இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 16
March 21, 2025
நல்லது செய்ய வேண்டும்
அன்பிற்குரிய முதல்வர் அவர்களே,
தகுதி மறு வரையறையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக நீங்கள் இன்று ஏற்பாடு செய்திருக்கக் கூடிய கூட்டமைப்புக் கூட்டம் நியாயமானது
வெற்றிபெற வாழ்த்துகிறோம்
மாவட்டத் தலைநகரங்களில் நாளை நடைபெற உள்ள ஜேக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் பட்டினிப் போராட்டமும் நியாயமானது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்தவர்
எனவே, நாளை நடக்கும் பட்டினிப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து நீங்கள் அணுக வேண்டும் என்றும்
தலைவர்களை அழைத்துப் பேசி நல்லது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்
22.03.2025
மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான்
மலையடிக் குப்பம்
இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது நேற்றிரவு 9 மணி
இன்று காலை தோழர் Shanmugam Perumal பெரம்பலூர் வரவேண்டும்
முந்தாநாள் அவர் மதுரையில் இருந்தார்
நேற்று மாலை ஆறு மணிக்கு விடுதலை என்றதும்
ஒரு முடிவுநோக்கிய பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் நகரமாட்டோம். வேண்டுமானால் ரிமாண்ட் செய்துகொள்ளுங்கள் என்கிறார்
மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான் நிதிபெறுவது உள்ளிட்ட வேறு எதுவும் எங்களுக்கு
22.03.2025
இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்
போலீஸ் தாக்குதலில் அடிபட்டு மயக்கமடைந்த தாயொருத்தியை நான்கைந்து பிள்ளைகள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்
அப்படித் தூக்கிப்போகும்போது தங்களது இன்னொரு கையில் அருவாள் சுத்தியல் கொடியை இறுக்கிப்பிடித்தபடியும் கோஷமிட்டபடியும் சென்ற மலையடிக் குப்பம் மக்கள் ஒன்றைச் சொல்கிறார்கள்இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்தலைமை தாங்கி நெறிப்படுத்தினால் போதும்இந்த நிலைக்கு கடலூர் தோழர்களின் உழைப்பு மகத்தானMarch 20, 2025
ஆத்திசூடி 10
கல்வியெனில் மாகாணம்தான்
மாகாணப் பட்டியலுக்கு கல்வியை ட்ரம்ப் கொண்டுபோக இருப்பதாக தகவல்கள் வருகின்றன
எந்த நாடானாலும் மாகாணங்களிடம் கல்வி இருப்பதே சரி என்ற வகையில் இதை வரவேற்கலாம்
நிதி உள்ளிட்டு எங்கெங்கெல்லாம் மாகாணங்களுக்குப் பிரச்சினை வருகிறதோ
அதை பேசியோ போராடியோ சரிசெய்துகொள்ள வேண்டும்
இதை அதிர்ச்சி என்று குறுக்குவது ...

20.03.2025
March 19, 2025
அவருக்கு ட்ரம்பையும் தெரியும்
சுனிதா சந்திக்கப் போகும் தலைவலிகள் என்று நண்பர்கள் பட்டியலிட்டபடியே இருக்கிறார்கள்
அவரது பெரிய தலைவலியே ட்ரம்ப்தான்
அவர் சொன்னால்தான்
அவர் சிக்கினாரா அல்லது
மகிழ்ந்து பணியாற்றினாரா தெரியும்
அவருக்கு ட்ரம்பையும் தெரியும்
உண்மையை சொன்னால் ட்ரம்ப் என்ன செய்வாரென்பதும் தெரியும்
மூன்று வாய்ப்புகள்தாம் அவருக்கு
உண்மையை சொல்லி விzளைவுகளை எதிர்கொள்வது என்பது ஒன்று
பொய்சொல்லி தப்பித்தலென்பது இரண்டு
மௌனமாக இருந்து விடுவதென்பது மூன்று
பார்ப்போம்
20.03.2024
ஆத்திசூடி 09
ஆத்திசூடி 08
ஆத்திசூடி 07
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)