இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 15

March 28, 2025

March 27, 2025

பார்த்ததில் இருந்து கிடந்து பிசையுது

 



இந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்து கிடந்து பிசையுது


டில்லி பாபு

10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்

கண்ணியமான அரசியல்வாதி

இதை போராட்டமாகக்கூட கொள்ள முடியாது

திண்டிவனத்தில் இருந்து ஆந்திரா நகரி வரைக்குமான மற்றும் NH 205 தேசிய நெடுன்சாலைத் திட்டத்திற்குமாக நிலம் கொடுத்த திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை

அதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், CPM கட்சியும் போராடிக்கொண்டிருக்கின்றன

அதன் ஒரு பகுதியாக 26.03.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப் போனபோதுதான்

தோழர் டில்லி பாபு இப்படி நடத்தப்பட்டிருக்கிறார்

திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திரு அந்தோணி கெட்டவார்த்தைகளால் வைதபடியே டில்லி பாபுவை இழுத்து போய் கைது செய்திருக்கிறார்

மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்த்து மனு கொடுப்பது என்பது அவ்வளவு மோசமான செயலாகிப் போனதா என்பதை ஸ்டாலின் சார் விளக்க வேண்டும் 

பாலியல் வழக்கு

காவல்துறை விசாரனைக்கு அழைக்கிறது

“முடியாது இப்ப என்ன பன்னுவ” என்று ஆணவத்தோடு பேச, கூடியிருந்தவர்கள் குதூகலித்துக் கொண்டாடியதை வேடிக்கைப் பார்க்கிறது தமிழ்நாடு காவல்துறை

 ஒரு வழியாக விசாரனைக்கு வருகிறார். கோஷத்தோடு அவரை வரவேற்க ஒரு கூட்டமே காவல்நிலையம் முன்பு திரள்கிறது

சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்

காவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்

நியாயமா ஸ்டாலின் சார் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 20:03

செருப்பு விசயத்துலயே .

 தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லைனு அண்ணாமலை சொல்றாரே மாப்ள

அத்தைக்கும் மீசை முளைக்கலாம் ஆனால் பாஜக வராது என்பது வேறு

செருப்பு விசயத்துலயே அந்தப் பையன நம்ப முடியலையேடா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 00:31

March 26, 2025

எடப்பாடி சார் வேண்டுமானால் பம்மலாம்

 நாகை மாவட்டத்தில் உள்ளது தலைஞாயிறு பேரூராட்சி

15 உறுப்பினர்கள்

ஏழு பேர் திமுக

ஏழு பேர் அதிமுக

ஒருவர் பாஜக

அதிமுகவும் பாஜகவும் இணைந்து அதிகாரத்திற்கு வருகிறார்கள்

அதிமுகவைச் சேர்ந்த திருமிகு செந்தமிழ்செல்வி பேரூராட்சி தலைவர்

பாஜகவின் கதிரவன் இணைத் தலைவர்

சுவாரசியம் என்னவென்றால்

திமுகவும் அதிமுகவும் இணைந்து பாக்க கதிரவனை இம்பீச் செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை 25.03.2025 இந்து தருகிறது

எடப்பாடி சார் வேண்டுமானால்  பம்மலாம் அமித்ஷா சார்

பாஜக விசயத்தில் திமுக அதிமுக ஊழியர்கள் இணைந்து கூட பாஜகவை வீழ்த்துவார்கள்

கவனம்

27.03-2025

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2025 21:43

March 25, 2025

திமுக கூட்டணியை இவர்கள் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்

 உறவினர் வீடுகளில் தொடர் ரெய்டுகள்

முன்னாள் அமைச்சர்களின் கழுத்தைக் குறிபார்த்து தொங்கும் கத்திகளாக ஊழல் வழக்குகள். அதனால் அவர்கள் தரும் நெருக்கடிபோக, இன்னொரு பக்கம் கொடநாடு வழக்குஎடப்பாடி சாரால் வேறு எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதுஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை தங்களுக்கு எதிரான இன்னொரு காரியத்தையும் இதன் மூலம் இவர்கள் செய்திருக்கிறார்கள்இதன்மூலம் உடைந்தால் பாஜக வந்துவிடும் என்ற அச்சத்தை கொடுப்பதன்மூலம் திமுக கூட்டணியைக் கெட்டிப்படுத்தி இருக்கிறார்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2025 19:54

March 24, 2025

சட்டமும் ஒழங்கும்...

 தோழர் Angulekshmi E  அவர்களின் தம்பி மற்றும் பேரனை சமூக விரோதிகள் திருப்பூரில் வெட்டிவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள்.

இருவரும் விரைந்து குணமடைய வேண்டும்

சட்டம் ஒழுங்கு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பதை முதல்வர் அவசியம் உணரவேண்டும்

24.03.2025

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2025 09:49

எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா

 இவர் போராடி இருக்கலாம்

அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கலாம்ஆனாலும் இனி இவரால் ஒன்றும் வாய்க்காதுஇவரைப் போய் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றுதோழர் Shanmugam Perumal அவர்களையும் அவரைத் தேர்ந்தெடுத்த கட்சியையும்போகிற போக்கில் எழுதிவிட்டு போயிருந்தார்
எப்போதும் நான் மதிக்கும்அவரது நான்கு வரி இரங்கலுக்காகவே அவருக்கு முன்னால் போய்விட வேண்டும் என்று நான் ஆசைப்படும் என் மரியாதைக்குரிய நண்பர்நண்பர்கள் சுட்டினார்கள்இதற்கிடையில் தோழர் P.S அவர்களோடு இரண்டரை மணி நேரம் பயணிக்கும் வாய்ப்பு முந்தா நாள் கிட்டியதுஇடையே சொன்னார்வாச்சாந்தி போராட்டம் குறித்து ஒரு பெண்ணிடம் நேர்காணல் எட்வின்இத்தனை வலி, இத்தனை இழப்பு, இத்தனை தாமதம்இத்தனையையும் எந்தத் தெம்பில் தாங்கி, விடாது போராடினீர்கள்? என்று கேட்டதும் அந்தப் பெண்எல்லாம் அந்தக் கொடி தந்த தெம்புதாம்பா என்று கட்சிக் கொடியைக் காட்டினாராம் P.S போராடியாதாக PS அவர்களை வைத தோழரே பதிந்திருக்ககொடி போராடியாதவே P.S கருதுகிறார்இவ்வளவுதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2025 02:24

March 23, 2025

தாய்மொழியில் பெயர்ப் பலகை



22.03.2025 அன்று சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டுக்குழுக் கூட்டத்தில்
கலந்துகொண்ட தலைவர்களின் பெயர்ப் பலகைகள் அவர்களது தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டிருந்தன
சிறப்பு ஸ்டாலின் சார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2025 20:02

March 22, 2025

இதை எழுதியபோது அவருக்கு வயது வெறும் 23

 22.03.1931

பகத்சிங் கொல்லப்பட்டதற்கு முதல் நாள்அவர் தனது இறுதி கடிதத்தை எழுதுகிறார்அவர் உயிர் வாழ்வதற்கு ஆசைப்படுகிறாரா என்ற கேள்வி அன்றைக்கு சமீபத்தில் சில நண்பர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக அது அமைந்திருக்கிறதுஉயிர் வாழும் ஆசை அனைவருக்குள்ளும் இயல்பாகவே இருக்கும். அப்படியாகவே அந்த ஆசை தனக்கும் இருக்கிறது என்றும் அதை மறைப்பதற்கு தான் விருபவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் கூறுகிறார்.அனால் தான் உயிர் வாழ்வதற்கு நிபந்தனை உண்டு என்று கூறுகிறார் . தன்னை வெகுவாக வசீகரித்த புரட்சிக் கட்சியின் தியாகங்களும் சித்தாந்தமும் தன்னை ஒரு சிறைக்கைதியாகவோ அடுத்தவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவனாகவோ ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறுகிறார்.அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதைவிட சிரித்தபடியே தான் தூக்குமேடை ஏறும் காட்சியை இந்தியத் தாய்மார்கள் பார்த்தால் அது ஒரு உத்வேகத்தை அவர்களுக்கு கொடுக்கும் என்றும்அந்தத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பகத்சிங்குகளாக வளர்ப்பார்கள் அல்லது அந்தப் பிள்ளைகள் தாங்களாகவே பகத்சிங்குகளாக மாறும்போது அதற்கு தடை சொல்லாமல் அனுமதிப்பார்கள்.அப்போது முழு மனதுடன் ஆசை ஆசையாய் ஒரு பேரெழுச்சி திரண்டு வரும்அந்தப் பேரெழுச்சியை ஏகாதிபத்தியத்தால் எதிர்கொள்ள முடியாது.இது தூக்குமேடை ஏறுவதற்கு கிட்டத்தட்ட 15 மணிநேரத்திற்கு முன்னதாக பகத் எழுதிய கடிதம்வணக்கம் பகத்
23.03.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2025 21:06

இன்று நடந்தது மிகவும் சரியானது

 நேற்று உங்கள் P.S தோழர் கலந்துகொண்ட போராட்டத்தில் காவலர்கள் அவ்வளவு அநாகரிகமாக நடந்துகொண்டதைப் பார்த்த பிறகுமா மாப்ள

இன்றைக்கு நடந்த தொகுதி மறு விரைக்கான எதிர்ப்புக் கூட்டுக்குழுக் கூட்டத்திற்காக முதல்வரைப் பாராட்ட முடிகிறது உன்னால்?

நிச்சயமா,

நேற்று நடந்தது தவறு

தவறென்கிறோம்

இன்று நடந்தது மிகவும் சரியாது

ஸ்டாலின் சாரைத் தவிர யாராலும் முன்னெடுக்க முடியாதது

இதை கொண்டாட்டத்தோடு பாராட்ட வேண்டும்

பாராட்டுவோம்

22.03.2025


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2025 10:43

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.