நந்தலாலாவின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்து கீழே அமர்ந்திருக்கிறோம்அப்போது அந்தப் பக்கமாக வந்த தோழர் இளங்குமனை அழைக்கிறாள் கலைமணி வருகிறார்
நாளைக்கு ஏதேனும் சடங்குகள் உண்டா என்று கேட்கிறாள்தலைமாட்டில் விளக்குகூட ஏற்றப்படவில்லைஎந்தச் சடங்கும் இருக்காதுதான்ஆனாலும் பிரச்சினை வராதமாதிரி தோழர் பதில் சொல்லவேண்டுமே என்று பயம் தொற்றிக் கொண்டதுகாரணம் ஏதேனும் சடங்கு இருப்பதாக சொன்னால் விடமாட்டாள்நாளை இங்கு ஒரு இரங்கல் கூட்டம் வேறு சடங்கு இல்லை தோழர் என்ற பதிலில் "அப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவற்குள்அநேகமா அவரது மாப்பிள்ளை கொள்ளி வைப்பார்போல என்றார்போல என்றுதான் சொன்னார்பிடித்துக் கொண்டாள்ஏன் பாரதியோ நிவேதியோ கொள்ளி வச்சா வேகாதா என்றதோடு விடவில்லைபோய் பேசுங்க தோழர் என்கிறாள்ஏம்பா அவங்க முடிவில்லையா என்றால்எனில் இது தப்பான முடிவென்கிறாள்எங்கும் எதுகுறித்தும் கவலை கொள்ளாமல் பயமற்று எதிர்வினை செய்வாள்ஆனால் எந்தவொரு சிறு சடங்கும் இல்லாமல் நந்தலாலாவின் இறுதி வழியனுப்பு நிகழ்ந்ததுஇன்று மகளிர் தினம்வணங்குவதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பிள்ளைவணக்கம் கலை
08.03.2025
Published on March 08, 2025 19:07