இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 17
March 19, 2025
ஆத்திச்சூடி 07
March 18, 2025
அவரே விரும்பிப் பெற்ற பணிநீட்டிப்பு
சுனிதா வில்லியம்ஸ் வானில் சிக்கித் தவித்தார்
படாதபாடு பட்டார்
ட்ரம்ப் கேட்டுக்கொண்டதற்கிணங்க
எலான்மஸ்க் காப்பாற்றினார் என்ற அளவிற்கு நீள்வதெல்லாம்
அமெரிக்க அரசியலின் அசிங்க முகம்
அவர் சென்ற விண்களம் பழுதானது என்னவோ உண்மைதான்
ஆனால், அவர் விரும்பியிருந்தால் முன்னமே திரும்பியிருக்கலாம்
அவரே விரும்பிப் பெற்ற பணிநீட்டிப்பு காலத்தை நிறைவு செய்து திரும்பியிருக்கிறார்
கொஞ்சம் விரிவாக ஏப்ரல் Kaakkai Cirakinile இதழில்
March 17, 2025
நான் போகும்வரை யாரும் நகரக்கூடாது ஆமா

இரண்டுமுறை நேரில் சந்தித்து இருக்கிறேன்
இருபதில் இருந்து இருபத்தி ஐந்துமுறை அலைபேசியில் பேசியிருப்பேன்
கொரோனா முடிந்து பள்ளிகள் திறக்கவிருந்த நேரம் இந்த சூழலில் பள்ளிகள் எப்படி செயல்படுவது அவசியம் என்று ஒரு கட்டுரை வேண்டும் என்று செம்மலர் சார்பாக தோழர் Kumaresan Asak கேட்கிறார்
“காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தருகிறேன்
ஜூன் 2021 செம்மலரில் வருகிறது
ஜூன் இரண்டாம் வாரத்தில் ஒருநாள் அழைக்கிறார்
அந்தக் கட்டுரை குறித்து அவ்வளவு பேசுகிறார். வழக்கமாக எல்லோரையும் போலவே ”இவ்வளவ வச்சிக்கிட்டு ஏன் இப்படி ஒதுங்கிக் கிடக்க வேண்டும்” என்கிறார்
பதில் சொல்கிறேன்
காதுகொடுத்து கேட்கிறார்
பிறகு பொண்ணு த. ஜீவலட்சுமி செம்மலருக்காக கட்டுரை கேட்க அது அச்சில் வந்தபோதும் அழைத்து பேசுகிறார்
சரியாகும் எட்வின் என்கிறார்
கட்சியின் மாவட்டக்குழுவிற்கு நான் தேர்வானதும் முதலில் தமிழுக்கும் பிறகு ஆதவனுக்கும் மூன்றாவதாக நாதனுக்கும்தான் சொல்கிறேன்
”அப்பா, எவ்வளவு போராட்டம். தமுஎச பொறுப்ப எடுங்க. கோபமெல்லாம் வேண்டாம்” என்கிறார்
இதே அறிவுரையைத்தான் தோழர் தமிழும் சொல்லியிருந்தார்
எடுத்ததும் சொல்கிறேன்
அப்படி மகிழ்கிறார்
இடையில் அவரது சிறுகதை தொகுப்பு குறித்து எழுதுகிறேன்
நெகிழ்ந்கிறார்
பெரம்பலூர் இருமுறை எனக்குத் தெரிய வந்திருக்கிறார். வீடு வரவில்லை. கோபப்பட்டபோது அடுத்தமுறை வருவதாக சொல்கிறார்
என்னிடம் வாக்குத்தவறியவர்களின் பட்டியலில் நாதனும் இப்போது
போய் வாங்க நாதன்எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்
சத்தியமாக முடியவில்லை
நான் போகும்வரை யாரும் நகரக்கூடாது ஆமா
புதிய ஆத்திச்சூடி
March 16, 2025
பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம்
15.03.2025 அன்று பெரம்பலூரில், “இடது விழிவழி வைக்கம் 100” என்ற தலைப்பில் தீக்கதிர் வாசக வட்டத்தில் உரையாற்றியது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்ததுவெளியே வந்ததும் மருத்துவர் கருணாகரன் இடுப்பை அணைத்து இறுக்கி கன்னத்தைத் தட்டிவிட்டு சென்றார்பிள்ளை அம்பேத் கோகுல் அதேபோல் குனிந்து இடுப்பை அணைத்து சிரித்துவிட்டு சென்றான். அவன் உயரத்திற்கு குனிந்தால்தான் நம்ம இடுப்பு கிடைக்கும்.அடுத்தநாள் காலை அழைத்த கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணசாமி உரைகுறித்து அரைமணி நேரம் பேசினார்இத்தனை ஆண்டுகளில் அவர் என்னை அழைத்துப் பேசுவது இது இரண்டாவது முறைஇவை எல்லாம் இப்படி இருக்க,எங்கள் கூட்டங்களில் ஆர்வமாக பங்கேற்கும் எங்கள் மாவட்டச் செயலாளர் தோழர் Ramesh Perumaldyfiயின் இளைய மகள் (அவரது இரண்டு மகள்களின் பெயர்களில் குழம்பிக் கிடப்பதால் தவறாக சொல்லி பிள்ளைகளிடம் திட்டு வாங்க விருப்பம் இல்லை) வெளியே வந்து கேட்டாள்”பேச்செல்லாம் செமையா புரிஞ்சுது. ஆனா ஒன்னே ஒன்னுதான் புரியவே இல்ல. ஆமா வைக்கம் வைக்கம்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?”அவள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருக்கிறாள்வைக்கம் என்றால் கேரளாவில் உள்ள ஊர் என்றதும்”இப்ப புரியுது, கேரளாவில் வைக்கம் ஒரு ஊர். அந்த ஊர்ல இந்தப் பிரச்சினை. “ என்கிறாள்.குழந்தைகளும் வருவார்கள். அவர்களையும் மனதில் கொண்டு பேச வேண்டும் என்பது அன்றைய கூட்டத்தின் பாடம்இன்னொரு விஷயம் என்னவெனில் அன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் அகஸ்டின் அவர்களின் குழந்தையின் தோழமைஅவளும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதியிருக்கிறாள்”அங்கிள் வீட்டுக்கு வாங்க, டீ போட்டுத் தாரேன்” என்றாள்பிள்ளை தரப்போகும் தேநீருக்கான தாகம் தொடங்கி இருக்கிறது
17.03.2025
இந்தக் குட்டிப் பெண்ணை தாயென்று சொல்லாமல்
பாரதிதாசனுக்கு பெரியார் மணியம்மை திருமணத்தில் உடன்பாடில்லை.விமர்சனம் செய்தபடியேயும், மணியம்மையாரைத் திட்டியபடியேயும்தான் இருந்தார் அவர்.ஆனால் அவரே ஒருமுறை, “இந்தக் குட்டிப் பெண்ணை தாயென்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது” என்று கேட்டார்.அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது கீழ்வருவதை படித்தால் புரியும். தந்தை பெரியாரின் பெயரில் திருச்சியில் உள்ள ”பெரியார் ஈ.வெ.ரா” கல்லூரி ஏராளமான சமூகப் போராளிகளை உருவாக்கிய கல்லூரி.அந்தக் கல்லூரிக்கு இடமும் ஓரளவு பொருளும் கொடுத்தது தந்தை பெரியார் என்று தெரியும்.அந்த இடம் அவரது பூர்வீக சொத்து என்றுதான் நான் நினைத்திருந்தேன்.02.03.1974 அன்று அந்தக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் ஆற்றிய உரையின் சுருக்கத்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ”அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துக்கள்” என்ற நூலில் வாசித்தபோது வேறு ஒரு உண்மை புரிந்தது.அந்த இடம் தந்தை பெரியாரின் பூர்வீக சொத்தல்ல. அன்னையின் வற்புறுத்ததலால் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் அது.அன்னையார்தான் அந்த இடத்தை வாங்குவதற்காக பெரியாரை அழைத்து வந்திருக்கிறார்கள்.அது காட்டுப்பகுதியாக இருந்ததால் அதை வாங்கும் எண்ணம் பெரியாருக்கு இல்லை.அன்னைதான் பிடிவாதமாக நிற்கிறார்கள். ”இங்கு வீடு கட்டி குடியிருக்க ஆசைப்படுகிறாயா ?” என்று கேட்கிறார் பெரியார்இல்லைபிறகு எதற்கு? எனக் கேட்கிறார்அம்மாவோ இன்னும் பிடிவாதமாக நிற்கிறார்.வாங்குகிறார்கள்.ஒரு நாள் அந்த இடத்தில் பெண்குழந்தைகளுக்கு ஒரு கல்லூரி கட்டினால் என்ன என்று கேட்கிறார் அம்மா.சரி என்கிறார்.உடனே இருவரும் ஈரோட்டில் உள்ள “சிக்கைய நாயக்கர்” கல்லூரிக்கு போகிறார்கள்அங்குள்ள ஆய்வகங்கள், கருவிகள், தளவாடங்கள் அனைத்தையும் பார்த்த பெரியார்,இவ்வளவும் வாங்க நம்மிடம் உள்ள காசு போதாதே என்கிறார். இருவரும் யோசிக்கிறார்கள். இடத்தையும் முடிந்த காசையும் அரசிடம் கொடுத்து கல்லூரி கட்ட சொல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.அன்றைய முதல்வர் பக்தவச்சலம் சம்மதிக்கிறார்.இப்படியாகத்தான் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி வருகிறது.02.03.1974 அந்தக் கல்லூரி விழாவிற்கு வந்த அன்னை குழந்தைகள் தேவையில்லாததற்கெல்லாம் போராட்டங்களில் ஈடுபட்டு படிப்பை வீணாக்குகிறார்கள் என்ற செய்தி கேட்டு பெரியார் கவலையோடே இருந்ததாக சொல்கிறார்.இதன் பொருள் சமூகக் காரணங்களுக்காக போராடக்கூடாது என்பதல்ல என்பதையும் சொல்கிறார்.அந்தத் தாயார் மரணமடைந்த தினம் இது.வணக்கம் தாயே
March 15, 2025
மூவருக்கும் கூடுதலாக ஒரு சொட்டு அன்பு
இன்றைய எனது உரை எப்படி இருந்தது என்பது கேட்டவர்கள் சொல்ல வேண்டும்
ஆனால்
நான் பேசுகிறேன் என்பதற்காகவே
திருச்சி குருவம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தோழர் அறிவழகன் அவர்களும்
தோழர் கிறிஸ்துராஜ் த அவர்களும்
மணப்பாறையிலிருந்து தோழர் Maran Maha அவர்களும் வந்திருந்தது நெகிழ வைத்தது
அதுவும் சுசீந்திரத்திலிருந்து மணப்பாறை போய் வீட்டில் லக்கேஜை வைத்துவிட்டு புறப்பட்டு இங்கு வந்துவிட்டு மகா செல்கிறார்
நாளை அவர் கும்பகோணம் போகவேண்டும்
வேறென்ன
மூவருக்கும் கூடுதலாக ஒரு சொட்டு அன்பு
15.03.2025
March 14, 2025
அழைப்பு 040
March 12, 2025
காதுகேட்கும் கருவி குறித்த என் பதிவு குறித்து
இன்று மாப்பிள்ளை அழைத்தான்காதுகேட்கும் கருவி குறித்த என் பதிவு குறித்து பேசினான்“அம்மாவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும் மாமா” என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டான்இதை எல்லாம் எழுத வேண்டுமா என்று நிறையபேர் கேட்டார்கள்நான் காதுகேட்கும் கருவி வைத்திருப்பதுகுறித்து இதுவரை நான்கைந்துமுறை இங்கு வைத்திருக்கிறேன்இதுவரை நான்கைந்துபேர் விசாரித்து, தயக்கம் களைந்து தெளிவு பெற்றிருக்கிறார்கள்இதற்குத்தான் இதை இங்கு வைப்பது
வைத்துக்கொண்டுதான் இருப்பேன்
13.03.2025
அதற்கெல்லாம் பூண்டு சாப்பிடனுங்க நிர்மலா
முன்னிழுத்து அணைத்து முத்தமிட்டபடி
கொலைகாரா, சனியனே, காட்டுமிராண்டி என்றுதான் கொஞ்சுவார்கள் எங்கள் தாய்மார்கள்
உங்களுக்கு அதெல்லாம் புரியாது
அதற்கெல்லாம் பூண்டு சாப்பிடனுங்க நிர்மலா
13.03.2025
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)