இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 18
March 12, 2025
இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் CBSE வழியில் படிப்பதாக அமைச்சர் மகேஷ் சார் வழியாக அறிய முடிகிறது
இந்தக் குழந்தைகளிடம் இருமொழி போதும்தானே என்று வாக்கெடுப்பு நடத்தினால் என்ன?
12.03.2025
”மழை உங்களுக்கு ஒத்துக்காதா சார்?”
நேற்று தோழர் இ.தாஹிர் பாட்சா அவர்களின் அப்பாவை இறுதியாக வழியனுப்பி வைப்பதற்காகப் போயிருந்தோம்மழைகுடைக்குள் இருப்பதில் கவனமாக இருந்த என்னைப் பார்த்த நண்பர் கேட்டார்”மழை உங்களுக்கு ஒத்துக்காதா சார்?””செவிட்டு மிஷினுக்கு ஒத்துக்காதுங்க சார்”மருத்துவர் கருணாகரன் நிமிர்ந்து என்னைப் பார்க்கிறார்“இதில் ஒன்றும் இல்லை தோழர். ஆனால், கேட்காதபோது நிறைய அவமானப்பட்டிருக்கிறேன் .” என்கிறேன்.கண்கள் கசிந்தனதான். யாரும் பார்க்கவில்லை என்பது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.என்னை இழுத்துப் போய் மருத்துவரிடம் காட்டி மிஷினை மாட்டி கேட்கச் செய்த Kalai Mani மற்றும் தோழர் கணேசிற்கும்அதுவரை எனக்கு கேட்கவேண்டும் என்பதற்காக சத்தமாகப் பேசி சிரமப்பட்ட அனைவருக்கும் அன்பு
12.03.2025LikeCommentShare
March 11, 2025
இந்தியாகூட சாதிக்கலாம் ஆனால் …
ட்ரம்ப்தனது நண்பர் என்று மோடியும், மோடி தனது நல்ல நண்பர் என்று ட்ரம்ப்பும் அவ்வப்போது சொல்லிக்கொள்வது வாடிக்கைதான். ட்ரம்ப் போகிறபோக்கில் இதை சொல்லிவிட்டோ கேட்டுவிட்டோ கடந்து போய்விடுகிறார்.
2) கல்விதரமாக இல்லை
3) பாலங்கள்தரமாக இல்லை
4) ரயில்கள்தரமாக இல்லை
5) துறைமுகங்கள்தரமாக இல்லை
6) தரமானதண்ணீர் இல்லை
மார்ச் 2025
March 10, 2025
அதுவும் மீதம் இருந்தால்தான்
திருமணங்களில் உணவு பறிமாறும் பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்துகொள்வோம்அவர்களில் நிறையபேர் கல்லூரி குழந்தைகள்இரண்டு அல்லது மூன்றுவேளை சாப்பாடுஅதுவும் மீதம் இருந்தால்தான், இருப்பதுதான் பல இடங்களில் போக, 300 இல் இருந்து 400 ரூபாய் ஊதியம்பேண்டில் ஏற்படும் சாம்பார் கறையைத் துவைக்கவே அவர்கள் சிரமப்பட வேண்டும்இலை போடுவதில், பறிமாறுவதில் ஏதேனும் குறை இருப்பின் கொஞ்சம் கனிவோடு நடந்து கொள்வோம்
அமைதியை குலைத்தால் ...
01.05.1924 அன்று திருவனந்தபுரத்தில் குஞ்சு கிருஷ்ணாபிள்ளை அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ”எடபாடம்” என்ற ஒரு ஊரைக் குறித்து பேசுகிறார்
அந்த ஊர் முழுமையான காங்கிரஸ் ஊர்
முழுமையான கதர் கிராமம்
யாரும் மது அருந்துவதில்லை
காவலர்கள் மட்டுமே மதுக்கடைக்கு போகிறார்கள்
யாரும் ஒருவரோடு சண்டை போடுவதில்லை
அஹிம்சையைக் கடைபிடிக்கும் அமைதியான ஊர்
மது விற்பனை ஆகாதது சிலரை உறுத்துகிறது
காரணத்தை அலசுகிறார்கள்
அமைதியை குலைத்தால் மது ஊருக்குள் வந்துவிடும் என்று உணர்கிறார்கள்
ஒரு அடாவடியான காவலரை அந்த ஊருக்கு மாறுதலில் அனுப்புகிறார்கள்
அவர் அந்த ஊரின் பழைய முரட்டு மனிதன் ஒருவரிடம் வம்பிழுக்கிறார்
அவர் காவலரை பிய்த்து எடுக்கிறார்
காவல்துறை ஊரை சூறையாடுகிறது
ஊர் பழையபடி கலவர பூமி ஆகிறது
இதை சொல்லி வைக்கம் யுத்தத்தை கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் அமைதியாக நடத்த வேண்டும் என்கிறார் பெரியார்
ஆமாம் எடப்பாடம் எங்கு இருக்கிறது?
09.03.2025
March 8, 2025
”அது எப்படி பள்ளி நகரும்” என்றுகூட
09.03.2025
வணங்குவதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளை
நந்தலாலாவின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்து கீழே அமர்ந்திருக்கிறோம்அப்போது அந்தப் பக்கமாக வந்த தோழர் இளங்குமனை அழைக்கிறாள் கலைமணி வருகிறார்நாளைக்கு ஏதேனும் சடங்குகள் உண்டா என்று கேட்கிறாள்தலைமாட்டில் விளக்குகூட ஏற்றப்படவில்லைஎந்தச் சடங்கும் இருக்காதுதான்ஆனாலும் பிரச்சினை வராதமாதிரி தோழர் பதில் சொல்லவேண்டுமே என்று பயம் தொற்றிக் கொண்டதுகாரணம் ஏதேனும் சடங்கு இருப்பதாக சொன்னால் விடமாட்டாள்நாளை இங்கு ஒரு இரங்கல் கூட்டம் வேறு சடங்கு இல்லை தோழர் என்ற பதிலில் "அப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவற்குள்அநேகமா அவரது மாப்பிள்ளை கொள்ளி வைப்பார்போல என்றார்போல என்றுதான் சொன்னார்பிடித்துக் கொண்டாள்ஏன் பாரதியோ நிவேதியோ கொள்ளி வச்சா வேகாதா என்றதோடு விடவில்லைபோய் பேசுங்க தோழர் என்கிறாள்ஏம்பா அவங்க முடிவில்லையா என்றால்எனில் இது தப்பான முடிவென்கிறாள்எங்கும் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல் பயமற்று எதிர்வினை செய்வாள்ஆனால் எந்தவொரு சிறு சடங்கும் இல்லாமல் நந்தலாலாவின் இறுதி வழியனுப்பு நிகழ்ந்ததுஇன்று மகளிர் தினம்வணங்குவதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளைவணக்கம் கலை
08.03.2025
March 7, 2025
எப்போதுமான என் ஆசை

07.03.2025
ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்
இந்தித் திணிப்பின் கயமை குறித்தும்தாய்மொழிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்இந்தித் திணிப்பை எதிர்த்து ஆங்கிலத்தை கையிலெடுத்ததன் காரணமாக தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் இந்தி மக்கள் பாய்ச்சசலைக் காணலாம் என்ற எதார்த்ததம் குறித்தும்இந்தியா முழவதும் நாம் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்இந்தி போதாது எங்களுக்கு ஆங்கிலம் கொடு என்று இந்தி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்க வேண்டும்நாங்கள் பிழைப்பதற்கு தமிழ்நாடுதான் போகவேண்டும்ஆகவே எங்களுக்கு தமிழைச் சொல்லிக்கொடு என்று அந்த மக்களை கேட்கச் சொல்ல வேண்டும்ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்
07.03.2025
March 4, 2025
எனக்கு அழவேண்டியதில்லை நீ

04.03.2025
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)