இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 7
June 11, 2025
வந்து சந்திக்கிறேன் ஜெயதேவன் தோழர்
வந்து சந்திக்கிறேன் தோழர்அன்பும் முத்தமும்
Published on June 11, 2025 19:21
June 10, 2025
முருகன் எங்கள் பிள்ளை
மரியாதைக்குரிய அமித்ஷா,
வணக்கம்தேர்தலைத் தவிர வேறு எதுகுறித்தும் கலைப்படவே மாட்டீர்களா நீங்கள்?வெள்ளம் வந்து மக்கள் தத்தளித்தபோது வந்துபார்க்காத நீங்கள்தேவையான உதவிகளை செய்யாத நீங்கள்எங்கள் மக்களுக்குரிய பணத்தை தர மறுக்கிற நீங்கள்பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை சாவியை ஏதோ தமிழ்பூமி களவாண்டுகொண்டு வந்ததுவிட்டது என்றுதமிழ் மண்ணை இழிவுபடுத்திய நீங்கள்தேர்தலுக்காக முருகனைத் தூக்கிக்கொண்டு எம் மண்ணை எதிர்கொள்ள முயற்சி செய்கிறீர்கள்முருகன் எங்கள் பிள்ளைமுருகன் எங்கள் தகப்பன்முருகன் எங்கள் தோழன்நீங்கள் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடும் அதே மதுரையில்தான்கணவன் இறந்ததும் அழுது சிவந்த விழிகளோடு அரண்மனை வாசலுக்கு வந்த கண்ணகி அங்கிருந்த வாயிற்காவலினிடம்”வாயிலோயேவாயிலோயேஅறிவு அறை போகியபொறி அற நெஞ்சத்துஇறை முறை பிழைத்தோன்வாயிலோயே”என்பாள்அறிவு முற்றிலும் கீழற்றுப்போய் அற நினைவு சிறிதும் இல்லாத அரசநீதி தவறிய பாண்டியனின் காவலனேஉங்களது அறிவாற்றல் எனக்குத் தெரியும். உறுப்பினர்களே இல்லாத மாநிலங்களிலும் ஆட்சியை அமைத்த எதிமறை அறிவின் உச்சம் நீங்கள்ஆகவே முதல் பகுதியை எடுத்து விடுகிறேன்”அற நினைவு சிறிதும் இல்லாத அரசநீதி தவறிய மன்னனின் காவலனே” என்று கண்ணகி உங்கள் மாளிகை வாசல் காவலர்களிடம் பேசுவது போலவே உள்ளது
Published on June 10, 2025 20:53
“புதிய ஆசிரியன்” ஆலோசனைக்கூட்டம் 01
Published on June 10, 2025 06:05
June 9, 2025
புதிய ஆசிரியன்" ஆலோசனைக் கூட்டம்
09.06.2025
மதுரை "புதிய ஆசிரியன்" ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு
இடமிருந்து வலமாக
1) மதுரை சரவணன், 2) நான், 3) பேராசிரியர் கே.ராஜு 4) கலகல வகுப்பறை சிவா
Published on June 09, 2025 23:18
June 8, 2025
உபரி
10 மணி நேரம் வேலை என்கிறார் சந்திரபாபு
அப்போதுதான் உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார்தொழிலாளிகளை அதிகப்படுத்தி உற்பத்தி பெருகினால் அது உற்பத்தி அதிகரிப்புவேலை நேரத்தைக் கூட்டி அதன் மூலம் அதிகரிக்கும் உற்பத்திஉற்பத்திஉபரி லாபம்உபரி குறித்து பேசவேண்டும்
Published on June 08, 2025 09:26
அன்புமணியும் அனைத்து அக்காக்களோடும்
முகுந்தன் அரசியல் பொறுப்பை ஏற்பதைவிடவும் தொழில் செய்வதிலேயே ஆர்வமாயிருக்கிறார்
என்று ராமதாஸ் சொல்வதுதான் கருத்தில் கொள்ள வேண்டியதுகுடும்ப பைசல் முடிந்துவிட்டதுமுகுந்தனுக்கு வேறுவகையில் செட்டில் செய்தாயிற்று என்றே தெரிகிறதுஇனி சௌம்யாவோடு முகுந்தன் அம்மா இணைந்து போஸ் கொடுப்பார் போஸ் கொடுப்பார்முகுந்தனும் தாய்மாமனும் இணைந்து சிரிப்பார்கள்தன் அம்மாமீது அன்புமணி பாட்டிலை எறிந்தார் என்று சொன்னேனா விடுங்கள்,எந்த மகன் தன் அம்மாமீது பாட்டிலை எறியவில்லை என்பார் டாக்டர்எல்லோருமாக சேர்ந்து அமித்ஷாவை சந்திப்பார்கள்எனக்கென்ன கோபம் என்றால்ஒத்துக்கலைனா அன்புமணி சிறைக்கு போகனும்னு சொல்லும் நாம் ஏன்அந்த ஊழலை அம்பலப் படுத்தத் தயங்குகிறோம் என்பதில்தான்
Published on June 08, 2025 01:52
அதற்குமேல் அவளாலும் ஓடிவிடமுடியாது
ஒரு விவாதம்
ஒரு கட்டத்தில் அதற்குமேல் விவாதிக்க இயலாது என்று உணர்கிறார்மிகவும் பிரியத்திற்குரிய அணுக்கத் தோழர் அவர்"I quit" என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டு வந்த புத்தகங்களை அடுக்கும் வேலைக்குத் திரும்பிவிட்டார்சிலர் i quit என்பதற்கு பதில் ஓடுகிறமாதிரி ஸ்மைலியைப் போட்டிருப்பார்கள்

அவர் ஆங்கிலம் படித்தவர்"Ode on grecian urn" குறித்து என்னோடு பலமுறை பேசி இருப்பவர்கீட்ஸ் ஒரு மிக மிகப் பழமையான கிரேக்க ஜாடியைப் பார்க்கிறான்அந்த ஜாடிக்கு பலநூறு வயதுஅதில் ஒரு இளைஞன் ஒரு யுவதிக்கு முத்தமிட முயற்சிப்பான்அவள் ஓடிக்கொண்டிருப்பாள்கீட்ஸ் அந்த இளைஞனிடம் சொல்வான் Bold Lover, never, never canst thou kiss, Though winning near the goal yet, do not grieve; She cannot fade, though thou hast not thy bliss, For ever wilt thou love, and she be fair!கொஞ்சம் நாசுக்காகப் பெயர்த்தால்இளைஞனே அவளைத் தொடுகிற தூரத்தில் இருந்தாலும் அவளை முத்தமிட ஒருபோதும் உன்னால் ஆகாதுஆனாலும் தளர்ந்துவிடாதே அதற்குமேல் அவளாலும் ஓடிவிடமுடியாதுஒரு அரசியல் உரையாடல்கூட இப்படி இலக்கியத்தை நோக்கி நகர்த்தும்பேசுபவர்களுக்கு இலக்கியம் வருமென்றால்
Published on June 08, 2025 00:57
June 7, 2025
இது சங்கிகளின் மண் அல்ல
நான் ஒரு முஸ்லிம் பெண்
ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு இஸ்லாமியப் பெண்
ஆனால் நான் தீவிரவாதி அல்ல"
நள்ளிரவு தாண்டிய ஒரு பொழுதில், ஒருமணி நேரத்திற்குள் ஒன்பது பாகிஸ்தானிய தீவிரவாத முகாம்களை இல்லாமல் அழித்தொழித்தவர் சோபியா
இவை இரண்டிற்காகவும் இந்தியர்கள் கவலைகொள்ள வேண்டும்
2) தாக்குதலுக்கான சூழல் இருக்கிறபோது குறைந்தபட்சம் சுற்றுலாப் பயணிகளை ஏன் தடுக்கவில்லை?
ஜூன் 2025
ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு இஸ்லாமியப் பெண்
ஆனால் நான் தீவிரவாதி அல்ல"
நள்ளிரவு தாண்டிய ஒரு பொழுதில், ஒருமணி நேரத்திற்குள் ஒன்பது பாகிஸ்தானிய தீவிரவாத முகாம்களை இல்லாமல் அழித்தொழித்தவர் சோபியா
இவை இரண்டிற்காகவும் இந்தியர்கள் கவலைகொள்ள வேண்டும்
2) தாக்குதலுக்கான சூழல் இருக்கிறபோது குறைந்தபட்சம் சுற்றுலாப் பயணிகளை ஏன் தடுக்கவில்லை?
ஜூன் 2025
Published on June 07, 2025 01:44
June 6, 2025
எதற்கு எது எச?
"எங்கே
ஒளிந்துகொண்டால் எனை நீ கண்டுபிடிப்பாய்....?"என்பது இளமதியின் கவிதை
"பாகிஸ்தானிடம் முன்னமே சொல்லிவிட்டுதான் தாக்கினோம்"
என்பது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கூற்று
எதற்கு எது எச?
Published on June 06, 2025 22:19
G7 அமைப்பில் இந்தியா இல்லை
G7 அமைப்பில் இந்தியா இல்லை
எனவே G7 Summit கு இந்தியாவை அழைக்காததில் ஏதுமில்லைG20 யில் இந்தியாவிற்கு தலைமைப் பொறுப்பும் சுழற்சியில் வந்தது என்பதைத் தவிரசிறப்பாக ஏதுமில்லை
Published on June 06, 2025 09:43
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

![இரா. எட்வின் [R.Edwin]](https://s.gr-assets.com/assets/nophoto/user/u_111x148-9394ebedbb3c6c218f64be9549657029.png)