இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 11

May 14, 2025

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?

 பெறுதல்: திரு.கோபால்

சார், நக்கீரன்வழி: தோழர். Govi Lenin அன்பின் சார்,வணக்கம்பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், CPM , பங்கினை நினைத்து திமிர் கொள்பவன் நான்அதே நேரம் நக்கீரன் பங்கினை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்பதையும் உரக்கப் பேசுபவன்ஆனாலும் இந்த ஒன்பது பேர் கொண்ட பட்டியலில் போதாமை உணரவில்லையா சார் நீங்கள்பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?விடாதீர்கள்அ.இ.ஜ.மாதர் சங்க தேசியத்தலைவர்களில் ஒருவரான தோழர் Suganthi P அவர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறேன்விடாதீங்க சார்அன்புடன், இரா.எட்வின்14.05.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 11:22

ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்

 புதிய ஆசிரியனும் காக்கையும் வந்ததாப்பா?

நான் ஊர்ல இல்ல எட்வின். எங்க?கண்ணகி கோட்டம்”மண்மகள் அறிந்திராத வண்ணச் சீறடிகளை மதுரை வரை நடந்த சீரடிகளைஎன் அன்பனை இழந்தேன் என்று கதறியழுதவளைகேட்டதாகக் கூறுப்பாமணிமேகலையை கண்ணகி மகளென்று மாதவி கூறியதை கண்ணகி காதில் சொல்லி வாப்பா,அள்ளிவந்த கண்ணகியில் ஒரு துண்டை அனுப்பு”என்று சொல்கிறேன்துண்டென்ன முழுசையும் அனுப்புகிறேன் என்ற பதில் வர சாய்கிறேன்இப்படியான ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்இளங்கோ, வேண்மாள், சீத்தனார்அமைச்சர்கள் புடைசூழ மலையழகை தரிசிக்க பிக்னிக் போகிறான் செங்குட்டுவன் அங்கு அவனைக் காண வந்த மக்கள் ஒற்றை முலையோடு நின்ற ஒரு பெண்ணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் அதனுள் இருந்த அவளது கணவனைக் காட்டி அழைத்துப் போனார்கள் என்று சொல்கிறார்கள்அதைக் கேட்டதும்சாத்தனார் அது கண்ணகி என்றும்,கண்ணகி காதையை சுருக்கமாக சொல்கிறார்இதைக் கேட்டதும் இளங்கோ அதை ஒரு காவியமாக எழுத இருப்பதாக சொல்கிறார்சாத்தானார் மகிழ்கிறார்இப்படியாக,அந்த மலைப் பயணம்தான் சிலம்பை கொடுத்திருக்கிறதுஇந்த நினைவோடு சாய்ந்து கிடந்தவன்நாட்டார் இலக்கியத்தில் ஒற்றை மொலைப் பெண்கள் குறித்து இருப்பதுகுறித்து படித்ததெல்லாம் நினைவிற்குள் வந்துபோயின“ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி” என்பதும் நினைவிற்கு வந்ததுமுகநூலைத் திறந்தால்”அன்னாந்து அம்மா என்றேன்ஒரு முலை உதிர்த்தாள்.ஒவ்வொரு பசியின் கைகளிலும் ஒவ்வொரு முலைகள்.பனங்காடேமுலையூட்ட நெடுநெடுவென வளர்ந்த தாயேஉமக்கு சலிப்பே வராதா...கைவிடேன்உன் மார்பை விட கனமானது உந்தன் அன்பு சுமக்க முடியவில்லை.”என்று Poondi Jeyaraj எழுதுகிறான்ஆசிர்வாதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 10:14

May 12, 2025

இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால்

 நீங்கள் இருவரும் சண்டையை நிறுத்தவில்லை எனில் உங்களுடனான வர்த்தக உறவை நிறுத்திக் கொள்வேன் என்று விரட்டித்தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் சண்டையை தான் நிறுத்தச் செய்ததாக ட்ரம்ப் கூறுகிறார்

எனில்ட்ரம்ப் கூற்றுப்படி சண்டையை நிறுத்த இரு நாடுகளும் விரும்பவில்லை என்றாகிறதுஆனால் பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்தியதாக மோடி சொல்கிறார்இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால் யார் சொல்வது பொய் என்பதில் குழம்பிக் கிடக்கிறோம்#சாமங்கவிந்து 08 நிமிடம்13-05.2015
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2025 19:51

May 8, 2025

பெரியவனாக மாட்டேன்

 பாலஸ்தீனம்
விளையாடிக் கொண்டிருக்கிறான்
கேட்கிறார்கள்,
பெரியவனாயி என்ன செய்வ?
பெரியவனாக மாட்டேன்
விட மாட்டார்கள்
சின்னப்பிள்ளையா இருக்கப்பவே 
கொன்று போடுவார்கள்
அய்யோ, அய்யோ, ஒரு பிஞ்சு இப்படிப் பேசுவதைக் கேட்கவா இத்தனைக் காலம் வாழ்ந்தேன்
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதும் தெருவில் எங்கள் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறது
பாகிஸ்தானிலும் குழந்தைகள் விளையாண்டுகொண்டு இருப்பார்கள்
குண்டுகளுக்கு பேதமோ, வயதோ தெரியாது
பயமாக இருக்கிறது
கொடியவர்களை எப்படி வேண்டுமானாலும் சந்தியுங்கள்
போர் வேண்டாம்
#இந்தியபாகிஸ்தான்போர்edn
07.05.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2025 05:39

May 7, 2025

ஏகன் அநேகன் என்ற உயரிய விழுமியத்தின் தளபதி நீங்கள்

பஹல்காம்
நீ இந்துவா இஸ்லாமியனா என்று கேட்டு 
இந்து என்று உறுதிப்பட்டால்தான் சுட்டார்கள் என்று சங்கிகள் சொல்வதை உண்மை என்றே கொள்வோம்
வாய்ப்பை மறுக்கவில்லை
எதற்காக அவர்கள் அப்படிக் கேட்டார்கள் என்று ஒரு நிமிடம் யோசிப்போம்
பாரபட்சமின்றி இந்தியர்களைக் கொன்றால் 
தங்களை எதிர்ப்பதில் இந்தியர்கள் ஒன்றுபடுவார்கள்
இப்படிப் பிரித்துக் கேட்டுக் கொன்றால் இந்தியா மத ரீதியாக நம்மை எதிர்ப்பதில் பிளவுபடும்
அப்படியாகப் பிளவுபட வேண்டும் 
என்று அவன் கருதுகிறான்
மதுரை ஆதீனம் சென்னை SRM வளாகத்தில் பாரி வேந்தர் ஏற்பாடு செய்திருந்த சைவ மாநாட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்.
வழியில் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு சன்னமான விபத்தை சந்திக்கிறார்
இரண்டு கார்களிலும் வந்தவர்கள் சண்டைபோடுகிறார்கள். சமரசம் ஆகிறார்கள். சென்றுவிடுகிறார்கள்.
அவ்வளவுதான்
மாநாட்டில் உரையாற்றும்போது பாகிஸ்தான் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறுகிறார்
வெளியே வந்ததும் யார் அவர்கள் என்று நிரூபர்கள் கேட்கிறார்கள்
தொப்பி, தாடி
தொப்பி தாடி என்கிறார்
அது கொலை முயற்சி என்பது பச்சைப் பொய்
அவரது உடல்மொழி அசிங்கம்
இவர் ஏன் இப்படி சொல்கிறார்
இந்து முஸ்லீம் பிளவுபட வேண்டும் என்று விரும்புகிறார்
அவனும் அதைத்தானே செய்கிறான்
ஒன்று சொல்லவேண்டும் சன்னிதானம், அவர்களே,
ஏகன் அநேகன் என்ற உயரிய, விழுமியம் மிக்க கோட்பாட்டின் தளபதி நீங்கள் 
அவன் தீவிரவாதி
அறமற்றவன்
நீங்களுமா?
07.05.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2025 02:16

ஏகன் அநேகன் என்ற உயரிய, விழுமியம் மிக்க கோட்பாட்டின் தளபதி நீங்கள்

பஹல்காம்
நீ இந்துவா இஸ்லாமியனா என்று கேட்டு 
இந்து என்று உறுதிப்பட்டால்தான் சுட்டார்கள் என்று சங்கிகள் சொல்வதை உண்மை என்றே கொள்வோம்
வாய்ப்பை மறுக்கவில்லை
எதற்காக அவர்கள் அப்படிக் கேட்டார்கள் என்று ஒரு நிமிடம் யோசிப்போம்
பாரபட்சமின்றி இந்தியர்களைக் கொன்றால் 
தங்களை எதிர்ப்பதில் இந்தியர்கள் ஒன்றுபடுவார்கள்
இப்படிப் பிரித்துக் கேட்டுக் கொன்றால் இந்தியா மத ரீதியாக நம்மை எதிர்ப்பதில் பிளவுபடும்
அப்படியாகப் பிளவுபட வேண்டும் 
என்று அவன் கருதுகிறான்
மதுரை ஆதீனம் சென்னை SRM வளாகத்தில் பாரி வேந்தர் ஏற்பாடு செய்திருந்த சைவ மாநாட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்.
வழியில் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு சன்னமான விபத்தை சந்திக்கிறார்
இரண்டு கார்களிலும் வந்தவர்கள் சண்டைபோடுகிறார்கள். சமரசம் ஆகிறார்கள். சென்றுவிடுகிறார்கள்.
அவ்வளவுதான்
மாநாட்டில் உரையாற்றும்போது பாகிஸ்தான் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறுகிறார்
வெளியே வந்ததும் யார் அவர்கள் என்று நிரூபர்கள் கேட்கிறார்கள்
தொப்பி, தாடி
தொப்பி தாடி என்கிறார்
அது கொலை முயற்சி என்பது பச்சைப் பொய்
அவரது உடல்மொழி அசிங்கம்
இவர் ஏன் இப்படி சொல்கிறார்
இந்து முஸ்லீம் பிளவுபட வேண்டும் என்று விரும்புகிறார்
அவனும் அதைத்தானே செய்கிறான்
ஒன்று சொல்லவேண்டும் சன்னிதானம், அவர்களே,
ஏகன் அநேகன் என்ற உயரிய, விழுமியம் மிக்க கோட்பாட்டின் தளபதி நீங்கள் 
அவன் தீவிரவாதி
அறமற்றவன்
நீங்களுமா?
07.05.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2025 02:16

May 5, 2025

கனவு காண காசும் வேண்டும்


தோழர் சுபவீ முதன்முறையாக லண்டன் போனபோது கேட்கிறார்கள்
பார்க்க வேண்டிய இடங்கள் எவை
முதலும் முத்தாய்ப்புமாக ஒரு கல்லறை என்கிறார்
கண்கள் விரிய கேட்டவர் சொல்கிறார்
காரல் மார்க்ஸ் கல்லறை...
ஆம்
இதைப் படித்தபோது கீர்த்தியிடம் சொன்னேன்
எனக்கும் மார்க்ஸ் கல்லறைக்கு மரியாதை செய்யனும் வெள்ளை
அதெற்கெல்லாம் காசிருக்கனும்
நீ மொதல்ல போய் அவர் இருந்திருந்தாலும்
அவராலும் உன் கல்லறைக்கும் வரமுடியாது
ரெண்டுபேரும் காசில்லாதவர்கள்
கனவு காண காசும் வேண்டும் என்றாள்
அப்போது அவள் எட்டு அல்லது ஒன்பாதம் வகுப்பில்
இன்று அவள் MD நீட்டிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள்
மாறவில்லை எதுவும்
முத்தம் மார்க்ஸ்
 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2025 05:20

May 4, 2025

அழியும் என்பது அதிகம் என்றே கொண்டாலும்

 தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் கடற்கரை இருப்பதாகத் தெரிகிறது
எத்தனை கிராமங்கள் நகரங்கள் இந்தக் கடற்கரையில் உள்ளன
எத்தனை குடும்பங்கள்?
எத்தனை தனி நபர்கள்?
தெரியவில்லை
ஆனால்
வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது
கடலும் சூடாகி வருகிறது
விளைவாக, கடல்மட்டம் தரைமட்டத்தை விட உயர்ந்து கொண்டே வருகிறது
சென்னை உள்ளிட்ட பல ஊர்கள் அழியுமளவிற்கு கடல் மட்டம் உயரும் என்கிறார்கள்
அழியும் என்பது அதிகம் என்றே கொண்டாலும்
மக்கள் வாழ முடியாத இடங்களாக அவை நிச்சயமாக மாறக் கூடும்
எனில், அந்த மக்கள் உள்புறம் நோக்கி புலம்பெயர நேரும்
தமிழ் மக்கள் தமிழ் மண்ணிற்குள் புலம் பெயர்வர்
இது பல லட்சமளவில் இருக்கலாம்
இதுகுறித்து
எப்போது பேசுவோம்?
எப்போது பேச வைப்போம்?
05.05.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 23:32

நான் உங்க பேன்

 04.05.2025 முதல் ஒரு வாரத்திற்கு கீர்த்தனாவிற்கு MD நீட் கோச்சிங்

கன்னியா குமரியில்நேற்றிரவு பேருந்து ஏற்றிவிட பெரம்பலூர் நால்ரோட்டில்10.50சென்னையில் இருந்து வந்த பேருந்தில் இருந்து ஒரு குழந்தை இறங்குகிறாள்கீர்த்தனா ஏறுகிறாள்கிளம்ப எத்தனிக்கிறேன்அப்பா, தம்பி வர வரைக்கும் இருங்க. பயமாருக்குநிற்கிறேன்அரட்டை, அரட்டை,அப்படி ஒரு அரட்டைதம்பி வந்ததும்படக்கென ஏறி போய்விட்டாள்சொல்லக்கூட இல்லைபொக்கென்றாகிவிட்டதுவீட்டிற்கு வந்ததும் அவள் சொல்லாமல் போனதே வருத்தமாக இருந்ததுபோன்எட்வின் அப்பா, பத்திரமா வந்துட்டேன்எட்வினா? எப்படித் தெரியும்?நம்பர் எப்படி?உலகத்துக்கே தெரியறமாதிரிதான்முகநூலில் வச்சிருக்கீங்களேநான் உங்க பேன்அய்ய்யோ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2025 04:35

May 2, 2025

இந்தியாவை என்னவென்று சொல்லும் கூகுள்

 ட்ரம்ப் வந்ததும் நிறைய சொன்னார்

மெக்சிகோ வளைகுடாவிற்கு இனி அமெரிக்க வளைகுடா என்று பெயர் என்பதும் அவற்றுள் ஒன்றுசிரித்துக் கடக்கலாம் என்று யோசித்தவற்றுள் இதுவும் ஒன்றுஆனால்கூகுளில் அமெரிக்காவில் தேடினால் அது அமெரிக்க வளைகுடா என்றும்அமெரிக்கா தாண்டினால் அதே கூகுள் மெக்சிகோ வளைகுடா என்று காட்டுவதாகவும் நேற்று நடந்த மே தினப் பொதுக் கூட்டத்தில் தோழர் சாமிநாதன் கூறினார்அப்போதிருந்து ஒரு எண்ணம்அமெரிக்க எல்லைக்குள் இந்தியாவை என்னவென்று சொல்லும் கூகுள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2025 19:35

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.