இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 5

June 27, 2025

கவிதை 014/2025

 ஏவுகணை தாக்கிய இடத்திற்கு

ஒரு மணி நேரவான்வெளி பயணதூரம்பயப்படஏதுமில்லைஎன்ற மகனிடம்பார்த்துவிட்டு வந்த மாப்பிள்ளை வீடு குறித்தும்சண்டைஅண்ணன் இடத்திற்குகொஞ்சம் தள்ளிதான்பயப்பட ஏதுமில்லை என்றுமகளிடமும் சொல்லும் என்னிடம்சொல்வதற்குசுவாரசியமாய் ஏதுமில்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2025 03:20

June 26, 2025

நாங்கள் நாய்களைவிட கேவலமா

 ”பங்கர்” என்பது பதுங்கு குழி

போர் உள்ளிட்டு ஏதேனும் ஆபத்துகள் வரும் வேளையில் உள் சென்று தற்காலிகமாக தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான இடம்சியோனிஸ்டுகள் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தில் இவை கொஞ்சம் அதிகம்தேவையில்லாமல் அவர்கள் ஈரானை வம்புக்கிழுத்து மரண அடியை வாங்குகிறார்கள்அங்கு உள்ள மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்சிலர் தங்களது செல்ல நாய்களையும் பூனைகளையும்கூட கொண்டு செல்கிறார்கள்படிப்பின் நிமித்தம், வேலைகளின் நிமித்தம் அங்குள்ள இந்தியர்களும் பங்கருக்கு வருகிறார்கள்அவர்களை சீயோனிஸ்டுகள் துப்பி விரட்டுகிறார்கள்இந்தியர்கள் கேட்கிறார்கள்“நாய்களை கூட்டிப் போகிறீர்களே. நாங்கள் நாய்களாஇவிட கேவலமா?”அவர்கள் சொல்கிறார்கள்,“ஆமாம்”நமது வருத்தமெல்லாம் நமது ஒன்றிய அரசாங்கம் ஏன் சீயோனிஸ்டுகள் பக்கமே சாய்கிறது என்பதுதான்அதற்கும் விடை இருக்கவே செய்கிறதுஇஸ்ரேல் ஹைபா துறைமுகத்தை அதானிக்கு கொடுத்திருக்கிறதுஇவர்கள் இஸ்ரேலில் அசிங்கப்பட்ட இந்தியர்களுக்காக குரல் கொடுத்தால்அதானிக்கு பங்கம் வரும்இவர்களைப் பொறுத்தவரைஇவர்களும் அம்பானியும் அதானியும் மட்டுமே இந்தியர்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2025 20:41

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்

 மெய்யாகவே எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை அழித்துவிடும் நிலையில்

அமெரிக்கா இந்தியாவின் பலத்திற்கும் கீழான நாடுதான்இரண்டுநாள் முன்பு ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும்இர்ரான் அதை எதிர்கொண்ட விதமும் இதைத்தான் சொல்கின்றன
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2025 06:19

இஸ்ரேல் என்பதே பாலஸ்தீனம்தான்

 


இப்படி ஒவ்வொரு நாடாக வரவேண்டும் என்பதே நமது ஆசைதொடர்ந்து பாலஸ்தீனம் குறித்தும்இஸ்ரேலின் அயோக்கியத்தனக்கள் குறித்தும்பேசிக்கொண்டே இருப்போம்இஸ்ரேல் என்ற ஒன்றே இல்லை என்ற வகையிலும்,இஸ்ரேல் என்பதே பாலஸ்தீனம்தான் என்ற வகையிலும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனம் என்று சொல்வதும் பிழையானதுதான் சைமன் ஹாரிஸ் சார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2025 05:47

June 25, 2025

சீயோனிசத்திற்கு எதிராக நியூயார்க்கிலும்

 


32 வயதேயான ஜோரன் மம்தானிஜனநாயகக் கட்சியின் நியூயார்க் மேயர் வேட்பாளர்சன்னமாக இடதுசாரிஅநேகமாக மேயராவார் என்று தெரிகிறதுகேட்கிறார்கள்,நீங்கள் மேயரானதும் எல்லா மேயரையும் போல் இஸ்ரேல் சென்று வருவீர்களா?நியூயார்க் மேயரானதும் முதலில் இஸ்ரேல் சென்று வருவது என்பது கிட்டத்தட்ட மரபாகிப் போன விஷயம்சீயோனிசத்தின் எச்சக் கூறு இதுகிட்டத்தட்ட சீயோனிஸ்டுகளின் விருப்பத்தளம் நியூயார்க்அங்கு போட்டியிடுகிற இந்தப் பிள்ளை சொல்கிறார்நான் ஏன் அங்கு போக வேண்டும்மக்களும் அவரைக் கொண்டாடுகிறார்கள்வேறொன்றும் இல்லைசீயோனிசத்திற்கு எதிராக நியூயார்க்கிலும் மக்கள் ஆடத் தொடங்கி இருக்கிறார்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2025 22:21

காசா குறித்து ஏதும் உறுதியைப் பெறாமல் விட்டது தவறு

 இஸ்ரேலை ஏவி ஈரான்மீது தாக்குதலைத் தொடங்க வைத்தது அமெரிக்கா

தாக்குதலில் இருந்து ஈரான் சுதாரிப்பதற்கு முன் ஒழுங்காக இல்லாவிட்டால் ஈரான் வரைபடத்தில் இருக்காது என்று கொக்கரித்தது அமெரிக்காஈரான் எழுந்து சதிராடி இஸ்ரேலை துவம்சம் செய்ததும்நெதனின் கட்டளைக்காக ஈரான்மீது தாக்குதலை நடத்தியது அமெரிக்காஅமெரிக்க போர்த் தளவாடங்கள்மீதும் ஈரான் தாக்குதலைத் தொடங்கியதும் ஈரானிடம் மண்டியிட்டது அமெரிக்காஎல்லாம் சரிஅமெரிக்கா கெஞ்சிக் கொண்டதால் போரை நிறுத்தியதாக ஈரான் கூறுவதில் என்ன லாஜிக் இருக்கிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2025 20:58

கவிதை 13/2025

 

அமெரிக்காவே நம்ப முடியாத அளவிற்கு அசிங்கமானது அமெரிக்கா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2025 09:30

June 24, 2025

65/66, காக்கைச் சிறகினிலே ஜூன் 2025

    அன்பிற்குரிய தமிழ் மடாதிபதிகளே,

வணக்கம்கடவுள் நம்பிக்கையற்றவன் நான். ஆனால் எனக்கு தமிழ் பக்திமரபு பிடிக்கும்.தமிழ் பக்திமரபு என்னை அப்படி நெகிழ்த்தும். அதுமட்டுமல்ல உலகின் வேறு எந்த மொழியேனும் பக்திமரபினை தனது அடையாளமாகக் கொண்டிருக்கிறதா என்பது அய்யம்தான். அப்படியே இருந்தாலும் பக்தனையும் கடவுளையும் தமிழ் இணைப்பதுபோல வேறு மொழி இணைக்கும் என்று நான் நம்பவில்லை.தமிழ் பக்திமரபு அனைவரையும் அணைக்கும், இணைக்கும். தமிழ் பக்திமரபு என்பது குறிப்பாக சைவ பக்திமரபு என்பது சனாதனத்திற்கு எதிரானது.மடங்களின் அதிபர்களை கிட்டத்தட்ட சாமியாகவே பார்க்கிற அன்பு தமிழ் பக்தர்களின் அன்பு.இந்த அன்பு, எதையும் கடந்தவர்கள் நீங்கள் என்று அவர்கள் கருதுவதால் வருவது.அவர்கள் எளியவர்கள், ஆனால் கூர்மையானவர்கள்.வெளிப்படையானவர்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். சரியோ தவறோ எதையும் முகத்திற்கு நேராகக் கேட்டுவிடக் கூடியவர்கள்.திருவிளையாடல் புராணத்தில் இது இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சினிமாவில் பார்த்திருக்கிறேன்.கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே இருக்கும் இந்த உறவை...அது கற்பனை என்றே கொண்டாலும், விவரம் தெரிந்த நாள்முதலாக நான் கொண்டாடிக்கொண்டே இருக்கிறேன்.குறுந்தொகையின் இரண்டாம் பாடலை இறைவன் சிவன் எழுதியதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கவேண்டிய அவசியம் நமக்கு இப்போது இல்லை.தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் மணம் இயற்கையானதா அல்லது அவள் பூசும் வாசனை திரவியங்கள்வழி வருவதா என்கிற அய்யம் மன்னன் செண்பகபாண்டியனுக்கு வருகிறது. இந்த அய்யம் அவ்வளவு முக்கியமானதா என்கிற அறிவு பூர்வமான வினாக்களுக்குள் நாம் இப்போது போகத் தேவை இல்லை. அவனது அவையில் உள்ள சான்றோர்களிடம் இவனது அய்யத்திற்கான விடை இல்லை.எனவே தனது அய்யத்தைத் தீர்ப்பவனுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கிறான். இந்த சன்மானத்திற்கு ஆசைப்படும் ஒரு எளிய மனிதனின் வழியாக இறைவன் கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலை அனுப்பி வைக்கிறான்.“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவும் உளவோ நீயறியும் பூவே” செண்பகப் பண்டியனின் அரசவைக் கவிஞரான நக்கீரன் தருமி கொண்டு வந்திருக்கும் இந்தப் பாடலில் பிழை இருப்பதாக சொல்கிறார். இதை தருமி சொல்லக் கேட்டதும் சிவனுக்கு கோபம் வருகிறது. அவரே நேராக செண்பகப் பாண்டியனின் அவைக்கு வருகிறார்.வந்திருப்பது தாம் வணங்கும் இறைவன் என்பது நக்கீரனுக்குத் தெரிகிறது. அந்தப் பாடலை எழுதியது தாம் தினமும் வணங்கும் இறைவனே என்றாலும் அதை ஏற்க மறுக்கிறார். இறைவனுக்கும் நக்கீரனுக்கும் விவாதம் நீள்கிறது. தன்னை தன் பக்தன் வென்றுகொண்டே வருவது இறைவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் எல்லை தாண்டுகிறார். கோபம் தலைக்கேற,“அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசிபங்கம் பட இரண்டு கால் பரப்பிசங்கதனைக்கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோஎம் கவியைஆராய்ந்து சொல்லத் தக்கவன்”என்று வெடித்து விடுகிறார்.“சங்குகளை அறுத்து வளையல் செய்து விற்று வயிறு வளர்க்கும் கடையனான நீ என் பாடலில் பிழை காண்கிறாயா?” என்ற இறைவனின் கோபத்தையும் நேராக எதிர்கொள்கிறார் நக்கீரன்.நக்கீரர் சொல்வார்,“சங்கருப்பதெங்கள் குலம்சங்கரனார்க்கேது குலம்?”இந்த இரண்டு வரிகளை நினைக்குந்தோறும் நெக்குருகிப் போகிறேன் சன்னிதானங்களே.”சங்கரன் நீநீ குலமற்று இருப்பதுதானே நியாயம்நீ எப்படி குல பேதம் சொல்லலாம்” என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் என்றே இந்த எளிய நாத்திகன் நினைக்கிறேன். ஆமாம் சன்னிதானங்களே, நக்கீரனாரின் கோபத்தை இந்த எளியவன் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.படைக்கப்பட்ட எந்த இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே இப்படி ஒரு உறவை உலகில் எங்கும் பார்க்க இயலாது. எந்த ஒரு மொழியும் இறைவனையும் பக்தனையும் இப்படி படைத்தளித்ததில்லை. தமிழ் இந்த அதிசயத்தை செய்திருக்கிறது. இந்த இடத்தில் தமிழ் எதுவரைக்கும் நகர்ந்திருக்கிறது தெரியுமா சாமிகளே…”திருவிளையாடல்” திரைப்படத்தில் இந்த உரையாடல் இறைவனின் இந்த ஆறு வார்த்தைகளோடு நிறைவுப் பகுதிக்கு நகரும். சிவன் சொல்வார்,“நக்கீரனே! நின் தமிழோடு விளையாடவே யாம்வந்தோம்”அய்யோ, அய்யோ, ஒரு பக்தனின் மொழியை ரசித்து சுவைக்க ஏங்குகிறவனாக கடவுளைக் காட்டும் மொழி தமிழ். இதெல்லாம் புனைவு அல்லவா என்று யாரேனும் கேட்பீர்களேயானால், “இறைவனும் புனைவுதானே சாமிகளே” என்பதுதான் எனது பதில்.”பித்தாபிறைசூடிபெருமானேஅருளாளா”என்று சுந்தரமூர்த்தி சாமிகளையும் எங்கள் தமிழ் பாட வைக்கும். அதற்கு நேர் எதிராக“தாவாரம் இல்லைதங்க ஒரு வீடில்லைதேவாரம் ஏதுக்கடி” என்று சித்தனையும் பாட வைக்கும்.நீங்கள் அரவணைக்க வேண்டியவர்கள்.”ஏகன் அநேகன்” என்ற ஒப்பற்ற தத்துவத்தின் தூதுவர்கள் நீங்கள். அநேக பெயர்களில் இருக்கிறவன் ஒரே ஒருவன்தான். அவனை நாம் சிவன் என்கிறோம். இன்னொருவன் இன்னொரு பெயரில் அழைக்கிறான். அவ்வளவுதான் பிள்ளைகளே. அமைதியாக, ஒற்றுமையாக அணைந்து வாழுங்கள் என்று எங்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்த வேண்டியவர்கள் நீங்கள்.எல்லோரிடமும் சமமாக அன்பு பாராட்ட வேண்டியவர்கள். ஒரு மதத்தின் பிரதிநிதி என்பது உங்களது முற்றான அடையாளம் அல்ல.எல்லோருக்கும் பொதுவானவர்கள் நீங்கள்.குல்லா தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்சிலுவை தரித்தவனும் உங்கள் பிள்ளைதான்குங்குமம் வைத்தவனும் உங்கள் பிள்ளைதான்உங்களில் ஒருவர் தொப்பியோடும் தாடியோடும் ஒருவர் தன்னைக் கொல்ல வந்தார் என்று சொல்வது மட்டுமல்ல அதைக் கேட்டு மற்ற சன்னிதானங்கள் மௌனமாக இருப்பதும் தவறுதான்.குன்றக்குடி பெரிய சன்னிதானத்தின் இறுதி இலக்கிய பொதுமேடை ஜெயங்கொண்டத்தில் நடந்த கலை இரவுதான். அன்று நடந்த வழக்காடு மன்றத்தில் அவரது கீழ் நானும் பேசினேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நான் எப்போதும் வாயருகே கை வைத்து மரியாதையோடுதான் அவரோடு பேசி இருக்கிறேன்.காரணம் மதச்சார்பின்மை என்ற இந்திய அடையாளத்தின் ஒப்பற்ற முகவரி அவர்.இப்படியாகவே இருங்கள்.அன்போடு இருங்கள். அனைத்து சன்னிதானங்களுக்கும் என் அன்பும் நன்றியும்அன்புடன்,இரா.எட்வின்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2025 20:41

அடுத்த பதிப்பு வந்திருக்கிறது

 


அடுத்த பதிப்பு வந்திருக்கிறது என்பது தரும் மகிழ்ச்சி இருக்கே..10.06.202
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2025 05:57

நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்

 

ஒரு கிழவி நடந்துகொண்டே இருக்கிறாள்அசதியாக இருக்கிறதுஒரு மரம் தென்படுகிறதுநிழலுக்காக ஒதுங்குகிறாள்ஒரு சுட்டிப் பொடியன் மரத்தின் கிளையொன்றில் அமர்ந்திருக்கிறான்“பாட்டி” என்று கத்துகிறான்கிழவி மேலே பார்க்கிறாள்பசிக்குதா?ஆமாம்பாபழம் சாப்பிடுகிறாயாஉலுக்கித் தாயேன்சரி பெரிசு என்ன பழம் வேண்டும்நாவல் மரத்தில் மாம்பழமா இருக்கும். உலுக்குடா பொடியா இல்ல பாட்டி இதுல ரெண்டுவிதமான பழங்கள் இருக்குகிழவியே குசும்புக்காரி. குசும்பென்றால் அப்படியொரு ஞானக் குசும்பு. தன்னையே சீண்டுகிறானே என்று ஒரு நிமிடம் குழம்பியவள்என்ன ?சுட்ட பழமும் இருக்கு சுடாத பழமும் இருக்கு. எது வேண்டும்சரி சரி, சுட்ட பழமா போடு. சாப்பிடற சூடில்உலுக்குகிறான்பழங்கள் உதிர்கின்றனபழமெல்லாம் மணல்மணலை ஊதிக்கொண்டே கேட்கிறாள்சேட்டக்காரக் கழுத, சுடவே இல்லபையன் சொல்கிறான்சுடாமலா ஊதறகிழவி வெளவெளத்துப் போகிறாள்உங்களுக்குப் புரியும் , கிழவி அவ்வை, பொடியன் முருகன்இது அமித்ஷாவிற்குப் புரிய வேண்டும்இது புனைவாகவேகூட இருந்துவிட்டுப் போகட்டும்எங்கள் தமிழ் சமய மரபு எங்கள் முருகனை தன் பிள்ளைகளோடு இப்படியாக உறவாடவும் விளையாடவுமாக படைத்தளித்திருக்கிறதுஎங்கள் கிழவிமார்கள்எங்கள் முருகனுக்கே புத்தி சொல்வார்கள்உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு என்பார்கள்இந்த இடம் நாத்திகர்கள் நாங்களே புன்னகைத்து நழுவும் இடம்இது குமரி அனந்தன் அய்யா பொண்ணுக்கே புரியாதபோது அமித்ஷாவிற்கு எப்படி புரியும்திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலில் ஒரு இடம்”சிறப்புடனே கந்தக்கோட்டமுண்டு உன்சிங்கார மயிலாடதோட்டமுண்டுஉனக்கான மனக் கோயில்கொஞ்சமில்லைஉனக்கான மனக் கோயில்கொஞ்சமில்லைஅங்கு உருவாகும் அன்புக்கோபஞ்சமில்லைஅங்கு உருவாகும் அன்புக்கோபஞ்சமில்லை”அமித்ஷாஎங்கள் முருகனை உங்களுக்குத் தெரியாதுநகருங்கள்அவனுக்கான மனக்கோயிலில் அன்புக்கு பஞ்சமேயிருக்காது ஷா சார்அதைக் கெடுக்காமல் நகருங்க சாமிகளா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2025 05:39

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.