இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 49
November 3, 2023
பாஜக நிலைக்கு முரண்படுகிறார் ரவி என்பது ஒன்று
தோழர் சங்கரய்யா சுதந்திரப் போராட்ட வீரர்நாட்டு மக்களுக்காக உழைத்தவர்அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்பதுதான் தமது நிலை என்றும்ஏன் மறுக்கிறார் என்பதற்கு ஆளுனர் விளக்கம் தர வேண்டும் என்றும் அண்ணாமலை கூறுகிறார்அண்ணாமலை பாஜக தலைவர் என்ற வகையில் இது பாஜகவின் நிலைஇரண்டுதான்பாஜக நிலைக்கு முரண்படுகிறார் ரவி என்பது ஒன்றுஅல்லதுஅண்ணாமலையை பாஜக தலைவராக ரவி அங்கீகரிக்கவில்லை என்பது இரண்டு
பட்டம் பெற்ற குழந்தைகளையும் அறிஞர்களையும் அழைத்து
தோழர் சங்கரய்யா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுனர் கலந்து கொண்ட காமரசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்திருக்கிறது தமிழ்நாடு அரசுஉணர்வுப் பூர்வமான நன்றிஅரசு ஒரு விழாவினை ஏற்பாடு செய்துபட்டம் பெற்ற குழந்தைகளையும் அறிஞர்களையும் அழைத்துமுதல்வர் வாழ்த்த வேண்டும்
November 2, 2023
65 குழந்தைகளுக்கான பள்ளியைக் கட்டுவது சிரமம் அல்ல
பழைய பேராவூரணியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் போராட்டத்தை நடத்திய செய்தியை 01.11.2023 தீக்கதிர் சொல்கிறதுஅந்தத் தொடக்கப் பள்ளியில் ஏறக்குறைய 65 குழந்தைகள் படிக்கிறார்கள்அது ஒரு ஈராசிரியர் பள்ளிஐந்து வகுப்பறைகளைக் கொண்ட அந்தப் பள்ளிக் கட்டிடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் போனதும்தகரக் கொட்டாய் போடப்பட்டு பள்ளி இயங்கி இருக்கிறதுமழைநீர் உள்ளே வரவும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்திருக்கிறார்கள் பெற்றோர்கள்சிறு குழந்தைகள் என்றால் சத்தம் போடுவார்கள்சொல்லச் சொல்ல சொல்வார்கள்தகரக் கொட்டகைஇந்தச் சத்தத்தை ஒருமாதிரி எதிரொலிக்கும்அதுவும் குழந்தைகளை எரிச்சல்படுத்தும்மன உளைச்சலைத் தரும்இதை உணராதவர்களா கல்வித்துறை அதிகாரிகள்சட்டமன்ற உறுப்பினர் அலைபேசிவழி தலையிட்டுவிரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்த பின்பே மக்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி இருக்கிறார்கள்ஒரு சட்டமன்ற உறுப்பினர் இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந்தார்?அழைத்து வைது அனுப்புங்கள் ஸ்டாலின் சார்இத்தனை சீக்கிரம் மருத்துவமனையைக் கட்ட முடிந்த உங்களால்65 குழந்தைகளுக்கான பள்ளியைக் கட்டுவது சிரமம் அல்லவிரைந்து கட்டித் தாருங்கள்#சாமங்கவிய 46நிமிடங்கள்02.11.2023#கல்விedn
November 1, 2023
தமிழ் நாடு அரசு அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற முனைப்...
தமிழ் நாடு அரசு அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற முனைப்போடு
ஏராளம் செலவழித்து ஏராளமாக திகழ்ச்சிகளை நடத்துகிறது
அரசு நடத்தும்
அல்லது அரசின் ஏதோ ஒரு வகையிலான ஒத்துழைப்போடு நடைபெறும்
புத்தகக் கண்காட்சிகள் உள்ளிட்ட கலைவிழாக்களை அரசு இன்னும் எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டும் என்று கேட்கிறோம்
மயிலாடுதுறையில் நடந்த கலைத் திருவிழாவில் ஏகத்திற்கும் குளறுபடிகள் என்று செய்திகள் வருகின்றன
ஒன்றிய அல்லது வட்ட அளவில் வெற்றி பெற்ற குழந்தை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் உண்மை எனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழாக்களில் பங்கேற்பவர்களின் பட்டியல் நியாயமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்
துண்டு போடறான் என்று சொன்னாலும் கவலை இல்லை
ஏன் நான் இல்லை என்று ஒவ்வொருவருக்கும் உள்ள கேட்கும் உரிமையை உள்ளடக்கியதே இது
இது குறித்து தோழர் Sukirtha Rani இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுப்பிய கேள்வியையும்
"புத்தகம் பேசுகிறது அக்டோபர் 2023" தலையங்கத்தையும் வழிமொழிகிறேன்
All reaதினமும் 100 கொடிக்கம்பங்கள் ஊன்றி
01.11.2023 முதல் நூறு நாட்களுக்கு
தினமும் 100 கொடிக்கம்பங்கள் ஊன்றி பாஜக கொடியேற்றப்படும் என்று திரு அண்ணாமலை கூறினார்அதன்படி நேற்று எங்கெங்கு எத்தனைக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு பாஜக கொடிகள் ஏற்றப்பட்டன?ஒருக்கால் பைனலில் ஜெயிச்சுட்டாங்கன்னா...?
ஆப்கானிஸ்தான் இந்த அடி அடிக்கிறாங்களே
ஒருக்கால் பைனலில் ஜெயிச்சுட்டாங்கன்னா...?கொண்டாடுவோம்October 31, 2023
முதல்வரே வேந்தராக வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பியுங்கள்
தோழர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு ஆளுனர் இசைவளிக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்
தேவையே இல்லைமுதல்வரே வேந்தராக வேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பியுங்கள்எல்லாம் சரியாகும்இனி நமக்கு பொதுவாக நான்கு வகைகளில் மரணம் வரலாம்
அநேகமாக அப்போது எனக்கு வயது ஐம்பது இருக்கும்
வண்டி ஸ்டாண்டிலிருந்து ஸ்டேண்டை எடுக்காமல் கவனப்பிசகோடு வண்டியை எடுத்ததில் இடதுகால் கட்டைவிரல் நகம் போனதுஅப்போது மருத்துவர் அமரவைத்து சொன்னார்50 கடந்திட்டோம்இனி நமக்கு பொதுவாக நான்கு வகைகளில் மரணம் வரலாம்1 மாரடைப்பு2 கால் கட்டை விரல் நகம் விழுதல்3 சளி4 பாத்ரூமில் வழுக்கி விழுதல்இதில் மாரடைப்பை விடுங்கள்மற்ற மூன்றிலும் கவனமாக இருங்கள்கடலூர் தோழர் ஜான் விக்டர்குளியலறையில் வழுக்கி விழுந்து மரணமடைந்திருக்கிறார்குறைந்தபட்சம் இன்னும் இருபத்தி ஐந்து ஆண்டுகளேனும் கட்சி வேலை பார்த்திருக்க வேண்டியவர்பேரிழப்புகவனமாக இருப்போம்நகம் காயப்படாமல்சளியை அலட்சியமாக விடாமல்குளியலறை வழுக்காமல் கவனமாக இருப்போம்October 30, 2023
இப்படிக்கூட ஐ லவ் யூ சொல்லலாமா கார்த்திக்
குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்
”Save the children" அமைப்பின் தலைவர் ஜேசன் லீ தருகிற புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து கணக்கில் கொள்ளப்பட்ட 22 நாடுகளில் மொத்தம் 2674 குழந்தைகளும்2021 ஆம் ஆண்டில் கணக்கில் கொள்ளப்பட்ட 24 நாடுகளில் 2515 குழந்தைகளும்2022 ஆம் ஆண்டு அதே 24 நாடுகளில் 2985 குழந்தைகளும்கொல்லப்பட்டிருக்கிறார்கள்ஆனால் 07.10.2023 முதல் 29.10.2023 வரை மட்டும்காசாவில் மட்டும் 3300 குழந்தைகளும்மேற்குக் கரையில் மட்டும் 36 குழந்தைகளும் கொல்லப்படிருப்பதாக அவர் கூறுகிறார்அய்யங்கள் அதிர்ச்சி அளிக்கின்றனஏற்கனவே அங்கு இளைஞர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவுஇப்போது ஏறத்தாழ 3500 என்று சொல்லப்படும் எண்ணிக்கை கூடக்கூடும்ஏற்கனவே இளாஇஞர்கள் இல்லைஇப்போது குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டால்ஒரு கட்டத்தில் காசாவில் மக்களே இல்லை என்றாகும் ஆபத்து இருக்கிறதுபோக வருடத்திற்கு உலகில் சராசரியாக 3000 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் என்ற 31.10.2023 நாளிட்ட தீக்கதிர் தகவல் எழுப்புகிற அச்சம்இது இப்படி எனில்,வருடா வருடம் நோயினால், சத்துக் குறைபாட்டினால், விபத்தினால் இறக்கிற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவுஇத்தனைக் குழந்தைகள் வருடா வருடம் ஏதோ ஒரு வகையில் இறப்பதை சகிப்பது குற்றம்
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)