இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 22

August 26, 2024

கவிதை 101

 


மலைகள் விலகி நீர்த்தடுக்கிகெட்டிச் சாந்தாகிகண்ட திக்கில் பாய்கின்றனபர்வதங்களெல்லாம் இடம் பெயர்ந்து போயினஎம் கடவுள்களும் எம்மைவிட்டுவிலகிப் போயினர்ஆழக் காலம் போட்டு பில்லரிட்டகெட்டிக் கட்டிடங்கள்வாவென்று தண்ணீர் அழைத்த மாத்திரத்தில்சகலமும் அடங்கிஆர்ப்பரிக்கும் நீர்வழி மிதக்கின்றனமலைகளே மிதக்கையில்அவை என்ன செய்யும் பாவம்எந்தத் திசையிருந்து எந்தத் திசைநோக்கி பாய்கிறதென்று அறிய இயலாதகாட்டாறொன்றின் மேல்கரையிருந்து நீளும் கிளைபற்றித் தொங்கிக் கொண்டிருக்கிறார்கடவுளொருவர்வெள்ளத்தின் இரைச்சலில்வெள்ள இரைச்சலே அவருக்கு கேட்கவில்லைநம் வேண்டுதலெப்படி கேட்கும்ஈரம்இவ்வளவு பொல்லாததென்றுஎமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறதுஇந்தப் பேரிடர்மக்களைக் காக்க போராடிக் கொண்டிருக்கிற மக்களைப் பார்க்கிறேன்பிழைத்தவர்கள் அறிவார்கள்பிழைக்க வாய்க்காது போனாலும் நானும் அறிவேன்மக்கள்...மக்களைக் காக்கப் போராடுவார்கள்யாரேனும் கடவுளைப் பார்ப்பதற்குள்அந்தக் கிளை முறியலாம்உறைந்து அவர் கைபிடி நழுவலாம்அவரே இறக்கலாம்அநேகமாகநானும்காக்கப்படலாம்அல்லது நானும்செத்துப் போகலாம்இரண்டாவதற்கேவாய்ப்பதிகம்புரிந்து கொண்டதுஇதுதான்இயற்கையும்மனிதமும் மகத்தானவை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:38

கவிதை 100

 


நனைய வாசலுக்கு வருமாறு இறைஞ்சிஇரைந்து அழைத்துக் கொண்டிருக்கிற மழையைவெறுப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்இத்தனை வெறுப்போடுமன்னரைக்கூட ஒருபோதும் நான்பார்த்தது கிடையாதென்பதுமழைக்கே தெரியும்தெற்கே வயநாட்டில்முந்தின நாள் பள்ளியில் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்தமகளின் படத்தைத் திறந்து பார்த்த குவைத்தில் இருக்கும் தகப்பனுக்குதன் மகளோடு அனைவரையும்சரிந்து வழிந்த மலைசாப்பிட்டுப் போன செய்திபத்து நிமிடத்தில் வருகிறதுஅந்தக் குழந்தையின் தந்தையின்புத்திர சோகத்தைஎன் வெறுப்புமிழும் கண்களில் கண்டிருக்க வேண்டும்இப்போது என் தெருவில்அழுது கொண்டிருக்கிறது மழை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:37

கவிதை 099

 





அண்ணன் அழுவதுபொறுக்க மாட்டாமல்அவனைக் கட்டிப் பிடித்துஆற்றுப்படுத்தும்மோன்விதான்நகக் கீறல் விழுமளவு கிள்ளி அவனை அழ வைத்ததும்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:35

கவிதை 098

 


அச்சு அசலாகஎன்னைப் போலவே இருந்தான் அவன்அவனை நானென்று கொண்டுகந்துக்காரன்அவனிடம் போவான்இப்போதைக்கு நழுவித் தப்பலாம்என்றிருந்தேன்அவனுக்கும் கொடுத்திருக்கிறான் கந்து
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:32

கவிதை 097

 


அச்சு அசலாகஎன்னைப் போலவே இருந்தான் அவன்அவனை நானென்று கொண்டுகந்துக்காரன்அவனிடம் போவான்இப்போதைக்கு நழுவித் தப்பலாம்என்றிருந்தேன்அவனுக்கும் கொடுத்திருக்கிறான் கந்து
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:31

கடின உழைப்பிற்கு ஊதியமும் இல்லை என்றால் எப்படி?

 



கீழே காணும் ஏழு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 83 கௌரவ மற்றும் மணிநேர விரிவுரையாளர்களும் 33 அலுவலகப் பணியாளர்களும் ஆக 116 பேர் கடந்த 14 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற செய்தி நெஞ்சை அறுக்கிறது. 1) அரசு கல்லூரி, பெரம்பலூர்2) அரசு கல்லூரி, லால்குடி3) அரசு கல்லூரி,ஒரத்தநாடு4) அரசு கல்லூரி, இனாம்குளத்தூர்5) அரசு கல்லூரி, வேப்பூர்6) அரசு கல்லூரி, அறந்தாங்கி7) அரசு கல்லூரி, நன்னிலம்உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏன் இவர்களுக்கு வந்தது?தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும் உறுப்பு கல்லூரிகளை நடத்தி வந்தன. இந்த வகையில் 41 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வந்தன.1) நிரந்தர விரிவுரையாளர்கள்2) கௌரவ விரிவுரையாளர்கள்3) மணிநேர விரிவுரையாளர்கள்என்கிற மூன்று வகையினராக இந்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் நிரந்தர விரிவுரையாளர்கள் குறித்து இங்கு பேசுவதற்கு ஏதும் இல்லை.இதில் கௌரவ விரிவுரையாளர்கள் 17,500 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரைக்கும் தங்களது கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் பெற்று வந்தார்கள்.மணிநேர விரிவுரையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 400 ரூபாய், அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 மணி நேரம் என்கிற அளவில் பணி வழங்கப்படுகிறது. இதன்படி மணிநேர விரிவுரையாளர் ஒருவர் ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் 16,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற முடியும்.இதைவிட அதிகமான ஊதியத்தை சில கடை ஊழியர்களே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மண் எடுக்கும் ஊழியர்களுக்கும் அச்சாபீசில் கம்போசிடர்களாக ஊழியம் பார்ப்பவர்களுக்கும் 4 ரூபாய் தினக் கூலி என்பது அநியாயம் என்றும் கம்போசிடர்களுக்கு அதிகம் வழங்க வேண்டும் என்றும் 17.08.1973 அன்று தந்தை பெரியார் பேசியதை 25.08.1973 அன்றைய விடுதலை வைத்திருக்கிறது.எனில், 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்த குழந்தைகள் கடைகளில் 15,000 ரூபாய் பெறும்போது, காலத்தையும் பொருளையும் செலவழித்துப் படித்து, Phd முடித்து வரும் விரிவுரையாளர்களுக்கு 16,000 ரூபாய் ஊதியம் என்பதே கண்டிக்கத் தக்கது.இந்த ஊதியம் குறைவானது என்றும் 50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் UGC அறிவுறுத்தி உள்ளது. இதை 2019 இல் இருந்து நிலுவைத் தொகையோடு வழங்க வேண்டும் என்றும் அது உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று சிலர் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.அதை நடைமுறைப் படுத்தாத அரசிற்கு எதிராக நீதிமன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் இவர்கள் உள்ள ஊதியத்தையாவது கொடுங்கள் என்று போராட வைத்தது எது?ஏன் எட்டு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை?2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசாணை எண் 36 இன்படி 14 கல்லூரிகள் மற்றும் அரசாணை எண் 186 இன்படி 27 கல்லூரிகள் என்று 41 உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக அறிவிக்கிறார் அன்றைய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள்..இதுவரை பல்கலைக் கழகங்களிடம் இருந்து வந்த இந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள செலவினம் நேரடியாக அரசின் கைகளுக்கு செல்கிறது.அதுவரை பல்கலைக் கழகங்களிடம் இருந்து ஊதியத்தை பெற்றுவந்த விரிவுரையாளார்களும் ஊழியர்களும் தங்களது ஊதியத்தை கருவூலம் வழியாக பெறத் தொடங்குகிறார்கள்.இது ஒரு வகையில் மிக நல்லதொரு ஏற்பாடு. இனி அரசாணை எண் 56 மூலமாக நமது பணியிடங்கள் நிரந்தரமாவதற்கு வாய்ப்பு பிறந்திருக்கிறது என்று விரிவுரையாளர்களும் ஊழியர்களும் கொஞ்சம் மகிழ்ந்தும் போனார்கள்.பல்கலைக் கழகத்தின் வசம் இருந்து சம்பள செலவினம் அரசின் கைகளுக்கு மாறுகிறபோது, 1) கல்லூரிகளின் நடத்தப்படும் பாடப் பிரிவுகள்2) பிரிவுகள் வாரியாக பணியாற்றும் விரிவுரையாளர்கள் பட்டியல்3) பிரிவு வாரியாகப் பணியாற்றும் ஊழியர்களின் பட்டியல் போன்ற விவரங்களை பல்கலைக் கழகங்கள் அரசிற்கு வழங்க வேண்டும்.இந்த விவரங்களை அரசிற்கு அனுப்பும்போது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உள்ள மேற்காணும் ஏழு கல்லூரிகளும் சில பிரிவுகளை குறிப்பிடத் தவறிவிட்டன. செலவினத்தை திட்டமிடுவதற்கு அனுப்பும் போது இப்படியான தவறுகளைச் செய்வது குற்றம்.தம்மிடம் வழங்கப்பட்ட பட்டியலுக்கேற்றபடி செலவினத்திற்கு அனுமதி அளிக்கிறது. இந்த இடம் வரைக்கும் இதில் அரசின் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.பல்கலைக் கழகத்தன் கவனப் பிசகால் விடுபட்ட பிரிவுகளுக்கு பாடம் எடுக்கும் 83 விரிவுரையாளர்களுக்கும் 33 ஊழியர்களுக்கும் தவிர ஏனைய ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் கருவூலம் வழியாக மாதா மாதம் சரியாக ஊதியம் வந்து விடுகிறது. இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும் உரிய அவசரத்தில் இந்தக் கல்லூரிகளோ அல்லது பல்கலைக் கழகமோ எடுக்கவில்லை. மாறாக இந்த 116 பேருக்குமான ஊதியத்தை பல்கலைக் கழகமே வழங்க ஆரம்பிக்கிறது.பல்கலைக் கழகத்தின் நிதிச்சுமையின் காரணமாகவோ என்னவோ கடந்த எட்டு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.பல்கலைக் கழகத்தின் முக்கியமான செலவினம் என்பது பாடம் நடத்துபவர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம்தான் என்பதை பல்கலைக் கழகம் மறந்துவிடக் கூடாது. விரிவுரையாளர்களும் ஊழியர்களும் அவரவர் கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள்.அரசிற்கு வந்த செலவினத்தை அரசு விடுவித்திருக்கிறது. இதில் அரசின் பிழை இல்லை என்பதை ஆண்டுக் கணக்காக அரசு கூறக் கூடாது. அதுவும் கல்வியில் மிகுந்த அக்கறையோடு கவனம் குவிக்கும் திரு ஸ்டாலின் அவர்களது அரசாங்கம் இதைத் தவிர்த்தே ஆக வேண்டும்.பிழை பல்கலைக் கழகத்தினுடையது. தவறு இழைத்தவர்களைத் தண்டித்துக் கொள்ளுங்கள்.விரிவுரையாளார்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள். மாதா மாதம் இவர்களுக்கு ஊதியம் கிடைப்பதை உத்தரவாதப் படுத்துங்கள்.இவர்களை நிரந்தரப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசாணை எண் 56 ஐ உடனடியாக நடைமுறைப்படுத்தப் பாருங்கள்.கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பது சரி, ஊதியமும் இல்லை என்றால் எப்படி?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:25

கவிதை 095

 

சிதிலமடைந்த ஒரு குட்டிச்சுவரின் நிழலில்மேற்கு ஓரமாக நானும் கிழக்கு ஓரமாகஒரு கழுதைக் குட்டியும்நின்று கொண்டிருக்கிறோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:22

கவிதை 094

 





வேலுநாச்சியார் வேடத்தில்தோழர் சுந்தரப்ப காமராஜின் பேத்தியைப் பார்த்ததும்நாச்சியாரின் சகலத்தையும் சொன்னவர்கள்அவள் அழகி என்பதை சொல்லுமளவிற்கும்பெருந்தன்மையோடு இருந்திருக்கலாமென்று தோன்றுகிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:20

August 17, 2024

மக்களுக்கான அறிவு குறித்து பேசும்போது கிழவனைக் கடந்துபோய்விட முடியாது

 

அநேகமாக ஒரு வருடமிருக்கலாம்அமெரிக்கா சென்றிருந்த ராகுல் சிலிகான் பள்ளத்தாக்கிற்கு செல்கிறார்ஒருக்கால் நீங்கள் பிரதமரானால் உடனடி முன்னுரிமையை எதற்கு வழங்குவீர்கள் என்று கேட்கிறார்கள்ஆரம்பப்பள்ளிக் கல்விக்குஎன்று சட்டெனக் கூறுகிறார்ஏன்இரண்டு மூன்று சொல்கிறார். அவற்றில் ஒன்றுமக்களுக்கான அறிவை அங்கிருந்து தொடங்குவதுதான் பலனைத் தரும்இன்று பெரியாரைப் புரட்டுகிறேன்உயர் கல்விக்கு செலவளிப்பதைவிட ஆரம்பக் கல்விக்கு அதிகமாக செலவளிக்க வேண்டும்ஏனெனில்,அப்போதுதான் அறிவுள்ள தேசத்தைக் கட்ட முடியும் என்று04.08.1932 அன்று ஒரு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அன்றைய கல்வி அமைச்சர் திவான் பகதூர் எஸ் குமாரசாமி கூறியதை14.08.1932 அன்று பெரியார் குடியரசில் கொண்டாடி இருப்பதை"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்" என்ற நூலில் தோழர் கவுதமன் பசு தொகுத்திருப்பதைப் பார்க்கிறேன்இதை ராகுல் வாசித்திருக்க வாய்ப்பில்லைஆனால் மக்களுக்கான அறிவு குறித்து பேசும்போது கிழவனைக் கடந்துபோய்விட முடியாது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2024 21:41

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.