இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 13
April 9, 2025
அவர் பெயிலென்றே கொள்வோம்
இந்த கட்டிங்கை வைத்து தோழர் M S Rajagopal கொதித்திருந்தார்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய முதல் பேச் மாணவன் நான்
1978 இல் எழுதினேன்
+2 விலும் முதல் பேச் நான்
இது 1980
என்னைவிட குறைந்தபட்சம் 10 வயதேனும் மூத்தவர் ஸ்டாலின் சார்
எனவே அவர் 10 ஆம் வகுப்பு படித்தபோது பொதுத்தேர்வு என்பது 11 ஆம் வகுப்பில்தான்
11 + 1 +3 என்பது அன்றைய வடிவம்
அவரது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அவரே நினைத்தாலும் வாங்குவது கடினம்
தமிழ் - 22ஆ
ஆங்கிலம் 18
கணக்கு 33
அறிவியல் வரலாறு 39
என்று ஒரு மதிப்பெண் பட்டியலை வைத்திருக்கிறார்கள்
ஏதோவொரு பத்திரிக்கை கட்டிங்தான் அது
அது என்ன அறிவியல் வரலாறு 39 என்று தெரியவில்லை
சரி
அறிவியலில் 39
வரலாறு 39 என்று கொள்வோம்
அந்தக் காலத்தில்
வரலாறு பூகோளம்தான் வரலாறு இல்லை
அப்போது elective என்று ஒரு விருப்பப் பாடம் இருக்கும்
அது எங்கு போனது என்று தெரியவில்லை
அது சரி
ஆமாம், அவர் பெயிலென்றே கொள்வோம்
அதற்கென்ன?
அவர் செய்த மாபெரும் பிழைகளுள் ஒன்று சாம்சங் விசயம்
அவரை விமர்சிப்பது என்றால் சாம்சங் பிரச்சினையில் ஸ்டாலின் நிலை குறித்து விமர்சித்திருக்கவேண்டும்
12 மணிநேர வேலைத் திட்டத்தை அவர் கொண்டுவர முனைந்தபோது அதை விமர்சித்திருக்க வேண்டும்
நேற்று கூட நடுக்காவிரி காவல் நிலையம் முன்பு இரண்டு பெண்கள் நஞ்சருந்தி அதில் ஒருவர் இறந்திருக்கிறார்
காவல்துறையின் அவலம் குறித்து விமர்சிக்கலாம்
போங்கப்பா
ஏதாவது குட்டிச்சுவர் கிடைத்தால்
முதுகை சொரிந்து கொள்ளுங்கள்
10.04 2025
அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்
இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ந்யூஸ் டைம், இந்தியா டுடே போன்ற சேனல்களில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்துள்ள நேர்காணல்களைப் பார்த்த பிறகு திமுக தலைமைக்கானஎன் கோரிக்கை
அருள்கூர்ந்து பழனிவேல்ராஜனை நாடு பூராவும் கருத்தரங்கங்களில் உரையாட ஏற்பாடு செய்யுங்கள்அவர் ஆங்கிலத்தில் பேசட்டும்யாராவது தமிழில் மொழி பெயர்க்கட்டும்#சாமங்கவிய இரண்டு மணி ஒரு நிமிடம்09.04.2025
ஆளுநரே வேண்டாம் என்று
ஆளுநரின் அதிகாரம் குறித்து 08.04.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஒப்பினீயன் தமிழ் சேனலில் தோழர் வல்லம் பஷீர் சொன்ன ஒரு விஷயம் எனக்கான பாடம்
கற்றுக் கொண்டேன்ஆளுநரை ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது? என்று நினைப்பவன் நான்அடிக்கடி அதுகுறித்து எழுதியும் வந்திருக்கிறேன்ஏன் அரசியல் அமைப்பு நிர்ணய சபை இதை கணக்கி கொள்ளவில்லை என்ற அய்யமும் எனக்கிருந்ததுதோழர் வல்லம் பஷீர் நேர்காணலில் எனக்கு தெரிய வந்தது என்னவெனில்இந்த விஷயத்தை அரசியல் நிர்ணயசபை அமைக்கும்போது கணக்கில் எடுத்திருக்கிறார்கள்ஆளுநரே வேண்டாம் என்று பேசியிருக்கிறார்கள்அம்பேத்கர் அமைதிப் படுத்தி இருக்கிறார்மாநிலம் ஒன்றியம் இடையில் அப்படி ஒரு பொறுப்பு இருக்க வேண்டியது அவசியம். இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூறியிருக்கிறார்சரி, தேர்ந்தெடுக்கலாமேஅப்போது அம்பேத்கர் சொன்னாராம்அப்படி தேர்ந்தெடுத்தால் அவர் முதல்வரைவிட பெரியவர்போல நடந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். நியமனமே போதும்அண்ணலுக்கும் நன்றிபசீருக்கும் நன்றி09.04.2025
சோசலிச எதிர்ப்பு உரையை...
காங்கிரஸ் இயக்கத்தில் இரட்டை உறுப்பினர் முறை அங்கீரிக்கப் பட்டிருந்த காலம்.
இடதுசாரி சிந்தனை கொண்டவர்களும் இடது சாரிகளும் சோசலிஸ்ட் கட்சியிலும் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்தனர். தமிழ் நாட்டில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.சோசலிசத்தையும் சோவியத் ரஷ்யாவையும் அறவே பிடிக்காத பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர்.சோவியத்தையும் சோசலிசத்தையும் வறட்டுத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர் மினுமசானி. அவர் போகும் இடங்களில் எல்லாம் அவை இரண்டிற்கும் எதிராக நஞ்சைக் கக்கும் வழக்கத்திலிருந்தார்.அவர் ஒரு முறை சென்னையில் பேச வந்திருந்தார். அவர் பேச இருந்த பகுதி அங்கிருந்த அப்போதைய இளம் தோழர்களால் சோசலிச மற்றும் சோவித் ஆதரவை பூசிக் கொண்டிருந்தது.பேச வந்திருந்த மினு மசானிக்கு இந்த விவரம் எடுத்துச் சொல்லப் பட்டது. தனது சோவியத் மற்றும் சோசலிச பேச்சிற்கு என்ன வரவேற்பு இருக்குமோ என்ற அச்சத்தோடுதான் மினு மசானி பேசினார். ஆனாலும் கொஞ்சமும் சமரசமின்றி தன் நிலையினின்று கொஞ்சமும் பிசகிப் போகாமல் சகட்டுமேனிக்கு கிழி கிழி என்று சோவியத்தையும் சோசலிசத்தையும் கிழித்துப் போட்டார்.திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது.எல்லோரும் சொல்வது போல் இல்லை. இங்கும் சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பே இருக்கிறது என்று மகிழ்ந்து திரும்பினார்.எல்லாம் தெரிந்ததாய் நினைத்திருந்த அவருக்கு தெரியாமல் போனது இதுதான்,அவரது ஆங்கில பேச்சினை தமிழில் பெயர்த்துக் கொண்டிருந்த தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் அவரது சோவியத் மற்றும் சோசலிச எதிர்ப்பு உரையை ஆதரவு உரையாக மொழி மாற்றியிருந்தார்.09.04.2025
April 7, 2025
இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்
நிதியமைச்சர் நிர்மலானு கேட்ட மாத்திரத்தில் உன் கண்களில் தெரியும் வெறுப்பு நான் எப்போதும் உன்னிடம் பார்க்காதது. ஏன் மாப்ள
2018 ஜூன் முதல் வாரம்னு நினைக்கிறேன்தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு வார்த்தை இரங்கல் கூட பிரதமர் சொல்லவில்லையே பிரதமர் என்று நிர்மலாவிடம் கேட்கிறார்கள்பொறுங்க அவரிடம் ஏனென்று கேட்டுச் சொல்கிறேன் என்று நக்கலாகக் கூறினார்அவரது அப்போதைய உடல்மொழி அவ்வளவு அருவெருப்பாக இருந்ததுடா மாப்ளஅதான்இனி நிர்மலா பெயரைக் கேட்டால் அவனது கண்களும் சிவக்கும்உங்களுடையதாகவும் இருக்கலாம்
வாயில் காவலர்களை
வாடகைக்கு அமர்த்தினார்கள்
அவர்கள் சல்யூட்டை
தலையசைத்து ஏற்றுக் கடந்தேன்
நான்காவது வீட்டில் இருந்துதான்
ஒருவர்
வாயில் காவலராயிருக்கிறார்
பேச எனக்கு ஏதுமிருந்ததாக
உணரவில்லை நான்
மூன்றாவது வீட்டில்தான்
ஒரு கௌரவ விரிவுரையாளர்
எனக்கென்ன பேச இருந்தது
அரசுப் பேருந்து கனவில் இருக்கும்
தனியார் பேருந்து ஓட்டுனர்
அடுத்த வீட்டில்
அடுத்த வீடு
என்னுடையதாகத்தான் இருக்கவேண்டுமென்ற
அவசியமில்லை
இதைப் படித்துக் கொண்டிருக்கும்
உங்களுடையதாகவும் இருக்கலாம்
கம்யூனிஸ்டுகள் இல்லாவிட்டால் இந்தியா இருக்குமா?
எங்களை கிண்டல் செய்பவர்களுக்கு (விமர்சிப்பவர்களுக்கு அல்ல) எனக்கும் தோழர் யெச்சூரிக்கும் வேறுபாடெல்லாம் இல்லை
இருவரிடமும் ஒரே நக்கல்தான், ஒரே கேள்விதான்எம்மிடம் கேட்பதைப் போலவே கேட்டிருக்கிறார்கள்இந்தியாவில் கம்யூனிஸ்டுகளே இல்லையேயெச்சூரி சொன்னாராம்இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்களா இல்லையா என்பதல்ல பிரச்சினைகம்யூனிஸ்டுகள் இல்லாவிட்டால் இந்தியா இருக்குமா?மிஸ் யூ தோழர்April 6, 2025
நெகிழ்ச்சியும் நன்றியும்

தங்களிடமிருந்து பிரிந்து வந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டை வாழ்த்தும் CPI
நெகிழ்ச்சியும் நன்றியும்
மதுரை
06.04.2025
April 3, 2025
”கற்க நிற்க தக”
ஜார் மன்னர் தன் குடும்பத்திற்கான சொத்துக்களை கொஞ்சமும் முறையற்ற வகையில் சேர்த்துக்கொண்டிருந்த நேரம். அவரது மனைவி ரியல் எஸ்டேட் வணிகத்தில் என்னென்ன முறைகேடுகளை செய்ய இயலுமோ அத்தனையையும் செய்து சொத்துகளை வாரிக் குவித்துக்கொண்டிருக்க மக்களோ வாழ்வின் விளிம்பு நிலைக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.
இந்தக் கொடுமையிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார் லெனின். அதற்கு ஒரு கம்யூனிச அரசமைப்பை நிறுவ வேண்டும். அதை உடனடியாக கட்டமைப்பது சாத்தியமல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆகவே ஒரு மக்கள் புரட்சியின் மூலம் கம்யூனிசத்திற்கு முன்னான சோசலிசத்தைக் கட்டமைக்க அவர் உறுதி எடுக்கிறார்.இதற்காக மக்களை ஏதோ ஒருவகையில் சந்தித்து உரையாற்றுகிறார். அவரது உரைகேட்டு சூடேறிய இளைஞர்கள் புரட்சிக்கு தங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் முன் திரள்கிறார்கள். இதுபோன்ற தினவுமிக்க இளைய பட்டாளம்தான் லெனின் விரும்புகிற மக்கள் புரட்சிக்கு மிகவும் அவசியம். இதை வேறு யாரையும்விட நன்கு உணர்ந்தவர்தான் லெனின். ஆனாலும் அவர்களை அவர் நிராகரிக்கிறார். அவர்களிடம் கூறுகிறார்,“உங்களது முதல் கடமை படிப்பு, உங்களது இரண்டாது கடமை படிப்பு, உங்களது மூன்றாவது கடமையும் படிப்புதான்”அன்றைய இளைய பிள்ளைகள் இதை தங்களது தலைவனின் கட்டளையாக ஏற்றார்கள்.புரட்சி வெற்றிபெற்ற சில நாட்களில் “உலகை குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலை எழுதிய ஜான் ரீட் லெனினை சந்திக்கிறார். ”மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்கிறார்.இந்த மண்ணை விவசாய மண்ணாகவும், தொழில் மண்ணாகவும் மாற்ற வேண்டும். அதற்கு மின் உற்பத்தியை பேரதிகமாக்க வேண்டும் என்று பதில் அளிக்கிறார்.அந்தத் தேதியில் அது சாத்தியமே இல்லை என்பது ஜான் ரீடிற்கு தெரியும். இது எப்படி சாத்தியம் என ஆச்சரியத்தோடு கேட்கிறார். சோசலிசம் அதை சாதிக்கும் என்று லெனின் சொல்கிறார். அதை நம்பமுடியாதவராக இருக்கிறார் ஜான் ரீட். ஆகவேதான் “மாஸ்கோவில் கனவு காணும் ஒரு மனிதனை நான் சந்தித்தேன்” என்று எழுதுகிறார்.அதே ஜான் ரீட் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோ வருகிறார். லெனின் சொன்னது அத்தனையும் மலர்ந்து சிரித்தபடி அவரை வரவேற்கின்றன. இப்போது எழுதுகிறார்,“ஒரு மனிதனின் கனவு நிஜமானதை ரஷ்யாவில் கண்டேன். ஆனால் அந்த மனிதன் இன்று உயிரோடு இல்லை”இந்த மாபெரும் மாற்றத்திற்கான காரணங்களாக கீழ்க்காணும் மூன்று விஷயங்கள் கண்முன் பளிச்சிடுகின்றன,1) விவசாயத்துறையில் நினைத்தே பார்க்கமுடியாத வகையில் நிகழ்ந்திருந்த புரட்சிகர மாற்றங்கள்2) தொழிற்துறையில் நிகழ்ந்திருந்த புரட்சிகரமான பாய்ச்சல்3) அபரிதமான மின் உற்பத்திஇவைகள்தான் காரணங்கள். ஆனால் இந்தக் காரணங்கள் அளவிற்குப் பேசப்படாத ஒரு காரணம் இருக்கிறது. அது கல்விஅது மக்களுக்கான கல்வி, சமூகக் கல்வி. மக்களுக்கான மனிதர்களாக மாணவர்களை மாற்றித்தருகிறமாதிரி கட்டமைக்கப்பட்ட கல்வி.வெறுமனே உற்பத்தியை மட்டும் பெருக்கி இருந்திருந்தால் அந்த நாடு வளமையானதொரு நாடாக மட்டுமே மாறியிருக்கும். தமக்கு கிடைத்த வளமை தமக்கானது மட்டுமல்ல, உலகின் பசியை போக்குவதற்குமான பங்கு அதில் இருக்கிறது என்று உணர்ந்த சமூகமாக மாறியிருக்க வாய்ப்பில்லை.தமக்கு கிடைத்திருக்கும் தொழில்நுட்பத்திலும் அறிவிலும் இந்த உலகம் உய்வதற்கான பங்கும் இருக்கிறது என்ற உணர்வை வெறும் உற்பத்தி பெருக்கம் மாட்டும் ஒரு சமுதாயத்திற்கு வழங்கி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.தன்னிடம் இருக்கும் படை பலமும் ஆயுத பலமும் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அது போர்மூலம் வந்தாலும் பேரிடர்மூலம் வந்தாலும் அவற்றினின்று அந்த மக்களை பாதுகாப்பதற்கானது என்ற உணர்வை வளமையும் அறிவும் மட்டும் ஒரு சமூகத்திற்கு தந்துவிட முடியாது,1917 புரட்சிக்குப் பிறகு ரஷ்யா மேற்சொன்ன அனைத்தையும் செய்தது.பிறரது இன்னல் கண்டு வருந்துவதும் எந்த பிரதி பலனும் பார்க்காது அதை துடைப்பதற்கான பணியை செய்வதுமாக சோசலிசக் கட்டமைப்பு தகறும்வரை அது ஈரத்தோடே இயங்கிக் கொண்டிருந்தது.அப்படியானதொரு சமூகத்தை கட்டமைப்பதற்கான கல்வித் திட்டத்தை அது கட்டமைத்தது.“அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்தந்நோய் போல் போற்றாக்கடை”உலகம் அறிவை புத்தியாகவும் பிறரது துயர் துடைத்தலை இரக்கம் என்றும் இன்னமும் கருதிக் கொண்டிருக்கிறது. ஆனால் வள்ளுவரோ பிறரது வலியை போக்கும் செயல் இரக்கமல்ல என்றும் அதுதான் அறிவின் அடையாளம் என்றும் கூறினார்.சோசலிசக் கட்டுமானம் சிதறும் வரை முன்னூற்றிப் பதினைந்தாவது குரளுக்கான அடையாளமாக ரஷ்யா விளங்கியது.1917 ஒட்டி ரஷ்யாவில் தோன்றி பெருவிளைச்சலைக் கண்ட இந்த கல்விச் சிந்தனை 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவத்தில் இருந்திருக்கிறது. இருந்திருக்கிறது என்று சொல்வதன் மூலம் இந்த சிந்தனை மூப்பினை உரிமை கொண்டாட முயல்கிறோமா என்று கேட்டால் இல்லை என்றெல்லாம் மறுப்பதற்கில்லை.மிகப்பெரிய கல்விச் சிந்தனையாளரான பாவ்லோ பிரையர் இருபது ஆண்டுகள் ஆய்விற்குப் பிறகு இந்தியக் கல்வியை “வங்கிமுறைக் கல்வி” என்று குறிப்பிட்டார். இந்தக் கல்வி முறையில் மாணவன் என்பவன் வெறும் வங்கி. வங்கியில் வங்கிக்கானது எதுவும் இருக்காது. வங்கியில் பணம் சேமிக்கப்படுவதுபோல யாருக்கோ தேவைப்படும் அறிவை ஆசிரியர் மாணவனது மூளையில் அடுக்கி வைக்கிறார். அதை யாரோ ஒருவரோ அல்லது குழுவோ தமக்கு தேவையானபோது எடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள்.பெரியாரும்கூட நமது கல்வி முறையை அப்படித்தான் பார்த்தார். அதனால்தான் அவர் படித்தவர்களை “நடமாடும் அலமாரிகள்” என்று ஒருமுறை குறிப்பிட்டார். யாரோ ஒருவனுக்கு தேவைப்படும் அறிவை சுமந்து திரியும் அலமாரிகளாக இங்கு படித்தவர்கள் இருப்பதாக பெரியார் கவலைப் பட்டார்.இந்த இடத்தில் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பு இந்தியாவின் கல்விக் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளவும் எடுத்து சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறோம்.தமிழ் நாட்டிற்கு வெளியே இருக்கும் கல்வி சாதியைக் காப்பாற்றுவதற்காக, நால் வர்ணத்தை பாதுகாப்பதற்காக்க் கட்டமைக்கப் பட்டது. சாதியில் இருந்தும் வர்ணத்தில் இருந்தும் பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கான கட்டமைப்பு தமிழ்க் கல்வி. பொதுவாக குழந்தைகளை கற்றுத் தேர்வதற்காகத்தான் பள்ளிக்கு அனுப்புவார்கள். ஆனால் அண்ணல் அம்பேத்கர் வேறுமாதிரி சொன்னார்.“The children should unlearn what they have learnt” என்பார் அவர். இன்றைய சூழலிலும்கூட பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக வீடும், தெருவும், சமூகமும் சாதியையும் ஏற்றத்தாழ்வையும் குழந்தைகளுக்கு கற்பித்துவிடுகின்றன. அதைத் தொலைத்துவிட்டு வருவதற்குத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்கிறார் அண்ணல்.அப்படியான பள்ளிகளாகத்தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மைப் பள்ளிகள் இருக்கின்றன.”கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக” என்பது குறள்.வள்ளுவர் கோரிய கல்வியை,”கற்கநிற்கதக” என்று மூன்று சொற்களுக்குள் சுருக்கித் வகைப்படுத்துவார் தோழர் தா.பாண்டியன். எதைக் கற்கவேண்டுமோ அதைக் கற்க வேண்டும் எதைக் கற்க வேண்டுமோ அதைப் பிழையறக் கற்க வேண்டும் கற்க வேண்டியதை பிழையறக் கற்றபின் கற்றதன் வழி வாழ வேண்டும்எங்கள் கல்வியில் நிறைய குறைகள் இருக்கலாம். இருக்கலாம் என்ன, இருக்கின்றன. ஆனால், நிச்சயமாக இந்தக் கல்வி வங்கிமுறைக் கல்வியல்ல. சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்க் கல்வி ஒருபோதும் நகர்கிற அலமாரிகளை உருவாக்குவதில்லை.தமிழ்க் கல்வி “மானுடச் சமூகம் நானென்று கூவு” என்று தன் பிள்ளையைக் கேட்கும்.“குகனொடு ஐவரானோம்” என்று ராமனைக் கொண்டும் சமத்துவம் போதிக்கும்.எல்லாவற்றிகும் மேல்,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் சொல்லும் எங்கள் கல்வி.************* ("திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி” மலரில் வந்த கட்டுரை)
இந்தியாவும் சிவக்கும்
மாநாட்டில் எங்கேனும் வைப்பதற்காக தோழர் ஜெயசீலன் கேட்டார்சில தந்தேன்அவற்றில் ஒன்று“இலங்கையே சிவக்குமென்றால்இந்தியாவும் சிவக்கும்”
03.04.2025
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)