நமது சட்டமன்ற அவைத் தலைவர் திரு அப்பாவு அவர்கள் குடையைப் பிடித்தபடி நிவாரணப் பணிகளைப் பார்வை இடும் படம் ஒன்று கிடைத்ததுஅழகாகவும் இருந்ததுமிக இயல்பான கிராமத்து மனிதனைப் போல இருந்தது
வைத்திருந்தேன்நான் பார்த்த ஐந்தாறு படங்களிலும் அவர் குடையை அவரே பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்திருந்தேன்அவர் நதியில் பூ அள்ளிப் போடும்போது அவர் கைகளிலும் அவர் குடை இல்லை மற்ற சமயங்களில் அவர் கையில் அவர் குடைஇதையும் எழுதி இருந்தேன்சில நண்பர்களுக்கு கோவம் வந்ததுவரவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்புஅவர் பற்களை அவரே துலக்குகிறார் என்றுகூட எழுதுவோமா என்றுகூட வந்ததுமகிழ்ச்சியாக இருந்ததுஎன்ன வருத்தம் எனில்இந்த இடத்தில் எல்லாத் தலைவர்களையும் சொல்லவில்லைபெருமழை நேரங்களிலும்பேரிடர் காலங்களிலும்கூடஅரை இஞ்ச் பௌடரோடுஅடுத்தவர் கொடைபிடிக்க கைவீசி நடப்பவர்களைப் பார்த்தும்உன் பல்லை நீ துலக்குவதுபோலவே உன் குடையையை நீதானே பிடிக்க வேண்டும் எனகோவம் கொள்வதில்லையே என்பதுதான்
Published on December 18, 2023 17:12