இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 47
December 20, 2023
18.12.2023
1) உண்மையான பயனாளிகளுக்கு செல்லும் இலவசங்கள் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்
தேசத்தை மு நோக்கி கொண்டு செல்லும்
பாஜக நிதி அமைச்சராக யஷ்வந்த் சின்கா இருந்தபோது அவருக்கும் இந்த ஆலோசனைகளை கூறியுள்ளேன்
இப்போது திமுகவிற்கு சொல்கிறேன் காங்கிரசிற்கும் சொல்கிறேன்
ரகுராம் ராஜன் RBI முன்னாள் ஆளுநர் தீக்கதிர் 18.12.2023 *****************************************************************************
2) 44 பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையே இல்லை
மொத்தம் 440 கல்லூரிகள் 1,60,780 இடங்கள் கிட்டத்தட்ட 95,000 சென்ற ஆண்டு 84,812 44 கல்லூரிகளில் 0 மாணவர்கள் 35 கல்லூரிகளில் மிக குறைவு வேல்ராஜ் துணை வேந்தர்
தீக்கதிர் 18.12.2023
*********************************************************************************
சிறையில் அடைக்கப்படும் ஆப்கன் பெண்கள்
ஆண் உறவினர் இல்லை என்றாலோ, பாலியல் அச்சுறுத்தல் இருந்தாலோ சிறைக்கு அனுப்பப் படுவதாக ஐநாவிற்கு தலிபான்கள் தகவல்
விடுதலை 18.12.2023
************************************************************************
December 19, 2023
PM ஏன் தூத்துக்குடிக்கே வரவில்லை?
இந்தியா கூட்டணிதான் தென் மாவட்டங்களைவிட முக்கியமா?
தூத்துக்குடிக்கும் ஸ்டாலின்தானே முதல்வர் என்று PM கேட்டால் என்ன சார் செய்வீங்க?அவர் தூத்துக்குடிக்கும் சேர்த்துதானே சார் PMஅவர் ஏன் தூத்துக்குடிக்கே வரவில்லை?அத்வானி சாருக்கு நன்கு தெரியும்
ஆலயத் திறப்பு விழாவிற்கு தன்னை வரவேண்டாம் என்று சொல்வதற்கு காரணம்
தனது வயது மட்டுமல்லதனக்கு அங்கு கிடைக்கும் வரவேற்பும் வாழ்த்து கோஷங்களும் சிலரால் சகித்துக்கொள்ள முடியாதது என்பதுஅத்வானி சாருக்கு நன்கு தெரியும்இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாடாளுமன்றம் நீட்டிக்கப்படுகிறது
எல்லோரையும் வெளியே அனுப்பியாச்சா அமைச்சரே?
ஆச்சு, அப்படியே மிச்ச்ம் மீதி இருந்தாலும் நாளை அல்லது நாளைமக்காநாள் அனுப்பிடலாம்இனி என்ன மசோதா கொண்டு வந்தாலும் பாஸ் ஆகிடுமாஆமாம்சரி,இனி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாடாளுமன்றம் நீட்டிக்கப்படுகிறது என்று ஒரு தீர்மானம் தயார் செய்அய்யோ அதெல்லாம் முடியாதுசெய், வரது வரட்டும்இப்படியெல்லாம் நடக்காது என்று நம்பும் அனைவருக்கும் ஒரு கடலை மிட்டாய்December 18, 2023
மாநில வானிலை
தென்னகப் பேய் மழை குறித்த வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தாமதமாகக் கிடைத்ததாக முதல்வர் கூறுகிறார்
இதற்குபின் ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிவதும்மாநிலத்திற்கென்று ஏதோ ஒரு வகையில் வானிலை ஆய்வுக்கான அமைப்பு தேவையா?சாத்தியமா? என்பது குறித்தும் கவனம் குவிக்க வேண்டும்இந்த அன்பை மென்று அசைபோட்டு தின்றுவிட்டு போகுமளவு
10.12.2023
சென்ற ஞாயிறு
எனக்கு ட்ரெட்மில் டெஸ்ட் எடுக்கவேண்டி இருந்ததுபலமுறை பயத்தோடே தள்ளிப்போட்ட ஒன்றுவிட்டுவால் உடன்வர முடியாதுகீர்த்தி அப்போதுதான் வந்திருந்தாள். எனவே வேண்டாம் என்று சொல்லி விட்டேன்கலைக்கு நலமில்லைவரக்கூடாது சொல்லியாகி விட்டதுவரவும் இயலாதுதோழர் கணேஷ் நிறைய வேலைகளோடு இருப்பதால் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லவில்லைசிறுகனூர் போகும்போது கணேஷ் அழைக்கிறார்எங்க வந்துட்டு இருக்கீங்க? இறங்கியதும் சொல்லுங்க. வந்து கூட்டீட்டு வரேன்வேலைகளைப் பாருங்க தோழர். ஒன்றும் இல்லைஒன்றும் இல்லைதான். வந்ததும் சொல்லுங்கஎப்படிநான் தினமும் லேபில் கேட்டபடிதான இருக்கேன்கலங்குதுட்ரெட்மில் ஏறப் போகிறேன்தோழர் இதப் புடிச்சுக்கோங்கசும்மா மெதுவா ஸ்டெப் வைங்கமுடிலைனா சொல்லுங்க, ஒன்றும் இல்லைபயப்படாதீங்கநல்லப் புடிச்சுக்கோங்கஇங்கதான் இருக்கேன்ஆச்சரியப்படுகிறார்கள்12 நிமிடங்கள் நடந்திருக்கேன்எனக்கு ஆச்சரியம் இல்லைகணேஷ் இருக்கப்ப வேற எப்படிமுடித்து வெளியே வந்தால்கலையும் சரவணனும்ஏம்புள்ள?முடியலைல ரெஸ்ட் எடுக்காம?சரவணன்தான் இழுத்துட்டு வந்தார்சாப்பிட உட்கார்ந்திருக்கோம்அலைபேசிசுதாகுப்புசாமிகலையும் கணேசும் வந்துட்டாங்கதானேசொல்லைலன்னு சொன்னேனே. வந்துருப்பாங்கன்னு எப்படி நம்பற?இன்ஸ்டிங்ட் தோழர்விட்டு தோழர் கீர்த்தியால முடியாது. அவங்க வந்திருப்பாங்கன்னு இன்ஸ்டிங்க்ட்வரலைனாநான் இருந்திருப்பேனே தோழர்அய்யோ,காலமேஎதற்கிப்படி என்னை கடனாளியாக்கிக் கொண்டே இருக்கிறாய்ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறாய்?இல்லைநடந்ததை எழுதுகிறேன்நீங்கள் உணர்ச்சிவசப் பட்டால் நான் பொறுப்பல்லயாருக்கு வாய்க்கும்?கொஞ்சம் இந்த அன்பை மென்று அசைபோட்டு தின்றுவிட்டு போகுமளவு இயற்கை வாய்ப்புத் தர வேண்டும்இப்படியான ஒரு பெருமழை குறித்து
இப்படியான ஒரு பெருமழை குறித்து குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்னால் கண்டுபிடித்து சொல்ல முடியாதா என்ற கேள்விக்குஓரளவு இப்படி இருக்கும் என்பது போன்ற கணிப்புகளுக்குள் வந்துவிடலாம்ஆனால் இது இயற்கைமாறும்எனவே ஐந்து நாட்களுக்கான கணிப்பை எடுத்துக் கொள்வதே சரி என்கிறார் ரமணன்
இந்த மழையளவு ஒரு மழையை பார்த்தவர் யாரும் இந்தியாவில் இல்லை
ஒரே நாளில் இந்தியா பெற்ற பெருமழை அளவு 103.6 செமீ இது நிகழ்ந்த இடம் சிரபுஞ்சிநிகழ்ந்த ஆண்டு 1876 என்ற தகவல்களை திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தருகிறார்எனில் இது நிகழ்ந்து 147 ஆண்டுகள்இந்தியாவில் 147 வயதுடைய யாரும் இப்போது இல்லைஆக இப்போது காயல்பட்டிணத்தில் பேயென 95 செமீ அளவிற்கு கொட்டித் தீர்த்த மழையளவு ஒரு மழையை பார்த்தவர் யாரும் இந்தியாவில் இல்லை
உன் பல்லை நீ துலக்குவதுபோலவே
நமது சட்டமன்ற அவைத் தலைவர் திரு அப்பாவு அவர்கள் குடையைப் பிடித்தபடி நிவாரணப் பணிகளைப் பார்வை இடும் படம் ஒன்று கிடைத்ததுஅழகாகவும் இருந்ததுமிக இயல்பான கிராமத்து மனிதனைப் போல இருந்ததுவைத்திருந்தேன்நான் பார்த்த ஐந்தாறு படங்களிலும் அவர் குடையை அவரே பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்திருந்தேன்அவர் நதியில் பூ அள்ளிப் போடும்போது அவர் கைகளிலும் அவர் குடை இல்லை மற்ற சமயங்களில் அவர் கையில் அவர் குடைஇதையும் எழுதி இருந்தேன்சில நண்பர்களுக்கு கோவம் வந்ததுவரவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்புஅவர் பற்களை அவரே துலக்குகிறார் என்றுகூட எழுதுவோமா என்றுகூட வந்ததுமகிழ்ச்சியாக இருந்ததுஎன்ன வருத்தம் எனில்இந்த இடத்தில் எல்லாத் தலைவர்களையும் சொல்லவில்லைபெருமழை நேரங்களிலும்பேரிடர் காலங்களிலும்கூடஅரை இஞ்ச் பௌடரோடுஅடுத்தவர் கொடைபிடிக்க கைவீசி நடப்பவர்களைப் பார்த்தும்உன் பல்லை நீ துலக்குவதுபோலவே உன் குடையையை நீதானே பிடிக்க வேண்டும் எனகோவம் கொள்வதில்லையே என்பதுதான்
அவரே குடையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்

மழை கடுமையாகப் பெய்துகொண்டு இருக்கிறது
அவைத் தலைவர்தான் ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்
பொறுப்புணர்ந்து வருகிறார்
நான் பார்த்த நான்கைந்து படங்களிலும் அவரே குடையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்
16.12.2023
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)