இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 46
December 23, 2023
கோவிலுங்களும் இருக்குப்பா
கிஷோர் பேசினான்கிறிஸ்மஸ்கு ட்ரெஸ் எடுத்தியாடாகிறிஸ்மசுக்கு எதுக்குப்பா?அங்க கிறிஸ்மசெல்லாம் இருக்காதுல்லஷீனா போனை வாங்கிக் கொண்டாள்அய்யோ அப்பா இங்க சர்ச்செல்லாம் இருக்குப்பாஇன்னொன்னு தெரியுமாப்பாகொஞ்ச நாளைக்கு முன்னாடி “கந்த சஷ்டி விழா” மூன்றுநாள் கொண்டாடினாங்கப்பாகோவிலுங்களும் இருக்குப்பாஅது துபாய்தகவலுக்காகஅன்புடுத்தி அலைவோம்
திருந்துவது தவறு என நினைக்கும் ஏரியா இது
புத்தகங்களை ஆட்டையப் போடுவது என்பது நமக்கு அப்படிப் பிடித்தமான ஒன்றுஅப்படிச் சுட்ட புத்தகங்கள் ஆயிரமாவது வீட்டில் இருக்கும்சமீபத்தில் ஆட்டையப் போட்ட நூல் “ஆர் எஸ் எஸ் -இந்தியாவிற்கு அச்சுறுத்தல்”சுதாவிடமிருந்துபார்த்தால் பென்சிலில் அடிக்கோடுகள் கடைசிப் பக்கம் வரைஎன்ன சுதா?முதல்முறை படிக்கும்போது அடிக்கோடு போட்டிடுவேன்அப்ப அடுத்துப் படிப்பியா ஆமாம்அய்யோவென்று இருந்ததுஆனாலும்அய்யோவென்றிருந்தாலும் தொடர்ந்து ஆட்டையப் போடுவோம்தான்திருந்துவது தவறு என நினைக்கும் ஏரியா இது
ஏன் அவரெல்லாம் உண்டியலடிக்க வரமாட்டாரா?
”கட்சித் திட்டம்” தேவைப்பட்டதுகட்சி அலுவலகம் போகிறேன்உண்டியல் வசூலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்”சீக்கிரமா, ஏற்கனவே லேட்”குரல் புதிதுதிரும்பிப் பார்க்கிறேன் அந்தத் தாயாரும் எனக்குப் புதிதுயார் எனக் கேட்கிறேன்அவரும் நான் யார் என அதே நேரத்தில் விசாரிக்கிறார்இருவருக்கும் அறிமுகம் நடக்கிறதுஅவர் வெள்ளையம்மாள்பாடாலூர்அதிமுக மகளிர் அணிப் பொறுப்பில் இருந்து விலகி வந்திருக்கிறார்ஏன் அவரெல்லாம் உண்டியலடிக்க வரமாட்டாரா?அய்யோ தாயிநானும் தோளில் கட்சிக் கொடியை சாய்த்துக் கொண்டு செல்பவன்தான்இப்போது முடியவில்லைசொல்கிறேன்பார்க்கிறார்பார்வை சொல்கிறதுஃபிட்நெஸ் சர்டிபிகேட் வாங்கிட்டுதான் கட்சியில் சேர்க்க வேண்டும்அடுத்தமுறை அந்தத் தாய்த் தோழரோடு உண்டியலடிக்க கிளம்பிவிட வேண்டும்
December 22, 2023
ஒன்றியப் பேரிடர் என்று சொல்லுங்கள்
தேசியப் பேரிடர் என்று சொல்ல முடியாது என்கிறீர்கள் திருமிகு நிர்மலாஒன்றியப் பேரிடர் என்று சொல்லுங்கள்அதுதான் சரியானதும் ஆகும்All reactions:
உங்கள் பாச்சா ஒருபோதும் இங்கு வேகாது
கவிதை 04
92 நிறைமாத கர்ப்பிணிகளை மருத்துவமனையில் சேர்த்து
மிக்ஜாம் புயலின்போது
108 ஆம்புலன்ஸ் தொடர்பிழந்த நிலையில்மரங்கள் முறிந்து கிடந்த நிலையில் ஏறத்தாழ 92 நிறைமாத கர்ப்பிணிகளை மருத்துவமனையில் சேர்த்து காவல்துறை நண்பர்கள் காப்பாற்றினர் என்கிற செய்தியை 18.12.2023 நாளிட்ட ”விடுதலை” தருகிறதுஉரியவர்களை நெகிழ்ந்து வணங்குகிறோம்எனக்கு பிள்ளைக்கு கிஷோர் என்று வைத்ததில் மகிழ்ச்சிதான்
நேற்றைய கூட்டத்தின் பாதியிலேயே வெளிவரவேண்டிய சூழல்
என்னோடு கூடவே இன்னொரு நண்பரும் எழுந்து வந்திருந்தார்தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறோம்கேட்கிறார்இவ்வளவெல்லாம் பேசறீங்க பிள்ளைக்குப் பெயரை கிஷோர்னு வச்சிருக்கீங்களேஅதுதான் ஏற்கவே முடியலஎத்தனையோதரம் சொல்லியாகிவிட்டது. ஆனாலும் மீண்டும் சிரித்துக் கொண்டே சொல்கிறேன்லாகூர் சதி வழக்கில் பகத்தோடு கைதுசெய்யப்பட்ட கிஷோரிலாலை ஏனோ எனக்கு நிறையப் பிடிக்கும் தோழர். அதனால்தான்அவர் உங்க கட்சிக்கு வந்தவர் என்பதாலாஇல்லை தோழர்அவர் மகிழ்ச்சியானவர்நீதிபதி தீர்ப்பை சொல்கிறபோதுகூட அதை நகைச்சுவையோடு ஏற்றவர் என்று படித்திருக்கிறேன்அதுமட்டும் இல்லைஅந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதுதங்களது உரிமைகளுக்காக சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்கிறார்கள்சிறைத்துறை எப்படியேனும் உண்ணாவிரதத்தை முறியடிக்க வேண்டும் என்று தண்ணீர்ப் பானைகளில் பாலை ஊற்றி வைக்கிறதுதோழர்கள் பானைகளை உடைக்கிறார்கள்ட்யூப் மூலமாக நீருணவை செலுத்த முயற்சிக்கிறார்கள்தொண்டையில் புண் வந்தால் அப்படி உணவை செலுத்த முடியாதுதொண்டையில் புண் வருவதற்காக கிஷோரிலால் சிவப்பு மிளகையும் கொதிக்கும் நீரையும் குடிக்கிறார்போக மற்ற தியாகிகள் அளவிற்கு இவர் கொண்டாடப்படவில்லைஇதெல்லாமும் சேர்ந்துதான் தோழர்ஆனாலும் அந்தத் தோழர் தமிழ் விரோதிகள் பட்டியலில் இருந்து என்னை விடுவிக்க விரும்பாதவராகவே திரும்பினார்எனக்கு பிள்ளைக்கு கிஷோர் என்று வைத்ததில் மகிழ்ச்சிதான்AllDecember 21, 2023
ஆக CPM குடியரசுத் தலைவரை உருவாக்கிய கட்சியும்கூட
ஒரு இக்கட்டான சூழலில் குடியரசுத் தலைவரைக் கொண்டு வந்ததில் தோழர் PR அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு
1977
குடியரசுத் தலைவருக்கான தேர்தல்
மொராஜி தேசாய்தான் அப்போதைய பிரதமர்
பிரபலமான நடனக் கலைஞர் ருக்மணியை குடியரசுத் தலைவராக்க மொராஜி விரும்புகிறார்
அவர் திறமையானவர் என்பதற்காகவோ அல்லது அந்தப் பதவிக்குப் பொறுத்தமானவர் என்பதற்காகவோ அவர் அவரைக் கொண்டுவர விரும்பவில்லை
அந்த இரண்டையும் கொண்ட எவரையும் மொராஜி விரும்பவில்லை
இவை இரண்டும் இல்லை என்பதால்தான் ருக்மணியை அவர் குடியரசுத் தலைவராக்க விரும்புகிறார்
தான் சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய,
தான் காட்டும் இடத்தில் கையெழுத்திடக் கூடிய ஒரு நபர் அவருக்குத் தேவை
அதை ருக்மணி செய்வார் என்று மொராஜி கருதுகிறார்
ஜனசங்கமும் இடதுசாரிகளும் நீலம் சஞ்சீவி ரெட்டியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்
மொராஜி பிடி கொடுக்க மறுக்கிறார்
காங்கிரசோ ஆளும் கூட்டம் அடித்துக் கொண்டு இந்த விஷயத்தில் இரண்டு பிரிவாகட்டும்
சந்தடி சாக்கில் நாம் ஜட்டியைக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகிறது
தோழர் PR அவர்களை நிறைய தலைவர்கள் மொராஜியிடம் பேசுமாறு கூறுகிறார்கள்
“The old man is not listening to anybody, you do something" என்று வாஜ்பாயி தோழர் ராமமூர்த்தியைக் கேட்கிறார்
ஒரு தோழரை தோழர் ராமமூர்த்தி அழைத்து ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார்
அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை
தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பில் இருந்துதான் இதைத் தருகிறேன்
அந்த நூலும் என்னிடம் இல்லை
அது தோழர் ராமகிருஷ்ணனாகக்கூட இருக்கலாம்
அது இரவு 12 மணி
அந்தக் கடிதத்தை உடனே மொராஜியிடம் சேர்க்க வேண்டும் என்கிறார்
பின்னிரவாக இருப்பதால் தயங்கிய அந்தத் தோழர்
உங்கள் எழுத்து மொராஜிக்குப் புரியாது காலையில் நான் டைப் அடித்து வந்து உங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறேனே என்கிறார்
மொராஜிக்கு தன் எழுத்து புரியும் என்கிறார் தோழர் PR
அந்தக் கடிதத்தில்
மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் பலமாக இருக்கிறது
ஜனதாவிலும் ருக்மணிக்கு ஆதரவில்லை
இடதுசாரிகளும் சஞீவரெட்டியைத்தான் விரும்புகிறார்கள்
எனவே சஞ்சீவரெட்டியே வேட்பாளர் என உறுதிபட சொல்கிறார்
ஆக CPM குடியரசுத் தலைவரை உருவாக்கிய கட்சியும்கூட
30 நாட்கள்தாம் தம்மால் உயிரோடு இருக்க முடியும்
15.12.1987 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் துவங்க இருந்தது
அதன் வரவேற்புக் குழுத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்திஆனால் அந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்டயாலிசிஸ் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்மூன்று நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யவேண்டும் என்கிறார்கள்அவருக்கு தான் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்று புரிகிறதுஒரு பத்து டயலிசிஸ் வரைக்கும்தான் தன்னால் தாங்க முடியும் என்று பார்க்க வந்தவர்களிடம் தோழர் PR கூறுகிறார்எனில்,30 நாட்கள்தாம் தம்மால் உயிரோடு இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்எனவே தன்னால் மாநாட்டிற்கு போக முடியாது என்று கருதுகிறார்அப்போது அவரை கவனித்துக்கொண்ட தோழர் முரளியிடம்தன்னால் மாநாட்டிற்கு போக இயலாது என்றும், ஆகவே தனது உரையை எழுதிக் கொள்ளுமாறும் கூறுகிறார்காங்கிரஸ் அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து உரை இருக்கிறதுகொஞ்ச நேரத்தில் மயக்கம் வருகிறதுமாலை வைகை வருகிறார்ஒரு தள்ளு நாற்காலியில் வைத்து இங்கும் அங்குமாக நகர்த்தியபடியே உரையாடுகிறார்அப்பா DYFI மாநாட்டிற்குப் போனீர்களா?போனேன்மாபேசினீர்களா?பேசினேனேஎவ்வளவு நேரம்?45 நிமிடம்எப்படிப் பேசினீங்க?நல்லா பேசினேன் இந்த இரண்டு வார்த்தைகள்தான் அவர் இறுதியாகப் பேசிய வார்த்தைகள்அரை மயக்கத்திலும்கூட அவருக்கு மாநாடு குறித்த அக்கறைதான் இருந்திருக்கிறதுஅந்த DYFI பிள்ளைகளுக்கு அவரைக் குறித்து கொண்டு சேர்க்க வேண்டும் என்று கட்சி முடிவெடுத்திருக்கிறது என்பது கொஞ்சம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறதுஇரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)