாலக்கட்டைகள் தமக்கான உறுப்பினர்களைக் கண்டெடுக்கின்றன.இப்படியாக படிப்போடு ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு உறவை முறித்துக் கொண்டு, வேலைக்கும் போகாதவர்களிடம் இருந்துதான் தமக்கான சொந்தங்களை பாலக்கட்டைகள் சுவீகரிக்கின்றன.இப்படியாக எந்த நோக்கமும் இல்லாமல் பாலக்கட்டைகளில், மரத்தடிகளில் கூடுகிற குழந்தைகள் பலர் மிக எளிதாக போதைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள்.போதைக்காகவும், தாம் என்ன செய்கிறோம், அதன் பின்விளைவுகள் என்ன என்பது தெரியாமலும் இந்தக் குழந்தைகளில் பலர் தீய சக்திகளோடு கரம்கோர்த்தும் விடுகின்றனர்.அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டம் பிள்ளைகளைக் கல்லூரிகளில் குவிக்க உதவும். பாலக் கட்டைகள் காலியாகும். அதன் விளைவாக குற்ற எண்ணிக்கைகள் குறையும்மூன்றாம் பாலினத்தவர் குறித்த இந்த அரசின் அக்கறை மெச்சத் தக்கது.எல்லாக் குழந்தைகளும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோதான் பிறக்கிறார்கள். வாலிபத்தில் அல்லது வாலிபத்தை நெருங்கும்போதுதான் திருநங்கைகளும் திருநம்பிகளும் அடையாளப் படுகிறார்கள்ஒவ்வொருவரிடத்திலும் ஆண்தன்மையும் இருக்கும், பெண்தன்மையும் இருக்கும்.ஆண் உடலும் ஆண்தன்மை பேரதிகமாகவும் இருந்தால் ஆண். பெண் உடலும் பெண்தன்மை அதிகமாகவும் இருந்தால் பெண். ஆண் உடலில் பெண் தன்மை அதிகம் இருந்தால் திருநங்கை. பெண் உடலில் ஆண் தன்மை இருந்தால் திருநம்பி என்று பொதுவாகக் கொள்ளலாம்.பெண் சிசுக் கொலை என்பது கிட்டத்தட்ட முற்றாக நின்று போயிருக்கிறது. ஆனால் அனைத்து திருநங்கைகளும் தங்களது குடும்பத்தால் ஒதுக்குதலுக்கு ஆளாகிறார்கள். தன் பிள்ளை திருநம்பி என்று தெரிதால் ஒன்று கொன்று விடுவார்கள் அல்லது ஒதுக்கி விடுவார்கள்.இத்தகைய சூழலில் மூன்றாம் பாலினத்தவருக்கான கல்வி உரிமை குறித்த அரசின் திட்டம் வணங்கி வரவேற்பதுக்குரிய ஒன்றுஎனக்கொரு மகன், ஒரு திருநங்கை என்று இயல்பாக பெற்றோர் சொல்லும் சூழலை இது உருவாக உதவும்இவ்வளவும் சொன்னாலும் அரசிடம் நமக்கான இரண்டு கோரிக்கைகள் உள்ளன1) காலைச் சிற்றுண்டியை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவு செய்ததுபோல், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஆண் குழந்தைகளுக்கும் மாதம் 1000 ரூபாய்த் திட்டத்தை விரிவு செய்ய வேண்டும் 2) இத்தகையத் திட்டங்களால் கல்லூரிகளில் ஏற்படும் நெரிசலைத் தடுக்க அரசுக் கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும்- காக்கைச் சிறகினிலே மார்ச் 2024[image error][image error]All reactions:14Varthini Parvatha, அம்பிகா குமரன் and 12 others
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2024 18:37

April 11, 2024

அப்பட்டமான விதி மீறல்கள்

 தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிற பிரதமர் ஆளுனர் மாளிகையில் தங்குகிறார்

அண்ணாமலை இரவு பத்தே முக்கால் மணிக்கு மேலும் பிரச்சாரம் செய்கிறார்தட்டி கேட்பவர்களை அடித்து நொறுக்குகிறார்கள்அப்பட்டமான விதி மீறல்கள்பிரதமர் பிரச்சாரத்திற்கு குறிப்பிட்டகாலத் தடை விதிக்க வேண்டும்அண்ணாமலையை டிஸ்குவாலிஃபை செய்ய வேண்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2024 19:51

கோவத்தைப் புரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை

 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ரௌலட் சட்டம் இயற்றப்படுகிறது

மூன்று நாட்கள் கழித்து 21.03.1919 முதல் அது அமலுக்கு வருகிறதுஅதை எதிர்த்து மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கிறார்கள்அதன் ஒரு பகுதியாக 13.04.1919 அன்று அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்திலும் ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஒரு கூட்டம் நடக்கிறதுஉள்ளே புகுந்த டயர் என்பவன் பைத்தியக்காரன் காக்காவை சுடுவதுபோல மக்களை சுட்டுக் கொள்கிறான்அதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சியின் ஒரு மாநாடு 1920 செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் நடைபெறுகிறதுஅன்னியப் பொருட்களை நிராகரிப்பது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றனஅந்தத் தீர்மானங்களை விளக்குவதற்காக நாடெங்கிலும் கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தியதுஅதிலொரு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில்காந்திஅப்போதுபள்ளி மாணவனாக இருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்களும் காந்தியின் உரையைக் கேட்கப் போகிறார்”காந்தி என்னமா பேசினார், காந்தி என்னமா பேசினார்”என்று புலம்பிக்கொண்டிருந்தவரை அவரது அண்ணான் மகாலிங்கம் ஆவலோடுகாந்தி என்னடா பேசினார்? என்று கேட்கிறார்யாருக்குத் தெரியும்? காலையில் ”இந்து” பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்என்ன பேசினார்னே தெரியாம இவ்வளவு பில்டப்பா என்பது மாதிரி மகாலிங்கம் நக்கல் செய்கிறார்சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இதை வாசித்தபோது நமக்கும் நக்கலாகத்தான் இருந்ததுஎன்ன பேசினார்னு புரியாமல் கொண்டாடுவது என்ன வகை மனோபாவம் என்றுதான் தோன்றியது31.03.2024 அன்று தில்லி ராமலீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிபுசோரன் ஆகியோரது சட்டத்திற்கு புறம்பான கைதினைக் கண்டித்து இந்தியா கூட்டணி நடத்திய கூட்டம் நடந்ததுகல்பனா சிபுசோரன் பேசுகிறார்இறுதியாக “ஜெய் ஹிந்த்” என்று மூன்றுமுறை சொன்னது தவிர எதுவும் புரியவில்லைஎன்ன மொழி என்றும் புரியவில்லைஎட்டு நிமிடமும் வைத்த விழி திருப்பாமல் கவனம் பிசகாமல் கேட்கிறேன்சுனிதா கெஜ்ரிவால் பேசியபோதும் அப்படியேமொழி புரியவில்லைஅவர்கள் கேட்ட நியாயம் புரிகிறதுஅவர்களது ஆதங்கம் புரிகிறதுஅவர்களது கோவம் புரிகிறதுஅடுத்த நாள் சோஷியல் மீடியாக்களிலும் செய்தித் தாள்களிலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தேடுகிறேன்என்ன ஆச்சரியம்எதுவும் புதிதாக இல்லைநேற்று அவர்கள் பேசும்போது என்ன புரிந்து கொண்டேனோ நூல் அளவு கூடவோ குறைவாகவோ இல்லைஅநியாயத்திற்கு எதிரான நியாயத்தின் குரலை,ஆதங்கத்தைகோவத்தைப் புரிந்துகொள்ள மொழி அவசியம் இல்லை என்பது புரிந்ததுஎன்ன எனக்கு அறுபதில் புரிகிற இந்த உண்மை தோழர் P.R அவர்களுக்கு அவரது பள்ளிக் காலத்திலேயே புரிந்திருக்கிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2024 19:44

அந்த பனகல் அரசரின் பெயரில் அமைந்துள்ளதுதான்

 தென்னிந்தியர்கள் பிரிவினைவாதிகள் என்பது மாதிரி வடக்கே பேசிவிட்டு

இங்கு வந்து ஒன்றுமே தெரியாதது மாதிரி ”ரோட் ஷோ” நடத்துகிறீர்களே ஒன்று தெரியுமா,நீங்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படிப் பேசுவீர்கள் என்பது பற்றியெல்லாம் 107 ஆண்டுகளுக்கு முன்னமே எங்கள் தாத்தன்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்20.08.1917கோவையில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடுஎம் பாட்டனார் பனகல் அரசர்தான் தலைவர்”இந்திய நாட்டின் சார்பாகப் பேசும் உரிமையை அவர்களுடையது மட்டுமே என்று கூறும் அவர்கள் நம்மை பிரிவினைவாதிகள் என்று குற்றம் சுமத்துகின்றனர்”போதுமா சார்,இன்னொரு தகவலையும் கேட்டுக் கொள்ளுங்கள்அந்த பனகல் அரசரின் பெயரில் அமைந்துள்ளதுதான் நீங்கள் ஷோவைத் துவக்கிய “பனகல் பார்க்”போங்க சார் போங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2024 00:15

April 10, 2024

004

 

துருப்பிடித்து கதவில் தொங்குகிறதுஅன்று மாலையே திறக்கும் நம்பிக்கையோடுபூட்டப்பட்ட பூட்டு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 20:02

பதில் இருக்குங்களா அண்ணாமலை சார்

 யாரோ ஒருவனைப் பிடிக்கிறீர்கள்

நீங்கள் எதிர்பார்த்ததை அவன் சொல்லவில்லைபிணை மறுக்கிறீர்கள்மீண்டும் விசாரிக்கிறீர்கள்நீங்கள் எதிர்பார்த்ததை அவன் கூறவில்லைமீண்டும் பிணையை மறுக்கிறீர்கள்மீண்டும் மீண்டும்மீண்டும் மீண்டும்விடுகிறோம். அவர் பெயரை சொல்வாயா?ம்பிணையில் விடுகிறீர்கள்கெஜ்ரிவாலுக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சொல்கிறான்கெஜ்ரிவாலை அழைக்கிறீர்கள்கைது செய்வீர்கள் என்று அவர் அறிவார்தேவை எனில் வந்து கைது செய்யட்டும் என்று முடிவெடுத்து வர மறுக்கிறார்வீடு நுழைகிறீர்கள்சோதனை இடுகிறீர்கள்பணம் ஏதும் இல்லைஎந்த ஆதாரமும் சிக்கவில்லைஆனாலும்,உங்களுக்கு கொடுத்ததாகச் சொல்கிறான். ஆகவே கைது செய்கிறோம் என்கிறீர்கள்ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாயோடு பிடிபடுகிறார்கள்பிடிபடுபவர்களுள் ஒருவர் நயினாருடைய உறவினர் என்கிறார்கள்இன்னொருவரிடம் பாஜக அடையாள அட்டை இருக்கிறதுநயினார் அது தனது பணம் இல்லை என்கிறார்அது உண்மையாகவே இருக்கட்டும்சிக்கியவர்கள் அவர் பெயரை சொல்கிறார்கள்சொன்னவன் வாக்குமூலத்தை வைத்து கெஜ்ரிவாலை கைது செய்ய அனுமதிக்கும் தேர்தல் ஆணையம்நயினாரை ஏன் கைது செய்ய மறுக்கிறது?பதில் இருக்குங்களா அண்ணாமலை சார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 05:58

எனில், இந்தியா என்பது என்ன?

 ஏனிப்படி Pro-Dmk வா மாறிப்போன என்று சாடுகிறான்

அவனுக்கிருக்கும் திமுகமீதான ஒவ்வாமைகளில் மிக முக்கியமானது அது தேசிய நீரோட்டத்தின்மீது வெறுப்போடே இருக்கும் என்ற சிந்தனைஇந்தியா என்பது ஒருபோதும் தேசம் அல்ல என்பதையும்எனவே இந்தியத் தேசியம் என்பதே போலியானது என்பதையும் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொள்கிறான்ஆனாலும் அவனுக்கு கேள்வி இருக்கிறதுஎனில், இந்தியா என்பது என்ன?இந்தியா என்பது பல தேசியங்களின் ஒன்றியம் என்பதும் அவனுக்குச் சட்டெனப் புரிகிறதுஎனில், தேசிய இனங்களின் ஒற்றுமையைத்தான் தேச ஒற்றுமை என்கிறார்களா என்கிறான்ஆமாம்அது திமுகவிற்கு இருக்கிறதா?மணிப்பூர் எரிந்தபோது விளையாட்டுப் பயிற்சி எடுக்க முடியாமல் தவித்த வீரர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்தவர் ஸ்டாலின்தான மாப்ளஆமாண்டாஅதுதான் ஒற்றுமைஇதுவரை மோடியோ அமித்ஷாவோ மணிப்பூரே போகவில்லைதானஆமாம்இப்ப சொல்லு நாம யாருகூட நிற்க வேண்டும்திமுகவோடுதான்அதத்தான் மாப்ள செய்கிறோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 05:55

நயினாரும் நான்கு கோடியும்

 திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த ரயிலில் தாம்பரத்தில் வைத்து நான்கு கோடி ரூபாய் பிடிபடுகிறது

மூன்றுபேர் கைது செய்யப்படுகிறார்கள்அதில் ஒருவர் பாஜக உறுப்பினர்ஒருவர் திரு நயினார் நாகேந்திரன் உறவினர்பிடிபட்டவர்கள்,அந்தப் பணம் நயினார் அவர்களது விடுதியி இருந்து கொண்டுவரப் பட்டதாகவும்நயினாருக்கு கொண்டு செல்வதாகவும் சொல்கிறார்கள்போக,இவர்களாது ரயில் டிக்கட் முன்பதிவில் நயினாரின் மின்னஞ்சல் பயன்பட்டிருக்கிறதுஅது தனது பணம் அல்ல என்கிறார் நயினார்அவர் அப்படித்தான் சொல்ல வேண்டும்அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளிக்கிறதுஇத்தனை நாள் கழித்து திருநெல்வேலி தேர்தல் ஆணையம் இதுவரை அதுகுறித்து எந்தத் தகவலையும் வருமானவரித் துறை தங்களுக்கு தரவில்லை என்பதால் தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதென்றும் கூறுகிறதுundemacraticஎன் வாக்கு பாஜகவிற்கு இல்லைஇதுகுறித்து குரல் கொடுக்காத அதிமுகவிற்கும் இல்லைஇந்தியா கூட்டணி வெல்லட்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 05:48

வெறுப்பை எப்போதும் நிராகரிக்கும் தமிழ்நாடு

நாம் எழுதுவது ஒருபோதும் தமிழ்நாட்டின் எல்லையைக் கடப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்தவனாகவே இருக்கிறேன். 
ஆகவே நாம் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்ற  எனது கோரிக்கையைத் தமிழ் மக்களோடு நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்தவனாகவே இருக்கிறேன். 
ஆகவே பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் என்று என் மக்களிடத்திலே கேட்பது அவசியமற்றது. தமிழர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க மறுப்பதற்குப் பின்னால் உள்ள நியாயங்களை எடுத்து வைக்கவே ஆசைப்படுகிறேன்.
ஏன் தமிழ் மக்கள் எங்களை இப்படி நிராகரிக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று சகோதரி தமிழிசை ஒருமுறை ஆதங்கப்பட்டார். அநேகமாக அது 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்திருந்த நேரம்.
அந்தத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாடு சில பேரிடர்களை சந்தித்திருந்தது. துயரத்தின் இருள் எம் மண்ணையும் மக்களையும் அப்போது கவ்விப் பிடித்திருந்தது.
எம் எளிய மக்கள் கையேந்திக் காத்திருந்தார்கள். பிரதமர் தங்களைப் பார்க்க வருவார். வாஞ்சையோடு தலை கோதி நாலு வார்த்தைப் பேசி ஆறுதல் தருவார். சிதைந்து கிடக்கும் தங்கள் வாழ்க்கையை சீர்செய்து தருவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்.
அவரோ இரண்டே இரண்டு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வதற்குகூட நேரமற்றவராக உலகத் தலைவர்களோடு உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டும், சுயமிகளை எடுத்துக் கொண்டும் இருந்தார்.
இதற்கெல்லாம் தான் ஏன் வரவேண்டும் என்று நேரடியாக அவர் கேட்கவில்லை. ஆனால், தம் மனதில் அப்படியொரு எண்ணம் இருப்பதை எம் மக்களை உணரச் செய்தார்.
காணாமல்போன மீனவர்களைத் தேடுவதற்காக ஒன்றிய அரசிடம் ஹெலிகாப்டர் கேட்டோம். ஓ.பன்னீர் செல்வம் அவர்களது தம்பியைக் காப்பாற்றுவதற்காக ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பியிருந்த ஒன்றிய அரசு மீனவர்களைக் காப்பாற்றுவதற்கெல்லாம் ஹெலிகாப்டரை அனுப்ப இயலாது என்று எங்கள் முகத்தில் தனது இடது கையினால் ஓங்கி அறைந்தது.
அப்போது திருமிகு நிர்மலா சீத்தாராமன் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு ஆணவமானவை. அவரது உடல் மொழி எவ்வளவு இறுமாப்போடு இருந்தது. இவை போதும் இன்னும் ஒரு நூறு தேர்தல்களில் தமிழ்நாட்டில் பாஜக தோற்பதற்கு.
வாய்க்கு வந்ததை எல்லாம் எல்லாம் பேசிக்கொண்டிருந்தார் அன்றைய தமிழ்நாட்டின் பாஜக தலைவரான தமிழிசை. தமிழ் மண்ணின் விழுமியங்களையெல்லாம் கொச்சைப்படுத்திக் கொண்டிருந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பாஜகவிற்கு நல்லதொரு பாடத்தை நடத்திக் காட்டினார்கள். ஆனாலும் பாஜக படிப்பதாக இல்லை.
2019 கு பிறகும் தமிழ்நாடு பேரிடரைச் சந்தித்தது. இப்போது முன்னைக் காட்டிலும் கோரமானதொரு முகத்தை ஒன்றிய அரசு எம்மிடம் காட்டியது.
இதைப் பேரிடர் என்றே வகைப்படுத்த முடியாது என்று அழிச்சாட்டியம் செய்தது ஒன்றிய அரசு. 
மக்களை ஆற்றுப்படுத்த இப்போதும் பிரதமர் வரவில்லை.
ஆறுதலாக ஒரு வார்த்தைப் பேசவில்லை. அப்படியொரு ஈரமற்ற மனநிலையில் அவர் இருந்தார்.
உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்பதைக்கூட மன்னிக்கலாம். உங்களுக்கு ஏன் வழங்க வேண்டும் என்பது மாதிரி அவர்கள் நடந்து கொண்டதை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இன்னொரு பக்கம் திமுக அரசு தன் மக்களைத் தன் உயிரைக் கொடுத்து பாதுகாக்க முயற்சி செய்தது.
முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என்று அனைவரும் களத்தில் மக்களோடு நின்றார்கள். ”இருக்கிறோம், பயப்படாதீர்கள்” என்று நம்பிக்கை அளித்தார்கள். ஓரளவிற்கு தன்னாலான நிவாரணத்தை அளித்தார்கள்.
ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்டால், “கேட்பது பிச்சை, இதுல தோரணையைப் பாரு” என்பது மாதிரி ஒன்றிய நிதி அமைச்சர் ஆணவமாகப் பேசியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் காயப்படுத்தியது.
அப்போது உதயநிதி “அது யாரோட அப்பன் வீட்டுக் காசு” என்று கேட்டதை தமிழ் மக்கள் தங்கள் சொந்தக் குரலாகப் பார்த்தார்கள்.
அதே ஒன்றிய நிதி அமைச்சர் தமிழக அரசு வழங்கிய நிவாரணத்தை “பிச்சை” என்று இங்கு வந்தே பேசிவிட்டு செல்கிறார்.
பேரிடரின் போதான பாஜகவின் அலட்சியமும், தமிழக அரசின் நிவாரணத் தொகையை “பிச்சை” என்று விளித்ததும் மட்டுமே போதும் நாம் பாஜகவை நிராகரிப்பதை நியாயம் என்று கொள்வதற்கு.
ஊழல் என்று பார்த்தாலும் பாஜகவே முதலில் வந்து நிற்கிறது. “தேர்தல் பத்திரம்” ஒன்று போதும் சமீபத்திய பாஜக ஊழலை அமபலப்படுத்த. 
அதானியைத் தொடுமளவிற்கு பங்குபத்திரத்தின் அளவு இருக்குமா என்று தெரியவில்லை. அதானி குறித்த அமெரிக்க விசாரனையின் முடிவு வரட்டும். அவரைப் பற்றி அப்போது பேசலாம். 
இப்போதைக்கு தேர்தல் பத்திரம் ஒன்றே இந்தத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. 
தேர்தல் பத்திரத்தை ஸ்டேட் பேங்க்கை வைத்து வெளியிட்டதே முறைகேடு என்கிறார்கள். 
ஊழலின்  தொடக்கப் புள்ளி இது.
யார் பத்திரத்தை வாங்குகிறார்கள் என்பது ரகசியம். எவ்வளவு தொகைக்கு வாங்குகிறார்கள் என்பது ரகசியம். அதை எந்தக் கட்சிக்கு வழங்குகிறார்கள் என்பது எதைவிடவும் ரகசியம். 
ஆனால் யார், எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரம் வாங்குகிறார்கள் என்பது ஒன்றிய நிதி அமைச்சகத்திற்குத் தெரியும். வாங்கியப் பத்திரத்தை எந்தக் கட்சிக்குக் கொடுக்கிறார்கள் என்பதும் ஒன்றிய நிதி அமைச்சகத்திற்குத் தெரியும்.
எனில், யாரேனும் ஒரு தொழிலதிபர் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரத்தைக் கொடுத்தால் அது ஒன்றிய நிதி அமைச்சகத்திற்குத் தெரிந்துவிடும். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்வதெனில் அது பாஜகவின் மேலிடத்திற்குத் தெரிந்துவிடும்.
பிறகென்ன, அவரை அழைத்து “அன்பாகப் பேசி” தங்களுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாதா? அவர் இணங்க  மறுத்தால் இருக்கவே இருக்கிறது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, இன்னும் சில துறைகள்.
இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் முறைகேடாக சொத்து சேர்த்தவர்களை, லாபம் ஈட்டியவர்களது வீடுகளில் மேற்சொன்ன துறைகளை விட்டு சோதனை செய்வது. அவர்களோடு உரையாடுவது. அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்வது.
அந்த வழக்குகளை அப்படியே கிடப்பில் போடுவது. இது ஒரு வகை.
பெரிய தொழில் அதிபர்களோடு உரையாடுவது. அவர்களிடம் இருந்து கணிசமான தொகைக்கு தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வது. கைமாறாக அவர்களது அளப்பரிய ஒப்பந்தங்களை வழங்குவது என்பது இன்னொரு வகை.
அரசின் கொள்கைகள் சில தொழில் அதிபர்களுக்கு சுருட்டுவதற்கு இடைஞ்சலாக இருக்கும். அவர்களையும் அழைத்து உரையாடுவது. பத்திரங்களைப் பெற்றுக் கொள்வது. அவர்களுக்கு ஏதுவாக அரசின் கொள்கைகளை வளைப்பது அல்லது முற்றாக மாற்றுவது என்பது மற்றுமொரு வகை.
இப்படியாக பாஜக அடித்த கொள்ளை பல்லாயிரம் கோடி.
தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரினால் அரசு மறுத்தது.உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஸ்டேட் பேங்க் கொஞ்சம், விவரங்களை வழங்க தேர்தல் ஆணாஇயம் அதனை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டது.  
இது போதாது, முழுமையான விவரங்களாஇயும் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டன.
”முழு விவரங்களையும் வெளியிட்டால் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று கத்திக் கொண்டிருக்கிற கட்சிகள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்வார்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார்.
இப்படிச் சொல்வதற்கு அவர் வெட்கப்பட்டிருக்க வேண்டும்
தேர்தல் பத்திரத்தின் மூலமாக ஒரு பைசாகூட வாங்காத கட்சிகளே இல்லையா என்ன. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு பைசாகூட பெறவில்லை என்கிறது.
ஊழலிலும் எல்லோரையும் முந்தி முன்னே நிற்கிறது பாஜக என்கிற வகையில் பாஜகவி நிராகரிப்பதற்காக தமிழ் மக்கள் கொஞ்சமும் விசனப்படத் தேவை இல்லை.
ஆன்லைன் ரம்மி சின்னஞ்சிறு இளைஞர்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருந்த சூழலில் அதைத் தடை செய்து மாநில அரசாங்கம் சட்டம் இயற்றுகிறது. ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.
மாநில அரசு ஆன்லைன் சூதினால் பாதிக்கப்பட்ட மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தால் ரவி ஆன்லைன் ரம்மி உரிமையாளர்களை அழைத்து உரையாடிக் கொண்டிருந்தார்.
ஒன்றிய அரசு அவரை நெறிப்படுத்த முயற்சிக்காமல் அவரது செயல்பாடுகளை மகிழ்ந்து ரசித்துக் கொண்டிருந்த்து.
அத்தகைய சூதாட்ட நிறுவனம் ஒன்றின் அதிபர்தான் அதிகத் தொகைக்கான தேர்தல் பத்திரத்தை வழங்கியவர்களில் ஒருவராக இருக்கிறார்.
பாஜகவி நிராகரிப்பதற்காக தமிழ் மக்கள் ஏன் வருத்தப்படப் போகிறார்கள்?
ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்தத் தமிழர்களின் இந்தியக் குடியுரிமைக் கனவில் மண் அள்ளிப்போடும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்களை
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பினைக் கேள்விக்குள்ளாக்கும் அந்தச் சட்டத்தினைக் கொண்டு வந்தவர்களை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.  
சனாதனம் என்பது மேல் கீழ்க் கட்டமைப்பு. அதை அழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசுகிறார்.
உடனே இந்துக்களைக் கொல்லச் சொல்கிறார் உதயநிதி என்று ஒன்றிய நிதி அமைச்சரே கொஞ்சமும் நாகரீகமற்றுப் பேசுவதை தமிழ் மக்கள்  ஒருபோதும் ரசிக்க மாட்டார்கள்.
மக்கள் செல்வாக்கு இல்லாத நிலையில்,
தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் போக்கினை ஒருபோதும் தமிழ் மக்கள் ஏற்பதில்லை. ஆகவே இந்த்த் தேர்தலிலும் அவர்களை நிராகரிப்பதற்காக தமிழ் மக்கள் விசனப்படப் போவதில்லை.
கொரோனோ காலத்து அவர்களது செயல்பாடு அருவெருப்பானது.
தமிழகத்திற்கு உரிய ஊசி மருந்தைத் தரவில்லை. நாங்களே தயாரித்துக் கொள்கிறோம் என்றாலும் அனுமதித் தரவில்லை. ஊசி மருந்து தயாரித்த நிறுவனத்திடமும் தேர்தல் பத்திரம் வாங்கியிருக்கிறது பாஜக.
போக, திமுக அரசு,
1) குடுமப் பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்குகிறது
2) அரசு, மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த இருபால் குழந்தைகளுக்கும் மேற்படிப்பு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்குகிறது
3) பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம்
4) தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி
உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொடுக்கிற ஒரு அமைப்பு இருக்கும் போது பாஜகவை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமே தமிழக மக்களுக்கு இல்லை
பாஜகவிற்கு எங்கள் வாக்கு இல்லை. அதில் எந்தவிதமான வருத்தமும் எங்களுக்கு இல்லை.
- காக்கைச் சிறகினிலே , ஏப்ரல் 2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2024 03:36

April 3, 2024

கேத்ரின்

 G. Theresa Catherine

No20/52 Ramalinga Nagar, Subburayalu Nagar Backside,Thirupapuliyur,Cuddalore - 6070029941425119
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2024 03:45

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.