அன்பின் கார்த்திக்,வணக்கம்மகளும் பேத்தியும் நலமா?“நித்தம் ஒரு வானம்” பார்த்துவிட்டு நான் ரசித்த ஒவ்வொரு பகுதியாக கலையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்ஒன்று தெரியுமா கார்த்திக்,அதற்கு முன்னதாகவே அவள் ஆறேழுமுறை அந்தப் படத்தைப் பார்த்திருந்தாள்இதுதான் சரியான மொழி என்று சொல்வதற்குரிய சினிமா மொழி குறித்த ஞானமெல்லாம் எனக்கில்லைஆனால், நான் விரும்புகிற, கேட்கத் தவமிருக்கிற ஒரு மொழிக்கு மிக நெருக்கமான மொழியோடு ஒரு படத்தைத் தந்திருக்கிறீர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் பொத்துக் கொள்வேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது வானம்சன்னமாக பயத்தைக் கொடுக்கக்கூடியக் காற்றுகண்ணில் பட்ட ஒரே ஒரு நேரக்காப்பாளரும் தூங்க மூஞ்சிநேரக் காப்பாளருக்கு ஆங்கிலம் தெரியாதுஇவனுக்கு இந்தி தெரியாதுஅந்த இடத்தில் தன் மொழியில் ஒருத்தி அழுதுகொண்டு இருப்பதேகூட எவ்வளவு ஒரு நம்பிக்கையை இவனுக்குத் தருகிறதுஇந்த நம்பிக்கை இருக்கிறது பாருங்கள், மொழி சார்ந்து இன்னொரு இடமும் இருக்கிறதுகொல்கத்தாவில் வாடகைக் காரில் போகிறபோது சுபா ஓட்டுனரின் மொழியான மலையாளத்தில் பேசும்போது அந்த ஓட்டுனருக்கு ஏற்படும் மகிழ்ச்சிஇந்த இரண்டு இடங்களும் கூர்மையான மொழிக் கூறுகள்அர்ஜுனுக்கும் சுபாவிற்கும் அப்பன் வயது எனக்குஇந்த ரெண்டு குழந்தைகளும் ஒன்றாகப் பேருந்து ஏறாதா என்று ஏங்க வைத்துவிட்டீர்கள் கார்த்திக்இவள் கொல்கத்தா போகவில்லை என்று அறிய வருகிறபோது மனது கிழிகிறதுஒரு வழியாக அவளும் கொல்கத்தா கிளம்ப அப்பாடா என்று இருக்கிறதுஅந்த இருவருக்கும் இடையே அந்த அர்த்த ராத்திரியில் அந்தப் பேருந்து நிலையத்தில் நடக்கும் சண்டை இருக்கிறது பாருங்கள்அது எங்கள் வீட்டு சுவரில் எதிர்த்த வீட்டுக் குழந்தை கிரிஷ் வரைந்த கிறுக்கலையொத்த பேரழகுகவிதை, கவிதைஅந்த மீனாட்சிப் பொண்ணுமைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பவனிடம்உங்களோடு ரெண்டு நிமிஷம் பேசனும், கொஞ்சம் பயப்படாம வாங்க என்று அவனது டையலாகையே திருப்பி அவனுக்குக் கொடுப்பதும்பைக்கில் வேகமாக போகும்போதுஇவ்வளவு சீக்கிரமா போகனுமா? எனக் கேட்பது இருக்கிறதேஅந்தக் காற்றுஅந்தக் காற்றில் அலைபாயும் கூந்தல், உடைஅந்த உச்ச டெசிமல் குரல்இப்படிக்கூட ஐ லவ் யூ சொல்லலாமா கார்த்திக்ரிஜிஸ்டர் ஆபீஸ்இந்தப் பையன் அவனது தோழியிடம், மீனாட்சி என்ன நினைப்பாளோ அப்படி இப்படி என்று உழட்டிக்கொண்டு இருக்கும்போதுஅவன் கன்னத்தைத் திருப்பி அங்க பார் என்று எந்தச் சலனமும் இல்லாமல் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் மீனாசியைக் காட்டும் இவனது தோழிஅய்ய்ய்யோஅப்படி ஒரு கவிதைமதி வரும் காட்சிகள் எல்லாம்ஒரு கிராமத்துப் பெண்ணின் சுட்டித்தனத்தை, அப்பன் மீது அவளுக்குள்ள அன்பை அக்கறையைஒரு நூல் அப்படி இப்படி நகர்ந்திருந்தால் அடங்காப் பிடாரியாக மாற்றியிருக்கும்பார்ப்பதற்கு எளிதாகத் தோறும்கம்பிமேல் நடந்திருக்கிறீர்கள்ஒருகட்டத்தில் இருந்து இந்த இரண்டு கழுதைகளும் (அர்ஜுனும், சுதாவும்) காதலித்து விடாதுகளா என்று ஏங்க வைத்திருக்கிறீர்கள்சொல்லிட்டு வரமாட்டியா? எங்கெங்க தேடறதுபதற வேண்டி இருக்கு என்று கத்திக் கொண்டிருப்பவனை தோள்சுற்றி அணைக்கும் இடம் இருக்கிறது பாருங்கள்அய்யோ அய்யோஅவளது முன்னாள் காதலனை பார்த்து அறைகிற இடம் வரைக்கும் சரிஅந்தப் பூந்தொட்டியை எடுத்து காரில் போட்டுவிட்டு அர்ஜுன் கையைப் பிணைத்துக் கொண்டு ஓடுகிற இடம் இருக்கிறதேஒரு அழகான கவிதையை இப்படி யாரேனும் காட்சிப் படுத்திவிட மாட்டார்களா என்று ஏங்கியதுண்டுபார்க்க வாய்த்திருக்கிறது அப்படியாக கலையிடம் சொல்லிக் கொண்டே வரும்போது“தினமும் சந்தோசமா ’குட் நைட்’ சொல்லி தூங்க வைத்துடுவேன். காலையில் ‘குட் மார்னிங்’ சொல்ல எழுப்பும் முன்னர் ஒரு பயம் கவ்வும்” என்று ஜீவா சொல்லும் இடத்தை சொல்கிறேன்அழுகையின் கீற்றாசின்ன விசும்பலாயூகிக்க முடியவில்லைபாஸ் பட்டன் தானாகவேத் தன்னை அழுத்தி எங்கள் உரையாடலை கொஞ்சம் நிறுத்துகிறது அவளே வருகிறாள்யாழினி போகும்வரைக்கும் நான் அனுபவித்த கொடுமைப்பா. இரவில் ரெஸ்ட்ரூம் போக எழும்போதும் இருக்கிறாளா என்று பார்ப்பேன். எதிரிக்கும் இந்த நிலை கூடாது சாமி” என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள படாத பாடு படுகிறேன்இல்ல பாப்பா, அது இது என்று ஏதேதோ உளறி மடைமாற்ற முயற்சி செய்கிறேன்அதிகபட்சம் நான்கு பௌர்ணமிகள் என்ற அளவிலான உத்திரவாதத்தோடு கைக்குழந்தையை மருத்துவர் அறையில் கொண்டு வந்தவள் அவள்ஜீவா அப்படி சொல்ல சொல்ல மொட்டை அடித்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் என் மரணம் தாண்டியும் வாழவேண்டும் என்று இயற்கையோடு உரையாடலை என்னையறியாமல் செய்திருக்கிறேன் என்பதுஎன் பைத்தியக்காரத் தனமா?இல்லை கார்த்திக், அது உங்களது சினிமா மொழியின் வெற்றி,”சினிமாத்தனம்” என்று சிலவற்றை ஒதுக்கித் தள்ளிவிடும் பொதுப்புத்தி உண்டுதான்உறங்கும் அனைவரும் எழுவோமா தெரியாது?ஆனால், அப்பாடா, இன்று எழுந்துவிட்டாள் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிலை இருக்கும் எனில்,வேண்டாம் கார்த்திக்,எதிரிக்கும் அப்படி ஒரு நிலை வேண்டாம். அது ஒரு கடுமையான வலி. அந்த வலியை அப்படி ஒரு நேர்த்தியோடு சினிமாவழி கொண்டு வந்திருக்கிறீர்கள்அதில் நடித்த அனைவருமே வாழ்ந்திருக்கிறார்கள்வாழ வைத்திருக்கிறீர்கள்இந்தப் படத்தை சரவணன் (சரவணன் கலையின் இணையர்) பார்த்தால் ஜீவா அனுபவிக்கிற இந்த வலியத்தான் அப்போது கலை அனுபவித்தாள் என்றோ அல்லது கலையோட வலியை ஜீவாவிடம் பார்க்கிறேன் என்றோ கூறியிருப்பார் அப்படி ஒரு ஞானம்மதி எபிசோடில் உங்களையும் அறியாமல் கொஞ்சம் நாடகத்தனம் இருக்கிறது என்பதைக்கூட எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகத்தான் சொல்ல வேண்டியதாகிறதுமகிழ்ந்திருங்க கார்த்திக்அன்புடன்,இரா.எட்வின்28.10.2023
Published on October 30, 2023 20:59