இடது வழியும் இருக்கிறது ஸ்டாலின் சார்

  அன்பின் ஸ்டாலின் சார்,

வணக்கம்நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற கொஞ்ச காலத்தில்“ஸ்டாலின் கலைஞர் ப்ளஸ்” என்று எழுதினேன்அதைப் படித்ததும்
எங்கள் கட்சித் தோழர்கள் என்னவோ ஒரு புன்னகையோடு என்னைக் கடந்து போய்விட்டார்கள்ஆனால் திமுகவில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் உள்ளிட்டு பலர் என்னைக் கடிந்துகொள்ளவே செய்தார்கள்வேறொன்றுமில்லை,திமுக தோழர்கள் கலைஞருக்கு சமமாக உங்களைக்கூட பார்க்க மாட்டார்கள்கலைஞர்மீது அவர்களுக்குரிய அன்பு அப்படிஆனால் அப்படி எழுதியது சரிதான் என்பதை இன்று (09.07.2025) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நீங்கள் நிகழ்த்திய உரை உறுதி செயகிறதுகலைஞர் இருந்திருந்தால் உங்களை அழைத்து முத்தமிட்டிருப்பார்”காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான வழிகள் உள்ளன. மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக்கூடாது”என்று அழுத்தி சொல்லியுள்ளீர்கள்
திமுக மாதிரியான ஒரு கட்சியின் தலைவரால் இப்படி பேசிவிட முடியும்ஆனால் திமுக அரசின் தலைவரால் இப்படி பேசிவிட முடியாது. இழப்புகளை சந்திக்க நேரும் என்பதை அறிந்தவன் நான்.வெளிப்படியாகவே சொல்லிவிடுகிறேன்இதுவரை இவ்வளவு வெளிப்படையாக யாரும் பேசியது இல்லைஇழப்பதற்கு பயப்படாத குணம் வேண்டும் இப்படி பேசுவதற்குஉங்களுக்கு அது இருக்கிறதுமுத்தம் சார்பாருங்களேன் கோட்சே ஒரு கொலைகாரன்அவன் RSS காரன் இதை வெளிப்படியகப் பேசுவதற்கு நமக்கு ஒரு தயக்கம் இருக்கிறது பாருங்கள்அதை உடைத்திருக்கிறீர்கள்மீண்டுமொருமுறை உங்களை இறுக அணைத்துக் கொள்கிறேன் சார்ஆனால் இது கோட்சே என்ற ஒரு மனிதனின் செயல் என்ற அளவில் அவனைக் குற்றப்படுத்துவதோடு சுருங்கிப்போய்விடக் கூடாது.அவனுக்குப் பின்னால் இருந்தஇப்போது அமித்ஷா தொடங்கிஅய்யா H.ராஜா வரை கைவைத்திருக்கும் சித்தாந்தம்தான் நமது பிரச்சினைஒன்று சொல்லவா19.02.1948 அன்று தஞ்சை சன்னாநல்லூரில் ஒரு கூட்டம்காந்தியாருக்கான இரங்கல் கூட்டம்
பெரியார் பேசுகிறார்அந்தக் கூட்டத்தில் அப்போது இளைஞராக இருந்த கலைஞர் கலந்துகொண்டு பெரியாரை ஏதோ கேள்வி கேட்கிறார்பெரியார் கலைஞருக்கு இப்படியாக பதில் சொல்கிறார்காந்தியை துப்பாக்கி சுட்டது என்பதற்காக துப்பாக்கியை ஒடித்துவிடலாமா?வேறு துப்பாக்கி வாங்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?சரி கொன்ற கோட்சேயை கொன்று போடலாமா?ஆயிரம் கோட்சேக்களை அவர்கள் உருவாக்குவார்கள்சரி RSS அமைப்பை அழித்துவிடலாமா?வேறு பெயரோடு வந்துவிடுவான்அவனது சித்தாந்தத்தோடு சண்டை போடவேண்டும் என்று பெரியார் பதில் சொல்லி இருக்கிறார்கலைஞரின் மகன் வலுவாக,,இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் சண்டை போடுகிறீர்கள்சாம்சங் பிரச்சினையில் உங்களுக்கு எதிர் நின்றோம்எங்களுக்குத் தெரியும் எங்களைத் தவிர சங்கிகள் உள்ளிட்டு அனைவரும் உங்களோடு நின்றார்கள்
அது பாட்டளி மக்களின் உரிமைக்கான பிரச்சினைஅந்த விஷயத்தில் உங்களுக்கு எதிர் தளத்தில் நின்று உங்களோடு சமர் புரிவது எங்கள் வேலை
செய்தோம்
இனியும் செய்வோம்
உங்களுக்கும் அது தெரியும்இதோ மோடிக்கு எங்கள் பலத்தைஇன்றைய பொது வேலைநிறுத்தத்தின் மூலம் காட்டி இருக்கிறோம்இதுவும் எங்கள் வேலைஅதே வேளை இதுமட்டும் அல்ல எங்கள் வேலை என்பதும் எங்களுக்குத் தெரியும்சங்கிகளுக்கு எதிராக உங்களை இணைத்துக்கொண்டு களமேகுவதும்சங்கிளோடு நீங்கள் சண்டை போடும்போது உங்களோடு இணைந்து நிற்க வேண்டியதும் எங்கள் வேலைசெய்வோம்நன்றி சார்அன்புடன்,இரா.எட்வின்09.07.2025#கடிதம்2025edn#கடிதம்edn
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2025 19:40
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.