இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 29
April 23, 2024
கொஞ்சம் மன அமைதியை உங்களுக்கு நீங்கள் நம்பும் இறைவன் அருளட்டும்
அன்பிற்குரிய சார்,
வணக்கம்மிகவும் பரபரப்பாகவும் பதட்டத்துடனுமாகவே உங்களைப் பார்க்க முடிகிறதுஒன்று தெரியுமா,எங்கள் இளைய தோழர்களிடத்தில், உங்களைப்போல இயக்கத்தின்மீது விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.சிரிக்காதீர்கள்இது சத்தியம்எத்தனை அசிங்கப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு திரும்பத் திரும்ப நீங்கள் வருவதாக பலர் கிண்டல் செய்யலாம்ஆனால்,உங்கள் மீது எனக்கு இருக்கும் ஒரே ஒரு மரியாதைக்கான ஒரே ஒரு காரணம் இதுதான்எவ்வளவு அசிங்கப் பட்டாலும் இயக்கத்தைக் கட்ட வேண்டும் என்ற உங்களது இயக்கத்தின் மீதான உங்களது விசுவாசம் இருக்கிறது பாருங்கள்சத்தியமாகச் சொல்கிறேன் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்கிட்டத்தட்ட 19.04.2024 வரை இஸ்லாமியர்கள் மீது இவ்வளவு வன்மத்தைக் கக்கவில்லை நீங்கள்முகமது சமியை உங்களது சகோதரராக விளிக்குமளவு கொஞ்சம் பக்குவம் இருந்தது20 ஆம் தேதி நீங்கள் நாக்பூரிலே தங்கி RSS தலைவர்களை சந்தித்ததாக அய்யா பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறார்அதன் பிறகுதான் இந்துப் பெண்களின் தாலி குறித்தெல்லாம் கதறத் தொடங்குகிறீர்கள்நீங்கள் தாலிகுறித்து பேசியதால் ஒன்று சொல்கிறேன்தமிழகத்தில் தாலியறுத்தான் சந்தை என்று ஒரு ஊர் இருப்பதாக உங்களுக்குத் தெரியுமா சார்ஏன் அந்த ஊருக்கு அந்தப் பெயர் வந்தது என்று கத்தாமல் கூச்சலிடாமல் விவாதிக்கலாமா சார்இதை எல்லாம்கூட மன்னிக்கலாம் சார்ஆனால் காங்கிரஸ் ஏதோ இந்தியச் சொத்துக்களை எல்லாம் இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறுகிறீர்களேஅதைத்தான் மன்னிக்க முடியாதுநெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்,நீங்கள் மசூதியை இடித்தது உங்கள் ஆட்சியிலாநீங்கள் இடிப்பீர்கள்அவர்கள் வேடிக்கைப் பார்ப்பார்கள் அவ்வளவுதான்இப்போதுகூட சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதிக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் என்று ரேவந் ரெட்டி கூறுகிறார்இருவரோடும்தான் எங்களது போராட்டம்சனாதனம் என்பது மேல், கீழ் பாகுபாடுகடுமையாக எதிர்ப்போம்கொஞ்சம் மன அமைதியை உங்களுக்கு நீங்கள் நம்பும் இறைவன் அருளட்டும்நன்றிஇப்பவும் அன்புடன்,இரா.எட்வின்23.04.2024April 22, 2024
சாரையும் சேர்த்து ஆறு பேர்
இஸ்லாமியர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று அசிங்கமான கருத்தை வைக்கும் சாரோடு பிறந்தவர்கள்
இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னோடு பிறந்தவர்கள்என்னையும் சேர்த்து நான்கு பேர்எனக்கு இரண்டு பெரியப்பாக்கள்,மூன்று சித்தப்பாக்கள்இரண்டு அத்தைகள்விக்டோரியாவிற்கு நான்கு அக்காக்கள், ஒரு தம்பிஉருப்படியா எதையாவது பேசும்போது தயவு செய்து சொல்லிவிட்டு பேசுங்கமிஸ் பண்ணிடப் போறேன் சார்
காந்தியின் கடிதம்
26.07.1947
அநேகமாக அது ஒரு சனிக்கிழமைஇன்னும் 19 நாட்கள்தான் விடுதலைக்குதுப்புறவு தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த காந்தி அவ்வளவு பரபரப்பாக இருக்கிறார்இந்திய பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் முந்தைய நாள் கூட்டாக வெளியிட்டிருந்த அறிக்கையை பத்திரிக்கைகளில் வாசிக்கிறார்நிறைய சந்திப்புகள்நிறைய உரையாடுகிறார்வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையின் நல்லவை அல்லவைகள் குறித்து உரையாடுகிறார்இந்திய தேசிய காங்கிரஸ் செய்ய வேண்டியவை குறித்து உரையாடுகிறார்இத்தனை கடுமையான பணிகளுக்கும் இடையிலும் இளைஞர் ஒருவருக்கு கடிதம் எழுதுகிறார்”நீங்கள் எடுத்துப்போன புத்தகத்தை இன்னும் திருப்பித் தரவில்லை. அது இந்த நூலகத்திற்குரியது. உடனடியாகத் திருப்புங்கள்”April 19, 2024
வேண்டாங்க தம்பி
கோவையில் வாக்கிற்கு பாஜக பணம் கொடுத்ததாக நிருபித்தால் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன் என்கிறார் அண்ணாமலை
வேண்டாம் தம்பிகொஞ்சம் சுறுசுறுப்பான இளைஞர் நீங்கள்இனிமேலாவது கொஞ்சம் அரசிலைக் கற்பதற்கும் அரசியல் செய்வதற்கும் முயற்சி செய்யுங்கள்அப்ப நான் இதுவரை அரசியல் செய்யவில்லையா?வேண்டாங்க தம்பி ஏதாவது சொல்லிவிடப் போகிறேன்April 16, 2024
இதுதான் கிழவன் செஞ்சு கிழிச்சது
சென்ற ஆண்டு தஞ்சையில் நடந்த கவேரி கலை விழாவில் பேசும்போது
”பெரியார் என்ன செஞ்சு கிழிச்சார்னு கேட்பவர்களுக்கு ஒன்று சொல்வேன் உளறுபவர்களைப் பார்த்து நல்ல சாதிக்குப் பொறந்தவனாட்டமா பேசற. ஏதோ ஈன சாதிக்கு பொறந்தவனாட்டம்ல பேசற என்று கேட்ட காலம் இருந்ததுஇப்போது உளறுபவனைப் பார்த்தால் படித்தவன் பேசற மாதிரியாப் பேசற என்று கேட்கிறோம்இதுதான் கிழவன் செஞ்சு கிழிச்சது”என்று பேசினேன்இப்ப என்னடன்னா கோவைக்கு வந்த சார் “அண்ணாமலை நல்ல சாதிக்குப் பிறந்தவர்” என்று சொல்கிறார்எனில் அண்ணாமலை சாதி கடந்து மற்ற சாதியில் பிறந்தவர்களை எல்லாம் ஈன சாதிக்கு பிறந்தவர்கள் என்கிறாரா அப்பட்டமாக பொதுவெளியில் சாதி பார்க்கும் அவர்களைப் புறக்கணிப்போம்இந்தியக் கூட்டணிக்கு வாக்களிப்போம்150 கோடி மக்கள் வாழும் ஒரு பரந்த நாட்டிற்கான தேர்தல் அறிக்கையை
கிட்டத்தட்ட 150 கோடி மக்கள் வாழும் ஒரு பரந்த நாட்டிற்கான தேர்தல் அறிக்கையை பாஜக 14 நாட்களில் தயாரித்ததாகக் கூறுகிறது
இந்திய மக்களை இதைவிட அழகாய் யாராலும் அலட்சியப் படுத்திவிட முடியாதுஇந்த அலட்சியத்திற்காகவும் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும்குழாய் வழியாக தண்ணீரே வருவதில்லை
குழாய் வழியாக எரிவாயு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது
குழாய் வழியாக தண்ணீரே வருவதில்லைஎரிவாயு எப்படி சாத்தியம் என்கிறார் திரு சிதம்பரம்நியாயம்தான“வள்ளுவர் பண்பாட்டு மையம்”
உலகமெங்கும் “வள்ளுவர் பண்பாட்டு மையம்” அமைக்கப்படுமாம்
அங்கு யோகா உள்ளிட்டவைகள் பயிற்றுவிக்கப்படுமாம்பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறதுஅடுத்த தேர்தலுக்குகாந்தி பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தி கோட்சே குறித்து கருத்தரங்குகள் நடத்துவதாக சொல்வீர்களோபள்ளியில இன்னுமொருதரம் படிக்கணுமா?
வழக்கமாக படு சீரியசாக எழுதும் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள்ஒருமுறை பள்ளிக் கல்வி எப்படிப் பிள்ளைகளுக்கு தண்டனையாக அமைகிறது என்பதைவிளக்குவதற்காக மேற்காணும் சந்திரபாபுவின் பாடலாக பொதுவாகஅறியப்படும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரியினை மேற்கோள் காட்டியிருப்பார்
அந்தப் பாடல் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்
ஒரு காதலன் தனது காதலியிடம் அவளது காதலுக்காகஎன்ன தண்டனைகளை வேண்டுமானாலும் அனுபவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுவதுபோல நகர்கிறதுஅந்தப் பாடல்
சொல்கிறான்
“பள்ளியில இன்னுமொருதரம் படிக்கணுமா இல்லே பைத்தியம்போல் பாடி ஆடி நடிக்கணுமா துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா சொல்லு, சோறு தண்ணி வேறு ஏதுமில்லாமகெடக்கணுமா”
பைத்தியம் கணக்காக தெருவில் பாடி ஆடித் திரிவது,
வெள்ளக் காவேரியில் குதித்து தற்கொலை செய்து கொள்வது,
ஏதும் உண்ணாமல் பட்டினியாகக் கிடப்பது என்ற
இவை அனைத்தையும் ஒத்தது ‘பள்ளியில் படிப்பது’ என்கிறார்பட்டுக்கோட்டையார்
இவை ஒத்து இருக்க வேண்டும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள்.இப்படி ஆசைப்படுபவர்கள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள்.அதிகாரத்தில்இருப்பதனால் இப்படியான கல்விக்கான திட்டங்களை வடிவமைத்து அவற்றை சட்டத்தின் மூலம்நம் மீது திணிக்கப் பார்க்கிறார்கள்
குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல்அம்பேத்கரும் நமக்குத் தந்த வெளிச்சத்தில் இவர்களின் சூதை நம்மால் உணர முடிகிறது.உணர முடிந்த காரணத்தினால் அதன் ஆபத்தை உணர்கிறோம்.
நம் சந்ததியை அழித்துவிடும் இந்தக் கல்வி என்று புரிந்து கொண்டதால் இது வேண்டாம் என்கிறோம்.
நாம் அழிய வேண்டும் என்று கருதுபவர்கள் அனைவரும் இந்தக் கல்விக்கானதூதுவர்களாக மாறுகிறார்கள்
இந்தத் தூதுவர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இருக்கிறார்கள், ஆளுநர்களாக இருக்கிறார்கள், ஊடகவியாபாரிகளாக இருக்கிறார்கள், எழுத்தாளர்களாக, கல்விமான்களாக, கலைஞர்களாக இருக்கிறார்கள்
இவர்களில் பெரும்பாலோர் நம்மவர்களாகவும் இருப்பதுதான் துயரம்
இவர்களை இயக்குகிற சக்திமிக்கவர்கள் பார்ப்பனர்களாக, குறிப்பாக சித்பவனப் பார்ப்பனர்களாக இருப்பார்கள். அல்லது, பார்ப்பனர்கள் சொல்வதைக் கேட்பவர்களாக, அண்டிப் பிழைப்பவர்களாக இருப்பார்கள்
இந்தப் பார்ப்பனர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று அன்றையஇந்தியத் தலைமை ஆளுநராக இருந்த திரு ரிச்சர்ட் டெம்பிள் அவர்கள் 1879 ஆம் ஆண்டு எழுதிய, 08.07.1962 இல்இந்துஸ்தான் டைம்சில் வெளிவந்த கடிதத்தின் கீழ்க்கண்ட பகுதியை தனது “மகாத்மாஜோதிராவ் புலே – இந்தியப் புரட்சியின் தந்தை” என்ற நூலின் 31வது பக்கத்தில் தனஞ்செய் கீர் தருகிறார்
”இந்நாட்டில் மீண்டும் அரியணை ஏறும்வரை அவர்கள்மனநிறைவே அடைய மாட்டார்கள். மேற்கிந்தியப் பகுதி பார்ப்பனர்களின் தேசிய அரசியல்லட்சியங்களைப் போலத் தொடர்ச்சியான, நீடித்த தொலைநோக்கு கொண்ட ஒன்றை நான் இதுவரை அறியவே இல்லை”
எவ்வளவு அப்பட்டமான, சரியான படப்பிடிப்பு
இதெல்லாம் சரி, இதற்கும்அவர்கள் இப்படியான ஒரு கல்வித் திட்டத்தை நம் மீது திணிக்க முயற்சிப்பதற்கும் என்னதேவை இருக்கிறது என்ற கேள்வி இந்தப் புள்ளியில் எழுவது இயற்கை
அவர்கள் அரியணை ஏறிவிட்டார்களே, அதிகாரம் அவர்கள் கைகளுக்குள் அடைக்கலமாகி விட்டதே. பிறகெதெற்குஅவர்கள் இது விஷயத்தில் இத்தனை மெனக்கெட வேண்டும்?
அவர்கள் பெற்றுள்ள இந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளஆசைப் படுகிறார்கள்,
அவ்வளவுதான்
இந்த அரியணையும் அதிகாரமும் அவர்களிடமே இருக்க வேண்டுமெனில்வெகு மக்கள் இன்னும் பேரதிகமாய் பின்னோக்கி நகர வேண்டும் என்பதை அவர்கள் மிகச் சரியாகப்புரிந்து வைத்திருக்கிறார்கள்
ஆங்கிலேயர்கள் கொடுத்துள்ள இப்போதுள்ள இந்த அளவிற்கானகல்வியே அவர்களது அரியணைக்கு ஆபத்தானது என்பதையும் அவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்
ஆகவே அவர்கள் நம்மைப் பின்னோக்கித் தள்ளக் கூடிய ஒருகல்வித் திட்டத்தை நம் மீது திணிக்க எத்தனிக்கிறார்கள்
இப்போது இன்னொரு அய்யமும் இயல்பாகவே நம்முள் எழும்
கல்வி மனிதனை முன்னோக்கித் தள்ளும் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அது மனிதனைப் பின்னிழுக்கும் என்பதை எப்படி ஏற்பது?
இரண்டு வகையான கல்வியா?
ஆமாம்,
இரண்டு வகைக் கல்விதான்
மனிதனை சிந்திக்க வைத்து, கிடைத்தசிந்தனையின் மூலம் கேள்வி கேட்கச் செய்து தனது சமூகத்தை அடுத்தக் கட்டத்திற்குஎடுத்துப் போகும் பலத்தை அவனுக்குக் கொடுப்பது ஒரு வகைக் கல்வி
மனிதனை சிந்திக்க விடாமல் செய்து,
அப்படிச் செய்வதன் மூலம் அவனை கேள்வி கேட்க விடாமல் தடுத்து,
எல்லாம் ”அதன்படி”தான் நடந்தது, ”அதன்படி”தான் நடந்து கொண்டிருக்கிறது, இனியும் ”அதன்படி”தான் நடக்கும் என்று அவனை நம்பச் செய்து,
அவனைத் தேங்கச் செய்து, பையப் பையபின்னோக்கி இழுத்துப் போகிற கல்வித் திட்டம் இன்னொன்று
தன் ஆளுகைக்குட்பட்ட மனிதன் முன்னேறினால் இவர்களுக்கென்ன?
ரொம்பப் பெரிதான தரவுகள் எல்லாம் இதற்குத் தேவை இல்லை. இதைவிளக்க இரண்டே இரண்டு வரலாற்று சம்பவங்கள் போதும்
ஒன்று இந்தியாவில்,
மற்றொன்று பிரேசிலில்
தனஞ்செய் கீரின் ”மகாத்மா ஜோதிராவ் புலே” என்ற நூலில் 32 மற்றும் 33 ஆம் பக்கங்களில் உள்ள ஒருசம்பவத்தைப் பார்ப்போம்
சிறுவனுக்கும் இளையவனுக்கும் இடைப்பட்ட பருவத்தில் அப்போது புலே
பார்ப்பன நண்பர்களிடத்து வெறுப்பற்றவராகவும் அன்புகொண்டவராகவும் இருக்கிறார். சில பார்ப்பன நண்பர்களும் இவருக்கு உண்டு. அப்படியான ஒருநண்பருக்கு திருமணம். இவருக்கும் அழைப்பு வருகிறது.
போகிறார்
திருமண ஊர்வலத்தில் இவரைத் தவிர அனைவரும் பார்ப்பனர்கள்
ஒரு கட்டத்தில் இவரை ஒரு பார்ப்பனர் அடையாளம் கண்டுகொள்கிறார். அவருக்கு கோவம் வருகிறது.
அவர் முகமெல்லாம் சிவக்க புலேவைப் பார்த்து,
எலேய், சூத்திரனே, இந்த ஊர்வலத்திலே எங்களோடு சமமாய் வருவதற்கு என்ன தைரியம்உனக்கு
சாதி மரபுகளை மீறிவிட்டாய்
எங்களை அவமானப்படுத்தி விட்டாய்
உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா. ஓடிவிடு என்றுவிரட்டுகிறார்.
அவமானத்தில் கிழிந்துபோன புலே வீட்டிற்கு வந்து தன்தந்தையிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்
புலேவை விரட்டிய அந்தப் பார்ப்பனர் மிகவும் இரக்கம் உள்ளவர்என்றும் இல்லை என்றால் இப்படி பார்ப்பனர்களோடு சரிக்கு சரியாய் ஊர்வலத்தில் வந்தகுற்றத்திற்கு யானைக் காலில் தள்ளி மிதிக்கச் செய்திருப்பார்கள் என்றும் அவரதுதந்தை ஆசுவாசப்பட்டுக் கொள்கிறார்
தனஞ்செய் கீர் எழுதியது இது. ஆகவே புனைவாகஇருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் கொஞ்சம் கூடக் குறைய இருப்பதற்கு உள்ள வாய்ப்பினைமறுப்பதற்கில்லை
புலேவை நோக்கி அந்தப் பார்ப்பனர் கோவமாக வைத்தகுற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்
ஒரு சூத்திரன் பார்ப்பனர்களோடு சரிக்கு சரியாய் ஒரு ஊர்வலத்தில்நடந்ததன் மூலம்
1) சாதி மரபுகளைமீறி இருக்கிறான் 2) பார்ப்பனர்களைஅவமானப்படுத்தி இருக்கிறான் 3) வெட்கங்கெட்டஒரு காரியத்தை செய்திருக்கிறான்
ஒரு திருமண ஊர்வலத்தில்,
அதுவும் தான் அழைக்கப் பட்ட ஒரு திருமண ஊர்வலத்தில்
ஒரு சூத்திரன் தங்களோடு இணையாக நடந்து வருவதையே ஏற்கமுடியாத ஒரு பெருங் குற்றமாக பார்ப்பனச் சமூகம் கருதியது. அப்படி நடந்து வருபவனையானைக் காலில் தள்ளியது. அல்லது, யானைக்காலில்தள்ளுமளவிற்கான குற்றமாக அதைக் கருதியது
இந்த அளவிற்கு இப்போது சாத்தியம் இல்லை என்பதை அந்தச் சமூகம் உணர்ந்தே இருக்கிறது. என்றாலும் முடிந்தவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் அல்லது குறைந்த பட்சம் இப்போது இருப்பதையே எல்லையாக்க வேண்டும் என்று கருதுகிறது. இதைக் கடந்து மற்றவர்கள் வந்துவிடாமல் கவனமாக இருக்கிறது
மேல், கீழ் எனும் சாதி மரபு அவசியம் என அது கருதியது, கருதுகிறது
தன்னோடு சூத்திரன் ஒருவன் நடந்து வருவது தனக்கு அவமானம் என்று பார்ப்பனச் சமூகம் கருதியது. இப்போதும் அதன் மனநிலை மாறிவிட்டது என்றெல்லாம் கொள்ளக் கூடாது. அதை பொது வெளியில் கட்டயப்படுத்த முடியாத சூழலை உணர்ந்து இருப்பதால் சகித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் மீண்டும் தமது அந்தக் கார்காலத்தை மீட்டெடுக்க முயற்சித்தபடியேதான் இருக்கிறது
இதை எல்லாம்கூட நம்மால் புரிந்துகொள்ள முடியும்
அவர்களுக்கு சமமாக நாம் நடக்க நேர்ந்தால் அதற்காக நாம் வெட்கப்பட வேண்டும் என்பதைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகம் வெட்கம் மானத்திற்கு பயந்த சமூகம் என்பதை அவர்கள் நம்மைவிட நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு சமதையாயக நாம் நிற்பது நமக்கு வெட்கக்கேடான ஒரு விஷயமாக நக்குள் புகுத்தி வைத்திருக்கிறார்கள்
கல்வி அனைவரும் சமம் அல்ல என்பதைத்தான் வெட்கக் கேடான விஷயம் என்று நமக்கு உணர்த்திவிடும் என்பதால்தான் அவர்கள் பதறுகிறார்கள்
இந்தப் புள்ளிக்கு மேல் நமக்கு கல்வி இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்
ஆதனால்தான் குறைந்த பட்சம் புராணம், ஜோதிடம் போன்றவற்றை நமது கல்வித் திட்டத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்
இவை நம்மை அவர்களுக்குள் அடக்கி வைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்
இனி பிரேசிலுக்கு வருவோம்
பிரேசில் அரசு பிரெய்ரேவை தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் தலைவராக நியமிக்கிறது.
ஒரு ஆண்டிற்குள் இருபது லட்சம் மக்களை எழுத்தறிவுபெறச் செய்வது என்று முடிவெடுத்து செயல்படுகிறார்
எல்லோரும் எழுத்தறிவு பெற்றுவிட்டால் எல்லோரும் கேள்வி கேட்பார்கள் என்று ராணுவம் பயப்படுகிறது. அப்படி நடந்தால் அது அமெரிக்காவிற்கு ஆபத்தென்று கருதுகிறது
அமெரிக்காவின் கையசைப்பில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
கடவுளை நிந்திப்பதாகவும் அமெரிக்காவை நிந்திப்பதாகவும் ப்ரெய்ரேமேல் குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்படுகிறார். பிறகு அவர் பொலீவியாவில் தஞ்சம் புகுந்தார் என்பது வரலாறு
ஆக எல்லோருக்குமான கல்வி தமக்கு ஆபத்தானது என்று அமெரிக்காவும் கருதி இருக்கிறது. கருதவும் செய்கிறது.
இந்தியாவில் பார்ப்பனர்களும் அவர்களது வலது கைகளும் கருதுகிறார்கள்
மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் கல்வியைக் கொண்டது தனது காலத்து பள்ளிக்கூடம் என்று பட்டுக்கோட்டையார் கருதியதால்தான்
அடிமையாக மாற்றுகிற கல்வியைக் கொடுக்கிற பள்ளிக்கு வேண்டுமானுலும் மீண்டும் ஒரு முறை படிக்கப் போகிறேன், என்னை காதலித்துவிடு என்று நாயகன் காதலியைப் பார்த்துப் பாடுவதாக வைத்திருக்கிறார்
தண்டனையாகக் கல்வியைத் தருகிற இடங்களாகத்தான் பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்
அவர்களது அரசு அதைத்தான் முயற்சிக்கிறது
கல்வித் தூதுவர்களும் அதற்காகத்தான் வழக்காடுகிறார்கள்
புரிந்தவர்கள் அதற்கெதிராகக் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களோடு கரம் கோர்ப்போம்
”காக்கைச் சிறகினிலே” ஜனவரி 2024
அந்தக் கல்வியின் வழியும் உன்னை அடிமைப்படுத்த முயற்சிப்போம்
ஒரு பள்ளிக்கூடம் என்று சொல்வதற்கு உரிய குரைந்தபட்ச அடையாளமான ஒரு பெயர்ப் பலகைகூட இல்லை
அது ஒரு வீடு
அதன் வாசலில் அப்படி ஒரு கூட்டம்
கற்கள், தடி, சாணி என்று அனைவரது கைகளிலும் அவரது வசதிக்கேற்ற ஆயுதங்கள்
அவரவருக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளோடு அந்தப் பெண்ணை அழைக்கிறார்கள்
வாசலுக்கு வருகிறார் அந்தப் பெண்
அந்தப் பெண்ணை மிரட்டிவிட்டு அந்தக் கூட்டம் கிளம்ப எத்தனிக்கும்போது அந்தப் பெண் பேசத் தொடங்குகிறார்
கல்லெறிந்தவர்கள், சேறு தெளித்தவர்கள், வசைபாடி எச்சரித்தவர்கள் அனைவரையும் பெற்றெடுத்த தாய் போன்ற ஈரக் குரலில்,
“கடவுள் உங்களை மன்னிக்கட்டும். நான் என் கடமையைச் செய்கிறேன். அவர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்”
அவர்கள் கல்லெறியும் அளவிற்கு அவர் அப்படி என்ன காரியத்தை செய்து கொண்டிருந்தார்?
அந்தத் தாயின் பெயர் சாவித்திரி
கல்லெறிந்தவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள். ”உயர்குடியில் பிறந்தவர்கள்” என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அவர்களாலேயே நம்பமுடியாது. அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ படாத பாடுபட்டு அனைவரையும் அதை நம்பச் செய்வதற்கான முயற்சியில் இருப்பவர்கள். கல்வி என்பது பொதுப்பட்டால் “மேல்குடி: என்பதோ ”கீழ்க்குடி” என்பதோ இல்லை என்பது அனைவருக்கும் புரிந்து விடும். அப்படிப் புரிந்து விட்டால் “இழி வேலை” என்று இவர்கள் கருதும் உடல் உழைப்பை இவர்கள் செய்ய நேரும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தவர்கள்.
எளிய மொழியில் சொல்வதெனில், கல்வி பொதுப்பட்டால், உழைத்தால்தான் தமக்கு சோறு என்ற உண்மையை யாரைவிடவும் தெளிவாக உணர்ந்து வைத்திருப்பவர்கள்.
இவர்கள்தான் தன் மகன் ஜோதிராவை பள்ளிக்கு அனுப்பி அவனது புத்தி கூர்மையடைவதை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்த கோவிந்தராவ் என்கிற தகப்பனைச் சந்தித்தவர்கள்
“இந்தக் கல்வியால் உன் மகனுக்கு ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை. குலத் தொழிலான விவசாயமும் மறந்து போகும். இந்தக் கல்வி அவனை மத விரோதியாக்கும். கல்வி உன் பிள்ளையைக் கலகக்காரனாக்கிவிடும் என்று நயந்து, நல்லவிதமாக எச்சரித்து ஜோதியின் கல்விக்கு சமாதி கட்டுவதில் ஓரளவிற்கு ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றவர்கள்.
விடாப் பிடியாக ஜோதி கற்பான் என்பதையோ, தான் கற்றதோடு தனது மனைவிக்கும் சொல்லிக் கொடுத்து அவரை பிறருக்கு சொல்லித்தரச் செய்வான் என்பதையோ அவர்களால் சகித்துக் கொள்ளவே இயலவில்லை
தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சாவித்திரி அம்மா கல்வியைத் தந்து கொண்டிருந்தார் என்பதே அவர்களது பெருங்கோவத்திற்கான காரணம்.
தலித்துகளுக்கும் பெண்களுக்கும் கல்வி தந்தால் இவர்களுக்கு என்ன?
இந்தக் கேள்விக்கான விடையில்தான்,
அவர்கள் ஏன் சாவித்திரி அம்மாவைத் தாக்கினார்கள் என்பதற்கும்,
இவர்கள் ஏன் புதியக் கல்விக் கொள்கையை இப்படியான வடிவத்தில் திணிப்பதற்கு இவ்வளாவு பிரயத்தனப் படுகிறார்கள் என்பதற்கும் காரணமாகும்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் ரெட்டியப்பட்டி என்றொரு கிராமம். அந்த கிரமத்து மக்கள் தங்களது கிராம சங்கத்தின் மூலமாக “கஸ்தூரி ஆரம்பப்பாடசாலை” என்றொரு பள்ளியைக் கட்டுகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற குன்றக்குடி அடிகளார்,
“சென்னை சர்க்காரின் புதியக் கல்வித் திட்டம் என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஆசிரியர்களுக்கும் புரியவில்லை. மாணவர்களுக்கும் புரியவில்லை. பொதுமக்களுக்கும் புரியவில்லை. அதன் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும்” என்று பேசியதாக 15.10.1953 நாளிட்ட ”விடுதலை” வெளியிட்ட செய்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள “குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்” என்ற நூல் தருகிறது
பொதுக் கல்விக்கான அவர்களின் எதிர்ப்பையும், சென்னை சர்க்காரின் புதியக் கல்விக் கொள்கை என்று பொதுவாக சொல்லப்பட்ட குலக்கல்வியின் நோக்கங்களையும், இன்றையப் புதியக் கல்விக் கொள்கையின் நோக்கங்களையும் ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
மிகக் கூர்மையாக இதனை அணுகினால் மூன்றின் நோக்கங்களும் ஒன்று என்பது புரிய வரும். புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அடிகளார் கூறியதே பெருந்தன்மையின் உச்சம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது இந்தக் கல்வித் திட்டம் தூக்கிக் கிடாசப்பட வேண்டியது.
நாம் கல்வி பெறுவதால் இவர்களுக்கு என்ன நட்டம்? ஏன் இப்படி இவர்கள் பதட்டப் படுகிறார்கள்?
கல்வி,
1) மனிதனை மத விரோதியாக மாற்றும
2) மனிதனை கலகம் செய்யத் தூண்டும்
3) எப்போதும் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதை கேள்விகேட்க வைக்கும்
4) அரியணையில் தாங்களோ அல்லது தங்களது சொல்பேச்சைக் கேட்பவர்களோ மட்டுமே இருக்க விடாது
என்று கருதினார்கள்
“கீழ்த்தட்டு” என்று இவர்கள் கருதுகிற ஒருவன் கல்வி கற்பதன் மூலமாக மத விரோதியாகவோ, கலகக்காரனாகவோ மாறினால் இவர்களுக்கு என்ன? ஏன் கல்வி பொதுப்படுவதை எதிர்க்கிறார்கள்? அவர்களைப் பொறுத்தவரை மதவிரோதம் என்பது மநுவிரோதம். மநுவைக் கேள்வி கேட்பது என்பது சனாதன மேலாதிக்கத்தைக் கேள்வி கேட்பது.
கல்வி மேற்சொன்ன நான்கையும் அசைத்துப் போடும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை உடையும் எனில் அனைவரும் சமம் என்றாகும். அனைவரும் சமம் என்பதை அவர்களால் ஒருபோதும் ஜீரணிக்க முடியாது.
“கல்விச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்களில் சித்பவணர்களை ஒருபோதும் திருப்தி செய்ய இயலாது. மேற்கத்திய மேற்குடிகளின் தேசிய அரசியல் லட்சியங்களைப் போல நீடித்த, தொடர்ச்சியான தொலைநோக்கு ஆசையை நான் இதுவரைப் பார்த்த்தே இல்லை” என்று 1879 வாக்கில் அன்றையத் தலைமை இந்திய ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் கூறியதை தனஞ்செய்கீர் தனது “மகாத்மா ஜோதிராவ் புலே” என்ற நூலில் வைத்திருப்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
’நீடித்த, தொடர்ச்சியான, தொலைநோக்கு ஆசை’ என்பதை கூர்ந்து கவனிப்பதும் அவசியம். தொடர் கன்னி அறுந்து விடாமல் இந்த ஆசையை அவர்கள் தொடர்ந்து தலைமுறைத் தலைமுறையாக கைமாற்றிக் கொடுத்தபடி இருக்கிறார்கள். இந்தக் கங்கு அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இவர்களது செல்வாக்கு பம்பாயின் முன்னாள் ஆளுனரான எல்பின்ஸ்டோன் அவர்களை “தாழ்த்தப்பட்ட மக்கள் மிகச் சிறந்த மாணவர்கள் என்று கிறிஸ்தவ மிசினரிகள் கருதுவதாகத் தெரிகிறது. இம்மாதிரியான தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எந்தவித சிறப்பு ஊக்குவிப்பையும் தருவதற்கு நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவர்களுக்கு கல்வியைத் தருகிறோம் என்றால் கல்வியை வேர்விடாமல் செய்கிற காரியத்தை செய்கிறோம் என்று பொருள்” எனறு அரசாங்கத்திற்கான தனது பரிந்துரையில் எழுத வைத்தது.
இவர்களது செல்வாக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கல்வி குறித்து பரிந்துரை செய்த பிரிட்டிஷ்காரர்களையே அசைத்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி தருவது கடுமையான பின்விளைவுகளை அரசாங்கத்திற்குத் தரும் என்று அவர்களை பரிந்துரைக்க வைத்திருக்கிறது.
கல்விக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவரான எல்லன்பாரோ இயக்குனர் குழுத் தலைவருக்கு எழுதிய கடிதம் பிரிட்டிஷ் அதிகாரிகளே மேட்டுக்குடி மக்களிடம் எத்தனை எச்சரிக்கையோடு இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவு படுத்துகிறது. இந்தக் கடிதத்தின் கீழ்க்காணும் பகுதியையும் தனஞ்செய் கீர் தனது “மாகாத்மா ஜோதிராவ் புலே” நூலில் வைத்திருக்கிறார்.
”கல்வியும், பண்பாடும் உயர்ந்த சாதி மக்களிடம் இருந்து கீழ்த்தட்டு மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும். சூத்திர சாதி மக்களுக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தால் அது பொது வெறுப்பிற்கு வழிவகுக்கும். அதற்கு முதல் பலி நாமாகத்தான் இருப்போம்”
1) ஓய்வாக இருக்கும் மேல்தட்டு மக்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டும்
2) அவர்கள் கீழ்த்தட்டு மக்களுக்கு கல்வியைக் கடத்துவார்கள்
என்பதே கல்வியைக் கீழ்த்தட்டு மக்களுக்கு கொடுப்பது குறித்த ஆங்கிலேயர்களின் எச்சரிக்கை உணர்வாக இருந்தது. ஓய்வாக இருப்பவனுக்கு கல்வியைக் கொடுப்பது என்றும் அவர்கள் உடலுழைப்பைத் தருகிற கீழ்த்தட்டு மக்களுக்கு கல்வியைத் தருவார்கள் என்றும் அவர்களை முடிவுக்கு வரச் செய்திருக்கிறது ஆதிக்க சக்திகளின் பிடிவாதம்.
நேரிடையாக நமக்கு கல்வி இல்லை என்று சொல்ல முடியாததால் குறைந்தபட்சம் அறிவியல் கல்வியை நமக்குத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள்..
அறிவியலுக்கு எதிரான ஜோதிடத்தை நமக்குத் தர முயற்சிக்கிறார்கள்.
அறிவியல் அனைவரும் சமம் என்றும் மனிதனால் முடியும் என்று கூறும்.
ஜோதிடம் மனிதனால் எதுவும் முடியாது. எழுதியபடிதான் எல்லாம் நடக்கும் என்று சொல்லும். பிரச்சினை எல்லாவற்றிற்கும் இறைவனிடம் மட்டுமே பரிகாரம் உண்டு, நீ கோவிலுக்குப் போ என்று சொல்லும். கோவிலுக்குப் போனால் யார் எங்கெங்கு நிற்க வேண்டும் என்று சொல்லும். கடவுளிடம் போ, ஆனால் கடவுளைத் தொடாதே என்று எச்சரிக்கும். கடவுளைத் தொட ஒருவர் இருப்பார். அவர் உனக்காக கடவுளிடம் பேசுவார். அவரைப் பணிந்து அடிமையாய் இரு என்று சொல்லும்.
கல்வியைக் கட்டாயமாக்குவது தவிர்க்க முடியாதது என்றானால் என்ன. அந்தக் கல்வியின் வழியும் உன்னை அடிமைப்படுத்த முயற்சிப்போம் என்பதே புதியக் கல்விக் கொள்கையின் பிரதான கூறு.
புரிந்து கொள்வோம்
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)