இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 40

January 8, 2024

நிச்சயம் வருவோம்

 




கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆயிற்று  ஆட்சியிழந்து
ஒருபுறம் மாநில ஆட்சி
இன்னொரு புறம் ஒன்றிய அரசு
இரண்டும் மல்லுக்கட்டிக் கொண்டு அழித்துவிட ஆனதை எல்லாம் செய்துகொண்டிருக்கின்றன
காவல்துறை, குண்டர் படை எல்லாவற்றையும் ஏவிப் பார்த்துவிட்டார்கள்
எத்தனைப் பலிகள்
எத்தனை விதமான பயமுறுத்தல்
வந்துவிடு இல்லையேல் குடும்பத்தையே அழிப்போம் என்பதுமாதிரி மிரட்டல்கள்
வாக்குப்போட வெளியே வரவிடாமல் தடுக்கும் வன்முறை
இவை எல்லாம் கடந்து,
இவர்கள் மக்களுக்கானவர்கள் என்று நம்பி எங்களோடு நின்ற அனுதாபிகளிடம் அப்பட்டமான பொய்ப் பிரச்சாரங்கள்
பதிலளிக்க வாய்ப்பே தராமல் வன்முறையான அவதூறுகள்
இப்போதுதானே தமிழில் மரிச்ஜாப்பி 
இன்னும் அதுகூட என் போன்றவர்கள் கைகளில் இல்லை
இத்தனையும் கடந்து இத்தனை எழுச்சி 
எழுவோம்
கற்றுக்கொண்டே எழுவோம்
முன்னிலும் பலத்தோடு எழுவோம்
முன்னிலும் இன்னும் இன்னுமாய் மக்களோடு பினைந்து நிற்போம்
ஒன்றே ஒன்றுதான்
நிச்சயம் வருவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2024 04:46

January 7, 2024

61

 
கடத்தித் தொலைத்திருக்கலாம்
ஒரு பார்வை வழியாக
தனது மகிழ்ச்சியை

முயற்சித்திருக்கலாம்
திருப்தியா என்று அறிந்துகொள்ளவேனும்
குறைந்த பட்சம்

சொல்லாமல் கொள்ளாமல்
ஜோலி முடிந்ததும் ஓடத் தொடங்கிய ஆண்நாயை
முடிந்த அளவு வைது தீர்த்த பெண்நாய்

தாளவே தாளாமல்
விரட்டிப் போய்
கடித்துவிட்டு நகர்ந்தது 
பின் தொடையை
காயத்தை நக்கத் தொடங்கியது
ஆண்நாய்
புணர்வு செமபோல
என நினைத்தபடி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2024 20:08

62

 

என்ன சொல்லு என்கிறான் லேஷந்த்தான் வரைந்து வந்ததைக் காட்டி
காகம்போல இருந்ததுகாகம்போல இருக்கென்றேன்
அது காகம்தான்நீதான் போல என்கிறான்
நான் போலதான் போலநான்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2024 20:03

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு

 

”கணசக்தியின்” 58 வது ஆண்டுவிழா கொல்கொத்தாவில் நடைபெற்றிருக்கிறதுஅதில் பேசிய ஊடகவியலாளர் சசிகுமார் பேசும்போதுஜனநாயகம் வெறுமையாக உள்ளது என்றும்அதற்கு காரணம் சுதந்திரமாக ஊடகங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்விலை போகாத, சுதந்திரமாக இயங்கக்கூடிய, நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய ஊடகங்களை உருவாக்கினால் ஒழிய
இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு காலமாகும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2024 02:48

எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களே


 

இசை அமைப்பாளார் AR ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் வாழ்த்துகளோடு இதை மீண்டும் வைக்கிறேன்

*************************************************
எனக்கென்னவோ இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் மொழி அரசியலை நன்கு அறிந்தவராகவும்சனாதனம், மொழி, மற்றும் ஜனநாயகத்தை தின்று செரிக்க சங் பரிவாரம் முயலும் ஒவ்வொருப் பொழுதும் மிகச் சரியாகவும் அச்சம் இன்றியும்எதிர்வினையாற்றுபவராகவும் தெரிகிறார்அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும் என்றும்இந்தியாவின் ஒற்றைமொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்றும்ஆதிக்கக் குரலெடுத்ததும்கீழ்க்காணும் படத்தை ரஹ்மான் தனது ட்விட்டரில் வைக்கபற்றிக் கொண்டதுஉடனே,தமிழ்த்தாய் எவ்வளவு அழகானவள்அவளை இவ்வளவு கருப்பாகவும் கொடூரமாகவும் வரைவது வக்கிரம் அல்லவா என்று கொதிக்கிறார்கள்?
இவ்வளாவு உக்கிரமாய் கொதிக்கிறார்களே, யார் இவர்கள் என்று பார்த்தால்
தமிழை நீஷ பாஷை என்பவர்கள் அவர்கள்தமிழ் எம் தாய்,அவள் கருப்பாய் இருந்தாலும்கொடூரமாய் இருந்தாலும் எம் தாய்கறுப்பு காக்கையை எங்களின் மூதாதையராகப் பார்ப்பவர்கள் நாங்கள்காகத்தை ஊரின் தோட்டியாக பார்ப்பவர்கள் நீங்கள்எங்கள் தாய் எந்த வண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு என்ன பழுப்பர்களேஇந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்கிறார் ரஹ்மான்இது மொழி அரசியலில் புதுக் குரல்அய்யோ அய்யோதமிழா, இணைப்பு மொழியா என்று கதறுகிறார்கள்ஏன் கூடாது என்கிறேன்அத்தோடு நிறுத்தவில்லை அவர்கறுப்பாக இருப்பவர்களை தொகுப்பாளர்களாக,நடிகர்களாக வாய்ப்பு கொடுங்கள்நம் மக்களுக்கு நமது நிறம் பிடிக்கும் என்கிறார்”திண்டேர் நள்ளி கானத் தண்டர்பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டிமுழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழிபெருந்தோ ணெகிழ்த்த செல்லற்குவிருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”என்கிறார் காக்கைப்பாடினியார்காதலியைப் பிரிந்து நெடுநாள் கழித்து வருகிறான் காதலன்.
தான் வரும்வரை தன் காதலியை தன் காதலியை ஆற்றுப்படுத்திக் காத்தமைக்காக நன்றி சொல்கிறான்தான் எதுவும் செய்யவில்லை என்றும்,அவ்வப்போது கரைந்து நீ வரப்போவதாய் காக்கைதான் அவளை ஆற்றுப்படுத்தியது என்றும் தோழி சொல்கிறார்காக்கையை “ஊரின் தோட்டி” என்று தீட்டாய்ப் பார்த்த இலக்கியங்களை நாங்கள் நிராகரிப்போம்காக்கை கருப்பு,கரைந்து எமது உறவினரின் வருகையைக் கூறி எம்மை ஆற்றுப்படுத்தும் எமது கரிய தோழர்அதனால்தான்விடியல் வரும் என்று கரைந்துகொண்டிருக்கும் எமது பத்திரிக்கைக்கு “காக்கை” என்று பெயர் வைத்தோம்நன்றி ரஹ்மான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2024 01:37

January 6, 2024

63

 

ரொம்பக்கனக்கிறதுவயிறுமுட்ட  பசி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2024 23:18

64

 
கனவே வேண்டாமென்றெல்லாம் சொல்லக்கூடாது நீ
எதையேனும் தொலைப்பதற்கு நான் வருகிறமாதிரி
கனவு வரவேண்டும் உனக்கு
அதில் எதையேனும் தொலைத்து தொலைத்துவிட்டு
கவிதை எழுத வேண்டும் நான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2024 23:10

002

 

அசடே அசடேஏனடா சத்தம்?உனக்கும் எனக்கும்ஒரே நாடுதான்இல்லை என்றுஎவனடா மறுத்தது?இன்னொன்றும்சொல்லவாஉனக்கும் எனக்கும்உலகமும் ஒன்றுதான்உனக்கொரு தேசம்எனக்கொரு தேசம்என்ற உண்மைதான்நீ உணராதிருப்பதுஇந்த உண்மையைஉணர்ந்தா யென்றால்நீயும் நானும்நிச்சயம்ஒன்றுதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2024 22:45

தமிழ்க் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் நமது கலாச்சாரம்

 

நீங்கள் இந்தியக் கலாச்சாரம் என்கிறீர்கள்தமிழ்க் கலாச்சாரம் என்கிறோம் நாங்கள்எனில் இந்தியக் கலாச்சாரம் இல்லையா என்கிறீர்கள்இருக்கிறது என்கிறோம்புரியவில்லை என்கிறீர்கள்தமிழ்க் கலாச்சாரம் எங்கள் கலாச்சாரம், இந்தியக் கலாச்சாரம் நமது கலாச்சாரம்இன்னும் புரியவில்லையாகொஞ்சம் தெளிவா இல்லைசரி நீங்கள் எந்த மாநிலம்?குஜராத்குஜராத்தி கலாச்சாரம் இருக்குல்லஇருக்குஎனில்
குஜராத்தி கலாச்சாரம் உங்கள் கலாச்சாரம்தமிழ் நாகரிகம் எங்கள் நாகரிகம்இந்திய கலாச்சாரம் என்பது நமது கலாச்சாரம்இந்தியாவிற்கென்ற தனித்த நாகரிகம் என்பது அது கலாச்சாரங்களின் முடிச்சு என்பதே
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2024 05:31

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.