இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 28
May 2, 2024
எதுத்த வீட்டு பாட்டிக்கே புரியுதுங்க சார்
வாசலில் அமர்ந்திருக்கிறோம் நனும் விக்டோரியாவும்
வாக்கிங் போய்க்கொண்டிருந்த அந்தப் பாட்டி கேட்கிறார்ஏன் சார் காங்கிரஸ் சொல்றதப் பார்த்தா அம்பானிக்கும் அதானிக்கும்தான பயம் வரணும்சார் ஏன் கோபப்படறார்?அதுதாங்க தெரியல என்கிறேன்போங்க சார்அவிங்க எல்லோரும் ஒன்னுதான சார்எதுத்த வீட்டு பாட்டிக்கே புரியுதுங்க சார்May 1, 2024
005
April 27, 2024
மதம் அல்லடா சகோதரா சாதிதான்
”கோட்டா சாதிகள்” தான் கொலை கொள்ளை போன்ற சம்பவங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள் என்று கஸ்தூரி கூறுகிறார்
எனில்மதம் அல்லடா சகோதராசாதிதான் அவர்கள் என்பதை புரிந்து கொள்கோட்டா சாதிகளின் மதமும் அவர்களைப் பொறுத்தவரை கோட்டா சாதிதான் நண்பாசூரத்தில் NOTA இன்னமும் போட்டியில் இருக்கிறது
எந்தத் தேர்தாலாயினும்
யார் போட்டியிடுகிறார்களோ இல்லையோ NOTA நிச்சயமாகப் போட்டியிடும்வாக்குப் பதிவு செய்யும் எந்திரத்தில் நிச்சயமாக NOTA இருக்கும்எனில் சூரத்தில் NOTA இன்னமும் போட்டியில் இருக்கிறது என்றுதான் பொருள்யாருக்கும் வாக்கு இல்லை என்று சொல்லுகிற உரிமை வாக்களருக்கு இருக்கிறதுஅந்த உரிமையை யாராலும் அவராலும் பறிக்க இயலாதுஅப்படி இருக்கசூரத்தில் பாஜகவித் தவிர அனைத்து வாக்காளரும் திரும்பப் பெற்றதாக எப்படிக் கூற முடியும்?யோசித்துப் பாருங்கள்பாஜகவிற்கு 4 லட்சம் வாக்குகளும்NOTA விற்கு 5 லட்சம் வாக்குகளும் கிடைத்தால்பாஜக எப்படி வெற்றி பெற்றதாகக் கொள்வது
திருவாளார் 29.02 பைசா
இதுவரை 29 பைசா என்று உதயநிதி சொல்லிக்கொண்டிருந்தாரே
இப்போது நிவாரணநிதி வந்துவிட்டதே இனி என்ன செய்வார்29.02 பைசா என்று சொல்வார்இப்பவும் செல்லாக் காசுதான்இது மார்க்சிஸ்ட் கட்சிக்கான சாதகமாக இருக்கலாம்
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு விகிதாச்சாரம் சன்னமாக அதிகம்
என்கிறார்கள்பொதுவாகவே ஆளும் கட்சிகளின் மீதான மக்களின் கோவம் இப்படியாகவும் வெளிப்படும் என்பது வாக்குப்பதிவின் சூத்திரங்களில் ஒன்றுஎனில் மேற்கு வங்கத்தில் பாஜக மீதும், திரிணாமுல் மீதான மக்களின் கோவம்தான் வாக்குப் பதிவின் விகிதாச்சார உயர்விற்கான காரணமாகக் கொள்ளலாம்எனில்,இது மார்க்சிஸ்ட் கட்சிக்கான சாதகமாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லைApril 26, 2024
இதுதான் இந்தியா
INDIA TODAY
**************நேற்று வைரலான ஒரு விஷயத்தை இன்று வைக்கும் சுறுசுறுப்பு என்னுடையதுபெங்கலூருகிட்டத்தட்ட முப்பது குழந்தைகள் நிற்கிறார்கள் 19 - 22 வயது அளவில்மைக்கை நீட்டுகிறார்யாருக்கு, எதற்கு வாக்களிப்பீர்கள்?ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. பதவியில் இருக்கும் முதல்வர்களே கைது செய்யப்படுகிறார்கள் என்கிறான் அந்தக் குழந்தைமைக்கை நீட்டியதும் நம் அளவில் ஒரு குழந்தைதான்அவர் எதிர்பார்த்த அல்லது விரும்பிய பதிலாக இது இல்லைஎனவேகைது செய்யப்பட்டவர்களிடம் ஊழல் கறையே இருக்காது என்று நம்புகிறீர்களா? என்று விஷத்தில் நனைத்த காட்பரீசை நீட்டுகிறார்நானே காட்பரீஸ்தான், எனக்கே காட்பரீசா என்பதாக சிரித்துக் கொண்டே எதிர்கொள்கிறான் அந்தக் குழந்தைஇருங்க, இருங்க அதற்குத்தான் வருகிறேன் என்றவன். அப்படி ஊழல் செய்தவங்க எல்லாம் அந்தக் கட்சிக்குப் போனா உத்தமர்களாக மாறுகிறார்களே எப்படி என்கிறான்யாருக்கு வாக்கு என்ற அதே கேள்வியோடு இன்னொரு குழந்தையிடம் மைக் நீள்கிறதுஇந்த சமூகத்தைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆராவாரிக்கிறார்கள் குழந்தைகள்.பிரிப்பவர்களுக்கு எதிரானது எங்களது வாக்கு என்கிறாள். புரியும்படி சொன்னால் வெறுப்புக்கு இல்லை அன்பிற்குத்தான் எனது வாக்கு என்கிறாள்குழந்தைகள் ஆரவாரிக்கிறார்கள்நாம் தெளிவாக இருப்பதாக நினைக்கிறோம்அந்தக் குழந்தைகளின் ஆரவாரம் சொல்கிறதுஊழலைவிட வெறுப்பைத்தான் முதலில் அகற்ற வேண்டும்மைக்கைப் பார்க்கிறேன்"INDIYA TODAY" என்றிருக்கிறதுஇதுதான் இந்தியா இன்னமும் என் அன்பிற்குரிய சார்நியாயமாகப் பணி அமர்த்தப்பட்டவர்கள் பாதுகக்கப்பட வேண்டும்
மேற்கு வங்க கல்வி ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு 25,753 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பள்ளி ஊழியர்கள் மேற்கு வங்கப் பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டனர்
பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது மேற்கு வங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.அதோடு நில்லாமல் அவர்கள் இதுவரை பெற்று வந்துள்ள ஊதியம் மற்றும் அனைத்து விதமான பணப்பலன்களையும் 12 சதவிகித வட்டியுடன் நான்கு வார காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அது கூறி இருக்கிறதுஇதை மிகக் கடுமையாக எதிர்கொண்டிருக்கிறார் மம்தா பாணார்ஜி. இது பாஜகவின் சதி என்பதுமாதிரி கூறியுள்ள அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும் என்றும் கூறி இருக்கிறார்.இதுவரைப் புரிந்துகொள்ள முடிகிறதுஇதன் பொருட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் கோவமாக இருப்பதாக அவர் கூறியுள்ளதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதுஇதனால் பாஜகவிற்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லி இருந்தால்கூட புரிந்து கொள்ளலாம்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் காரணமாக அரசு ஊழியர்கள் காங்கிரஸ், பாஜக, மற்ரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றுதான் தெரியவில்லைஏதோ முறைகேடு நடந்திருக்கிறதுஇதை அந்த மாநிலத்தின் பள்ளிக் கல்வி ஆணையத்தின் தலைவர் சித்தார்த்த மஜும்தார் கொடுத்துள்ள அறிக்கையில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறதுமுறைகேடாக பணி அமர்த்தப்பட்ட 5300 பேரின் பட்டியலை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளதாகவும்எஞ்சியுள்ள 19,000 பேர் ஆணையம் வகுத்துள்ள தகுதிகளைப் பெற்ரிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்நீதியரசர் சந்துரு நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை சரி என்கிறார்பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் தவறு நடந்திருப்பதற்கான வாய்ப்பினை வெளிப்படையாக மறுக்காவிட்டாலும்உடனடியாக பணத்தைத் திருப்பிச் செலுத்தச் சொல்வது அதிகம் என்பதுபோலக் கூறியுள்ளார்ஆணையத் தலைவர் சொல்வதைப் பார்த்தால் தவறு நடந்திருக்கிறது5300 பேர் என்ற அளவில் அவரே ஏற்கிறார்மீதமுள்ள 19,000 பேரும் முறையாக ப் பணி அமர்த்தப்பட்டதாகக் கூட 26.04.2024 தமிழ் இந்து வெளியிட்டுள்ள தகவல்படி எடுத்துக் கொள்ள முடியாதுஇந்த 19,000 பேருக்கும் தகுதி இருக்கலாம் என்கிறார்இருக்கலாம்தான்இல்லாமலும் இருக்கலாம்எனில், அந்த 5300 பேருக்கும் தகுதியும் இல்லை, முறையாகத் தேர்வாகவும் இல்லைமிச்சமுள்ள நபர்களில் தகுதி இருக்கலாம்இது ஆணையத் தலைவர் சொல்வதில் இருந்துஎப்படி முறைகேடிOMR ஷீட்டில் முறைகேடு,ரேங்க் மாற்றி முறைகேடுஊழியர்கள் போராட்டத்தில் இருக்கிறார்கள்முறைகேடு எனில் உரியவர்கள் கடுமையாத் தண்டிக்கப்பட வேண்டும்என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்நியாயமாகப் பணி அமர்த்தப்பட்டவர்கள் பாதுகக்கப்பட வேண்டும்திரும்பச் செலுத்துவதை உச்சநீதிமன்றம் சொல்லும் வரை நிறுத்தி வைக்கலாம்LikeCommentShareசத்தம்தான் பிரச்சினை
கர்நாடகா
அநேகமாக அது ஒரு தேநீர்க் கடைஅளவிற்கு அதிகமான சத்தத்தில் அனுமார் பாடலை கேட்கிறார்அது பக்கத்தில் உள்ள கடைக்காரர்களுக்கு தொந்தரவாக இருந்திருக்கிறதுசொல்கிறார்கள்கேட்க மறுக்கிறார்சண்டை வருகிறதுதாக்கி விடுகிறார்கள்இவரும் காவல் நிலையத்தில்,தான் சத்தமாக பாடலை வைத்துக் கேட்டதால் இவர்கள் தாக்கியதாக புகார் அளிக்கிறார் என்று அரண்செய் மகிழ்நண் ஒரு நேர்காணலில் கூறுகிறார்இதில் எந்த இடத்திலும் அனுமார் குறித்த பாடல் என்பது பிரச்சினையாக இல்லைசத்தம்தான் பிரச்சினைஅந்தப் பாடலுக்கு முந்தைய பாடல் அய்யப்பன் பாடலாகவும் இருந்திருக்கலாம் அல்லது ஒரு சினிமா பாடலாகவும் இருந்திருக்கக் கூடும்அவர்கள் விசாரனை நடத்தி சிலரைக் கைதும் செய்கிறார்கள்அவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள்இந்த சத்தப் பிரச்சினையைகடவுள் பிரச்சினையாக ஒரு மதவெறியர் மாற்ற முயன்றாலே தவறுஇந்தியா என்பது ஒரு குடும்பம் எனில் அந்தக் குடும்பத்தின் தலைவர் நீங்கள்இவ்வளவு கேவலமாக இறங்குவீர்களா?அசிங்கமாக இருக்கிறது சார்LikeCommentShareApril 25, 2024
மொழிகளின் தோழமை
கடந்த ஒரு மாதமாக மொழி குறித்து “மிக ஆரோக்கியமானவை” என்று கொள்ளத்தக்க அளவிலான சில நடவடிக்கைகள் ஒன்றிய அரசிடமிருந்து வருவது போன்ற ஒரு பிம்பத்தை பல ஊடகங்கள் உருவாக்க முயற்சித்து வருகின்றன
உலக மொழிகளோடு, அதிலும் குறிப்பாக அண்டை நாடுகளின் மொழிகளோடு நமது மொழிகளுக்கான தோழமையின் அவசியம் குறித்தெல்லாம் ஒன்றிய அரசு அறைபோட்டு கவலைப்படுவது மாதிரியான ஒரு தோற்றத்தை அவை கட்டமைக்க முயற்சித்து வருகின்றன
அந்த செய்திகளின் மெய்த்தன்மை குறித்து நமக்கு அய்யங்கள் இருந்தபோதிலும் அப்படி ஒரு தோற்றத்தையேனும் உருவாக்க வேண்டிய அவசியத்திற்கு ஒன்றிய அரசு வந்திருக்கிறது என்பதே நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தது
இதே காலத்தில் நமது ஆளுநரும் பிரதமரும் கூட தமிழின் தொன்மை குறித்து உரையாடியது குறித்தும் செய்திகள் வந்தன. அவர்கள் இப்படி பேசுவதற்கான தேவை குறித்தும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படவே செய்தது
ஆனால் இதே கால கட்டத்தில் பீஹார், மேற்குவங்கம், ஒடிசா, மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வசிக்கும் “குர்மி” இன மக்கள் தங்களது தாய்மொழியான“ குர்மலி”யை அட்டவனைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையோடுஉயிரைக் கொடுத்து நடத்திக் கொண்டிருக்கும் வீரியமிக்க போராட்டத்தை அதே ஊடகங்கள் ஆனமட்டும்இருட்டடிப்பு செய்து வருவது கவலையைத் தருவதாகவும் உள்ளது
இவற்றின் பின்னுள்ள மெய்த்தன்மை குறித்தும், அரசியல் குறித்தும் நாம் உரையாடத் தேவை இருக்கிறது
“இந்தியைவிட தமிழ் மிகப் பழமையானது என்றும் இது விஷயத்தில்தமிழின் அருகில்கூட இந்தியால் நிற்க இயலாது என்றும் நமது ஆளுநர் ரவி அவர்கள் கூறியதாக 14.04.2023 நாளிட்ட செய்தித் தாள்கள் தெரிவிக்கின்றன
அவரது இந்தக் கூற்று அவரது நண்பர்களுக்கு மாரடைப்பைக்கூடகொண்டு வந்திருக்கும்
“அய்யோ, மனிதன் மனசறிந்து இப்படி ஒரு பொய் சொல்கிறாரே” என்று அவர்கள் கொதிநிலைக்கே போயிருக்கக் கூடும்
தமிழை நீசமொழி என்று சொல்லும் மடங்களைத் தனது குலசாமி கோவில்களாகப் பாவித்து பூசிக்கும் தமது சகா இப்படி சொல்வது என்பது அவர்களுக்கு ஆச்சரியமகத்தான் இருக்கும்
ஆனால் ரவி அவர்கள் அவரது நண்பர்களை வெகுநேரம் மயக்கத்தில்வைத்திருக்கவில்லை
அவர்களது முகத்தில் சடுதியில் நீர்த்தெளித்து அவர்களதுமயக்கத்தைத் தெளிவித்து விடுகிறார்
‘பழமை’ என்று வரும்போது தமிழின் அருகில்கூட இந்தி நெருங்கமுடியாது என்று கூறியவர்
அண்ணாமலையின் முதல் ’பொய்’க்கும் இரண்டாவது ‘பொய்’க்கும் ஆன இடைவெளியைக்கூட கொடுக்காமல் சட்டென
“தமிழின் பழமைக்கு நிகரானது சமஸ்கிருதத்தின் பழமை” என்று கூறுகிறார்
இது விஷம்,
இதை எதிர்கொள்ள வேண்டும்
ஆனால் அவரது சகாக்களைப்போல அவர் பேசியதில் நமக்கு வியப்படைவதற்கு ஏதும் இருக்கவில்லை.
அவர்களது திட்டம் சனாதன மொழியான சமஸ்கிருதத்தை என்ன விலை கொடுத்தேனும் ஒற்றை ஆட்சி மொழியாக்கி விடுவது என்பதும்
அதற்கான இடை ஏற்பாடாகத்தான் அவர்கள் இந்தியைக் கை எடுக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்
இப்படி அவர்கள் அம்பலப் பட்டதும் ஏதோ அவர்கள் உளறி மாட்டிக் கொண்டது போலவும், அவர்களை அறியாமல் அவர்களது கொண்டை வெளியே தெரிந்து விட்டது போலவும் நம்மில் பலர் பகடி செய்ய ஆரம்பித்து விடுகிறோம்
ஆனால் உண்மை அது அல்ல
அவர்கள் அவ்வப்போது தங்களது கொண்டையை வெளியே தெரியவிட்டு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்று நம்மை நாடிபிடித்துப் பார்க்கிறார்கள்
இந்தியைக் குறித்து நாம் அறியாத உண்மைகளை அவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்
இந்திக்காரர்கள் என்று அவர்கள் அட்டவணைப்படுத்தும் பல மக்கள் இந்திக்காரர்களே அல்ல என்பதும் அவர்களுக்கு இந்தியை எழுதவோ படிக்கவோத் தெரியாது என்பதும் நமக்கு வியப்பாக இருக்கலாம்
ஆனால் அதை அவர்கள் அறிந்தேதான் அப்படி செய்கிறார்கள். இதை தோழர் ஆழி செந்தில்நாதன் தனது, “மொழி எங்கள் உயிருக்கு நேர்” என்ற நூலில் மிகச் சரியாக அம்பலப்படுத்துகிறார்
வாரணாசியில் பனாரஸ் என்ற ஒரு மிகவும் புகழ்பெற்ற பல்கலைக் கழகம் இருக்கிறது.
பீஹார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகியப் பகுதிகளில் இருந்து குழந்தைகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்
இந்திவழி படிக்கிறார்கள்
அவர்களையும் இந்திக்காரர்கள் என்றே ஒன்றிய அரசும் சொல்கிறது. அந்தக் குழந்தைகளில் பலரும் அப்படியே நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த விஷயத்தையும், இந்திக்காரர்கள் என்று அழைக்கப்படுகிற அந்தக் குழந்தைகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது என்பதையும் அந்த நூலில் தருகிறார் ஆழி செந்தில்நாதன்
இதனால் பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் அந்தக் குழந்தைகள் ஏதும் புரியாமல் தவிப்பதைப் புரிந்துகொண்ட ராஜீவ் சங்லா என்ற பேராசிரியர் மருத்துவம் மற்றும்பொறியியல் போன்ற பாடங்களை பேஜ்பூரி ,மைதிலி மற்றும் மாகஹி மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளங்களில்வைத்து குழந்தைகளுக்கு உதவுகிறார் (மேற்சொன்ன நூல், பக்கம் 46)
இந்தியையோ சமஸ்கிருதத்தையோ வளர்த்தெடுக்க யார் முயன்றாலும் நமக்கு அதில் எந்தவிதமான வருத்தமும் இல்லை
சரியாக சொல்வதெனில், அந்த மொழிகளில் நவீன இலக்கியங்கள்வருமாயின் அவற்றை மகிழ்வோடு இரு கரமேந்தி தமிழ்ப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்
இந்தியை அவர்கள் வளர்த்தெடுக்கும் விதங்களை நாம் அறிந்தவர்களாக இருப்பதாலும், தமிழ் அளவிற்கு இந்தி பழமையானது இல்லை என்பதை ஆளுநரே ஏற்பதாலும் அதுகுறித்து அவரோடு மல்லுக் கட்டிகொண்டு நிற்க நமக்கு அவசியம் இல்லாது போகிறது
ஆனால் தமிழ் அளவிற்கு சமஸ்கிருதம் பழமையானதா?
இதை ரவி போன்ற மொழி விஷயங்களில் அவ்வளவாக ஞானம் இல்லாதவர்கள்மட்டுமல்ல மொழிகுறித்து கொஞ்சம் புரிதல் உள்ளவர்களும் குழம்பிக் கிடப்பதும் உண்மைதான்
“ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவின்தென்கோடிப் பகுதியில் இருக்கும் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த இலக்கிய மலர்ச்சி உண்டானது.எனினும்,,
ஆச்சரியமளிக்கும் வகையில் இதுவரை எழுதப்பட்டதிலேயேநுட்பமான கவிதைகளை உள்ளடக்கியதாக நான் கருதும் இவ்விலக்கியம் மேற்கிலும், அது தோன்றிய இந்தியாவிலுமே புறக்கணிக்கப்பட்டுள்ளது” என்று
”தமிழ்ச் செவ்விலக்கியங்கள், அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும் என்ற தனது நூலின் அறிமுகத்தில் பதிவுசெய்கிறார் ஜார்ஜ்.எல்.ஹார்ட்
அதற்கான காரணங்களுள் ஒன்றாக
“இதுவரையிலும் பெரும்பாபாலான பண்டைய இந்திய வரலாற்றுஆசிரியர்கள் தெற்கு என்ற ஒன்று இல்லை என்ற நிலையிலேயே எழுதி உள்ளனர்” என்று
“OXFORD HISTORY OF INDIA” என்ற நூலில் வின்செண்ட் ஸ்மித்கூறுவதைப் பார்க்கிறார் ஹார்ட் (அதேநூல், முன்னுரை)
தமிழில் இருந்து சமஸ்கிருத்ததிற்கு போயினவா, அல்லது அங்கிருந்து இங்கு வந்தனவா என்பதில்கூட ஹார்ட் கொஞ்சம் வித்தியாசபட்டு இரண்டும்வேறு எங்கோவிருந்து பெற்றிருக்க வாய்ப்புண்டு என்றும் கருதுகிறார்
இவை இன்னும் ஆய்விற்கு உட்பட்டவை. இது குறித்து இந்த அளவோடு நிறுத்திக்கொள்வோம்
தெற்கென்ற ஒன்று இல்லை என்ற பார்வையை சரியாகப் புரிந்து கொண்டதால்தான் அண்ணா கொதித்தபடி, “இந்திய வரலாறு காவிரிக் கரையில் இருந்து எழுதப்படவேண்டும்” என்றார்
ஆனாலும் ஹார்ட் இந்த நூலை வெளியிட்டது 1975 இல். இந்த ஐம்பது ஆண்டுகளில் கொஞ்சம்ஆய்வுகள் நகர்ந்திருக்கவேசெய்கின்றன.. திரு ஸ்டாலின் அவர்கள் இது விஷயத்தில் கவனமாக இருக்கிறார்.
இத்தோடு இதை நிறுத்திக் கொள்வோம்.
ஆனால் புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தை கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் புழங்குகிற தமிழோடு தேவை இல்லாமல் ரவி அவர்கள் பேசவில்லை.
அதன் பின்னால் மிகக் கூர்மையான அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோம்
“ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே ‘ஆயுதக் காவல்படை”க்கு தேர்வு எழுதலாம் என்று இருந்ததை தமிழ் உள்ளிட்ட அட்டவணையில் உள்ள 13 மொழிகளிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது
மொழிக் கெடுபிடியோடு இந்தி பேசாத மக்களைச் சென்றடையமுடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொண்டிருப்பதாகவும் இதைக் கொள்ள முடியும்
அண்டை நாடுகளோடு நல்ல நட்புறவு வேண்டுமானால் அவர்களின்மொழிகளோடு நல்ல நட்புறவு வேண்டும் என்ற புரிதல் ஒன்றிய அரசிற்கு வந்திருப்பது போன்றஒரு தோற்றம் நாளிதழ்ச் செய்திகளின்வழி கிடைக்கிறது
“ The language friendship bridge” ஒரு இயக்கத்தை ‘The Indian council for cultural relations” என்ற அமைப்பு கட்டியிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே கூறுவதக 10.04.2023 நாளிட்ட “THE HINDU” கூறுகிறது
முதற்கட்டமாக மியான்மர், இலங்கை, இந்தோநேசியா, மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் சிங்களம், உஸ்பெக், பர்மீஸ், பாஷா உள்ளிட்ட 10 மொழிகளைக் கையெடுக்க இருப்பதாகவும் அந்தச் செய்திகூறுகிறது
1) அங்குள்ள மொழி பயிற்றுனர்களைக் கொண்டு வந்து நம்மக்களுக்கு அந்த மொழிகளைப் பயிற்றுவிப்பது
2) நம் நாட்டில் இருந்து ஆர்வமுள்ளவர்களை அனுப்பி அம்மொழிகளைக்கற்றுக்கொள்ளச் செய்து அவர்களைக் கொண்டு நமக்குப் பயிற்றுவிப்பது
இவற்றில் இரண்டாவதையே அமைப்பு விரும்புவதாகவும் ஏனெனில்,
அந்த மொழியின் சிறப்பு, சரியான உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் யாவும் அந்த மக்கள் பேசுவது போலவேஇருக்க வேண்டும் என்றும் தாம் விரும்புவதாகவும் அந்த அமைப்பின் தலைவர் வினய் கூறுவதாகவும்அந்த செய்தி கூறுகிறது
ஒரு வகையில் இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மொழிகளுக்கிடையே நட்புறவை பேணுவதற்கான முயற்சியைக் கொண்டாடாமல் இருக்கமுடியாது
கொண்டாடுவோம்
ஆனால் அதே ஒன்றிய அரசு நமது நாட்டில் புழங்கும் மொழிகளையெல்லாம்அழித்துவிட்டு ஒற்றை மொழிக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதுதான் வருத்தமான விஷயம்
அயல் நாட்டு மொழிகளோடு நட்புறவை வளர்ப்பதற்கான ஒன்றியஅரசின் முயற்சிகளை ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கும் இதே காலத்தில்தான்
கிட்டத்தட்ட நான்கு மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கும்தமது மொழியை அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையோடு குர்மி இன மக்கள் மக்கள்உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்
பீஹார் , ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் குர்மி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களது மதம் “சர்னா”
இந்த மக்கள் 05.04.2023 அன்று தொடங்கி மூன்று நாட்களாகக் கடுமையாகப் போராடி வருகிறார்கள் என்றத் தகவலை09.04.2023 தீக்கதிரும் தமிழ் இந்துவும் தருகின்றன
தென்கிழக்கு ரயில்வேயின்,
காரக்பூருக்கும் பாடாநகருக்கும் இடையிலான ரயில்தடமும்
ஆத்ரா மற்றும் சண்டில் இடையிலான ரயில் வழித்தடமும் 07.04.2023 வரை முடங்கிக் கிடந்ததாகவும் ,
இந்த வகையில் 225 ரயில்கள் முடங்கியதாகவும் தெரிகிறது
எதற்கிந்த போராட்டம்,
1) சர்ணா மதத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்
2) குர்மி இனத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும்
3) தங்களது மொழியான குர்மலியை அரசியலமைப்பின் எட்டாவதுஅட்டவணையில் இணைக்க வேண்டும்
மேற்சொன்ன ஒன்றிய அரசின் உலக மொழிகளோடான நட்பிற்கானமுயற்சியையும், ஆளுநர் ரவி அவர்களின் அர்த்தமற்ற பேச்சுகளையும் பரபரப்பானமுக்கியத்துவத்தோடு வெளியிட்ட ஊடகங்கள் இந்தச் செய்தியை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை
மொழிகளுக்கிடையேயான நட்பைக் குறித்து உலக அளவில்பேசி ஏதோ தாங்கள் வித்தியாசங்களின் பிள்ளைகள்போல காட்டிக்கொள்ள முயற்சிக்கும் ஒன்றியஅரசு
தன் சொந்த மண்ணின் மக்கள் தங்களது மொழிக்கான போராட்டத்தைஇரக்கமற்று நசுக்குவதோடு இருட்டடிப்பும் செய்கிறது
இப்படி முடிக்கலாம்,
1) ஆயுதக் காவல் படையில் தமிழ் உள்ளிட்டு 13 அட்டவணை மொழிகளில் தேர்வெழுதலாம் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை வரவேற்போம
2) அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஒன்றிய அரசின்அனைத்துத் தேர்வுகளையும் எழுத வழிவகை செய்ய வேண்டும
3) குர்மலி உள்ளிட்ட புழங்கும் அனைத்து மொழிகளையும்அட்டவணைக்குள் கொண்டுவர வேண்டும
4) இந்திக்கும் சமஸ்கிருத்த்திற்கும் வழங்குவது போல் அனைத்து மொழிகளின் மொழிகளின் வளர்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும
5) அயல் மொழிகளுக்கிடையில் நட்புறவை உருவாக்க எடுக்கும்முயற்சியைப் போலவே இந்திய மொழிகளுக்கிடையேயும் இணக்கமான தோழமைமையைக் கட்டமைக்க வேண்டும்
பின் குறிப்பு: இந்தக் கட்டுரையில் எடுத்து சொல்லப்பட்டிருக்கும் நூல்களின் விவரம்
1) “மொழி எங்கள் உயிருக்கு இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும்வழங்குவதுபோல் அனைத்து நேர்” ஆசிரியர் : ஆழி செந்தில்நாதன், ஆழி பதிப்பகம
2) “தமிழ்ச் செவ்விலக்கியங்கள் – அவை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலும், ஆசிரியர்: ஜார்ஜ்எல். ஹார்ட், தமிழில் பு.கமலக்கண்ணன், NCBH
காக்கை மே 2023
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)