இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 26
July 10, 2024
கவிதை 63
ஜன்னலில்வந்தமர்ந்த குருவியிடம்கையை நீட்டினேன்கொஞ்சமும்பயமின்றிஉள்ளங்கையைஒரு கொத்து கொத்திவிட்டுபறந்துவிட்டதுரெண்டுஅரிசிக் குருணையோடுநீட்டியிருக்கலாம்
June 1, 2024
பாபேலில் தோற்ற மனித சமூகம்…
வேதப் புத்தகத்தில் இருந்து இரண்டு பகுதிகளை இங்கு எடுத்தாண்டிருக்கிறேன். இந்தக் கட்டுரைக்கு மிகவும் பொருந்தும் என்பதால்தான் இதை செய்திருக்கிறேன்.
பையன் விசுவாசியாகி விட்டான் என்றெல்லாம் இதனால் யாரும் என்னைக் கொண்டுவிட வேண்டாம் என்ற கோரிக்கையை இந்தக் கட்டுரைக்கான முன்னுரையாக வைக்கிறேன்.
பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம். அதன் பதினோராவது அதிகாரம், “பூமி எங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தது” என்று தொடங்குகிறது.
என்றால், மக்களுக்கு அதுவரை மொழிபெயர்ப்பிற்கான சிக்கலே இல்லை என்றும் கொள்ளலாம்.
மக்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்ததாக அந்த அதிகாரத்தின் அதுவரைக்குமான பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. நகர்ந்து கொண்டே இருந்த மக்களுக்கு இந்தத் தொடர் பயணம் தங்களை சிதறடித்து விடுமோ என்ற அச்சம் பிறக்கிறது. சிதறுண்டு போவோம் என்கிற சிந்தனையே அவர்களுக்கு அச்சத்தைத் தந்திருக்க வேண்டும்.
அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் அந்த இடத்திலேயே தங்களுக்கென்று ஒரு நகரத்தைக் கட்டிக்கொண்டு வானளாவிய ஒரு கோபுரத்தை எழுப்பிக் கொள்ள முனைகிறார்கள்.
இவர்களது கோபுரக் கட்டுமானத்தைக் காண கடவுள் அங்கு வருகிறார். அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே கட்டுமானத்தில் சுறுசுறுப்பாக இருப்பதைக் காண்கிறார்.
இது ஏதோ ஒரு வகையில் கடவுளை நெருடி இருக்க வேண்டும். அவர் மக்கள் பேசுகிற மொழியை தாறுமாறாக்குகிறார். இப்படியாக பல மொழிகள் உருவாகின்றன. அதுமட்டுமில்லாமல்கடவுள் மக்களை சிதறிப்போகச் செய்கிறார்.
வேதத்தில் அப்படியான குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு மொழியைப் பேசுகிற குழுவும் ஒவ்வொரு திக்கிற்கு சென்றிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு நாம் வருவதற்கு தடையும் இல்லை.
’பாபேல்’ என்பதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. ஆனால், மொழி தாறுமாறானதன் காரணமாக அந்த இடத்திற்கு பாபேல் என்று பெயரிடுகிறார் கடவுள் என்று ஆதியாகமம் கூறுகிறது.
ஒருவர் பேசுகிற மொழியை மற்றவருக்கு புரியாமல் செய்து அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இயலாமல் செய்தது மனிதர்கள் மீதான மதத்தின் அப்போதைய வெற்றியாக இருக்கலாம்.
ஆனால், மற்றவர் மொழி தெரியாமலே அவர்களோடு உரையாடவும் தொடர்பு கொள்ளவும் மனிதனுக்கு ஒருநாள் ஏலும். அந்தப் புள்ளியில் மனிதன் மதத்தை வெல்வான் என்று “செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள தன்னுடைய நேர்காணல் புத்தகத்தில் தோழர் ஆழி செந்தில்நாதன் கூறுகிறார்.
மொழிகள் வேறுபடுவதில் உள்ள சிக்கல்களில்
1) ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள இயலாமல் போவது
2) அந்தந்த மொழிக் குழுவின் மனிதச் சிந்தனை என்பது அந்தந்த மொழிக் குழுவோடு தேங்கிப் போவது
ஆகிய இரண்டையும் ஆக முக்கியமான பெரிய சிக்கல்களாக வகைப்படுத்தலாம்.
அவனது சிந்தனையை இவன் புரிந்து கொள்ள வேண்டும் எனில் இவன் அவனது மொழியைக் கற்றுக் கொள்வது அவசியமாகிறது.
இன்னொரு விதமாகவும் இதை அணுகலாம். அவன் தனது சிந்தனையை இவன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கருதினால் அவன் இவனது மொழியைக் கற்றுக் கொண்டு தனது சிந்தனையை இவனது மொழியில் தர வேண்டும்.
இந்தச் சிக்கலின் நீட்சிதான் தற்போது மொழியின் ஆதிக்க அரசியலுக்கு வழி வகுத்திருக்கிறது. மன்னரின், ஜனநாயக நாடெனில் ஆட்சிக்கு வருபவரின் மொழி அவரது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியின் ஆதிக்க மொழியாகிறது. அந்தப் பகுதியின் பிற மொழிக்காரர்களை ஆதிக்கக்காரர்களின் மொழி அடிமைப்படுத்துகிற எல்லைக்கு இது நகர்கிறது. கொஞ்சம் மென்மையாக சொல்வதெனில் மற்றவர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுகிறது.
குடிமக்கள் தங்களது அரசன் தமக்கு சொல்வதைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவர்கள் அரச மொழியைக் கற்றாக வேண்டி இருக்கிறது.
அரசனது உத்தரவைத் தெரிந்து கொள்வதற்கு குடிகள் அரசனது மொழியைக் கற்க வேண்டுமா அல்லது குடிகள் தனது உத்தரவைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக குடிகளின் மொழிகளில் அரசன் தனது உத்தரவைத் தர வேண்டுமா என்கிற சிக்கலைத் தீர்ப்பதற்கான தெளிவையும் வேதப் புத்தகத்தின் இன்னொரு இடத்தில் வரும் ஒரு சம்பவம் பாடம் நடத்துகிறது.
பழைய ஏற்பாட்டில் உள்ள “எஸ்தர்” புத்தகத்தில் ஒரு சம்பவம்.
ஆகாஸ்வேரு என்ற அரசன் தான் ஆட்சிக்கு வந்து மூன்றாடுகள் நிறைவதை மிக விமர்சையாகக் கொண்டாடினான்.
பக்கத்து நாடுகளின் அரசர்களும் பிரபுக்களுமாகத் திரண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பானங்களும் உணவும் வழங்கப்படுகின்றன. அவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருக்கிறார்கள்.
அந்த நாட்டின் பட்டத்து அரசியான வஸ்தி அரண்மனையின் இன்னொரு புறத்தில் மன்னர்களின் மனைவிமார்கள் மற்றும் பிரபுக்களின் மனைவிமார்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறாள்.
மன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் தனது அழகான மனைவியை அறிமுகப்படுத்த விரும்புகிறான் அகாஸ்வேரு. ஆகவே அவளை அழைத்துவர ஆட்களை அனுப்புகிறான். என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், வஸ்தி வருவதற்கு மறுத்து விடுகிறாள்.
அரசனுக்கு கோபம் வருகிறது. மற்றவர்களுக்கு அரசியே மன்னனுக்கு கீழ்படியவில்லை என்ற விஷயம் வெளியே தெரிந்தால் மற்ற மனைவிமார்களும் தங்களது கணவன்மார்களுக்கு கீழ்ப்படிய மாட்டார்கள் என்ற அச்சம் வந்துவிடுகிறது.
எனவே அவர்கள் கணவன்தான் குடும்பத்தின் தலைவன். கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கீழ்ப்படிய மறுக்கும் மனைவிமார்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்ற ஆணையை மக்களுக்கு இடவேண்டும் என்று அரசனைக் கேட்கிறார்கள்.
அரசனும் அப்படி ஒரு ஆணையைப் பிறப்பிக்கிறான். அதை மக்களிட்த்திலே கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென தனது ஊழியர்களுக்கு கட்டளையிடுகிறான்.
ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் எல்லாம் இதில் உள்ளனதான். ஆனால் அந்த உத்தரவை மக்களிடம் எப்படிக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு வழிகாட்டியதில் மொழியை ஒரு அரசு எப்படிக் கையாள வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது.
அவனது நாட்டில் பல மொழிகளைப் பேசும் மக்கள் இருக்கிறார்கள். தனது கட்டளையை அந்தந்த மக்கள் பேசும் மொழிகளின் வழியாகவே அந்தந்த மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு அவன் கட்டளையிட்டான்.
தான் சொல்வது மக்களுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவனது கட்டளையின்படி நடந்துகொள்ள முடியும். எனில், தனது உத்தரவுகளை மக்களது மொழியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற நுட்பம் இது.
இதைப் புரிந்து கொள்ளாததால்தான் இந்தியா மாதிரியான பல மொழிகளைக் கொண்ட ஒரு உப கண்டத்தில் அரச மொழியைக் கற்காதவர்கள் தேச விரோதிகள் என்பதாகவே கொள்ளப்படும் துயரம் இருக்கிறது.
இந்த இடத்தில்தான் மொழி பெயர்ப்பின் தேவை வருகிறது.
அரசு அந்தந்த மக்களின் மொழியில் உரையாட வேண்டும் என்பது சரி. அவைகளில் பொதுக் கூட்டங்களில் வைக்கப்படும் உரையை கேட்போரின் மொழிகளின் மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டு செய்து விடலாம். புத்தகங்களையும் மொழி பெயர்த்து விடலாம்.
இப்போது வளர்ந்துவிட்ட அறிவியல் காலத்தில் காதுகளுக்குள் சொருகிக் கொள்ளக்கூடிய அளவிலான மிகச் சிறிய இயந்திரங்கள் மொழி பெயர்க்கின்றன.
தேவைப்படும் அளவிற்கு துல்லியம் இல்லை என்றாலும் அலைபேசியில் வைத்துக் கொள்ளக்கூடிய செயலிகளே அச்சுப் பிரதிகளை மொழிபெயர்த்துத் தருகின்றன.
ஒலி வடிவங்களை அச்சுப் பிரதிகளாகவும், அச்சுப் பிரதிகளை ஒலி வடிவிலும் மொழிபெயர்க்கக்கூடிய செயலிகள் வந்துவிட்டன.
நூறு விழுக்காடு துல்லியமும் நாளைக்கோ இன்னும் பதினைந்து நாட்கள் தொலைவிலோ அதற்குக் கொஞ்சம் காலம் கழித்தோ நிச்சயமாக வசப்படும்.
நெருக்கமான ஒரு வரும்நாளில் முகமும் அவனது மொழியும் தெரியாத ஒருவனுக்கு நாம் இங்கிருந்து தமிழில் அலை பேசினால் அது அவனது காதில் அவனது மொழியில் போய் சேர்ந்து விடும். அதற்கு அவனது மொழியில் அவன் அளிக்கும் மறுமொழி தமிழில் நம் காதில் வந்து சேரும்.
மெல்லிசான ப்ளூடூத் அளவிலான ஒரு கருவியை அனைவரும் அவரவர் காதுகளில் மாட்டிக் கொள்வோம். நாம் தமிழில் பேசுவது விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்தியில் போய் சேர்ந்து விடும். அவர் இந்தியில் கேட்பது நமக்கு தமிழில் வந்து சேரும்.
இந்தியா முழுக்கப் போக வேண்டுமா இந்தியைப் படி, உலகம் சுற்ற வேண்டுமா உனக்கு ஆங்கிலம் அவசியம் என்றெல்லாம் நம்மிடம் இனி எவனும் கதை அளக்க முடியாது.
எந்த மொழி பேசும் மருத்துவரிடமும் எந்த மொழி பேசும் நோயாளியும் எந்தவித சிரமமும் இன்றி சிகிச்சைபெற முடியும்.
ஆனாலும் இதன் பொருள் வேறு மொழிகளை எவரும் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதல்ல. சாமானிய, எளிய மனிதனை மொழி இனி முடக்கி வைக்காது என்பதுதான்.
அந்தந்த மொழிகளின் இலக்கியத்தை விழுமியங்களை அந்தந்த மொழிகளில் எடுப்பதில் இருக்கும் ஜீவனை இந்தக் கருவிகள் கொடுக்காது. தேவையும் நேரமும் வசதியும் இருப்போர் முடிந்த அளவு தேவையான மொழிகளைக் கற்பது அவசியம்.
பல மொழிகளின் திணிப்பால் பாபேலில் தோற்ற மனித சமூகம், ஒற்றை மொழித் திணிப்பால் இந்தியா போன்ற துணைக் கண்டம் என்று அழைக்கப்படுகிற நாட்டில் ஒற்றுமையை சேதப்படுத்திக் கொண்டிருக்கும் மனித சமூகம் மொழிச் சிக்கலில் இருந்து நிச்சயம் மீளும்.
பார்த்துவிட்டுதான் போக வேண்டும்.
- காக்கைச் சிறகினிலே மே 2024
May 27, 2024
சொல்லாமல் இருப்பதும் குற்றம்தான்
”இம்மைக்குச் செய்ததுமறுமைக்கு ஆம் எனும்அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;பிறரும் சான்றோர் சென்ற நெறியென,ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே.”என்கிறது ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் எழுதிய புறநானூற்றுப் பாடல்.
இப்பிறவியில் நல்லது செய்தால் தனது மரணத்திற்குப் பிறகு இறைவனது கருணை கிடைக்கும் என்பதற்காக எந்த நல்லதையும் செய்பவன் அல்ல ஆய் ஆண்டிரன். அந்தக் கணத்தில் அவனுக்கு எது நல்லது எனப் படுகிறதோ அதைச் செய்பவன் அவன் என்பது இதன் பொருள்.
இது எந்த அளவிற்கு ஆய் ஆண்டிரனுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்திய இடதுசாரிகளுக்கு முற்றாக முழுதாகப் பொருந்துகிறது. எதையும் எதிர்பார்க்காமல் அந்தப் புள்ளியில் மக்களுக்கு எது அவசியமோ அதைச் செய்துவிட்டு கடந்து போய்விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அவர்கள்.
அந்த சங்க காலத்து தலைவன் ஆய் ஆண்டிரன் குறித்து நல்ல வாய்ப்பாக ஏணிச்சேரி முடமோசியார் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். இந்திய இடதுசாரிகள் செய்வதை பயனாளிகளுக்கே இவர்கள் கடத்தத் தவறுகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரையாளரான வெற்றிகொண்டான் அவர்கள் ஒருமுறை அவருக்கே உரிய நக்கலோடு இதுகுறித்து ஒரு கூட்டத்தில் பேசும்போது
“ஊர்ல நாலே நாலு கம்யூனிஸ்ட் இருப்பான். பக்கத்து ஊர்ல இருக்குற அவங்க ஆளுங்க ஆறு பேரக் கூட்டிட்டு வந்து இந்த ஊர்ல தண்ணீர்க் குழாய் இல்லன்னு போராடுவான்.
குழாய் வந்துடும். நாங்கதான் கொண்டு வந்தோம்னு கூட்டம் போட்டு பேச மாட்டான். அடுத்த ஊர்ல ரோடு சரியில்லன்னு அவிங்களோடு சேர்ந்து போராடப் போயிடுவான்.
ஏண்டா இப்படின்னு கேட்டா, ’பெத்த தாய்க்கு சேலை எடுத்துக் கொடுத்துட்டு, அத போஸ்டர் அடிச்செல்லாம் ஒட்டக் கூடாது தோழர்னு நமக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவான்’ என்று கூறினார்.
பெரும்பாலும் அதுதான் உண்மை.
தேர்தல் களம் மோடியில் ஆரம்பித்து ஒரு புள்ளியில் சட்டென ராகுல் பக்கம் திரும்பி அப்படியும் இப்படியுமாக சூடேறி நகர்கிறதே. இதில் உங்களது கட்சியின் பங்கெதுவும் இருப்பதாகத் தெரியவில்லையேப்பா என்று கேட்கிறான் பிள்ளை ஒருவன்.
எப்போது களம் மாறி சூடு பிடித்துத் திரும்பியது என்று கேட்கிறேன்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் தேர்தல் களம் மாறியது என்கிற புரிதல் அந்தப் பிள்ளைக்கு இருக்கிறது.
தேர்தல் நிதிப் பத்திரம் குறித்த மசோதா வந்தபோது அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிகக் கடுமையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. ’நம்பர் சூத்திரம்’ இந்தக் கண்டனக் குரலை நசுக்கி ஒன்றும் இல்லாததாக செய்து விட்டது.
உடனே அந்தக் கட்சி தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த கீழ்க்காணும் விவரங்களை பொதுவில் வைக்க உத்திரவிட வேண்டும் என்று வழக்குப் போடுகிறது.
1) தேர்தல் பத்திரம் யாரால் வாங்கப் பட்டது
2) யாருக்கு வழங்கப் பட்டது
3) எவ்வளவு தொகைக்கு வாங்கப் பட்டது
4) எப்போது வாங்கப் பட்டது
இந்த வழக்கு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே கிடந்தது. மிகச் சரியான நேரத்தில் அதை நீதியரசர் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்.விசாரனைக்கு எடுக்கிறது. ஒன்றிய அரசும் பாரத ஸ்டேட் வங்கியும் முடிந்த வரைக்கும் நீர்த்துப் போக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து பார்த்தன.
இந்த விசாரனையும், ஒன்றிய அரசின் சால்ஜாப்புகளும், நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடியும் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அப்போதுதான் “தேர்தல் நிதிப் பத்திரம்” என்றால் என்ன என்பது மக்களுக்குப் புரிய ஆரம்பிக்கிறது.
ஒரு வழியாக, பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்குத் தருகிறது. தேர்தல் ஆணையம் அதைத் தனது அதிகாரப் பூர்வ வலை தளத்தில் வைக்கிறது.
அதைப் பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். தேர்தல் களம் சூடு பிடிக்கிறது.
இப்படியாக தேர்தல் களத்தை சூடுபடுத்தி அதன் திசையை மாற்றிய அந்த வழக்கைப் போட்டது இடது சாரிகள். அந்த வகையில் தேர்தல் களம் இப்படியாக தனது போக்கை மாற்றிக் கொண்டதற்கு காரணம் இடதுசாரிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ஆச்சரியத்தின் உச்சிக்குப் போன அந்தப் பிள்ளை, “இதை ஏன் ஒரு பாவ ரகசியத்தைப் போல யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கிறீர்கள்?” என்று கேட்கிறான்.
அந்தக் கேள்வி என்னை பளேரென்று கன்னத்தில் அறைகிறது.
இந்தத் தேர்தல் களத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேசுபொருளாக இருந்தவற்றுள் பில்கின்ஸ் பானு வழக்கும் ஒன்று. அந்த வழக்கிலும் இடதுசாரிகளின் பங்கு இருக்கிறது என்பது பெரும்பான்மை இடதுசாரிகளே அறிந்திராதது என்பதுதான் துயரம்.
பில்கின்ஸ் பானுவிற்கு நடந்த கொடுமை நமக்குத் தெரியும். அதற்கு எதிராக அந்தப் பெண் தொடர கொடியவர்கள் அனைவரும் சிறைக்குப் போகிறார்கள். அவர்களை இந்திய சுதந்திரத்தின் எழுபத்தி ஐந்தாவது விடுதலை நாளின் பொருட்டு விடுதலை செய்கிறார்கள்.
அதற்கு எதிராக வழக்குத் தொடரப் படுகிறது. அவர்கள் மீண்டும் சிறைக்குப் போகிறார்கள். இதுவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கொடியவர்களின் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது தோழர் சுபாஷன் அலி என்ற மர்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்பது நமக்கேத் தெரியாது.
அந்தக் கயவர்கள் விடுதலை செய்யப்பட்டது பில்கின்ஸ் பானுவை துயருறச் செய்கிறது. அதுவும் அவர்கள் உயர்குடியில் பிறந்தவர்கள். எனவே அந்தத் தவறை அவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று அதற்கான காரணம் சொல்லப்பட்டபோது அந்தப் பெண் நார் நாராகக் கிழிந்து போனாள்.
அவர்களது விடுதலைக்குப் பிறகு பத்திரிக்கையாளர்கள் பில்கின்ஸ் பானுவை சந்தித்து அவர்களது விடுதலைக்கு எதிராக நீதிமன்றம் போகவில்லையா என்று கேட்கிறார்கள்.
இல்லை என்கிறார். தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராகத் தானேதான் போராட வேண்டுமா. இந்த அநீதியைத் தங்களுக்கு ஏற்பட்ட அநீதியாக யாரும் உணரவே மாட்டார்களா என்று கேட்கிறாள்
இதை அறிந்த தோழர் சுபாஷன் அலி அந்தக் கயவர்களின் விடுதலைக்கு எதிராக நீதிமன்றம் போகிறார். உடனே சுபாஷன் அலியின் வழக்கில் தன்னை இணைத்துக் கொள்கிறார் பில்கின்ஸ் பானு.
அவர்களது விடுதலைக்கு எதிராக வழக்கெல்லாம் போட மாட்டேன் என்று கூறிய பானு எதற்காகத் தன்னை சுபாஷன் அலியின் வழக்கில் இணைத்துக் கொண்டார் என்பது புரியாமலே இருந்தது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயர்க்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் ஒரு கூட்டத்தில் இதற்கான காரணத்தைத் தெளிவு படுத்தினார்.
சுபாஷன் அலி பிராதான வழக்கில் எந்த இடத்திலும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தன்னை இந்த வழக்கில் இணைத்துக் கொண்டாராம் பில்கின்ஸ் பானு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் களத்தில் “கச்சத் தீவு” பிரச்சினையைக் கயில் எடுத்து விளையாட முயற்சி செய்தது பாரதிய ஜனதாக் கட்சி.
கச்சத் தீவு குறித்து அண்ணாமலையோ அவரது ஏற்பாட்டின்படி யாரோ ஒருவரோ தகவல் அறியும் சட்டத்தின் வழியாகத் தகவல் கோரியதாகவும்,
கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது கலைஞரும் இந்திராவும்தான் என்றும் கூறி ஒரு நாடகத்தைத் தொடங்குகிறார்கள்.
அந்தத் தகவலே போலியானது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் வழியாகவே தகவலைப் பெற்று நிறுவுகிறார்கள் எதிர்க் கட்சியினர்.
அதுமட்டும் அல்ல, ஒன்றிய அரசின் பல முறைகேடுகளை தகவல் அறியும் சட்டத்தின் உதவி கொண்டுதான் நம்மால் அம்பலப் படுத்தவே முடிந்தது.
சமீபத்தில் உள்துறை அமைச்சகத்திலும் வருமானவரித் துறை அலுவலகத்திலும் கோப்புகள் எரிந்தன. இத்தனைப் பாதுகாப்பான இந்த அலுவலகங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். பிறகு எப்படி இது நடந்தது.
இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பதற்கு பதில் ஏன் நடந்தது எனக் கேட்பது சரியாக இருக்கும்.
ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் வழி அப்போது தகவல்கள் கோரப்படலாம். அதன் மூலம் தங்களது ஊழல்களும் முறைகேடுகளும் வெளி வரலாம். அதன் மூலம் தாங்கள் சிறைக்குப் போக நேரிடலாம். இவற்றில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்வதற்காகக்கூட இந்த அலுவலகங்களுக்கு தீ வந்திருக்கலாம். இன்னும் சில அலுவலகங்களுக்கும் இந்த தீ விருந்து சாப்பிடப் போகலாம் என்கிறார்கள்.
இத்தகைய பலம் வாய்ந்த, மேட்டிமை த்வாய்ந்த அமித் ஷாவும் நிர்மலா மேடமுமே பயப்படக்கூடிய இந்தச் சட்டத்திற்காகப் போராடி அன்றைக்கு இருந்த தனது நம்பர் பலத்தின் காரணமாக அரசைக் கொண்டுவர வைத்தது இடதுசாரிகள்.
விவசாயிகளும் கூலித் தொழிலாளிகளும் லட்சக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருந்தபோது “இந்தியா ஒளிருகிறது” என்று கோடிக்கணக்கான செலவில் விளம்பரங்களைச் செய்து கொண்டிருந்தது Right man in the wrong party வாஜ்பாய் அரசு.
அதன் பிறகும் அது தொடரவே அந்த எளிய மக்களை தற்கொலையில் இருந்து தடுக்க 100 நாள் வேலைத் திட்டத்தைக் கோருகிறது இடதுசாரி இயக்கம்.
மன்மோகன்சிங் அரசு தயங்குகிறது. விடாது போராடுகிறார்கள். சோனியா அவர்களுக்கு இந்த வலி புரிகிறது. தலையிட்டு நூறு நாள் வேலைத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.
சோனியா அவர்களின் தலையீடு இல்லாமல் இது நிகழ்ந்து இருக்காது. அவர் போற்றுதலுக்கு உரியவர். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக காங்கிரஸ் கட்சியும் போற்றப்பட வேண்டியதே.
ஆனால், இதைக் கொண்டு வருவதற்காகப் போராடிய இயக்கம் இடதுசாரி இயக்கம் என்பதை இடதுசாரித் தோழர்களிடமாவது குறைந்த பட்சம் கொண்டுபோய் சேர்க்க வேண்டாமா?
நூறுநாட்களுக்கு வேலை இல்லாவிட்டால் மக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற அவல நிலையில் மக்களை காங்கிரஸ் ஆட்சி வைத்திருந்தது என்பதற்கான அடையாளம் இந்தத் திட்டம்.
ஆகவே இந்தத் திட்டத்தை எடுக்க மாட்டோம் என்று சொன்ன பாஜக அரசு இதை எடுக்க எத்தனையோ முறை முயற்சி செய்தது.
நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்தத் திட்டத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடியவர்கள் இடதுசாரிகள்.
நூறு நாள் வேலைத் திட்டம் தற்கொலைகளைப் பெருமளவு குறைத்திருக்கிறது என்றால் அதில் இடதுசாரிகளுக்கான பங்கும் உண்டு.
ஒன்று சொல்லி முடிக்கலாம்,
செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, செய்ததை சொல்லாமல் இருப்பதும் குற்றம்தான்.
_ காக்கைச் சிறகினிலே மே 2024
May 16, 2024
அக்கறையுள்ளவர்கள் எங்காவது கூடுவோம் என்பது மூன்று
இன்றைய (17.05.2024)“The Hindu" வில் “class X1 public exam wasn't launched keeping welfare of students in mind" மேக்னா என்பவர் எழுதியிருக்கிறார்கள்
மிகவும் மெனெக்கெட்டு சரியான தரவுகளோடு தந்திருக்கிறார்குழந்தைகளின் கல்வி குறித்து அக்கறையோடும் ஆழத்தோடும் நல்ல ஹோம் வொர்க்கோடும் உரையாடுபவர்களின் எண்ணிக்கை அருகிவிட்டது என்ற வகையில் அப்படி ஆழமான உரையோடு வருபவர்களைக் கண்டால் அப்படி ஒரு மகிழ்ச்சி வருகிறதுஅதும் +1 வகுப்பு தேர்வு குறித்து இத்தனை மனக்கெடல்களோடு தந்திருப்பமைக்காக +1 தேர்வு குறித்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கத்திக் கொண்டிருப்பவன் என்ற வகையில் அவரது கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்அவரது இந்தக் கட்டுரை இன்னும் இதுகுறித்து உரையாடல் தேவைப்படுகிறது என்பதையே குறிக்கிறதுஒரு கருத்தாய்வுக் கூட்டம்தோழர் பிரபஞ்சன், எழுத்தாளர் இமையம், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ரவி, பேராசியர் கல்யாணி அய்யா அவர்களோடு நானும் கலந்து கொள்கிறேன்அன்றைய பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரன் சார், அன்றைய பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் சார், அன்றைய இயக்குநர் இளங்கோவன் சார் இவர்களோடு இன்னும் சில இணை இயக்குநர்கள் பங்கேற்கிறார்கள்அய்யா கல்யாணி அவர்களும் நானும் +1 வகுப்பிற்குப் பொதுத் தேர்வு வைக்க வேண்டும் என்றும் செமஸ்டர் முறை அவசியம் என்றும் மன்றாடினோம்உதயசந்திரன் சார் புன்னகைத்தார்நம்பிக்கைப் பிறந்தது”The public exam was not introduced keeping students' welfare in mind. To curb theprivate schools'practice (of skipping class X1 syllabus), the state decided to tax the students"என்ற திரு அருண் ரத்தினம் அவர்களின் கருத்தை தனக்கு ஆதரவாக அவர் வைக்கிறார்இதை அப்படியே ஏற்க இயலாதுஅப்போது +2 கட் ஆஃப் மட்டுமே நேரடியாக மருத்துவம் மட்டும் பொறியியல் கல்லூரிகளுக்கு எடுக்கப்பட்டதுதனியார் பள்ளிகள் +1 மற்றும் +2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் +2 பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்தினஅரசு மற்ரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த ஆண்டிற்கு உரிய பாடங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டனவிளைவாகஇரண்டு ஆண்டுகளும் ஒரே வகுப்பு பாடங்களைப் படிக்கும் குழந்தைகள் அதிக கட் ஆஃப் பெறும் வாய்ப்பு இயல்பாகக் கிட்டியதுஇரண்டு வருடங்களும் அந்தந்த வகுப்பு பாடங்களாஇ நடத்த வேண்டும் என்பது இதை மனதில் கொண்டும் கோரப்பட்டதுதான்ஆனால் இதை மட்டுமே கொண்டு அல்ல+1 பாடங்களைப் படிக்காமல் வெளியேறும் குழந்தைகளுக்கு இழப்பு அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டதுதான்இந்த ஆண்டு கிட்டத்தட்ட +2 தேர்ச்சி விழுக்காடு +1 தேர்ச்சி விழுக்காட்டைவிடக் குறைவுஇது ஒவ்வொரு ஆண்டும் இப்படி வருவதும் இயல்புதான்ஏன் +1 ஐவிட +2 வில் தேர்ச்சி விழுக்காடு என்பதற்கு மாடரேஷன் உள்ளிட்டு நிறை காரணங்கள் உள்ளனநான்கு செமஸ்டர்களாக நடத்துவது என்பது ஒரு ஆலோசனைமேல்நிலை என்பது இண்டகெரேட்டட் கோர்ஸ்ஆகவே 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு என்பதைத் தவிர்க்கலாம் என்பது இரண்டுஇன்னும் உரையாட இதில் நிறைய இருக்கிறது என்ற வகையில்அக்கறையுள்ளவர்கள் எங்காவது கூடுவோம் என்பது மூன்றுமீண்டும் ஒரு முறை மேஹ்னா அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்#கல்விedn#தேர்வுednMay 15, 2024
‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.
[image error]ஆய் அண்டிரன் என்னும் சங்ககாலத் தலைவனை ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர்பெருமான் பாடிய இப்புறநானூற்றுப் பாடல் சங்கத் தமிழர்களின் விழுமிய வினைக்கோட்பாட்டை விளக்குகின்றது. பின்னாளில் வினைக்கோட்பாடு பற்றிய விரிந்த சிந்தனைக்கு இப்பாடலில் வித்தினைக் காணலாம்.
May 14, 2024
மாமன்னர் இப்போதைக்கு கலங்கிப்போய்தான் நிற்கிறார்
2014
பாஜக ஆட்சிக்கு வருவதற்கான காரணங்களுள்ஹசாரேவும் அவரது சிஷ்யப் பிள்ளையான கெஜ்ரிவாலும் உண்டு2G எனும் ஊகத்தை ஊதிப் பெரிதாக்கி மாமன்னரைத் தூக்கி வந்து சிம்மானத்தில் உட்கார வைத்ததில் அவர்களது பங்கு அலாதியானதுஅடிப்படையில் கெஜ்ரிவால் RSS காரர்அதனால் அவர்கள் தேர்த்லை எப்படி எதிர்கொள்வார்கள் என்பது கெஜ்ரிவாலுக்கும்கெஜ்ரிவால் எப்படி எதிர்கொள்வார் என்பது அவர்களுக்கும் தெரியும்அதனால்தான் கைதேஇப்போது பாருங்கள்மாமன்னர் ராமர் என்கிறார்கெஜ்ரிவால் அனுமான் என்கிறார்அவர்கள் எதிர்க் கட்சிகளிடம் உள்குத்து குடைசலைத் தருகிறார்கள்கெஜ்ரிவால் மன்னர் அல்ல அவர்களது சாய்ஸ், அவர்களது சாய்ஸ் ஜெய்ஷாவின் அப்பா என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்உள்ளுக்குள் புகைகிறதுஇது ராகுலால் முடியாததுஎனவே இந்தப் பகுதியை கெஜ்ரிவால் பார்த்துக் கொள்ளசாதியால் விழுந்தவர்கள் சாதியால்தான் எழ வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று இன்னொரு பகுதிக்கு அவர்களை இழுக்கிறார்ப்ரியங்கா ஒரு பக்கம் இழுக்கிறர்மாநிலக் கட்சிகள் இன்னும் சில பக்கம் இழுக்கின்றனஒன்று சொல்ல வேண்டும்மாமன்னர் இப்போதைக்கு கலங்கிப்போய்தான் நிற்கிறார்May 13, 2024
பல வடிவங்களில் இருக்கும் ஒரே கடவுளின்
”ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”
என்பது திருவாசகம்பல வடிவங்களில் இருக்கும் ஒரே கடவுளின் தாழ் பணிகிறேன் என்கிறேன் மாணிக்கவாசகர்மாமன்னரரின் மதவெறிப் பேச்சு இந்த ஏகன் அநேகன் தத்துவத்திற்கு எதிரானதுMay 12, 2024
அம்பானி அதானியை மன்னர் ராகுலிடம் தள்ளியது என்பது
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது இயல்பானது
எதிரியின் நண்பனை நண்பனாக்குவது என்பது தந்திரம்அம்பானி அதானியை மன்னர் ராகுலிடம் தள்ளியது என்பது பாசிசத்தின் பின் நவீனத்துவ யுக்திஇந்த அழைப்பை ராகுல் ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில்
பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்
மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?
ஒரு நேர்காணல்அநேகமா, கரண் தாப்பரோடு என்று நினைக்கிறேன்குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்விசன்னமான கேள்விதான்அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?இந்தச் சன்னமான கேள்விக்கேகோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டுபதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)