இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 3

July 28, 2025

சே.சூர்யா

 மு.சூாியபாரதி த|பெ இ.முத்துக்குமாா்

நெ.109 சி.எஸ்.எம் தோப்பு,பிள்ளையாா் பாளையம்,காஞ்சிபுரம் 631501செல்: 8870892114
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2025 02:35

July 11, 2025

எவனடா எங்களின் முகவரி கேட்டவன்

 



இருவரின் நேற்றைய (09.07.2025) செயல்கள் என்னைக் கட்டிப்போட்டிருக்கின்றனகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதானே முன்னோர்கள் சொன்னார்கள். பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றா சொன்னார்கள்கோவில கட்டுங்கப்பான்னா கோவில் வருமானதில் ஸ்டாலின் கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என்று முன்னாள் முதல்வர் மாண்பமை எடப்பாடி உளறஅறநிலையத்துறை விதிகளில் அதற்கு இடமிருக்கிறதுஅப்படித்தான்கல்லூரிகளாகத்தான் கட்டுவோம் என்று நிமிர்ந்து சொன்ன ஸ்டாலின் சாரின் செயல் ஒன்றுஇன்னொன்று நெசத்துக்குமே ரயிலை மறித்து நெருங்க நெருங்க ரயில் ஓட்டுநருக்கு மரண பயத்தைக் கொடுத்த குழந்தை அகல்யாவின் செயல்இவளது செயலை SFI அமைப்பின் முன்னாள் உறுப்பினன்CPM கட்சியின் ஒரு மாவட்டக்குழு உறுப்பினன் என்ற வகையிலும்அந்தக் குழந்தையின் தகப்பன் என்ற இடத்தில் இருந்தும் கொஞ்சம் அசைபோடுகிறேன்எப்படிப் பார்த்தாலும்சிலிர்க்கிறதுஇரண்டு நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி அவர்கள் “கம்யூனிஸ்டுகள் முகவரி இல்லாமல் நிற்கிறார்கள்” என்று கூறினார்
இந்த மறியல் போரின் வெற்றி தந்த திமிரால் நெஞ்சுப் புடைக்கிறது”எவனடா எவனடாஎவனடா எங்களின் முகவரி கேட்டவன்இவளடா இவளடாஇவளடாஎங்கள் உயிர்ப்பின்முகவரி”என்று கர்வத்தால் கண்கள் சிவந்து கொதிநிலை கொள்கின்றனவேறொன்றுமில்லைஅடையாளமாக இல்லாமல் ரயில் மறியலுக்கு உயிரை ஊட்டியிருக்கிறாள் பிள்ளை பார்க்கிறேன்உற்றுப் பார்க்கிறேன்பெத்தவன்ஈரக்குலை நடுங்குகிறதுவிபரீதம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்ட நிகழ்வு அதுகவனம் அவசியம்இப்படியா முறுக்குவ என்று கொட்டவும் செய்கிறேன்இயக்கம் எழுவதற்கான ஒரு காரியத்தை செய்திருக்கிறாய் என்று பிள்ளையை ஆரத் தழுவி முத்தமும் இடுகிறேன்10.07.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2025 08:12

July 10, 2025

கவிதை 017

  மருத்துவம் மட்டும்தான்

படிப்பா ?இப்படியாகத்தான்இந்த நூற்றாண்டிற்கானசூத்திரர்களுக்கான கல்வி மறுத்தல் தொடரோட்டத்தை ஆரம்பித்தான்ஒரு புள்ளியில்படித்தவன்பக்கோடா போடலாமே என்றான்சுதாரித்தோம்இல்லையெனில்பக்கோடா போடபடிப்பெதற்கென்றுநகர்ந்திருப்பான்இப்போதுசூத்திர கல்விமறுப்பு குச்சிஅறுபதாயிரம் யானைகளைஒரே கப்பலில் ஏற்றியவனின்கைகளுக்குப் போனதுஅவனோமாடு மேய்க்கப் பழகுசம்பளம் தருவேன் என்கிறான்இப்போது இன்னொருவன் கைகளில்சூத்திர கல்வி மறுப்பு குச்சிஇன்றுபடிப்பைவிடபக்தி பெரிதென்கிறான்நாளைபக்தி போதும்படிப்பெதற்கென்பான்குழந்தைகளேஎதற்கும்சாணி வாளியில்துடைப்பங்கள்ஊறியபடியே இருக்கட்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2025 06:25

July 9, 2025

இடது வழியும் இருக்கிறது ஸ்டாலின் சார்

  அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில்“ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன்அதைப் படித்ததும்
எங்கள் கட்சித் தோழர்கள் என்னவோ ஒரு புன்னகையோடு என்னைக் கடந்து போய்விட்டார்கள்ஆனால் திமுகவில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் உள்ளிட்டு பலர் என்னைக் கடிந்துகொள்ளவே செய்தார்கள்வேறொன்றுமில்லை,திமுக தோழர்கள் கலைஞருக்கு சமமாக உங்களைக்கூட பார்க்க மாட்டார்கள்கலைஞர்மீது அவர்களுக்குரிய அன்பு அப்படிஆனால் அப்படி எழுதியது சரிதான் என்பதை இன்று (09.07.2025) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நீங்கள் நிகழ்த்திய உரை உறுதி செயகிறதுகலைஞர் இருந்திருந்தால் உங்களை அழைத்து முத்தமிட்டிருப்பார்”காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான வழிகள் உள்ளன. மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக்கூடாது”என்று அழுத்தி சொல்லியுள்ளீர்கள்
திமுக மாதிரியான ஒரு கட்சியின் தலைவரால் இப்படி பேசிவிட முடியும்ஆனால் திமுக அரசின் தலைவரால் இப்படி பேசிவிட முடியாது. இழப்புகளை சந்திக்க நேரும் என்பதை அறிந்தவன் நான்.வெளிப்படியாகவே சொல்லிவிடுகிறேன்இதுவரை இவ்வளவு வெளிப்படையாக யாரும் பேசியது இல்லைஇழப்பதற்கு பயப்படாத குணம் வேண்டும் இப்படி பேசுவதற்குஉங்களுக்கு அது இருக்கிறதுமுத்தம் சார்பாருங்களேன் கோட்சே ஒரு கொலைகாரன்அவன் RSS காரன் இதை வெளிப்படியகப் பேசுவதற்கு நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது பாருங்கள்அதை உடைத்திருக்கிறீர்கள்மீண்டுமொருமுறை உங்களை இறுக அணைத்துக் கொள்கிறேன் சார்ஆனால் இது கோட்சே என்ற ஒரு மனிதனின் செயல் என்ற அளவில் அவனைக் குற்றப்படுத்துவதோடு சுருங்கிப்போய்விடக் கூடாது.அவனுக்குப் பின்னால் இருந்தஇப்போது அமித்ஷா தொடங்கிஅய்யா H.ராஜா வரை கைவைத்திருக்கும் சித்தாந்தம்தான் நமது பிரச்சினைஒன்று சொல்லவா19.02.1948 அன்று தஞ்சை சன்னாநல்லூரில் ஒரு கூட்டம்காந்தியாருக்கான இரங்கல் கூட்டம்
பெரியார் பேசுகிறார்அந்தக் கூட்டத்தில் அப்போது இளைஞராக இருந்த கலைஞர் கலந்துகொண்டு பெரியாரை ஏதோ கேள்வி கேட்கிறார்பெரியார் கலைஞருக்கு இப்படியாக பதில் சொல்கிறார்காந்தியை துப்பாக்கி சுட்டது என்பதற்காக துப்பாக்கியை ஒடித்துவிடலாமா?வேறு துப்பாக்கி வாங்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?சரி கொன்ற கோட்சேயை கொன்று போடலாமா?ஆயிரம் கோட்சேக்களை அவர்கள் உருவாக்குவார்கள்சரி RSS அமைப்பை அழித்துவிடலாமா?வேறு பெயரோடு வந்துவிடுவான்அவனது சித்தாந்தத்தோடு சண்டை போடவேண்டும் என்று பெரியார் பதில் சொல்லி இருக்கிறார்கலைஞரின் மகன் வலுவாக,,இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் சண்டை போடுகிறீர்கள்சாம்சங் பிரச்சினையில் உங்களுக்கு எதிர் நின்றோம்எங்களுக்குத் தெரியும் எங்களைத் தவிர சங்கிகள் உள்ளிட்டு அனைவரும் உங்களோடு நின்றார்கள்
அது பாட்டளி மக்களின் உரிமைக்கான பிரச்சினைஅந்த விஷயத்தில் உங்களுக்கு எதிர் தளத்தில் நின்று உங்களோடு சமர் புரிவது எங்கள் வேலை
செய்தோம்
இனியும் செய்வோம்
உங்களுக்கும் அது தெரியும்இதோ மோடிக்கு எங்கள் பலத்தைஇன்றைய பொது வேலைநிறுத்தத்தின் மூலம் காட்டி இருக்கிறோம்இதுவும் எங்கள் வேலைஅதே வேளை இதுமட்டும் அல்ல எங்கள் வேலை என்பதும் எங்களுக்குத் தெரியும்சங்கிகளுக்கு எதிராக உங்களை இணைத்துக்கொண்டு களமேகுவதும்சங்கிளோடு நீங்கள் சண்டை போடும்போது உங்களோடு இணைந்து நிற்க வேண்டியதும் எங்கள் வேலைசெய்வோம்நன்றி சார்அன்புடன்,இரா.எட்வின்09.07.2025#கடிதம்2025edn#கடிதம்edn
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2025 19:40

July 8, 2025

நாங்கள் எப்போதும் C/O மக்கள்

  அன்பின் எடப்பாடி சார்,

வணக்கம்கம்யூனிஸ்டுகள் முகவரியை இழந்துவிட்டார்கள் என்று நக்கல செய்திருக்கிறீர்கள்அரசியலில் இது சகஜம்தான்நேரம் கிடைத்தால்ஏதேனும் ஒரு செய்தித் தாளின் அத்தனை பதிப்புகளையும் வாங்குங்கள்அவற்றில் மாவட்டச் செய்திகள் என்று ஒரு பகுதி இருக்கும்நிதானமாகப் படியுங்கள்எதற்கும் அலைபேசியை அணைத்துவிட்டு படியுங்கள்அமித்ஷா அழைத்துக் கெடுத்துவிடப் போகிறார்ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதேனும் சில பகுதிகளில்,கழிவறை வசதி கேட்டு,ரேஷன் கடைகளில் வெயிலில் நிற்கும் மக்களுக்கு நிழற்குடை கேட்டு,மருத்துவமனை கேட்டு,அர்சு மருத்துவமனைகளின் போதாமையை சுட்டிக்காட்டி,ஏதேனும் ஒரு தாசில்தாரின் ஆணவத்திற்கு எதிராக,பேருந்து வசதி கேட்டு,தங்கள் ஊரிலும் ரயில் நின்றுபோக வேண்டும் என்று கேட்டு,ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற வகையில் ஏழை மக்களின் குடிசைகளைக் காவு கேட்கும் புல்டோசர்களுக்கு எதிராக,ஆணவக் கொலைகளுக்கு எதிராக,நெல்லுக்கு, கரும்புக்கு நியாயமான விலை கேட்டு,ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியைக் கேட்டு,தீண்டாமைச் சுவர்களுக்கு எதிராக,காலியான பணியிடங்களை நிரப்பக் கேட்டு,நீங்களும் கையெழுத்துப்போட்ட CNAவிற்கு எதிராக,குழந்தைகளை காவு வாங்கும் நீட்டிற்கு எதிராக,மதவெறிக்கு எதிராக பட்டியல் நீளும் இதுபோன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் கம்யூனிஸ்டுகள் நிற்பதை உங்களால் காண முடியும்மக்களுக்கான போராட்டக் களங்களே கம்யூனிஸ்டுகளின் முகவரிதோழர் Kanagaraj Karuppaiah சொன்னதுபோல்நீங்கள் C/O அமித்சாதெரிந்துகொள்ளுங்கள்,நாங்கள் எப்போதும் C/O மக்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2025 11:32

பிரிக்சும் பகல்காமும்

 


பிரிக்ஸ் கூட்டமைப்பு பகல்காம் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருப்பதாக ஒன்றிய அரசின் விசுவாசிகள் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்இரண்டு விஷயங்களை வெளிப்படையாகப் பேசிவிடுவது சரியாக இருக்கும்22.06.2025 அன்று பகல்காமில் தீவிரவாதிகள் 26 பேரைத் தாக்கிக் கொன்றொழித்ததை பிரிக் கடுமையாகக் கண்டித்திருக்கிறதுஅதை எல்லா நாடுகளும்தான் கண்டிக்கின்றனஆனால் அதையொட்டி இந்தியா பாகிஸ்தான்மீது தொடுத்த தாக்குதலை எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லைபிரிக்சும் ஆதரிக்கவில்லை என்பது ஒன்றுஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது பிரிக்ஸ் என்பது இரண்டுபடம்07.07.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2025 02:00

July 7, 2025

உழைப்பை இப்படிச் சுரண்டினால்

  போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவார்கள் என்று தொழிலாளிகளைப் பார்த்து கவலையோடு கேட்கும் நீதிமன்றம்

உழைப்பதற்கு யார் வருவார்கள் என்று எப்போது முதலாளிகளைப் பார்த்து கவலையோடு கேட்கும்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2025 10:36

July 6, 2025

ஒரு புள்ளதான வச்சிருக்க

 சிந்தாமணியூர்

K.பெருமாள் ஜவுளிக்கடைபக்கத்தில்அப்பா, அம்மா, பாட்டி இவர்களோடு ஒரு குழந்தை30 இருக்கும்அப்பாவிற்கு பீகாக் ப்ளு பிடிக்கும் என்பதால் அந்தக் கலரில் ஒரு பட்டு8500 ரூபாய்சிரித்தபடிநல்லாருக்கு தானே அங்கிள் என்கிறாள்அப்படி ஒரு வார்ப்பான சிரிப்புசெமையா இருக்கு சாமிஇன்னும் வார்ப்பாய் சிரிக்கிறாள்அம்மாக்கு புடிச்ச கலர்ல ஒன்னுபாட்டிக்கு புடிச்ச கலர்ல ஒன்னுஏண்டி எத்தன எடுப்பஒரு புள்ளதான வச்சிருக்கஎனக்கு புடிச்ச கலர்ல ஒன்று எங்கட்டுக்காரருக்கு புடிச்ச மாதிரி ஒன்னுஇப்ப அவங்க அப்பாஎப்ப பார்த்தாலும் ஒரு புள்ளைய வச்சுருக்கன்னு சொல்லிய மொளகா அறக்கிற நீஉங்க வீட்டுக்காரரும் ஒரு வொய்ப்தான வச்சிருக்கார்னு சொன்னதுதான் தாமதம்நீ தப்பா பேசிட்ட பைனா ஒரு புடவைவேற வழிஅள்ளிட்டுப் போறப்ப கன்னத்தைப் பிடித்து வரட்டா அங்கிள்னு சிரிச்சபடியே போறாபெருசா வா சாமி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2025 21:21

சுள்ளி பொறுக்கியவனை ...

  நேற்று

"சுள்ளிபொறுக்கியவனைசந்தனம் திருடியவன்சவுக்கால் அடிக்கிறான்''என்ற கவிதையோடு ஒரு பதிவு எழுதினேன்இன்னும் புரியற மாதிரி சொல்லேன் என்கிறான்எனக்குப் புரிந்த அளவில் சொல்கிறேன்அனில் அம்பானி வங்கியில் 49,000 கோடி கடன் வாங்குகிறார்இழுத்து ஒரு வழியாக ஒன் டைம் செட்டில்மென்டில்" 455 கோடி கட்டுகிறார்வங்கி போதும் என்று சொல்லிவிட்டதுSBI அனில் அம்பானியின் கடன் கணக்கை fraud account என்று சொன்னதோடு திருப்தி கொண்டிருக்கிறது49,000 கோடி கடன்வட்டி எப்படியும் 5 கோடி என்று வருகிறபோதுதான் one time Settlement கு வருவார்கள்எனில்,54,000 கோடிக்கு 455 கோடியை பெற்றுக் கொண்டு Fraud என்றுகூட அல்லFraud account என்று சொன்னதோடு திருப்திப்பட்டுக் கொண்ட SBIசேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக ஏழைகளிடம் கறாராக கறக்கிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2025 21:19

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.