இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 24
July 20, 2024
கவிதை 81
அவன் சிறுவனாக இருந்தபோதுஅந்தச் செடியை சுமந்தபடியே அலைந்ததையாரும் எதுவும் சொல்லவில்லை என்பதோடுகொண்டாடவுமே செய்தனர்அவன் வளர வளரஅந்தச் செடியும் வளர்ந்ததுஅவன் இளைஞனானபோதுஅதுவும்கவாத்து செய்யப்படாதஒரு இளைய மரமாய் வளர்ந்திருந்ததுஇப்போதுஅவன் அந்த மரத்தை சுமந்தலைவதுஏனோஅவன் அம்மாவை கொஞ்சம் உறுத்தியதுவேண்டாமென்றாள்அம்மாவை உதறினான்அதையே சொன்ன அப்பாவையும்உதறினான்முகம் சுளித்த மனைவியைவிலகினான்ஒருநாள்அதைக் கொஞ்சம்இறக்கி வைக்கலாமா என்று அவனுக்கே யோசனை வந்தபோதுதான்அவன்தானந்த மரமாகவே மாறியிருந்ததைஉணரத் தலைபட்டான்
இடது கையால் இவை போன்றவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள் திருமா
பொதுத் தொகுதியில் நின்று திருமா வெற்றிபெற முடியுமா எனக் கேட்பது சாதி ஆணவத்தின் உச்சம் திரு சீமான்வேணா எங்ககிட்ட நின்னு பாரு என்று கேட்கும் சாதி அசிங்கம்பொதுத் தொகுதியில் நின்று சாதியின் பொருட்டு தோழர் திருமா தோற்பார் எனில்சமூகம் சீழ்ப்பிடித்துக் கிக்கிறது என்று பொருள்இடது கையால் இவை போன்றவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள் திருமா
July 19, 2024
கவிதை 80
அலைபேசியில் மூழ்கியிருந்தவனின் தோளில் கிடந்த குழந்தை"பாவம் ...சூரியனுக்கு குளிருதாம்" என்று சொன்னதுஅவனுக்கு கேட்காமல்எனக்கு ஏன் கேட்டது?நகைச்சுவைத்து கடக்கவிடாமல் குழந்தையின் கவலை தோய்ந்த குரல்ஏன் என்னை குடைந்துகொண்டே இருக்கிறது?அது சரிசூரியனுக்கு குளிருவதாக குழந்தையிடம் யார் சொன்னது?யாரும் சொல்லாத பட்சத்தில்சூரியனுக்கு குளிர்வதாககுழந்தை தானாக உணர்ந்தது ஏன்?ஒருக்கால் சூரியனுக்கு உண்மையிலேயே குளிர்கிறதோ என்னமோநெருப்புக்கு குளிரெனில்போர்வையை எதில் நெய்வது?அய்யோ அய்யோரேஷன் கடைக்கு வேறு போக வேண்டும்இரண்டு கட்டுரைகளை முடிக்க வேண்டும்முடியும் வரைக்குமேனும் குழந்தையின் கவலையை யார் தோளில் சாய்ப்பது?
கவிதை 79
தூக்கம் வரவில்லைஇரவு வெகுநேரம் விழித்திருக்கிறேன்விழித்திருப்பதால்வாசிக்கிறேன்வாசிப்புசலிப்புத்தட்டும்போதுஎழுதுகிறேன்அனால்இப்படி ஒன்றிற்கு வேறொன்றுகாரணமானது போல்இப்போது தூங்கப் போவதற்குதூக்ககம் வருகிறது என்பதைத் தவிரவேறெந்தக் காரணமும் இல்லை
July 17, 2024
கவிதை 78
மகளுக்கு
நன்னடத்தை சான்றிதழ் வாங்குவதற்காக
அவள் படித்த பள்ளிக்கு
அவளோடு சென்றிருந்தேன்
தலைமை சகோதரி
பள்ளி குறித்தும்
குழந்தைகள் குறித்தும்
உரையாடிக் கொண்டிருந்தபோது
திடீரென ஒரு தாய்
ஆறாம் வகுப்பு படிக்கும்
தன் மகளோடு வருகிறார்
அவரைப் பார்த்ததும்
அருட்சகோதரி கலங்குகிறார்
அந்தத் தாயும் கலங்குகிறார்
அந்தக் குழந்தைக்கு உடம்புக்கு ஏதோ போல
என்னவென்று புரியவில்ல
உளறிக்கொண்டே இருக்கும்
ஓட்டை வாய் என்பாள் கலை
அது உண்மைதான் போல
ஏதும் அறியாமலே
இது பெரிய நோயே அல்ல
மருந்து வந்துடுச்சும்மா என்கிறேன்
அந்த தாய் சிரிக்கிறார்
சிரித்து காலமாயிற்றுபோல
விடைபெறுகிறார்
தைரியமா போங்க தாயி
கும்பிட்டபடி நகர்கிறார்
என்ன நோய்னு தெரியுமாப்பா
வரும்போது
மருத்துவ மகள் கேட்கிறாள்
தெரியாது
அடிச்சு உடற
நோயைக் கண்டுபிடிக்கவும்
மருந்தளித்து குணப்படுத்தவும்தான்
அறிவும் படிப்பும் தேவை
ஏதுமற்ற தாயின் கண்ணீரைத் துடைக்க
ஈரத்தைத் தவிர ஏதுமற்றவனின்
ஆறேழு சொற்கள் போதும்
July 16, 2024
விக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பெருவெற்றியைப் பெற்றிருக்கிறதுஇந்தத் தேர்தலில் அதிமுக பங்கேற்கவில்லைஅதிமுகவிற்கென்று அந்தத் தொகுதியில் நிச்சயம் 50,000 வாக்குகளாவது இருக்கும்அவை எங்கு போயின?அதிமுக ஊழியன் ஒருபோதும் திமுகவிற்கு ஓட்டு போடமாட்டான்அதிமுக என்பது திமுக எதிர்ப்பில் வளர்வதுதிமுக ஒழிக, கலைஞர் ஒழிக, உதயசூரியன் ஒழிக என்பவை அதிமுக கொள்கை என்பதேஇப்போது வேண்டுமானால், ஸ்டாலின் ஒழிக, உதயநிதி ஒழிக ஆகிய இரண்டையும் கொள்கையில் சேர்க்கலாம்என்றெல்லாம் சொல்லப்படுவது வழக்கம்இது உண்மையும்கூடஇப்போது பாமக பெற்றிருக்கும் வாக்குகளைப் பார்த்தால்உதயசூரியன் ஒழிக என்று சொல்லும் அதிமுக ஊழியனே திமுகவிற்கு வாக்களித்திருப்பது புரிகிறதுபாஜககாரர்கள் சொல்கிறார்கள்,அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்தால் திமுக காலியாகி இருக்கும்அய்யோ அய்யோபாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுக தோழன் திமுகவிற்கு வாக்களிப்பான்பாஜக வெறுப்பு என்பது திமுக வெறுப்பைவிட அதிகமாகி இருக்கிறது அதிமுக தோழனுக்குவிக்கிரவாண்டி தரும் பாடம் இதுதான்
July 14, 2024
கவிதை 77
அந்த கிறுக்கனை
பத்து வருடங்களாகப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பார்ப்பவர்களிடமெல்லாம்
எதையாவது உளறிக்கொண்டே இருக்கிறான்
அந்த பள்ளியின் விளையாட்டு விழா
மைதானத்தை ஒட்டி நின்று
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என் அருகே வந்து நின்று
அவனும் வேடிக்கைப் பார்க்கிறான்
பிரம்பை நீட்டியவாறும்
தரையில் தட்டியவாறும்
காற்றில் சுழற்றியவாறும்
விசிலடித்த படியுமாக
குழந்தைகளை வரிசையாக நடக்க வைக்க
படாத பாடு படுகிறார் விளையாட்டு ஆசிரியர்
பக்கத்தில் நின்ற இவனோ
குழந்தைகள்
கோணல் மாணலாக நடந்தாலும்
வரிசைதானே என்கிறான்
மூன்று
குழந்தைகள்
கோணல் மாணலாக நடந்தாலும்
அது வரிசைதான்என்பது ஒன்று
அவன் கிறுக்கனல்லஎன்பது இரண்டு
அவன் உளறவில்லை
பேசிக்கொண்டிருக்கிறான்என்பது மூன்று
July 13, 2024
கவிதை 75
ஏதும் தோன்றவில்லை என்று தோன்றுவதால்ஏதும் தோன்றவில்லை என்றுசொல்ல தோன்றவில்லை
கவிதை 74
வர சொல்லேன் என்னைமீண்டும் ஒருமுறை“ புறப்பட வேண்டாம் “ என்று மீண்டும் ஒருமுறை தடுப்பதற்கேனும்
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)