அலைபேசியில் மூழ்கியிருந்தவனின் தோளில் கிடந்த குழந்தை"பாவம் ...சூரியனுக்கு குளிருதாம்" என்று சொன்னது
அவனுக்கு கேட்காமல்எனக்கு ஏன் கேட்டது?நகைச்சுவைத்து கடக்கவிடாமல் குழந்தையின் கவலை தோய்ந்த குரல்ஏன் என்னை குடைந்துகொண்டே இருக்கிறது?அது சரிசூரியனுக்கு குளிருவதாக குழந்தையிடம் யார் சொன்னது?யாரும் சொல்லாத பட்சத்தில்சூரியனுக்கு குளிர்வதாககுழந்தை தானாக உணர்ந்தது ஏன்?ஒருக்கால் சூரியனுக்கு உண்மையிலேயே குளிர்கிறதோ என்னமோநெருப்புக்கு குளிரெனில்போர்வையை எதில் நெய்வது?அய்யோ அய்யோரேஷன் கடைக்கு வேறு போக வேண்டும்இரண்டு கட்டுரைகளை முடிக்க வேண்டும்முடியும் வரைக்குமேனும் குழந்தையின் கவலையை யார் தோளில் சாய்ப்பது?
Published on July 19, 2024 17:13