இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 43

January 1, 2024

71

 ஏகத்துக்கும் சிதைந்து

முகமும் உடலும்
எஞ்சித் தெரிந்த
சிறுபகுதி இட முலையும்
எண்ணெய்ப் பிசுக்கும்
துண்ணூறும் குங்குமமும் போதுமந்த

அசலூர்க்காரனுக்கு

பொம்பள சாமி அது எனப் பிடித்துக் கொள்ள

நொடிக்கு நொடி தாயேயெனக் கும்பிட்டான்

சுத்திக் கிடந்த செத்தைகளை பெருக்கித் தள்ளியவன்
சுகத்தையும் படிப்பையும்வேலையையும் 
கலங்காத நல்ல வாழ்க்கையையும்
தன் ஒத்தை மகளுக்காய் யாசித்தவாறே

வரவா தாயே மழ ஓஞ்சிருச்சு என நகர்ந்தவனுக்குகேட்டிருக்க நியாயமில்லை
போய்வா தந்தையே என்ற தெய்வத்தின் குரல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 16:02

72


மரத்தின் நிழலைக்கடத்த முடியாத கோவத்தில்வெள்ளமாய் பெருத்து வந்துமரத்தைக் கடத்திப் போனது நதி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 15:52

தைரியமாக இருங்க அங்கிள்

 

2018 முதல் நாள் இதை வைத்திருக்கிறேன்இப்போது அந்தக் குழந்தை நிகில் ஷார்ஜாவில் முதல் வகுப்பு போகிறான்சார் செம சுட்டி2018 இல் இதை எழுதும்போது அழுததைவிட இப்போது அதிகமாக முட்டுகிறதுஅந்தப் பிள்ளை இப்போது எங்கு இருக்கிறாள்?எப்படி இருக்கிறாள்?தம்பி நலம் என்பதை அவளுக்கு எப்படி சொல்வேன் நான்அங்கிள் என விளித்தாள்எப்போதும் மகிழ்ந்திரு குழந்தையே************************************ அந்தக் குழந்தை ஒரு கல்லூரி மாணவியாக இருக்க வேண்டும்அவளுக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்வதற்காக அனுமதி கேட்டதும்
இருக்கையைத் துடைத்துத் தட்டி புன்னகைத்தவாறே இருக்கையை நோக்கி கையை நீட்டி அமரச் சொல்கிறாள்அமர்ந்ததும் சிரிக்கிறாள்
பிறகு ஹெட்போனை காதில் மாட்டிக் கொள்கிறாள்
அவளது உலகம் ஏனோ தெரியவில்லை அவ்வப்போது என்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே வருகிறாள்கொஞ்ச நேரத்தில் தோழர் தமிழரசன் என்னை அழைக்கிறார்அவரோடு உரையாடத் தொடங்கிய என்னை
தலையை சாய்த்து கன்னத்தில் கைவைத்தபடியே பார்க்கத் தொடங்குகிறாள்தங்கை தீபாவிற்கு 30 ஆம் தேதி ஆண்குழந்தை பிறந்தது, பிறந்து ஏழு மணி நேரத்திற்குள் குழந்தைக்கு மிகவும் முடியாமல் போனதுபிறந்து எட்டரைமணி நேரத்திற்குள் குழந்தையை மணப்பாறையிலிருந்து ஆம்புலன்சில் திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததுபெற்றவளை மணப்பாறை மருத்துவமனையிலும் குழந்தையை திருச்சி மருத்துவமனையிலுமாக சேர்த்து படும் துயரம்ஒருநாள் குழந்தைக்கு,
பெரிய பெரிய அட்டைபெட்டி அட்டைபெட்டியாக மருந்து வாங்கி சுமந்தது
குழந்தையின் நிலை72 மணி நேரத்தில் அவனுக்கு மேஜர் அறுவை செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொன்னதுஅடுத்த நாள் நடக்க இருந்த அறுவைஎன்று தொடர்ந்த உரையாடலில் என்னையறியாமல் அழுதிருக்கிறேன்செல்லை அணைத்து பாக்கெட்டில் போடுகிறேன்என் கையைப் பிடிக்கிறாள்பார்க்கிறேன்அந்தக் குழந்தையின் கண்களில் வடிகிறது"தைரியமாக இருங்க அங்க்கிள். தம்பி நல்லாயிடுவான். நான் பாஸ்டிங் இருந்து ப்ரே பண்றேன்எதுவும் பேச இயலாதவனாக இறங்க எழுந்தவனின் கையைப் பற்றுகிறாள்,"ஒன்னும் ஆகாது அங்க்கிள், இறங்கனதும் சாப்டுங்க, ரொம்ப டயர்டா இருக்கீங்க"இப்பவும் பேச ஏதுமற்றவனாய் அவள் தலையில் கை வைத்து அழுத்துகிறேன்கையசைக்கிறாள்இந்தக் குழந்தையின் ஈரம் எனக்கு பேரதிகமாய் நம்பிக்கையைத் தருகிறதுஇந்த நம்பிக்கை
அந்தக் குழந்தை வழியாக இந்தச் சமூகம் எனக்குத் தந்த புத்தாண்டுச் செய்திநீ அள்ளித் தெளித்த ஈரத்தை என்னில் இருந்து உலர்ந்துபோகாமல் காக்க முயற்சிப்பேன்முத்தங்கள் மகளேAll reaction
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 08:15

001

 

மகாபலிபுரம்                                                                                                                            பிடித்துப் போவதற்குசிலைகள்தான் காரணமென்றெல்லாம்இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 07:12

ரொம்பக் கூச்சமா இருந்தாலும்

 ரொம்பக் கூச்சமா இருந்தாலும் புத்தகம் போட்ட திருப்திங்க ராசி அழகப்பன் அண்ணா











 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 00:57

December 31, 2023

73

 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2023 20:56

74

 கற்பிதமோ கடவுளோ தோன்றிய புள்ளிக்கு முந்திய புள்ளிவரை இன்னும் அழகாய்த்தான் இருந்திருக்கும் உலகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2023 19:03

75

 எழுந்து ஓடிவந்த துணை நடிகன் “பேக் அப்” சொன்ன இயக்குநரிடம் கேட்டான் “ஒழுங்கா செத்தேனா சார்”


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2023 12:49

76

 

விற்றுக்கொண்டே இருக்கிறோமென்பது

எம் மீதான உங்கள் குற்றச்சாட்டுகடலை காடுகளை நதிகளை நீரைமணலை மலைகளை எண்ணெயைஆகாசத்தை விமானத்தை வங்கியைஇன்சூரன்சைஏ இந்தாப்பா கைவலிக்கிறதுசுருக்கமா சொல்கிறேன்அனைத்தையும் விற்பதற்காகத்தானேவாக்குகளை வாங்கினோம்ஈன விலைக்கு விற்கிறோமென்பதுஅடுத்தக் குற்றச்சாட்டுஎமக்கு வாக்களித்த மக்கள் ஆசையற்றவர்கள்மலிவாகத்தான் கொடுத்தனர் தம் வாக்குகளைநாங்களும் மலிவாகவே விற்கிறோம்பாரம் குறைவதென்பது ஜென் சுகம் தெரியுமாகுறைத்திருக்கிறோம்விற்பதற்கு இனி ஏதுமில்லை என்ற ஏளனம் ஆகாதுஅனைத்தையும் அவர்களுக்கு விற்ற எங்களுக்குஅவர்களை விற்கவும் தெரியும்
01.02.2021 அன்று நிதிநிலை அறிக்கை வாசித்து முடிக்கப்பட்டபோது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2023 12:42

77

 

இளைப்பாறிவிடாதே மகளே
அதற்குள்இருக்கின்றன கணக்குகள் நிறையஅரசியல் செய்கிறோம் உன் மரணத்தை வைத்தென்றார்கள்இதுதானா படிப்பதற்கு 
இல்லவே இல்லையா வேறெதுவும் 
என்றார்கள்ஆயிரத்து நூற்றி எழுபத்தாறு எடுத்தவளால்
நீட் தேற முடியாதெனில் 
பாடத்தில் கோளாறென்றார்கள்நீட்டைத் தேறியவனால் 
ஆயிரத்தி நூற்றி எழுபத்தியாறு எடுக்க முடியாதெனில்?சாய்சில் விடுகிறார்கள் இதை 
எதையும் விடாது படித்து 
கரைகண்ட கனவான்கள்தெரியுமா மகளே
நீட் எழுத உன் தம்பிகளும் தங்கைகளும்
தேசம் முழுக்க அலைந்த கதை?கேள்விகள் தவறாம்
ஆனால் இழப்பீடு கிடையாதாம்கண்டடைந்து விட்டார்கள் 
நம்மை ஒழிப்பதற்கான ஆயுதம் 
ஒன்றைமுளைக்கும் இனி
தவறான கேள்விகளுக்கான
பயிற்சி நிலையங்கள்முடித்துவிடவில்லை எதையும் நாங்கள்
உன்னை இறுதியாய்க் குளிப்பாட்டியபிறகுகருப்பும்
சிவப்பும்
நீலமும்
உன் பெயரால் களத்திலேனும் 
கரம் கோர்ப்போம்அந்த அரசியலை 
நாங்கள்
செய்து முடிக்கும் வரைமகளே
அருள்கூர்ந்துஇளைப்பாறி விடாதே
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2023 12:39

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.