நாங்கள் எப்போதும் C/O மக்கள்
அன்பின் எடப்பாடி சார்,
வணக்கம்கம்யூனிஸ்டுகள் முகவரியை இழந்துவிட்டார்கள் என்று நக்கல செய்திருக்கிறீர்கள்அரசியலில் இது சகஜம்தான்நேரம் கிடைத்தால்ஏதேனும் ஒரு செய்தித் தாளின் அத்தனை பதிப்புகளையும் வாங்குங்கள்அவற்றில் மாவட்டச் செய்திகள் என்று ஒரு பகுதி இருக்கும்நிதானமாகப் படியுங்கள்எதற்கும் அலைபேசியை அணைத்துவிட்டு படியுங்கள்அமித்ஷா அழைத்துக் கெடுத்துவிடப் போகிறார்ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதேனும் சில பகுதிகளில்,கழிவறை வசதி கேட்டு,ரேஷன் கடைகளில் வெயிலில் நிற்கும் மக்களுக்கு நிழற்குடை கேட்டு,மருத்துவமனை கேட்டு,அர்சு மருத்துவமனைகளின் போதாமையை சுட்டிக்காட்டி,ஏதேனும் ஒரு தாசில்தாரின் ஆணவத்திற்கு எதிராக,பேருந்து வசதி கேட்டு,தங்கள் ஊரிலும் ரயில் நின்றுபோக வேண்டும் என்று கேட்டு,ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற வகையில் ஏழை மக்களின் குடிசைகளைக் காவு கேட்கும் புல்டோசர்களுக்கு எதிராக,ஆணவக் கொலைகளுக்கு எதிராக,நெல்லுக்கு, கரும்புக்கு நியாயமான விலை கேட்டு,ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியைக் கேட்டு,தீண்டாமைச் சுவர்களுக்கு எதிராக,காலியான பணியிடங்களை நிரப்பக் கேட்டு,நீங்களும் கையெழுத்துப்போட்ட CNAவிற்கு எதிராக,குழந்தைகளை காவு வாங்கும் நீட்டிற்கு எதிராக,மதவெறிக்கு எதிராக பட்டியல் நீளும் இதுபோன்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் கம்யூனிஸ்டுகள் நிற்பதை உங்களால் காண முடியும்மக்களுக்கான போராட்டக் களங்களே கம்யூனிஸ்டுகளின் முகவரிதோழர் Kanagaraj Karuppaiah சொன்னதுபோல்நீங்கள் C/O அமித்சாதெரிந்துகொள்ளுங்கள்,நாங்கள் எப்போதும் C/O மக்கள்
Published on July 08, 2025 11:32
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)