இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 25

July 12, 2024

கவிதை 73

 


கொஞ்சமாகொஞ்சறாங்க மிஸ்என்பதைத் தவிரபள்ளிக்குமட்டம் போடுவதற்கானஎந்தக் காரணமும் இல்லைகிரிஷிடம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2024 00:39

July 10, 2024

கவிதை 72

 

நாளை வருவாயா?என்ற உன்உசிரின் அழைப்பு கேட்கிறதாஎன்று முந்தாநாள் கேட்டாயேகாற்றில் உன் கண்ணொதுங்கியதுரும்பாகவேனும்நாளை நான் வந்தேனா?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:37

கவிதை 71

 

கனவில் வந்த நான்காதலை சொன்னதாய் சொல்கிறாய்வந்திருப்பேன்தான்சொல்லி இருப்பேன்தான்நீஇப்படியாக சொல்லிவிட்டாய்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:36

கவிதை 70

 


அப்பத்தா வீடுசாமி தாத்தா வீடுடாடி தாத்தா வீடுஅங்கிள் தாத்தா வீடு என்றுநான்கு வீடுகள் கிரிஷ் சாருக்குஇதில் அப்பத்தா வீடு என்பதுஉங்களைக் குழப்பப் போவதில்லைஅவனைசாமி என்றழைப்பதால்நான் சாமி தாத்தாஅவன் அம்மாடாடி என்றழைப்பதால்அவர் டாடி தாத்தாஅவள் அங்கிள் என அழைப்பதால்அவர் அங்கிள் தாத்தாஅப்பத்தா வீட்டைக் காலி செய்துவிட்டு குடி போனபுது வீட்டிற்குத்தான்அங்கிள் தாத்தா வீடு என்று பெயர் வைத்திருக்கிறான்தாத்தாக்கள் வீடுகள் எல்லாம்போர் என்றும்அப்பத்தா வீடுதான் அழகென்றும்அங்குதான் போக வேண்டுமென்றும்அடம் பிடிக்கவேகாட்டி வரலாமென்று தூக்கிப் போனால்அதுதாத்தா வீட்டைக் காலி செய்து வந்திருந்தஒரு குழந்தையின்அவ்வா வீடாகி இருந்ததுஅவ்வா வீடென்றும்அப்பத்தா வீடென்றும்சண்டையிட்டுக் கொண்டிருந்தகுழந்தைகள்கொஞ்ச நேரத்தில் ஒன்றாய்விளையாட ஆரம்பித்தபோதுவெங்காயம் உரிப்பதில்அவ்வாவிற்குஅப்பத்தா உதவ ஆரம்பித்திருந்தார்வீடும் அவ்வப்பத்தா வீடாகியிருந்ததுவிட்டுவிடுவோம்அப்படியே இருக்கட்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:27

கவிதை 69

 

சுவரில்மோன்வி வரைந்த பூச்செடியில்யானையையோவேறெதையோபார்ப்பவர்களால்அந்தச் செடியிலிருந்துஅவள் ஒரு பூவைப் பறித்ததையோஅதைத் தலையில் சூடிக்கொள்ளஎத்தனித்தபோதுஅது கீழே விழுந்துகாணமல் போனற்காகஅவள் அழுவது கண்டோசிரிக்கத்தான் முடியும்அவர்களைஉறவு துறந்த கையோடுசோபாவிற்கடியில் கிடந்தஅந்தப் பூவை எடுத்துஅவள் தலையில் வைக்கிறேன்அப்படிச் சிரிக்கிறாள்பூ அப்படித்தான் சிரிக்கும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:26

கவிதை 68

 

ஒய்யாரமாய் படுத்திருக்கிறதுஅவனுக்கும்அவளுக்குமிடையையே அழகானதொரு நாய்க்குட்டி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:25

கவிதை 67

 

நீ குடித்த சொம்பில் அவன் குடிக்கத் தவிர்ப்பதுகுற்றம்கோவில் கருவறைக்குள் நீ நுழையக்கூடாதென்றுஅவன் தடுப்பதும் குற்றம்ஆனால்ஓந்தெருவழியா ஏம்புள்ள சைக்கிளில் போகக்கூடாதுநான் தொட்ட சொம்பை நீ தொடமாட்டநியாயம் சாமி நியாயம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:23

கவிதை 66

 

நீ சொன்னபடியேஆறாவது வரியின் மூன்றாவது வார்த்தையில்விடுபட்டுப்போன ஒரு ர வையும்கடைசி வரிக்கு முந்தைய வரியின்கடைசி வார்த்தையில்ற விற்கு பதில் ர வையும் போட்டதோடுநீ பெருந்தன்மையோடு சுட்ட மறந்தஏழாவது வரியின் ரெண்டாவது வார்த்தையின் கடைசியில்விடுபட்டுப்போன க் கையும் வைத்துவிட்டேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:17

கவிதை 64

 


ஏன்என்னைஎன் வீட்டருகேதொலைத்துப் போனாய்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 02:06

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.