இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 27
May 12, 2024
008
நலமா
என்றுஉன்னிடமிருந்துகுறுஞ்செய்தி வந்தபோதுமழை பெய்துகொண்டிருப்பதாகசொல்கிறார்கள்நனைந்துகொண்டுதானிருக்கிறேன்என்கிற என்னைநக்கலித்துவிட்டு அவர்கள் நகர்ந்ததும்நலம் என்றனுப்புகிறேன்ஜடத்தோடு பேசுவதுணர்ந்துகேட்கலதான்ஆனாலும்நாங்களும் நலம்தானென்கிறாய்கேட்டுதான் நலமுணரமுடியுயமென்றால்அன்பல்லகணக்கென்கிறேன்நீ சொன்ன நன்றி சொல்கிறது"ஆறு மாசத்துக்கு காய்சாவு சனியனே"All reactionMay 10, 2024
மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?
மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?
ஒரு நேர்காணல்
அநேகமா, கரண்தப்பாரோடு என்று நினைக்கிறேன்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்வி
சன்னமான கேள்விதான்
அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?
இந்தச் சன்னமான கேள்விக்கே
கோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு
பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்
May 8, 2024
007
உங்க ஊர்ல
ஒரு
மன்னர் இருக்காரே
என்றுதான்
தொடங்க வேண்டியிருப்பதாக
சலித்துக் கொண்ட கடவுளை
மூன்று வாரம் கழித்து வா
உங்க ஊர்ல
ஒரு மன்னர் இருந்தார்ல என்று
பேசலாம் என்று
அனுப்பி இருக்கிறேன்
எங்களுக்குத் தெரியும் மாமன்னா
அம்பானி அதானியிடம் சாக்கு சாக்காக ராகுல் பணம் வாங்கியதாகக் கூறுகிறீர்கள்
வாங்கியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது தெரியும்
போக
இன்னும் மூன்று வாரங்களுக்கு நீங்கள்தான் பிரதமர்
ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்
அம்பானி அதானி என்ன
எலாம் மஸ்கே ராகுலோடு பேசியிருக்கக் கூடும்
அல்லது பேசக் கூடும்
70 முதல் 100 விழுக்காடு கஸ்டம்ஸ் வரியை 10 விழுக்காடு என்று நீங்கள் அவருக்கு குறைத்தது மாதிரி அவரிடமும் கேட்டிருப்பார்
அல்லது கேட்பார்
அங்குதான் எங்களுக்கான போராட்டப் புள்ளி என்று
எங்களுக்குத் தெரியும் மாமன்னா
கேவலமாகத்தான் பேசுவீர்களா நிர்மலா மேம்
ப்ரஜல் ரேவண்ணா சில நூறு பெண்களை பாலியல் ரீதியாக வீணாக்கியிருக்கிறான்
அது குறித்து கருத்து சொல்ல வந்த நிர்மலாரேவண்ணாவும் காங்கிரஸ் கட்சி சிவக்குமாரும் ஒக்காலிக்கா வகுப்பைச் சேர்ந்தவர்களென்றும்அந்த வகுப்பாரின் மொத்த வாக்குகளையும் அள்ளுவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டு என்றும் கூறுகிறார்ரேவண்ணா செய்த கேவலத்திற்கு சற்றும் குறைவில்லாத கேவலம் இதுMay 7, 2024
மாமன்னருக்கும் 56
மாமன்னர் கோவிலுக்குப் போயிருக்கிறார்
ஷாஷ்டாங்கமாக விழுந்தது தொழுவதற்கல்லகோவமாக இருக்கும் கடவுளிடம் மன்னிப்புக் கோரகடவுளுக்கு என்ன கோவம்?தன் பெயரை வாழ்த்தி எழுதியதற்கெல்லாம் மதிப்பெண் தருவதா என்ற கோவம் கடவுளுக்கு அதற்கு திருத்தியவர் அல்லவா மன்னிப்பு கோர வேண்டும்ஆமாம்ஆனாலும் அவர் போட்ட மதிப்பெண் அப்படிதனக்கும் 56கடவுளின் பெயருக்கும் 56 தானா என்று கோவம் தன் மீது திரும்பிவிடக் கூடாது அல்லவாஇவை இரண்டுமே குழுக் கொலைகளுக்கு சமமானவை
இருநூறுக்கு இருநூற்றிப் பன்னிரெண்டு
இது தேர்வில்நூறு வாக்காளர்கள் இருக்கிற இடத்தில் நூற்றி ஒன்பது பேர் வாக்களித்திருக்கிறார்கள்இது தேர்தல்இரண்டும் பாஜக ஆளும் மாநிலங்கள்பூஜியம் வாங்கிய ஒரு பிள்ளைக்கு ஐம்பத்தி ஆறு விழுக்காடு ஒரு தாளில்அந்தப் பிள்ளை மருந்தாளுனர் பட்டயப் பிரிவு மாணவன்இதுவும் பாஜக ஆளும் மாநிலம்இந்தப் பிள்ளை விடைத்தாள் முழுக்க ”ஜெய் ஸ்ரீராம்” மட்டுமே எழுதி இருக்கிறான்எனக்கென்ன கோவம் எனில், ஜெய் ஸ்ரீராமிற்கே 56 விழுக்காடுதானா?பிழையான விடைக்கு மதிப்பெண் கொடுத்தால் கடவுளுக்கு ஆகாதுஅதுவும் கடவுளுக்கே 56 தான் என்றால்லூசு அவருக்கும் 56, எனக்கும் 56 தானாடா என்று கடவுளுக்கு கோவம் வராதாபொறுங்கள் பாவிகளா உத்திரப் பிரதேசத்தில் 56 விழுக்காடு இடங்கள் கூட உங்களுக்கு வராமல் கடவுள் பார்த்துக் கொள்வார்தேர்வானாலும் தேர்தலானாலும் இரண்டிலும் விளையாடி இருப்பது அரசியல்1989 முதல் AO வாக, AE ஆக, SO ஆக, CE ஆக அனைத்து நிலைகளிலும் தாள் திருத்தும் பணியை செய்திருக்கிறேன்அதே 1989 தேர்தல் முதல் 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தேர்தல் பணியும் செய்திருக்கிறேன்எந்த விதமான தயக்கமும் தன்னடக்கமும் இன்றி என் அனுபவத்தில் சொல்கிறேன்இவற்றில் எதுவுமே சாத்தியமே இல்லைஇப்படி ஒரு நிகழ்வு தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் சத்தியமாக சாத்தியமே இல்லைஇங்கு நிகழ்ந்திருந்தால் செய்தவர்கள் பாடுநடவடிக்கையை விடுங்கள், மக்களே அசிங்கப்படுத்தி இருப்பார்கள். செய்தவன் நாண்டு இருப்பான்அந்த மாநிலங்கள் சலனமே இல்லாமல் இருக்கின்றனவேஅவர்கள் அரசியல் அப்படி600 வாக்காளர்கள் என்று கொள்வோம்600 வாக்குகளும் பதிவாகாதுகுறைவாகத்தான் இருக்கும்600 வாக்குகள் உள்ள இடத்தில் 620 வாக்குகள் பக்கம் பதிவாகி உள்ளது என்றால்…அச்சச்சோ…17 C இல் இவ்வளவு வித்தியாசம் எனில் இங்கெல்லாம் பெட்டியைத் தரவே இயலாது600 வாக்குகள்540 வாக்களிப்பு என்றால்17 C யிலும், மார்க்ட் பட்டியலிலும் வாக்குச் சாவடி முகவர்கள் பட்டியலிலும் ஒன்றாக இருக்க வேண்டும்எண்ணிக்கையில் ஒன்று பிசகினாலும் முகவர்கள் விட மாட்டார்கள்எனில் இது எப்படி சாத்தியம்அனைத்து முகவர்களையும் வெளியே அனுப்பிவிட்டு தனது முகவர்களை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு இந்த ஆட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்இப்படி செய்பவர்கள் பெரும்பாலும் மொத்த வாக்காளர் வரம்பிற்குள் நின்று செய்வார்கள்இவர்கள்தான் எல்லாம் கடந்தவர்களாயிற்றேஇதைவிட அசிங்கம் இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில்தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கு வேறு இடத்தில் உள்ள வாக்குகளை இங்கு போட்டுவிட்டார்கள் என்று கூறுகிறதுன் தேர்தல் ஆணையம்109 சதவிகிதம் பதிவு எனில்9 சதவிதம்பேர் ஒரு வாக்குச்சாவடியில் பணி புரிந்தார்களாஇங்கு வாக்கு இல்லை எனில் தபால் வாக்குஅதே தொகுதியில் பணி செய்பவர்கள் எனில் EDCதேர்தல் ஆணையம் என்ன வகுப்பு நடத்தியது?தேர்தல் முடிந்ததும் மக்கள் தெருவிற்கு வந்து கேள்வி கேட்க வேண்டும்தேர்விற்கு வருவோம்தாளின் முதல் பக்கம் போஸ்டிங் போடுவோம்இருநூறுக்கு இருநூற்றி பன்னிரெண்டெல்லாம் வாய்ப்பே இல்லைAE ஒருவர் திருத்துவார்SO சரியாகத் திருத்தி இருக்கிறாரா என்று சரி பார்ப்பார்ரேண்டமாக CE சரி பார்ப்பார்இவ்வளவும் கடந்து 212 என்றால்ஆமாம் ,நாங்கள் குஜராத்தியர்கள்டபுள் எஞ்ஜின் அரசாங்கம்அப்படித்தான் செய்வோம் என்ற அகம்பாவம்இவை இரண்டுமே குழுக் கொலைகளுக்கு சமமானவைAll reMay 4, 2024
கச்சசத் தீவு குறித்து
பாஜக தேர்தல் அறிக்கையை நான் வாசிக்கவில்லை
தகவலுகாகக் கேட்கிறேன். வாசித்தவர்கள் சொல்லுங்கள்
அறிக்கையில் எங்கேனும் கச்சத்தீவு குறித்து ஏதேனும் இருக்கிறதா
ஏழை பெற்றோருக்குப் பிறந்தவர் என்றால்…..
பொழுது போகாத போது விருந்துகளையோ, தேநீர் விருந்துகளையோ ஏற்பாடு செய்துவிடும் வழக்கம் ஆளநர்களுக்கு ஆதி காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது.
மக்கள் வரிப்பணம்தானே. அவர்களுக்கு என்ன வலிக்கவாப்போகிறது.
அன்றைய ஆளுநரும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். சர்.பிட்டி. தியாகராயருக்கும் அழைப்பு வரவே செல்கிறார். கோட்டு போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது ஆளநரின் உத்திரவு. எனவே வேட்டியோடு சென்ற அவருக்கு அனுமதி மறுக்கிறார்கள் வாயிற்காவலர்கள்.
திரும்பிய அவரை அவரது ஆங்கிலேய நண்பர்கள் சிலர் இடை மறிக்கின்றனர். எந்தப் பிரச்சினையுமின்றி அவரைத் தாங்கள் உள்ளே அழைத்துப் போவதாக அழைக்கின்றனர்.
ஆளுநரின் உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டியது தனது கடமை என்றும்
ஆனால் ஆளநரின் விருந்திற்காக தனது உடைப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலாது என்றும் கூறிய தியாகராயர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாது திரும்பி விடுகிறார்.
ஆளுநருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்தனது உத்தரவைத் திரும்ப்ப் பெறுகிறார். தியாகராயரும் கலந்து கொள்கிறார்.
இது ஒரு மரபு சார்ந்த கண்ணியம்.
ஆளுநர் தேவை இல்லை என்பது நமது நிலை. ஆனாலும் அப்படி ஒரு பதவி இருக்கும்வரை அதற்கான மரியாதையைத் தரவேண்டும் என்பது நமது கண்ணியத்திற்குரிய மரபு.
இந்த மரபினை மதித்து கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு ஆளநர்களுக்கும் உண்டு. ஆனால் அந்த கண்ணியத்திற்குரிய மரபுக் கோட்டினை அவ்வப்போது ஆளநர்கள் மீறிக்கொண்டே இருப்பது வாடிக்கையாக உள்ளது.
நமது ஆளுநர் மாண்பமை ரவி அவர்களோ அந்தக் கண்ணியக் கோட்டினை அலட்சியப் படுத்துவதற்காகவே பிறப்பெடுத்தவரைப் போல நடந்து கொள்கிறார்.
காலை எழுந்து காலைக் கடன்களை முடித்த கையோடு நமது மண்ணின் மாண்புகளை கேவலப்படுத்துகிற வேலைகளை செய்யத் தொடங்கி விடுகிறார்.
வள்ளுவர், வள்ளலார், என்பதாக நீண்ட இவரது சேதாரப் பட்டியலில் இறுதியாக கால்டுவெல் அவர்களை இணைத்திருக்கிறார்.
ஒரு பத்து வயதுக் குழந்தைக்கு இருக்கும் இவர்கள் குறித்த ஞானம்கூட இவருக்கு இல்லை. ஆனாலும் எல்லாம் தெரிந்த ஞான சிகாமணி போல அவதூறுகளை அள்ளி விடுகிறார். ஏதோ உளறுகிறார் என்று விட்டுவிடலாம் என்றால் அவரது அவதூறுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நம்மை எதிர்வினைக்கு அழைக்கிறது.
கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பம் குறித்த தனது ஆய்வை ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்கிறார். இதற்காக தமிழ், மலையாளம், துளு, கன்னடம், உள்ளிட்ட பன்னிரண்டு திராவிடமொழிகளையும் பிராஹூய் மொழியையும் கற்றுத் தேர்ந்தபிறகே ஆய்வைத் தொடங்குகிறார் என்ற தகவலை மார்ச் 2024 – காக்கைச் சிறகினிலே இதழில் கோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தருகிறார்.
இத்தனை மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர் குறித்து அவதூறு பேசும் ரவி அவர்களுக்கு இத்தனை மொழிகளின் பெயர்ப் பட்டியலும் தெரியாது என்பதுதான் நமது கோவத்திற்கான பெருங் காரணமே.
தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தவர் கால்டுவெல். தொடர் கற்றலின் விளைவாக தனது முந்தைய முடிவுகளில் மாற்றம் தேவைப்படும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளவும் தயங்காதவர் அவர்.
அதனால்தான் 1856 ஆம் ஆண்டு வெளியிட்ட ”ACOMPARATIVE GRAMMAR OF DRAVIDIYAN OR SOUTH INDIYAN FAMILY OF LANGUAGES” என்ற தனது நூலின் திருத்தப்பட்ட மறுபதிப்பை1875 ஆம் ஆண்டு வெளியிடுகிறார்.
1875 ஆம் ஆண்டு வெளியான நூலினை பேராசிரியர் அந்தப் புத்தகத்தின் 92 ஆம் பக்கத்தில்,
திராவிட மொழிகளில் இந்திய ஐரோப்பிய ஒப்புமைகள் இருப்பதாகத்தான் தான் ஆரம்பத்தில் நம்பியதாகவும் ஆய்வின் நகர்வில் அது அப்படி அல்ல என்பதை தான் கண்டுணர நேர்ந்த்தாகவும் கால்டுவெல் கூறுவதையும் மேற்சொன்ன காக்கைச் சிறகினிலே கட்டுரையில் கோ. பாலசுப்ரமணியன் கூறுகிறார்.
அந்த ஆய்வு நூலின் மிக மிக பிரபலமான மேற்கோளான,
”தமிழை திராவிட மொழிகளுள் மூத்த மொழி என்று கொள்வதற்கு காரணங்கள் உண்டு. அது சமஸ்கிருத்த்தின் துணை இன்றி இயங்க வல்லது”
என்ற பகுதிதான் இவர்களை இந்த அளவிற்கு எரிச்சல் கொள்ள வைக்கிறது. அதுவும் சமஸ்கிருதத்தின் உதவி இன்றி இயங்கக் கூடிய செம்மாந்த மொழி தமிழ் மொழி என்பதை இவர்களால் ஏற்கவே இயலவில்லை.
கால்டுவெல் வரை அனைத்து அறிஞர்களும் சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்று சொன்னது இவர்களதுமேலாண்மையை உறுதி செய்தது. இவர்களும் அதைச் சொல்லியே நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.
தமிழும் சமஸ்கிருதத்தைப்போல ஒரு தனித்த செம்மாந்த மொழி என்பதை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
திராவிட மொழிக் குடும்பம் என்பது ரவி சார் உள்ளிட்ட இவர்கள் அனைவருக்கும் கசக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை இந்திய மொழிகள் அனைத்தும் இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
சமஸ்கிருதம்தான் அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய். மற்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை.
சமஸ்கிருதத்தைத் தவிர மற்ற மொழிகள் தனித்து இயங்க முடியாதவை. காரணம் அவை சமஸ்கிருத்த்தைப் போல தேவ பாஷை அல்ல. அவை அனைத்தும் நீஷ பாஷைகள்.
தேவபாஷையைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உயர்குடிகள். மற்றவர்கள் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டிய கீழ்க் குடிகள்.
இந்தக் கருத்தை கால்டுவெல் உடைத்ததால் அவரை இவ்வளவு கோவமாகக் கிழிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இப்போதுகூட இந்தப் புள்ளியிலேயே ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். சமஸ்கிருதத்தை எந்த வகையிலும் கீழானதாக நாம் ஒருபோதும் கருதுவது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சமஸ்கிருதம் வழக்கற்றுப் போகிற உண்மைகூட நம்மை கவலை கொள்ளவே வைக்கிறது.
மொழி சமத்துவம் வாழ்க்கை சமத்துவத்தைக் கோர வைக்கும் என்பதே இவர்களது கோவத்திற்கான முக்கியமான காரணம்.
ஒரே மொழிக் குடும்பம் என்பது உண்மை அல்ல. இந்தியாவில் திராவிட மொழிக் குடும்பம் என்று இருக்கிறது என்றஉண்மையை சொன்னால் நம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள் பாஜகவினர்.
2024 தேர்தல் அற்க்கையில் காங்கிரஸ் கட்சி மொழி சமத்துவம் குறித்தும் மொழிகளுக்கான சம வாய்ப்பு குறித்தும் பேசுகிறது.
உடனே, காங்கிரசும் திமுகவும் தீவிரவாதத்தைக் கையிலெடுத்திருப்பதாகப் பதறுகிறது பாஜக.
கால்டுவெல் ”இடைநின்ற பள்ளி மாணவர்” என்றும் ”ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தவர்” என்றும் ஆளுநர் ரவி கூறுகிறார்.
கால்டுவெல் உலகின் ஆகச் சிறந்த பல்கலைக் கழகத்தில் இன்றைக்கு முனைவர் பட்டத்திற்கு இணையான பட்டம் பெற்றவர், இருபது மொழிகளுக்கும் மேலான மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர் என்றால் ஏதோ எழுதப் படிக்கிற அளவிற்கு மட்டுமல்ல, அத்தனை மொழிகளின் இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.
ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தவர் கால்டுவெல் என்று சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் திரு ரவி?
ஏழைக் குழந்தைகளுக்குப் பிறந்தவருக்கு அறிவு இருக்காது என்று சொல்ல வருகிறாரா?
அறிவு என்பது மேட்டுக் குடிகளுக்கே உரியது. கால்டுவெல் ஒரு ஏழை. அவர் ஏழை என்பதால் அவருக்கு அறிவு இருக்காது. ஆகவே ஏழையாகப் பிறந்த கால்டுவெல்லிற்கு மொழிக் குடும்பம் குறித்து சொல்ல அருகதை இல்லை என்கிறாரா ரவி?
சென்ற ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் “சனாதன ஒழிப்பு மாநாடு” நடத்தியது உங்களது இந்த கருத்தியலுக்கு எதிராகத்தான் திரு ரவி.
ஏழைக்கு கல்வி கூடாது, அப்படியே அவன்/அவள் கல்வியைப் பெற்றாலும் அதை மதிக்கக் கூடாது என்பது சனாதனத்தின் ஒரு கூறு.
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்” என்பது சனாதனத்திற்கு எதிரான குரல். இது இன்னும் இன்னுமாகப் பெருக்கெடுக்கும்.
_ புதிய ஆசிரியன், மே 2024
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)