இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 9

May 31, 2025

சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு

 தூங்குவதற்கு முன்பாக சொல்வதற்கு இரண்டு


மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோட் ஷோ நிகழும் இடங்களில் பந்தல் குடியும் உண்டு

அந்தப் பகுதியில் உள்ள தூர் வாரப்படாத சாக்கடை இருக்கிறது

இந்தப் பகுதி அவரது கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக துணி கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது

இது திராவிட மாடலுக்கு எதிரானது என்பது ஒன்று

பாமகவில் நடந்துகொண்டிருப்பது அரசியல் மோதல் அல்ல

அது சொத்து ஒரு குடும்பத்தைப் படுத்தும் பாடு குறித்த தெறிப்பு என்பது இரண்டு

#சாமங்கவிந்து ஒரு மணி எட்டு நிமிடங்கள்
01.06.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2025 12:40

May 30, 2025

65/66, காக்கைச் சிறகினிலே, மே 2025

“சிதறிய பொருட்களில்பரவிக் கிடக்கிறதுஇறந்த எலியின் போராட்டம்” தம்பி வைகறையின் இந்தக் கவிதை காட்சியாக விரிந்து என்னை பிசைந்துகொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தக் கவிதை என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது.அறைக்குள் ஒரு எலி புகுந்துவிட்டது. அதை அடித்துக் கொல்வதற்கு கைகளில் கம்புகளோடு துரத்துகிறார்கள். அங்கும் இங்குமாக ஓடி ஒளிகிறது அந்த எலி. அது ஒளிந்துகொண்டிருப்பதாக இவர்கள் நம்புகிற இடங்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள். அது வேறு இடத்திற்குப் போகிறது. அங்கும் இருக்கிற பொருட்களையெல்லாம் கலைத்துப் போடுகிறார்கள். மீண்டும் மீண்டும் எலி ஓடி ஒளிவதும் இவர்கள் கலைத்துப் போடுவதுமாக நகர்கிறது.நீண்டதொரு தேடலுக்குப் பிறகு களைத்துப் போனவர்களாக எலி வேட்டையை நிறுத்துகிறார்கள். அறை முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. சே, இந்த எழவெடுத்த எலி என்ன பாடு படுத்திடுச்சு என்று அங்கலாய்க்கிறார்கள்.அறைகள் முழுவதும் சிதறிக் கிடக்கும் பொருட்களை மீண்டும் ஒழுங்குபடுத்த வேண்டுமே என்கிற அங்கலாய்ப்பு இவர்களுக்கு.பொருட்கள் சிதறி அலங்கோலமாகக் கிடக்கும் அந்த அறைகள் என்பது அந்த எலியின் உயிர்காக்கும் போராட்டம். அவ்வளவு அழகாக அதைக் காட்சிப் படுத்தியிருப்பான் வைகறை.இப்போது மொத்த இந்தியாவும் சிதறிக் கிடக்கும் அறைகளாகத்தான் காட்சியளிக்கிறது. பாஜக தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கைகளில் கிடைத்த ஆயுதங்களோடு எலிகளை முற்றாய் அழிக்க முடியாமல் களைத்துப் போனவர்களாக “சே நாசமாப் போன எலி, சிக்காம என்னபாடு படுத்துது” என்று புலம்புகிறார்கள்.இங்கு எலிகள் என்பவை இந்தியாவின் விழுமியங்களைக் குறிக்கிற சொல் என்று கொள்வதுதான் சரியாக இருக்கும்.இந்தியாவின் விழுமியங்களை பாஜகவும் RSS காரர்களும் ஒருபோதும் ஏற்பதில்லை. காரணம் இந்திய விழுமியங்களின் மையச்சரடு “மதச் சார்பின்மை”. RSS மற்றும் பாஜக சித்தாந்தத்தின் மையச்சரடு இந்துத்துவா.மதச் சார்பின்மை மக்களை இணைக்கக் கோரும். மதப்பழமைவாதம் மனிதர்களைக் கூறுபோடத் துடிக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நேர் எதிரிகள் RSS மற்றும் பாஜகவினர். பரந்த இந்து ராஷ்ட்ரமே அவர்களது சித்தாந்தத் தந்தையான கோல்வால்கரது கனவு. இதை அவர்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை. ஆனால், அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சி பீடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவேதான் இதுகுறித்து உரக்கப் பேசமுடியாமல் தவிக்கிறார்கள்.இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை காவி மைகொண்டு எழுதுவதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என்றால் மக்களை பதற்றத்தோடு வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். 80 விழுக்காடு பெரும்பான்மை மக்களை 20 விழுக்காடு சிறுபான்மையிருக்கு எதிரியாக மாற்றுவது தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மையைக் கொடுக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். ஆகவே கலவரங்களை வாய்க்கிற இடங்களில் எல்லாம் விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.சமீபத்தில் சம்பல் பற்றி எரிந்தது நாம் அறிந்தது. அதற்கான தோற்றுவாயினை தோழர் மதுர் சத்யா ஒரு கூட்டத்தில் பேசக் கேட்க வாய்த்தது.ஒரு RSS இளைஞன் தனது பயணத்தின் ஊடே ஒரு மசூதியைப் பார்க்கிறான். அது அவனை உறுத்துகிறது. அந்த மசூதி அவனை மிகவும் உறுத்துவதாக அவனது நண்பனுக்கு அலைபேசி வழியாக சொல்கிறான்.வழக்கறிஞரான அவனது நண்பன் அந்த மசூதியின் இருப்பிட விவரங்களைக் கோருகிறான். இவனும் தருகிறான்.இது நிகழ்ந்தபோது காலை பத்தே முக்கால் மணி இருக்கும் என்கிறார் சத்யா. விவரங்களை அலைபேசி வழியாக பெற்றுக் கொண்டதும் வழக்கிற்கான மனுவைத் தயார் செய்கிறான். ஒரு இந்து ஆலயம் இருந்த இடத்தில் அந்த மசூதி கட்டப்பட்டிருப்பதாக வழக்கைத் தொடுக்கிறான்.வழக்கு அன்றே விசாரணைக்கு வருகிறது அன்றே தீர்ப்பும் வருகிறது. அந்த மசூதி இருக்கும் இடத்தில் இந்து ஆலயம் இருந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கூறுகிறது. எனவே தொல்லியல் துறை அந்த இடத்தை சோதித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிடுகிறது. தொல்லியல்துறை களத்திற்கு வருகிறது. அங்கு ஒரு இந்து ஆலயம் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அது ஆய்வறிக்கை தருகிறது. இவை அத்தனையும் 40 மணிநேர அவகாசத்திற்குள் நடந்து முடிந்திருக்கிறது. வேறென்ன சொல்வது. அன்பை பெடல் இல்லாத சைக்கிளிலும் வெறுப்பை ராக்கெட்டிலும் அனுப்பிப் பழகிவிட்டார்கள். இதன் விளைவு கடும் பதற்றமும் ஐம்பது அறுபது உயிர்ப் பலிகளும்.வழக்குகளையும் ஆயுதங்களாக மாற்றக் கற்றிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இதுபோல இன்னும் 40,000வழக்குகளைத் தொடுப்பதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கிறதாம்.இது ஒன்றிற்கே இவ்வளவு பதற்றமும் உயிரிழப்பும் என்றால் நாற்பதாயிரம் வழக்குகள் எத்தனை பாதிப்புகளைக் கொண்டு வரும்? இந்த பதற்றத்தினால் அவர்களுக்கு என்ன பயன் என்ற கேள்வியும் வரும். இது சிறுபான்மை மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களை அச்சப்படுத்தும். இந்த அச்சம் வாக்குகளாக மாறும் என்று கருதுகிறார்கள்.ஊழியர்கள் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அரசோ சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் மூலம் பதற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. அப்படி ஒரு அரக்கத்தனமான முயற்சிதான் வக்பு வாரியத் திருத்தச் சட்டம்.ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே வக்பு வாரியச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். 2013 வாக்கில் வக்பு வாரிய சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வக்பு வாரியச் சட்டத்தில் உள்ள ஷரத்துகளை மாற்றவோ திருத்தவோ கூடாது என்றுகூட இஸ்லாமியர்கள் ஒருபோதும் கோரியது இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் வக்பு வாரியத்தில் இரண்டு பெண்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது இஸ்லாமியர்கள் அதை எதிர்க்கவெல்லாம் இல்லை.இப்போது கொண்டு வந்திருக்கக்கூடிய திருத்தங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கின்றன. வாரியத்தின் சொத்து வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இருக்கிற சொத்தை அரசின் சொத்தாக மாற்றிக்கொள்கிற ஏற்பாடாகவும் இந்தத் திட்டங்கள் இருப்பதால்தான் இதை எதிர்க்கவும் இதற்கெதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்வதற்குமான தேவை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.வக்பு வாரியச் சட்டத்தில் இருப்பது 113 ஷரத்துகள். இதில் கிட்டத்தட்ட 48 ஷரத்துகளை இந்த அரசாங்கம் திருத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட 42 விழுக்காடு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. சரி பாதி ஷரத்துகள் திருத்தப்பட்டுள்ளன என்பது கிட்டத்தட்ட புதுச் சட்டம் போன்றதுதான்.வக்பு அமைப்பிற்கு ஈரமனம் கொண்டோர்கள் யாராயினும் நன்கொடை அளிக்கலாம். திருத்தச் சட்டத்தின்படி குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளேனும் இஸ்லாமியராக இருக்கக்கூடிய ஒருவரால்தான் வக்பு அமைப்பிற்கு நன்கொடை அளிக்க முடியும்.இதன்மூலம் வக்பு வாரியத்திற்கு புதிதாக வரவெதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் இவர்களுக்கு இருக்கிற வக்கிரம் வெளிப்படுகிறது. ஒருபுறம் வரவைத் தடுக்கிற இவர்களது வன்மம் இதுவென்றால் இன்னொரு புறம் இருக்கிற வக்பு சொத்துகளை அரசாங்கம் எடுத்துக்கொள்கிற வன்மமும் இருக்கிறது.இருக்கிற சொத்துக்களுக்கான பத்திர ஆவணங்களைக் கேட்கிறார்கள். பத்திரப்பதிவு தொடங்கும் முன்னரே வக்புவிற்கு வந்த சொத்துக்களுக்கு ஆவணங்கள் சாத்தியமே இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆவணம் இல்லாத சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட அரசின் சொத்துகள் என்கிறார்கள்.தாவா ஏற்படின் இதற்கான விசாரணை அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவர் என்கிறார்கள். அது எப்படி அரசின் அதிகாரி அந்த நிலம் யாருடையது என்று விசாரிக்க முடியும் என்றால் அது அப்படித்தான் என்கிறார்கள்.இந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.இவர்கள் மீதான வன்முறைகள், இவர்களுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றால் நொந்து போயிருக்கிற இஸ்லாமியர்களை இறுக அணைத்தபடி “இருக்கிறோம்” என்று சொல்லும் தொண்ணூறு விழுக்காடு இந்தியர்கள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள்.இந்த அன்பும் அணைப்பும் சங்கிகளின் வெறுப்பை சல்லி சல்லியாக நொறுக்கும்.-- காக்கை மே 2025LikeCommentShare
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2025 20:56

May 28, 2025

கங்கிற்கலைதல்


"அரச்சிடலாம் துவையல்இருக்குபழைய பாக்கிக்காய்வசவிக்கொண்டேஅய்யாத்துரை தந்தவறுகடலைகொஞ்சம் சுள்ளியோடுஇருக்குராமாயி தந்த குருனையும்காய்ச்சிடலாம் கஞ்சியும்எதிர் வீடு போன மகநனச்சிராம கொண்டு வரணும்கங்க”என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன்.எதிர்த்த வீட்டு துர்க்கா அம்மாயி வீட்ல கங்கு வாங்குவதற்காக கரண்டியத் தூக்கிக்கொண்டுபோன அனுபவம் எனக்கு உண்டு.இப்ப அதெல்லாம் அவுட் டேட்டட் ஆயிடுச்சுபோல என்று நினைத்திருந்தேன்.தோழர் செஞ்சி தமிழினியன் எழுதிய “ஊத்தாம் பல்லா” நாவல் குறித்து நான் பேச வேண்டும் என்பதற்காகாக அந்த நாவலை தோழர் லார்க் பாஸ்கரன் அனுப்பியிருக்கிறார்.செமையான நாவல்.நூல் குறித்து பேசிவிட்டு எழுதுகிறேன்.அதில் ஒரு இடம்,மலையனூரம்மா கிழவி அடுப்பை பத்த வைக்கிறாள். கங்கு கேட்டு இருளாயி வருகிறாள் கரண்டியோடு. இருவருக்கும் இடையேயான உரையாடலைக் கேளுங்கள்.“ஏண்டி இருளாயி, யாரு அடுப்ப பத்த வைப்பாங்கன்னு பாத்துகினே இருந்து கலகலன்னு புடிச்சு எரிய ஆரம்பிச்சதும் வந்தீர்ர, தாலிக்கிற கர்ண்டியையும், ஒரு கொக்காணையும் கையல் எடுத்துக்கீனு”சிரித்துக்கொண்டே மலையனூரம்மாவிற்கு பதில் சொல்கிறாள் இருளாயி,“இன்னா சித்தி பண்றது?” இந்த வாரம் தனியா வத்திப்பெட்டி வாங்கியாந்து போட்டேன். எந்த இடத்துல சில்லறை இருக்கும், எந்த இடத்துல வத்திப்பெட்டி இருக்கும்னு தினுசா தெரிஞ்சு கரைட்ட அத தூக்கி இடுப்புல சொருகிக்கிட்டு போய்ட்டா நான் என்ன பண்றது”எவ்வளவு நுட்பம்கஞ்சி காய்ச்ச கம்பு, சோளம் குருணை பிரச்சினைதான் பொதுவா பேசப்படும்பத்த வைக்க வத்திப்பெட்டிக்கே பிரச்சினை தோழர்களேபுருஷனுக்கு பயந்து வத்திப்பெட்டியை ஒளிச்சு வைக்க வேண்டிய நிலையை எவ்வளவு நாசுக்கா வைத்திருக்கிறார் செஞ்சி தமிழினியன்1970 பக்கமா கரண்டியோட அலைஞ்ச அனுபவம் உண்டுஇப்பவும் இருக்கு போலமுத்தம் செஞ்சி தமிழினியன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 01:32

May 27, 2025

கவிதை 10/2025

 அன்றொரு நாள்

கடலைப் பார்க்க போனபோதுஅங்கேகடலிருந்தது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 00:24

May 26, 2025

கவிதை 09/2025

 காந்தியை
வரைவதற்காகஅமர்ந்தவர்வரைந்து முடித்தது
அச்சு அசலாக
அவரது சித்தப்பாவை
என்றாவது
யாரையாவது
வரைய ஆரம்பித்து
காந்தியையும் வரைந்து விடுவார்அவர்
யாரை ஆரம்பித்து 
யாரில் முடித்தாலும்
அவை
ஓவியங்கள்
அவர்
ஓவியர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2025 10:44

May 25, 2025

கலகல திருமணம்


கலகல வகுப்பறை சிவா,
மனதிற்குப் பிடித்த தம்பிகளில் ஒருவர்
நன்றாக நினைவிருக்கிறது
இவரைப் பற்றி அறியவந்த நாளில் 
இவர் நடத்திக்கொண்டிருந்த பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்கிறேன்
என்னதிது, வந்து வகுப்பெடுங்கள் என்கிறார்
நேற்று (25.05.2025) அவரது பிள்ளையின் திருமணம்
முத்தம் குழந்தைகளே
இணைந்து மகிழ்ந்திருங்கள்
இரண்டு மகிழ்ச்சிகள்
பிள்ளைகளின் திருமணம் தரும் மகிழ்ச்சி ஒன்று
மனுஷன் கிழவனாகிறார் என்பது இரண்டு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2025 22:33

தமிழ்மாறன் பணிநிறைவு விழா


 25.05.2025
அஸ்வின் ஹால்
பெரம்பலூர்
தமிழ்மாறன் பணிநிறைவு விழா
முத்தம் மாறன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 25, 2025 22:06

May 24, 2025

தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மை

 கீழடி தொன்மை தமிழ் மண்ணின் தொன்மை

தமிழ் மண்ணின் தொன்மை இந்தியாவின் தொன்மைபிற்கேன் ஒன்றிய சங்கிகள் இவ்வளவு பதறுகிறார்கள்?தமிழ் மண்ணின் தொன்மை அவர்கள் கட்டமைக்க விரும்பும் பாரத தொன்மையை கேள்வி கேட்கும் என்பது அவர்களுக்குப் புரிகிறதுஎனவே அவர்கள் பதறுகிறார்கள்துயரம் என்னவெனில் தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளும் பதறுவதுதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2025 15:44

”மூத்த” என்பது வயது மட்டும்தானா?

 டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு ஊழல் என்றும்

இதோ ED உதயநிதியைக் கைது செய்யப் போகிறது என்றும் ஒரு பரபரப்பை சங்கிகள் கட்டமைக்கின்றனர்டாஸ்மாக் சம்பந்தமாக மொத்தம் 47 FIR கள்அவற்றில் 41 அதிமுக காலத்தைச் சார்ந்தவைஆனால் அதை வைத்து திமுக மீது ஒரு போலியான எதிர் பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சி செய்கிறது சங்கிக் கூடாரம் .எல்லோரைப் போலவே உங்களுக்கும் அரித்திருக்கிறது மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களேஎல்லோரைப் போலவே நீங்களும் சொறிந்து கொண்டிருக்கிறீர்கள்அந்த அரிப்பும் சொறிதலும் கேவலம் என்பதும் உங்களுக்குத் தெரிந்தே இருந்திருக்கிறதுஎன்ன, அதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்நீங்கள் சொன்ன Cheap என்ற வார்த்தையை கேவலம் என்று சொல்லியிருக்கிறேன்அவ்வளவுதான்சரி , இதை இவ்வளவு சிரிப்போடா ஒத்துக் கொள்வீர்கள் ?இரண்டை சொல்லுங்கள் மணிஎன்ன அரிப்பு உங்களுக்கு?சொறிந்து கொண்டதால் என்ன கிடைத்தது?”மூத்த” என்பதற்கு வயது மட்டும்தான் அளவுகோலா மணி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2025 07:18

எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்

 நாங்கள் நாளை உங்கள் நாட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் தொடங்க இருக்கிறோம்

உங்கள் வாழிடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ, ராணுவ முகாம்களிலோ ஏதும் செய்ய மாட்டோம் என்று தாக்குதல் நடத்துவதற்கு முதல்நாள் பாகிஸ்தானிற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார் இதை அவரே சொல்கிறார்இதை தேசபக்தி என்றும்பாக் என உச்சரிப்பது தேசத் துரோகம் என்றும் சொல்கிறார்கள் சங்கிகள்மைசூர்பாக்கை மைசூர்ஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார்கள்இன்று ஐந்து கடைகளில் நூறு நூறு கிராம் மைசூர்பாக் கேட்டேன்கொடுத்தார்கள்அதிலும் ஒரு கடையில் மைசூர்பாக் கேட்டது நீங்கதானே என்று கேட்டு என்னிடம் கொடுத்தார்கள்ஆக எங்கள் ஊரில் மைசூர்பாக் மைசூர்பாக்தான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2025 01:36

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.