இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 31
April 2, 2024
அன்பிற்கு எதிரான அமைப்பாக பாஜக இருப்பதால்தான்….
சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகளது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வாடகைக் காரில் கடியாபட்டிக்கு சென்றிருந்தோம்.
காரில் இருந்து இறங்குகிறோம். கண்ணில் படுபவர்கள் எல்லாம் புன்னகைத்தபடியே தலையை அசைத்து “வாங்க” சொல்கிறார்கள். இன்னும் சிலர் கையெடுத்து வணங்கி வரவேற்கிறார்கள்.
அவர்களில் யாரையும் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கும் அவர்களில் யாரையும் தெரியாது. பார்ப்பவர்கள் எல்லோரும் ”சாப்டீர்களா” என்று கேட்கிறார்கள்.
கொஞ்ச நேரத்தில் கண்ணில் படுபவர்களை சாப்டீர்களா என்று கேட்கிறோம். யாரென்றே தெரியாத நான்கைந்து பேரை கையைப் பிடித்து அழைத்துப் போய்ய் சாப்பிட வைக்கிறாள் கலைமணி.
சிரித்தபடியே எங்களை நோக்கி வந்த மணாமகளின் அம்மாவைப் பார்த்து “ஏம்மா, கல்யாணம் அவளுக்கா? உனக்கும் உங்க வீட்டுக்காரருக்குமா. சும்மாமெதக்கறீங்க” என்று கேட்கிறேன்
வெட்கப்படுகிறார்,
அது ஒரு எளியதிருமணம். சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமல்ல, கலந்து கொண்ட எல்லோரது கண்களிலும் “அன்பு” தென்படுகிறது.
எல்லோரிடத்தும்மகிழ்ச்சி. அப்படி ஒரு பேரனந்தம்.
அப்படி ஒருநிறைவை எல்லோரிடத்தும் காணமுடிந்தது.
இவை அத்தனையும்எங்களையும் அப்பிக் கொள்கிறது.
அப்பிக்கொண்டஅந்த அந்த அன்பும் சமாதானமும் இந்த வார்த்தையை தட்டச்சு செய்கிறவரை இருக்கிறது.
இன்னும் கொஞ்சகாலத்திற்கும் இருக்கும்.
காரோட்டியபிள்ளைக்கு ஒருஅழைப்பு வருகிறது.
மகிழ்ந்துபேசுகிறான். அப்படி கவனிச்சாங்கப்பா, சந்தோசம்னா சந்தோசம், வந்துசொல்கிறேன் என்கிறான்
அது ஒரு எளிய திருமணம். போதாமைஇருக்கும். கடன் இருக்கும். எல்லாம் கடந்து அந்த அன்பு, புன்னகை, மகிழ்ச்சி,
எல்லாம் எத்தனை நிறைவானவை.
அன்பிற்குரியஎன் நண்பர்களே,
நமக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறா இல்லையா என்பது வேறுவிஷயம். ஆனால் ராமர் என்பது பல கோடி மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைஒருபோதும் நாம் பரிகசிப்பது கிடையாது.
அந்த ராமனுக்கு எவ்வளவு பெரிய ஆலயத்தை இவர்கள்கட்டினார்கள்.
அந்த ஆலயத்தின் அமைவிடம் குறித்துதான் நமக்கு பிரச்சினையேதவிர அந்த ஆலயத்தின்மீது நமக்கு எந்தப் புகாரும் இல்லை.
அவ்வளவு பெரியஆலயத் திறப்பு.
எவ்வளவுஅதிகமான அன்பை மக்களுக்குத் தந்திருக்க வேண்டும். எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.
எவ்வளவு ஆழமானசமாதானத்தைத் தந்திருக்க வேண்டும்
அது ஆண்டவன் வீடு என்கிறார்களே
எனில்,
அந்தப்பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்
ஏன் இவைஎல்லாம் விளையவில்லை?
ஏன்மண்ணெங்கும் வெறுப்பு?
ஆண்டவன் இல்லை என்பதைஎப்போதும் சொல்வோம்.
ஆனால் உண்டுஎன்று நம்பும் மக்களது நம்பிக்கையை எப்போதும் ஏற்கிறோம்.
ஏன் தமிழ்நாடு மட்டும் எதையும் ஏற்க மறுக்கிறது? என்றகேள்வி வந்துகொண்டே இருக்கிறது.
அன்பு மட்டுமேஇந்தியாவைக் கட்டும் என்று தமிழ்நாடு உறுதியாகநம்புகிறது என்பதுதான் காரணம்.
ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி அவ்வளவு வெறுப்பைபார்த்த நமக்கு தமிழ்நாடு வேறொரு முகத்தைக் காட்டியது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள நாகமங்கலம்கிராமத்தில் ஒரு குடமுழுக்கு விழா நடக்கிறது.
மகளின் திருமணத்திற்கு தாய்மாமனை அழைப்பதுபோல வெற்றிலைப்பாக்கு பணம் வைத்து இஸ்லாமிய மக்களை அழைத்து மகிழ்கிறார்கள் அந்தக் கிராமத்தின்இந்து மக்கள்.
ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய மக்கள் ஜமாத்தின் செயலாளர் ஷேக்அப்துல்லா தலைமையில் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வருகிறார்கள்.
தங்கை மகளின் திருமணத்திற்கு சீர் சுமந்து வரும் தாய்மாமன்,அத்தைக் கணக்காக இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் தேங்காய், பழங்கள், பட்டு என்பதாகசீர்தட்டு சுமந்து வருகிறார்கள்.
நாதஸ்வரம் தவில் இசையோடும் சீரோடும் வரும் அண்ணன்களையும்அண்ணிகளையும் வரவேற்பதுபோல் இந்துப் பெண்கள் இஸ்லாமியப் பெண்களை மலர்ந்தமுகத்தோடு, தங்களது விரிந்த கைகளுக்குள் வாரி அணைத்துக் கொள்கிறார்கள்.
ஆண்களோ தங்களது மைத்துனர்களை, சகோதரிகளை வாரிக்கொள்கிறார்கள்
அந்தக் கிராமத்து வெளி எங்கும் அன்பு, அன்பு, அன்பு
”இனி இந்தக் கிராமத்தில் எந்த விஷேசம் நிகழ்ந்தாலும் இருபிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்துதான் நடத்துவோம் என்று இரு பிரிவினரும் ஒன்றாகபேட்டி தருகிறார்கள்.
இது 2024 ஜனவரி இறுதியில் நடந்திருக்கிறது.
அன்பும் ஈரமுமாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்.
வெறுப்பும் குரூரமும் பதட்டமுமாய் இருக்க வேண்டும் என்றுஆசைப்படுகிறது பாஜக. .
அன்பிற்கு எதிரான அமைப்பாக பாஜக இருக்கிறது. ஆகவே பாஜக இந்தத்தேர்தலில் முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.
கடும் மழையால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. மிகப் பெரியப் பேரிடர். ஆனால் அதைப் பேரிடர் என்று அறிவிக்க இயலாது என்கிறார்ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா. அவர் மறுத்ததைக்கூட ஒருவகையில் கொள்ளலாம். ஆனால் அப்போதுஅவர் வெளிப்படுத்திய உடல்மொழி ஆணவத்தின் உச்சம்.
இன்றுவரை ஒன்றிய அரசு உரிய நிவாரணத்தொகையை வழங்கவில்லை. படாதபாடுபட்டு மாநில அரசு தன் மக்களுக்கு நிவாரணம் வழங்கினால்அதை பிச்சை என்று கொச்சைப் படுத்துகிறது ஒன்றிய அரசு.
மாநில அரசின் அன்பை பிச்சை என்றும்மக்களைப் பிச்சைக்கார்ர்கள் என்றும் கொச்சைப் படுத்துகிறது பாஜக.
தான் மட்டுமே ஊழலற்ற கட்சி என்றுதனக்குத் தானே சன்றிதழ் வழங்கிக் கொள்கிறது பாஜக.
தேர்தல் பத்திர மோசடியில் சிக்கிநார் நாராய் கிழிந்து தொங்குகிறது பாஜக.
மோசடிப் பேர்வழிகள் மீது அமலாக்கத்துறையைஏவுவது. அவர்களை மிரட்டி பத்திரங்களை வாங்கி தங்கள் கட்சிக்கு வாங்கிக் கொள்வது என்றஅறமற்ற காரியத்தை செய்து வந்திருக்கிறது பாஜக.
தேர்தல் பத்திரங்கள் யார் மூலமாகயாருக்குப் போயிருக்கின்றன என்று வெளிப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும்வழக்குத் தொடுத்திருக்கிறது.
முழுமையான விவரங்கள் இன்னும்வெளிவராத காரணத்தினால் அவை வெளிவர வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம்.
தேர்தல் பத்திரங்கள் முழுமையாகவெளிவந்து விட்டால் இப்போது அதற்காக குரல் கொடுக்கும் கட்சிகள் ஓடி ஒழிந்து கொள்ளும்என்று அமித்ஷா கூறி இருக்கிறார்.
ஒரு பைசாவிற்கான பத்திரத்தைக்கூடபெற்றுக்கொள்ளாத கட்சியும் உண்டு திரு அமித்ஷா. அந்தத் திமிருக்குப் பாத்தியதைப் பட்டவர்கள்நாங்கள்.
தேர்தல் பத்திரத்தை வாங்குவதில்எமக்கு விருப்பம் இல்லை.ஆனால் அவற்றை எந்த சகாயத்தின் வழியாகவும் இல்லாமல் வாங்குவதுதவறில்லை
ஆனால் பாஜக,
1) அமலாக்கத்துறை,CBI, IT உள்ளிட்ட துறைகளை அனுப்பி மிரட்டி அவற்றைப் பெற்றிருக்கிறது
2) பத்திரம் வழங்கியவர்களைதண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறவழங்கியவர்களுக்குது
3) பத்திரம் சலுகைகளை வழங்கி இருக்கிறது
4) பத்திரம் வழங்கியவர்களுக்குஆதரவாக அரசின் கொள்கைகளை மாற்றி அமைத்திருக்கிறது
ரஃபேல் கடந்து தேர்தல் பத்திரம்வரைக்கும் ஊழலின் முகவரியாக பாஜக இருக்கிறது
1) அன்பிற்கு எதிராகபாஜக இருக்கிறது
2) மதம் உள்ளிட்ட அனைத்தின்வழியாகவும் வெறுப்பையும் பதட்டத்தையும் விதைக்கிறது பாஜக
3) விஞான வழியில் ஊழலைசெய்கிறது
4) மாநிலங்களுக்குஉரிய உரிமைகளை நிவாரணத்தைத் தர மறுக்கிறது பாஜக
5) பேரிடருக்கான நிவாரணத்தைபிச்சை என்று கொச்சைப் படுத்துகிறது பஜக
ஆகவேதான் சொல்கிறோம் 2024 தேர்தலில்பாஜக முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும்.
- புதிய ஆசிரியன்,
மார்ச் 202
March 26, 2024
இந்த நாகரிகம் இப்படியே தொடரட்டும்
அவருக்கு டெபாசிட் கிடைக்காது இவரும்
இவருக்கு கிடைக்காதென்று அவரும்
அரைமணி நேரம் கழித்து பேசியிருக்கக் கூடும்
பார்த்ததும் கையை விரித்து ழைக்கிறார் தமிழச்சி
ஓடிவந்து அணைந்து கொள்கிறார் தமிழிசை

தமிழச்சி என் தோழி
தமிழிசை சோசியல் மீடியாவில் என்னையும் வாசிப்பபவர்
ஒன்றுதான்
இந்த நாகரிகம் இப்படியே தொடரட்டும்
March 25, 2024
ஆனால் ஆளுனர் இதை பேசக்கூடாது
”பொன்முடியோட வக்கீல் கணக்கா பேசறியே” என்பதுமாதிரி தொடர்ந்து விசாரிக்கப்படுகிறேன்
ஒருபோதும் இல்லைஇது மாநில அரசின் முடிவின் மீதான ஆளுனரின் அடாவடித்தனம் மீதான எனது கோவமும்அதை மிகச் சரியாக எதிர்கொண்ட முதல்வர்மீதான மகிழ்வும்ஒன்று சொல்ல வேண்டும்பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டபோது நான் அதுகுறித்து எதுவுமே அலட்டிக் கொள்ளவில்லைஎன்னை விடுங்கள், விழுப்புரம் திமுக தோழர்களே அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லைஅவரது தெருவில்கூட கடையடைப்பு இல்லைஆ.ராசா கைதானபோது பெரம்பலூர் கொந்தளித்துக் கிடந்ததுஇப்போதும் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சம்பாரிக்கவில்லை என்றும் நாம் சொல்லப் போவதும் இல்லைஅதுகுறித்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை உண்டுபேசட்டும்அதற்கு பதில் சொல்ல வேண்டியது பொன்முடிஆனால் ஆளுனர் இதை பேசக்கூடாதுஒருவேளை உச்சநீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால்அவர் உள்ளே போவார், பதவி இழப்பார்ஆனால் அப்போதும் அதுகுறித்து கருத்து சொல்ல ஆளுனருக்கு உரிமை இல்லைMarch 21, 2024
ரேவதிராம்
ரேவதி ராம்
71/1406 தைலாநகர் இரண்டாம் வீதி
புதுக்கோட்டை 622001
9894522504
March 19, 2024
புத்தகத்திற்கு எதற்கு GST ?
பொதுவாகவே புத்தகச் சந்தைகளை மாவட்டம் மாவட்டமாக சிறப்பாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் மெனக்கெடல்களைப் பார்க்கவும் மெச்சவுமே செய்கிறோம்
சர்வதேசப் புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவதன் மூலம்நமது ஞானத் திரட்சியை உலகத்திற்குக் கொடுக்கவும்உலக ஞானத்தை நாம் தரிசித்து பயன்பெறவும்அரசசின் மெனக்கெடல்களும் நாம் அறியாதது அல்லஇந்தச் சூழலில், பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலுக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறதுபதிப்பகத் தோழர்கள் சிலரோடு தொடர்பு கொண்டபோதுபதிப்புத் தொழிலையே இது தாறுமாறாகக் கிழித்துப்போடும் என்பது மாதிரி மிகுந்த வருத்தத்தோடும் கவலையோடும் கொஞ்சம் பதறவே செய்தார்கள்தோழர்கள் பரிசல் சிவ. செந்தில்நாதன் அவர்களையும் Mohammed Sirajudeen அவர்களையும் தொடர்பு கொண்டபோது முன்னர் பேசிய தோழர்களின் கவலை உண்மையானது என்பது தெரிய வந்ததுமூன்று விஷயங்கள் தங்களை வெகுவாகப் பாதிப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்1) அரசு கேட்கும் ஜி.எஸ்.டி எண்2) சிறுதொழில் உரிம எண்3) ஐ.எஸ்.பி.என் எண்இதில் மூன்றாவதாக உள்ள சிக்கல் மேலே கொடுக்கப்பட்டுள்ள சிக்கல்களில் கொஞ்சம் பாதகம் குறைந்ததுஎனவே அதை இப்போதைக்கு சன்னமாக ஒதுக்கி வைக்கலாம்GST எண் இணைக்க வேண்டும் என அரசு கூறுகிறது. புத்தகத்திற்கு எதற்கு GST என்று கேட்டுவிட்டுதாள்தான் முதல் ப்ராடக்ட். அதற்கு GST கட்டுகிறோம். புத்தகம் புதிது என்று நாம் கொண்டாடினாலும் புத்தகம் என்பது செகண்ட் ப்ராடக்ட்தான். இரண்டாவது ப்ராடக்ட்டிற்கு GST இல்லை என்று முடிக்கிறார் தோழர் சிராஜ்இந்தச் செயல் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே ஊக்குவிக்கும் ஒரு ஏற்பாடாகப் படுகிறதுPrint on demand வசதி வந்தபிறகு பதிப்புத் தொழில் வெகுவாக ஜனநாயகப் பட்டிருக்கிறதுகிராமங்களில் இருக்கும் எழுதுபவர்கள்கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 50 அல்லது நூறு பிரதிகளை வெளியிட்டு ஒரு விழா நடத்தி விடுகிறார்கள்இவர்களில் பலர் மிகத் தேர்ந்த எழுத்தினையும் தரவும் செய்கிறார்கள்இவர்கள் வாங்கும் தாளிற்கு GST கட்ட வேண்டும்அட்டை போர்டிற்கு GST கட்ட வேண்டும்அச்சகம் மை உள்ளிட்டவற்கு GST கட்டுகின்றனஇப்போது செகண்ட் ப்ராடக்ட்டான புத்தகத்திற்கு GST எனில் புத்தகத்தின் விலை ஏகத்திற்கும் எகிரும்இது புத்தக விற்பனையை மிகவும் பாதிக்கும்புதிய எழுத்தாளர்களுக்கு தங்கள் நூலை நூலகத்திற்கு கொண்டுபோக வேண்டுமெனில்கார்பரேட் பதிப்பகங்களிடம் அவர்கள் கேட்கும் காசைக் கொட்டிக் கொடுத்து காத்திருக்க வேண்டியதுதான்இல்லை எனில் அவர்களால் தங்களது நூல்களை நூலகத்திற்குள் கொண்டுபோக முடியாதுநல்ல புத்தகங்கள் நூலகங்களுக்குள் வரமுடியாத சூழலை இது உருவாக்கும்பதிப்புத் தொழில் குடிசைத் தொழிலைவிட ஒருபடி கீழ் நிலையில்தான் இருக்கிறதுஇன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்புத்தகச் சந்தை முடிந்து மூட்டை கட்டும்போது திரும்பும் செலவிற்கு பல சிறிய பதிப்பகங்கள் கடன்படும் நிலை உள்ளதுபதிப்புத் தொழில் உயிர்ப்புத் தொழில்நூலகங்களைக் கட்டுகிறீர்கள்மெச்சுகிறோம்ஆனால் நூலகங்களைக் கட்டுவது மட்டும் போதாதுநல்ல நூல்களை அங்கு கொண்டு சேர்த்து குவிக்க வேண்டும்அதற்கு இந்த நெறிமுறை ஒத்து வராதுகாசிருக்கிறவர்களின் குப்பைகள் உள்ளே நுழைந்து விடும்அரசு இந்த நெறிமுறைகளைத் திருத்த வேண்டும்எல்லாவற்றிற்கும் முதலாவதாக இந்த நெறிமுறைகளை வகுப்பதற்கு முன் அரசு அனைத்துவகை பதிப்பகங்களையும் அழைத்து ஆலோசித்துவிட வேண்டாமா15.03.2024All reactio
March 6, 2024
அந்தக் கல்வியின் வழியும் உன்னை அடிமைப்படுத்த முயற்சிப்போம்
ஒரு பள்ளிக்கூடம் என்று சொல்வதற்கு உரிய குறைந்தபட்ச அடையாளமான ஒரு பெயர்ப் பலகைகூட இல்லை
அது ஒரு வீடு
அதன் வாசலில் அப்படி ஒரு கூட்டம்
கற்கள், தடி, சாணி என்று அனைவரது கைகளிலும் அவரது வசதிக்கேற்ற ஆயுதங்கள்
அவரவருக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளோடு அந்தப் பெண்ணை அழைக்கிறார்கள்
வாசலுக்கு வருகிறார் அந்தப் பெண்
அந்தப் பெண்ணை மிரட்டிவிட்டு அந்தக் கூட்டம் கிளம்ப எத்தனிக்கும்போது அந்தப் பெண் பேசத் தொடங்குகிறார்
கல்லெறிந்தவர்கள், சேறு தெளித்தவர்கள், வசைபாடி எச்சரித்தவர்கள் அனைவரையும் பெற்றெடுத்த தாய் போன்ற ஈரக் குரலில்,
“கடவுள் உங்களை மன்னிக்கட்டும். நான் என் கடமையைச் செய்கிறேன். அவர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்”
அவர்கள் கல்லெறியும் அளவிற்கு அவர் அப்படி என்ன காரியத்தை செய்து கொண்டிருந்தார்?
அந்தத் தாயின் பெயர் சாவித்திரி
கல்லெறிந்தவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள். ”உயர்குடியில் பிறந்தவர்கள்” என்பதை கொஞ்சம் நிதானமாக யோசித்தால் அவர்களாலேயே நம்பமுடியாது. அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ படாத பாடுபட்டு அனைவரையும் அதை நம்பச் செய்வதற்கான முயற்சியில் இருப்பவர்கள். கல்வி என்பது பொதுப்பட்டால் “மேல்குடி: என்பதோ ”கீழ்க்குடி” என்பதோ இல்லை என்பது அனைவருக்கும் புரிந்து விடும். அப்படிப் புரிந்து விட்டால் “இழி வேலை” என்று இவர்கள் கருதும் உடல் உழைப்பை இவர்கள் செய்ய நேரும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தவர்கள்.
எளிய மொழியில் சொல்வதெனில், கல்வி பொதுப்பட்டால், உழைத்தால்தான் தமக்கு சோறு என்ற உண்மையை யாரைவிடவும் தெளிவாக உணர்ந்து வைத்திருப்பவர்கள்.
இவர்கள்தான் தன் மகன் ஜோதிராவை பள்ளிக்கு அனுப்பி அவனது புத்தி கூர்மையடைவதை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்த கோவிந்தராவ் என்கிற தகப்பனைச் சந்தித்தவர்கள்
“இந்தக் கல்வியால் உன் மகனுக்கு ஒன்றும் கிடைத்துவிடப் போவதில்லை. குலத் தொழிலான விவசாயமும் மறந்து போகும். இந்தக் கல்வி அவனை மத விரோதியாக்கும். கல்வி உன் பிள்ளையைக் கலகக்காரனாக்கிவிடும் என்று நயந்து, நல்லவிதமாக எச்சரித்து ஜோதியின் கல்விக்கு சமாதி கட்டுவதில் ஓரளவிற்கு ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றவர்கள்.
விடாப் பிடியாக ஜோதி கற்பான் என்பதையோ, தான் கற்றதோடு தனது மனைவிக்கும் சொல்லிக் கொடுத்து அவரை பிறருக்கு சொல்லித்தரச் செய்வான் என்பதையோ அவர்களால் சகித்துக் கொள்ளவே இயலவில்லை
தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சாவித்திரி அம்மா கல்வியைத் தந்து கொண்டிருந்தார் என்பதே அவர்களது பெருங்கோவத்திற்கான காரணம்.
தலித்துகளுக்கும் பெண்களுக்கும் கல்வி தந்தால் இவர்களுக்கு என்ன?
இந்தக் கேள்விக்கான விடையில்தான்,
அவர்கள் ஏன் சாவித்திரி அம்மாவைத் தாக்கினார்கள் என்பதற்கும்,
இவர்கள் ஏன் புதியக் கல்விக் கொள்கையை இப்படியான வடிவத்தில் திணிப்பதற்கு இவ்வளாவு பிரயத்தனப் படுகிறார்கள் என்பதற்கும் காரணமாகும்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் ரெட்டியப்பட்டி என்றொரு கிராமம். அந்த கிராமத்து மக்கள் தங்களது கிராம சங்கத்தின் மூலமாக “கஸ்தூரி ஆரம்பப்பாடசாலை” என்றொரு பள்ளியைக் கட்டுகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற குன்றக்குடி அடிகளார்,
“சென்னை சர்க்காரின் புதியக் கல்வித் திட்டம் என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. ஆசிரியர்களுக்கும் புரியவில்லை. மாணவர்களுக்கும் புரியவில்லை. பொதுமக்களுக்கும் புரியவில்லை. அதன் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும்” என்று பேசியதாக 15.10.1953 நாளிட்ட ”விடுதலை” வெளியிட்ட செய்தியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள “குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்” என்ற நூல் தருகிறது
பொதுக் கல்விக்கான அவர்களின் எதிர்ப்பையும், சென்னை சர்க்காரின் புதியக் கல்விக் கொள்கை என்று பொதுவாக சொல்லப்பட்ட குலக்கல்வியின் நோக்கங்களையும், இன்றையப் புதியக் கல்விக் கொள்கையின் நோக்கங்களையும் ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
மிகக் கூர்மையாக இதனை அணுகினால் மூன்றின் நோக்கங்களும் ஒன்று என்பது புரிய வரும். புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும் என்று அடிகளார் கூறியதே பெருந்தன்மையின் உச்சம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது இந்தக் கல்வித் திட்டம் தூக்கிக் கிடாசப்பட வேண்டியது.
நாம் கல்வி பெறுவதால் இவர்களுக்கு என்ன நட்டம்? ஏன் இப்படி இவர்கள் பதட்டப் படுகிறார்கள்?
கல்வி,
1) மனிதனை மத விரோதியாக மாற்றும்
) மனிதனை கலகம் செய்யத் தூண்டும்
3) எப்போதும் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதை கேள்விகேட்க வைக்கும்
4) அரியணையில் தாங்களோ அல்லது தங்களது சொல்பேச்சைக் கேட்பவர்களோ மட்டுமே இருக்க விடாது
என்று கருதினார்கள்
“கீழ்த்தட்டு” என்று இவர்கள் கருதுகிற ஒருவன் கல்வி கற்பதன் மூலமாக மத விரோதியாகவோ, கலகக்காரனாகவோ மாறினால் இவர்களுக்கு என்ன? ஏன் கல்வி பொதுப்படுவதை எதிர்க்கிறார்கள்? அவர்களைப் பொறுத்தவரை மதவிரோதம் என்பது மநுவிரோதம். மநுவைக் கேள்வி கேட்பது என்பது சனாதன மேலாதிக்கத்தைக் கேள்வி கேட்பது.
கல்வி மேற்சொன்ன நான்கையும் அசைத்துப் போடும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை உடையும் எனில் அனைவரும் சமம் என்றாகும். அனைவரும் சமம் என்பதை அவர்களால் ஒருபோதும் ஜீரணிக்க முடியாது.
“கல்விச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்களில் சித்பவணர்களை ஒருபோதும் திருப்தி செய்ய இயலாது. மேற்கத்திய மேற்குடிகளின் தேசிய அரசியல் லட்சியங்களைப் போல நீடித்த, தொடர்ச்சியான தொலைநோக்கு ஆசையை நான் இதுவரைப் பார்த்த்தே இல்லை” என்று 1879 வாக்கில் அன்றையத் தலைமை இந்திய ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் கூறியதை தனஞ்செய்கீர் தனது “மகாத்மா ஜோதிராவ் புலே” என்ற நூலில் வைத்திருப்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
’நீடித்த, தொடர்ச்சியான, தொலைநோக்கு ஆசை’ என்பதை கூர்ந்து கவனிப்பதும் அவசியம். தொடர் கன்னி அறுந்து விடாமல் இந்த ஆசையை அவர்கள் தொடர்ந்து தலைமுறைத் தலைமுறையாக கைமாற்றிக் கொடுத்தபடி இருக்கிறார்கள். இந்தக் கங்கு அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இவர்களது செல்வாக்கு பம்பாயின் முன்னாள் ஆளுனரான எல்பின்ஸ்டோன் அவர்களை “தாழ்த்தப்பட்ட மக்கள் மிகச் சிறந்த மாணவர்கள் என்று கிறிஸ்தவ மிசினரிகள் கருதுவதாகத் தெரிகிறது. இம்மாதிரியான தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எந்தவித சிறப்பு ஊக்குவிப்பையும் தருவதற்கு நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவர்களுக்கு கல்வியைத் தருகிறோம் என்றால் கல்வியை வேர்விடாமல் செய்கிற காரியத்தை செய்கிறோம் என்று பொருள்” எனறு அரசாங்கத்திற்கான தனது பரிந்துரையில் எழுத வைத்தது.
இவர்களது செல்வாக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கல்வி குறித்து பரிந்துரை செய்த பிரிட்டிஷ்காரர்களையே அசைத்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி தருவது கடுமையான பின்விளைவுகளை அரசாங்கத்திற்குத் தரும் என்று அவர்களை பரிந்துரைக்க வைத்திருக்கிறது.
கல்விக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவரான எல்லன்பாரோ இயக்குனர் குழுத் தலைவருக்கு எழுதிய கடிதம் பிரிட்டிஷ் அதிகாரிகளே மேட்டுக்குடி மக்களிடம் எத்தனை எச்சரிக்கையோடு இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவு படுத்துகிறது. இந்தக் கடிதத்தின் கீழ்க்காணும் பகுதியையும் தனஞ்செய் கீர் தனது “மாகாத்மா ஜோதிராவ் புலே” நூலில் வைத்திருக்கிறார்.
”கல்வியும், பண்பாடும் உயர்ந்த சாதி மக்களிடம் இருந்து கீழ்த்தட்டு மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும். சூத்திர சாதி மக்களுக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தால் அது பொது வெறுப்பிற்கு வழிவகுக்கும். அதற்கு முதல் பலி நாமாகத்தான் இருப்போம்”
1) ஓய்வாக இருக்கும் மேல்தட்டு மக்களுக்குகல்வியை கொடுக்க வேண்டும்
2) அவர்கள் கீழ்த்தட்டு மக்களுக்கு கல்வியைக் கடத்துவார்கள்
என்பதே கல்வியைக் கீழ்த்தட்டு மக்களுக்கு கொடுப்பது குறித்த ஆங்கிலேயர்களின் எச்சரிக்கை உணர்வாக இருந்தது. ஓய்வாக இருப்பவனுக்கு கல்வியைக் கொடுப்பது என்றும் அவர்கள் உடலுழைப்பைத் தருகிற கீழ்த்தட்டு மக்களுக்கு கல்வியைத் தருவார்கள் என்றும் அவர்களை முடிவுக்கு வரச் செய்திருக்கிறது ஆதிக்க சக்திகளின் பிடிவாதம்.
நேரிடையாக நமக்கு கல்வி இல்லை என்று சொல்ல முடியாததால் குறைந்தபட்சம் அறிவியல் கல்வியை நமக்குத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள்..
அறிவியலுக்கு எதிரான ஜோதிடத்தை நமக்குத் தர முயற்சிக்கிறார்கள்.
அறிவியல் அனைவரும் சமம் என்றும் மனிதனால் முடியும் என்று கூறும்.
ஜோதிடம் மனிதனால் எதுவும் முடியாது. எழுதியபடிதான் எல்லாம் நடக்கும் என்று சொல்லும். பிரச்சினை எல்லாவற்றிற்கும் இறைவனிடம் மட்டுமே பரிகாரம் உண்டு, நீ கோவிலுக்குப் போ என்று சொல்லும். கோவிலுக்குப் போனால் யார் எங்கெங்கு நிற்க வேண்டும் என்று சொல்லும். கடவுளிடம் போ, ஆனால் கடவுளைத் தொடாதே என்று எச்சரிக்கும். கடவுளைத் தொட ஒருவர் இருப்பார். அவர் உனக்காக கடவுளிடம் பேசுவார். அவரைப் பணிந்து அடிமையாய் இரு என்று சொல்லும்.
கல்வியைக் கட்டாயமாக்குவது தவிர்க்க முடியாதது என்றானால் என்ன. அந்தக் கல்வியின் வழியும் உன்னை அடிமைப்படுத்த முயற்சிப்போம் என்பதே புதியக் கல்விக் கொள்கையின் பிரதான கூறு.
புரிந்து கொள்வோம்
* புதிய ஆசிரியன் மார்ச் 2024
x
இந்தப் பொதுப் புத்தியை வெகு சீக்கிரம் உடைத்து விடுவோம்

கட்சித் தோழர்களிடம் உரையாடுவதெனில் ஒருவகையையான கூடுதல் உற்சாகம்தான்
வலுவில்லாத இடம் பெரம்பலூர் என்றுகூட ஒரு பார்வை கட்சியில் பொதுவாக உண்டுதோழர்களிடமிருந்து வருகிற கேள்விகள் நம்பிக்கைத் தருகின்றனஇந்தப் பொதுப் புத்தியை வெகு சீக்கிரம் உடைத்து விடுவோம்ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை
அன்பின் மருத்துவர் கீர்த்தனா,
பிறந்தநாள் வாழ்த்துகள்கடந்த பிறந்தநாட்கள் எதையும்விட இந்த பிறந்தநாள் உனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்ஆமாம்,நான்கு நாட்களுக்கு முன்னர் BHMS தேர்வு முடிவு வந்தபோது உன் அருகில்தான் இருந்தேன். தேர்வு முடிவினைக் கண்ணுற்றதும் நீ கொண்டாடி மகிழ்ந்த விதம் எனக்குப் புதிதாக இருந்ததுபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது நீ அப்பாயி வீட்டில் இருந்தாய். அப்போது 491/500 எடுத்திருந்தாய்,மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் அதை உனக்கு அலைபேசிவழி தெரிவித்தபோது எந்தவிதமான சலனமும் இன்றி,இன்று வியாழன், எனவே நாளைக்கு வெள்ளி என்று யாரேனும் சொன்னால் அந்த செய்தியை எப்படி எடுத்திருப்பாயோ அப்படி எடுத்த விதம் இன்னும் பசுமையாய் இருக்கிறதுஒரு வகையில் unbecoming of keerthna வாக இருந்தாலும் இந்தக் கொண்டாட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறதுஹோமியோ மருத்துவர் என்பது உன் கனவு என்பது எனக்குத் தெரியும்உன் கனவுகளில் ஒன்று நிறைவேறுவதற்கு ஏதோ ஒரு இடத்தில் உன் அம்மாவோடு நானும் இருந்திருக்கிறேன் என்பதில் பெரிய மகிழ்ச்சி எனக்குஎன் மகள் ஒரு மருத்துவர்காட்டம்மா என்று அழைக்கப்படும் காளியம்மாளின் கொள்ளுப் பேத்திமுனியம்மாள் ராஜரத்தினத்தின் பேத்தி ஒரு மருத்துவர்நம்முடைய குடும்பத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய செய்திதான்பெரிய பாரம்பரியம் மிக்க குடும்பமெல்லாம் இல்லை நமது குடும்பம்உன் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர்ஆனாலும் அப்பாவைவிட தாத்தாவிற்கு ஏகத்திற்கும் கடன்என் அம்மாயி காட்டம்மா மாடு மேய்க்கும்இன்று உன் அப்பா ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். இதற்கும் உன் கொள்ளுப் பாட்டி மாடு மேய்த்ததற்கும் நேர்விகித உறவு இருக்கிறது கீர்த்திஅது மாடுமேய்த்து சேர்த்த பால் காசில்லாது போயிருந்தால் உன் அப்பா இன்று இந்த அளவிற்கேனுமான நிலையில் இல்லைஇதை இதுவரைக்கும் உன் சித்தப்பாவிடமோ அத்தையிடமோகூட பகிர்ந்ததில்லைஇப்போது இவற்றை சொல்வதற்கு காரணம் இருக்கிறதுஉன் வேர் உனக்குத் தெரிய வேண்டும்என் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில்என் பணியிடத்தில், எனக்கான சமூக வெளியில்என்னை ஒரு ஆசிரியரின் மகன் என்று மட்டும் வெளிப்படுத்திக் கொண்டதில்லைஒரு மாடு மேய்த்த கிழவியின் பேரனாக என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறேன்அன்பிற்குரிய கீர்த்தனா,நீ,ஒரு மாடு மேய்த்தக் கிழவியின் கொள்ளுப் பேத்திஇவற்றை இவ்வளவு விளக்கமாக சொல்வதற்கு காரணமிருக்கிறதுஅதை சொல்வதற்குமுன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்அப்பாவிற்கு காது கேட்காது என்பது நீ அறிந்ததுதான்காது கொஞ்சம் மந்தமாக இருக்கிறது என்பதை நானும் உன் தாத்தாவும் உணரத் தொடங்கியபோது நான் அநேகமாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்விடுதியில் தங்கிப் படிக்கும் அளவிற்கு வசதி இல்லாததால் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்காது மருத்துவரைப் பார்ப்பதற்கே எங்களுக்கு காலம் ஆயிற்றுஒரு அறுவை, அல்லது காது கேட்கும் கருவியை அவர் பரிந்துரைத்தபோது அதற்கான வசதி நம் குடும்பத்தில் இல்லைபிறகு அப்படியேப் பழகிப் போனதுஇப்போது காதுகேட்கும் கருவியைப் பொறுத்தியதும் அப்பாவிற்கு காது பெருமளவு தெளிவாகக் கேட்பதும் நீ அறிந்ததே அதுவரையில் நான் பட்ட அவமானங்களும் நீ அறிந்ததுதான்காது கேட்கும் கருவியை முன்னரே பொறுத்தி இருப்பின் பொதுத் தளத்தில் நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கக் கூடும்இப்போது உன்னிடம் வைப்பதற்கு ஒன்றிரண்டு கோரிக்கைகள் என்னிடம் உண்டு மகளேநாம் என்பது இன்றைய நாம் மட்டும் அல்லஉன்னை ஹோமியோ படிக்கவைத்ததற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன1) ஹோமியோ என்பது மாற்று மருத்துவம்2) அது ஏழைகளுக்கான மருத்துவம்ஹோமியோவை மாற்று மருத்துவம் என்று கூறுவதற்கு அது அலோபதிக்கான மாற்று என்றோ, சித்தாவிற்கு மாற்று என்றோ பொருள் அல்லஒன்றால் ஒன்றை இட்டு நிரப்பிவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்அதனதற்கென்று தனிப்பட்ட லட்சணங்கள் உண்டுஎந்த மருத்துவமாயினும் அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும் என்றும்அனைத்துவகை மருத்துவமும் ஒன்றிணைந்து மக்களுக்கான ஆய்வுகளை செய்வதும்ஏழைகளுக்கானதாக என்பதே தவறுஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை மாற்றி அமைக்க வேண்டும்ஹோமியோவை ஏதுமற்றவர்களுக்கான மருத்துவமாக நான் பார்க்கிறேன்அல்லது அப்படியாக அது மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்40 வருடங்களுக்கு முந்தைய உன் அப்பா, அப்பாயி, பாட்டி ஆகியோர் இன்று ஓரளவு வசதியோடிருக்கலாம்எந்தவிதமான மருத்துவத்திற்கும் கடன் பெற்றாவது சடுதியில் தயாராகிவிடக்கூடிய நிலையில் இருக்கலாம்ஆனால்,40 வருடங்களுக்கு முன்னர் உன் அப்பா இருந்த நிலையில் எத்தனையோ பேருடைய அப்பாக்கள், அப்பாயிகள், பாட்டிகள் ஏராளம் இன்றும் உண்டுஏதுமற்றவர்களும் உண்டுஅவர்களுக்கும் மருத்துவம் போக வேண்டும்அதற்கு உன் பங்களிப்பும் இருக்க வேண்டும் அது நடந்தால் அப்பாவின் கட்டை வேகும்வாழ்த்துகள் கீர்த்திஅன்புடன்,இரா.எட்வின்- அவளது ஒரு பிறந்தநாளின்போது எழுதியதுMarch 1, 2024
பெரம்பலூருக்கு ஒரு ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்”

உங்கள் பிறந்தநாள் பரிசாக பெரம்பலூருக்கு ஒரு ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்” கேட்டு கையேந்தி
வாழ்த்துகிறேன்மகிழ்ந்து நீண்டு வாழ்க ஸ்டாலின் சார்அழைப்பு 039
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)