இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 14

April 2, 2025

03.2025

 

படித்தோரைபடித்த படிப்பிற்குபணி தேடித் திரிந்தோரைபணியில் அமர்ந்தோரைபணி தந்த ஊதியத்தில்சொகுசள்ளிப் புசித்தோரைகாதைத்திருகிகரம்பிடித்துஇடதிழுத்துபசித்தோரைபசிக்கான காரணத்தைஅறியாத எளியோரைநினைஅவனுக்காய்களமேகி உழை என்றுரைத்தஊனேஎங்கள் உயிரேசெங்கொடியேவைகை நீராடமாமதுரை போனவளேபார்க்க வாய்க்காமல்நான் போக வாய்ப்புண்டுபிள்ளைக்கும்பேரனுக்கும் வாய்க்காமல் போனாலும்என்எள்ளோகொள்ளோஇல்லைஅடுத்தடுத்து வருபவரோஉன்னை கோட்டை ஏற்றிவருங்காலம்காப்பார்கள்இன்குலாப்இன்குலாப்இன்குலாப்ஜிந்தாபாத்
02.04.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 09:35

April 1, 2025

புல்டோசர் முன் நின்றபடி

 

அது சரி,

அவர்களுக்காச்சும் ஐகானா புல்டோசர் இருக்கு. உங்களுக்கென்னடா இருக்கு மாப்ள?

அவங்களுக்கு புல்டோசர் ஐகான் எனில் எங்களுக்கு

புல்டோசர் முன் நின்றபடி முடிஞ்சா இடிச்சுப் பாரென்று நின்று கர்ஜிக்கும் பிருந்தா படம்டா...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 10:49

புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக

 

யோகி புல்டோசர் கொண்டு இடித்த ஐந்து வீடுகளுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது

ஐந்து வீடுகள்தானா

இல்லையெனில் கண்டுபிடித்து வழக்குத் தொடுக்க வேண்டும்

புல்டோசரை தங்களது கம்பீரத்தின் சின்னமாக பாஜக நினைத்தது

அடி விழுந்திருக்கிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 10:47

65/66 காக்கைச் சிறகினிலே, மார்ச் 2025

 


பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி நிறைவுற்ற இரவு. நான், இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் தோழர் தங்கவேல் ஆகியோர் பாரதி புத்தகாலய ஸ்டாலில் அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கு இரண்டு நண்பர்கள் வருகிறார்கள். வந்தவர்கள் மிச்சப் புத்தகங்களைக் கணக்கெடுத்து பார்சல் செய்வதில் எங்களுக்கு உதவ ஆரம்பிக்கிறார்கள். வேலையினூடே ஆரம்பித்த உரையாடல் கணக்கெல்லாம் முடித்து பார்சல்களை ரெகுலர் சர்வீசில் ஒப்படைத்துவிட்டு தோழர் தங்கவேலு அவர்களை விடியற்காலம் பேருந்து ஏற்றிவிடும்வரை தொடர்கிறது.

 

உரையாடலினூடே அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் அருட்தந்தை கஸ்பர் அவர்கள் குறித்த ஒரு தகவலைச் சொன்னார். வேறொன்றுமில்லை, ஒரு புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுவதற்கு பாதர் கஸ்பரைக்  கேட்டிருக்கிறார்கள். அவரும் இசைவைத் தந்திருக்கிறார்.

 

திட்டமிடல் குறித்தான ஒரு உரையாடலில் பாதர் ஒருவரை அழைத்து வந்தால் சங்கிகள் பிரச்சினை செய்தால் என்ன செய்வது என்ற அச்சம் நிர்வாகிகளுக்கு வந்திருக்கிறது. சங்கிகள் கொஞ்சம் பலமாக இருக்கிற ஊர் அது.

 

அவர்களது கலந்துரையாடலிn ஊடே அவர்களது அச்சமும் வளர்ந்தபடியும் கெட்டிப்பட்டபடியேயும் நகர்ந்திருக்கிறது. நிச்சயமாக சங்கிகள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற உறுதியானமுடிவிற்கு வந்திருக்கிறார்கள். அதை எதிர்கொள்ளும் பலம் இல்லாதவர்கள் இல்லை அவர்கள். ஆனால் அமைதியாக புத்தகக் கண்காட்சியைநடத்தி முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். என்ன செய்வதென்று யோசித்த நிர்வாகம் அருட்தந்தை கஸ்பரிடம் நிலவரத்தை எடுத்துச் சொல்லி தவிர்த்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

 

ஒரு வழியாக கஸ்பர் இன்றி புத்தகக் கண்காட்சி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதைக் கேட்ட தோழர் ராமகிருஷ்ணன் அதிர்ந்து போகிறார். கிறிஸ்தவ பெயராக இருந்தால் கூட்டத்தில்கூட பேசமுடியாதா என்று கேட்டார்.

 

கொலை செய்யப்படுவதற்கே ஒரு பெயர் போதும் ராமகிருஷ்ணன் என்று நான் சொன்னபோது அவரது முகம் வாடித் தொங்கி விட்டது.

 

இந்த பயத்தில்தானோ என்னவோ எட்வின் தோழர் அவரோட பையனுக்கு ‘கிஷோர்’ என்றும் பாப்பாவிற்கு ‘கீர்த்தனா’ என்றும் பெயர் வைத்துவிட்டார் என்று இடையில் வந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் சொன்னபோது அனைவருமே சிரித்துவிட்டோம். ஆனால் இருவருக்கும் பெயர் வைத்ததற்கு பயமோ அல்லது புத்திசாலித்தனமோ காரணம் அல்ல.

 

11.07.1990 அன்று “கிஷோரிலால்” என்றொருவர் இறந்துபோனதாக செய்தியைதற்செயலாக செய்தித் தாள்களில் வாசிக்கிறேன். எத்தனையோ மரணச்செய்திகளை வாசிக்கிறோம். ஆனால் கிஷோரிலால் மரணமடைந்ததுபுதன்கிழமை என்பது உள்ளிட்டு இதுநாள் வரைக்கும் நினைவில் இருப்பதற்கு இன்னொரு காரணமும்உண்டு. அன்றுதான் 18 மாதங்களாகஇழுத்துக் கொண்டிருந்த என்னுடைய பணிநியமன உத்திரவிற்கு ஒப்புதல் கிடைக்கிறது.

 

கிஷோரிலால் யாரென்று தெரியாததால்சுவாரசியமற்று இருந்த என்னை அவர் பகத்தின் நண்பர் என்று யாரோ சொன்னதுஉசுப்பிவிடுகிறது. பகவதி சரண்,சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, சுகதேவ் என்றெல்லாம் ஓரளவு தெரிந்து வைத்திருந்த எனக்கு கிஷோரிலால் யாரென்றுதெரியவில்லை. தேட ஆரம்பிக்கிறேன்

 

 

”பகத்தோடவேபோயிருக்க வேண்டியவன்பா. 18 வயசாகலங்கறதால தப்பிச்சான்”என்று யாரோ ஒருமுறை சொல்ல உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. இன்னும் அதிகமாய் தேட ஆரம்பிக்கிறேன். தெரிந்திருக்கக்கூடும்என்று நம்புபவர்களிடம் எல்லாம் விசாரிக்க ஆரம்பிக்கிறேன்

 

07.10.1930  அன்று பகத், சுகதேவ், ராஜகுரு ஆகியோரோடு கிஷோரிலாலுக்கும் சேர்த்துதான்தூக்கு வழங்கப்படுகிறது. ஆனால் 18 வயதுநிரம்பவில்லை என்பதால் ஆயுளாகக் குறைக்கப்படுகிறது என்ற செய்தி கிடைக்கிறது.இன்னும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது

 

எப்போதும் உற்சாகமாகவும்சிரித்தபடியேயும் இருப்பவர் அவர் என்று தெரிய வருகிறது. 18 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார்.விடுதலைக்குப் பிறகும் காங்கிரஸ் அரசாங்கம் எட்டு ஆண்டுகள் அவரைசிறையில் வைத்திருக்கிறது.

 
ஆக, கிட்டத்தட்ட 26 ஆண்டுகள்சிறையில் இருந்த மனிதன்

இரண்டு ஆண்டுகள் தலைமறைவுவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்று கிடைக்கிற செய்திகள் எல்லாம் ஆர்வத்தைஅதிகப்படுத்துகின்றன.

 

1936 இல் சிறையில்இருந்தபடியே அன்றைக்கு ஒன்றுபட்டு இருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்காகவிண்ணப்பிக்கிறார். 1942 இல் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்.சிறையில் இருந்து 1946 இல் விடுதலையானதும்நேரே கட்சி அலுவலகம் செல்கிறார்.

 

கட்சி பிரிந்தபோது CPM வருகிறார். ஒருக்கால்தூக்கு இல்லாமல் ஆயுளாக இருந்திருப்பின் பகத்தும் சுகதேவும் ராஜகுருவும்கூடஇங்குதான் வந்திருப்பார்கள்.

 

தம்பி பிறந்ததும் அப்பாவிடம்விவரமெல்லாம் சொல்லி தம்பிக்கு கிஷோரிலால் என்று பெயர் வைக்க அனுமதி கேட்கிறேன். அப்பா திமுக. அவருக்குகிஷோரிலாலைப் பிடித்துப் போகிறது. ஆனால் இந்த ’லால்’ உறுத்துகிறது. ”லால” எடுத்துடேன் என்கிறார். தம்பி கிஷோரான வரலாறுஇதுதான்.

 

தம்பிக்கு கிஷோர் என்றுஇருப்பதால் பாப்பாவிற்கு கி அல்லது கீ தொடங்குகிற பெயராக வேண்டும் என்றுவிக்டோரியா கேட்டபோது சட்டென வந்த பெயர்தான் கீர்த்தனா. கீர்த்தனா என்றால் இசை. கீர்த்தி என்று அழைத்தாலும் இசைதான். இசை எனில்புகழ். இப்படியெல்லாம் யோசித்த எங்களுக்கு அது தெலுங்குஎன்பது அப்போது சத்தியமாக நினைவிற்கு வரவில்லை.

 

பாப்பாவிற்கும் கிஷோரிலால்தோழருக்கும்கூட சம்பந்தம் இருக்கிறது. 1999 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழில் கீர்த்தனா பிறந்தாள். அதுதான் மூவருக்கும் தூக்கும் கிஷோரிலாலிற்கு ஆயுளும் விதிக்கப்பட்ட நாள்.இரண்டு பிள்ளைகளுக்கும் தோழர் கிஷோரிலாலிற்கும் தொடர்பிருப்பதில்மகிழ்ச்சி. இருவரும் மக்கள் சார்ந்து வாழட்டும்.

 

போக, பெயரே குழந்தைகளைக் கொன்றுபோடுமோ என்றபயத்தோடே ஒரு தாயோ தகப்பனோ தமது குழந்தைக்கு பெயர் தேடவேண்டிய நிர்ப்பந்தம்வருமானால் அதற்காக அதற்கு காரணமானவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.

 

************

 

திருப்பூர் தாய்த் தமிழ்ப்பள்ளியின் முப்பதாவது ஆண்டுமலர் வந்திருக்கிறது. அதில் அந்தப் பள்ளியின் ஆசிரியை ப.த.மாலா அவர்கள் எழுதிய “ஆசிரியர்மகுடம் எட்டிப் பார்த்தது” என்றொரு கட்டுரை வந்திருக்கிறது.அதில் ஓரிடத்தில் அவருக்கும் அவரது வகுப்புக் குழந்தை ஒருவனுக்கும்இடையேயான உரையாடல் வரும். திருப்பரங்குன்றம் அவனுக்கில்லைஎனக்குத்தான் என்று வரிந்து வரும் ஒவ்வொருவருக்கும் அந்த உரையாடலை சிபாரிசுசெய்கிறேன்.

 

அந்தக் குழந்தை முதல்நாள்பள்ளிக்கு வரவில்லை. மாலா அந்தக்குழந்தையிடம் கேட்கிறார்,

 

”ஏண்டா நேத்துபள்ளிக்கு வரல?”

 

“கோயிலுக்குபோனோங்க அக்கா”

 

அந்தப் பள்ளியில் ஆசிரியைகளைஅக்கா என்றுதான் குழந்தைகள் அழைப்பார்கள். இன்னொருதரம் பிறக்க வேண்டும். அந்தப் பள்ளியில்சேர்ந்து அந்த அக்காக்களிடம் படிக்க வேண்டும். அவர்களின்உரையாடலின் முத்தாய்ப்பான பகுதி தொடர்கிறது.

 

”எந்தக்கோவிலுக்குடா போனீங்க?”

 

“அதான், அந்த சாமியெல்லாம் இருக்குமில்ல அந்தக் கோயிலுக்குதாங்க அக்கா”

 

மாலாவையும் அந்தக் குழந்தையையும்அணைத்துக் கொள்கிறேன்.

 

கோயில்களில் சாமிகள் இருப்பதாககுழந்தைகள் நம்புகிறார்கள். அப்படியேவிட்டுவிடுவோம் நண்பர்களே. கோவில்களில் ஏதோவொரு சாமி வாசம்செய்யட்டும். சண்டை வேண்டாம்.

 

முடியுமானால் அல்லாவும் முருகனும்அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது மாதிரி ஒரு கோவிலைக் கட்டுவோம். அவர்களது உரையாலுக்கு இடையூறு செய்யாமல்அவர்களை வணங்கிவிட்டு வருவதற்கு கற்றுக் கொள்வோம்.

 


 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 01:48

March 31, 2025

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

 

அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பதை அதிமுகதான் முடிவுசெய்ய வேண்டும்

அதை சொல்வதற்கான உரிமை நமக்கில்லை

ஜெயலலிதா இறந்தது முதலே அதிமுகவை தன் கட்டுக்குள் கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்வதற்கான முயற்சியில் பாஜக இறங்கியது

கிட்டத்தட்ட தன் கட்டுக்குள் கொண்டும் வந்துவிட்டது

தலைவர்கள் விலைபோய்க்கொண்டு இருக்கிறார்கள்

ஆனாலும் பாஜக உணராததும்

ஒரு போதும் அதனால் உணர்ந்து கொள்ள முடியாததுமான ஒன்று உண்டு

திமுகவோ அதிமுகவோ,

தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள்

ஒரு கட்டத்தில் அவர்கள் விலை போன தலைவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு 

தமக்கான தலைவனைத் தேர்ந்தெடுப்பார்கள்

31.03.2025

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 08:54

March 30, 2025

“போற்றா ஒழுக்கம்”


”நீ இல்லைஇனி எப்போதும் இல்லைஉன்னிடம் சொல்லாதஉனக்கான இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய?”என்று 21.02.2024 அன்று எழுதியிருக்கிறாள் Kalai Mani.கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஒரு மாதம் கடந்து சில நாட்களாகிவிட்டனஎத்தனை வலி?வலியை எவ்வளவு லாவகமாக படிக்கிறமாதிரி கொடுக்கத் தெரிகிறதுபாருங்கள்,யாருக்கான சொற்களையோ அவர்கள் இல்லாத வேளையில் சுமந்து தெரிவது எவ்வளவு அவஸ்தை21.02.2024 அன்றே அவளடு பேசி ”எத்தனை அழகு” என்று சொல்லி இருக்க வேண்டும்ஒருக்கால் அன்று அப்படி தட்டிக் கொடுத்திருந்தால் ஒரு நூறு பக்கங்களை அவள் எழுதி இருக்கக் கூடும் “எத்தனை அழகு” என்ற அவளுக்கான சொற்களை சொல்லாமலே சுமந்து திரிந்திருக்கிறேன்இளங்கோ சொல்வதுதான்“போற்றா ஒழுக்கம்” புரிந்திருக்கிறேன்இந்தக் கவிதையைக் கொண்டாடாத எல்லோரையும் என்பொருட்டு மன்னித்துவிடு கலைஎழுதிக் குவி
30.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 09:54

பிஞ்ச செருப்பையும் ...

 

on this day பார்த்துக்கொண்டிருக்கிறேன்சென்ற வருடம் இதே நாளில்,“மொழி உணர்வை பிஞ்ச செருப்பைப் போலக் கழட்டிக் கிடாச வேண்டும்” என்று தனக்கே உரிய கேவலமான உடல்மொழியோடு அண்ணாமல் கூறியிருக்கிறார்சென்ற ஆண்டு அவருக்கு சொன்ன பதில்தான் இப்போதும்தமிழர்கள் பிஞ்ச செருப்பையும் ஒரு காரியத்திற்காகப் பயன்படுத்துவார்கள்வேண்டாம் அண்ணாமலை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 09:05

இதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்க

 

அமித்ஷாவை எடப்பாடி அவரது கோஷ்டியோடு சந்தித்தாராம்இப்போது செங்கோட்டையன் சந்தித்திருக்கிறாராம்ஸ்டாலின் அவ்வளவுதானாம்லூசுங்களா,அமித்ஷா பேரைச் சொன்னாலே தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 1000 வாக்குகள் குறையும்அவரைச் சந்திக்க நினைத்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்சந்தித்தால் இன்னுமொரு 1000 வாக்குகள் குறையும்அதுகுறித்து பெருமையாக பேசினால் இன்னுமொரு 10,000 வாக்குகள் குறையும்என்னமோ போனாங்களாம்அமித்ஷாவப் பாத்தாங்களாம் ....அட லூசுங்களாஇதுக்கு எதுக்குப்பா டில்லி போனீங்கஉங்க தெருவுலேயே யாராவது வீடு கட்டிட்டு இருந்தா அங்க போய் கொஞ்சம் மணலெடுத்துதலையில் போட்டுட்டு வந்திருக்கலாமே0 others
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 01:35

March 28, 2025

கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்

 

"மரம்வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்மரம்நடுவதற்காக "என்ற கவிதை எண்பதுகளில் ரொம்பப் பிரபலம்இந்தக் கவிதைக்கு நேற்றைய தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பொழிப்புரை எழுதினார்2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு தங்களது மன்னரை ஆட்சியில் அமர்த்துவார்களாம்விஜய் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்காலம் நிறைய இருக்கிறதுகற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்29.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 22:37

வருடத்திற்கு 1000 கோடி எனில்

 இன்று தவெகவின் பொதுக்குழு கூடியிருக்கிறது

அதன் முக்கியப் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது

வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த தங்கள் தலைவர் அதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்

மகிழ்ச்சி

நான் 30 விழுக்காடு வருமான வரி கட்டிக்கொண்டு இருந்தவன்

அதற்குமேல் இருக்கிறதா என்று தெரியவில்லை

வருடத்திற்கு 1000 கோடி எனில்

எப்படிப் பார்த்தாலும் வருடத்திற்கு 300 கோடி ரூபாய் வருமான வரி கட்டியிருக்க வேண்டும்

கட்டினாரா என்பதை அவர் பொதுவெளியில் நிறுவ வேண்டும்

அல்லது வருமான வரித்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆதவ் சொன்னது பொய் எனில்

இவர்கள் சொல்வதனைத்தும் பொய் என்பதை மக்களிடம் நாம் கொண்டுபோக வேண்டும்

28.03.2025

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 10:59

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.