இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 52

July 26, 2023

இப்படியெல்லாம் வெறுக்க வேண்டிய அவசியமென்ன”

 


”இப்படியெல்லாம் வெறுக்க வேண்டிய அவசியமென்ன”என்று கேட்டிருக்கிறார் ஐரோம் ஷர்மிளாஇதனை,மக்களை நேசிக்க விடாமல் உங்களைத் தடுப்பதென்ன என்றும் கொள்ளலாம் என் அன்பிற்குரிய திரு நரேந்திரர்ஷர்மிளாவின் விரல்களில் ஒன்று என்னை நோக்கியும் நீள்வதை உணர்ந்திருக்கிறேன் அதனால்தான் இத்தனைக்குப் பிறகும் உங்களை அன்பிற்குரியவர் என்று என்னால் விளிக்க முடிகிறதுஎன்னதான் ஆயிற்று உங்களுக்கு? என்றெல்லாம் கேட்கிற அளவிற்கு கிறுக்கெல்லாம் இல்லை நான்நீங்கள் அப்படித்தான்ஆனாலும் எங்களுக்கு இரண்டு இருக்கிறதுமக்களளைச் சந்திப்பது என்பது ஒன்றுமுடியுமால் உங்களை அசைக்கவைத்து செத்துக்கொண்டிருக்கிற மக்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிப்பது என்பது இரண்டுபோகிற இடமெல்லாம் குறளைச் சொல்கிறீர்கள்குறள் மீது கொஞ்சமேனும் உங்களுக்கு மரியாதை இருக்குமானால் தயவு செய்து 541 வது குறளையும்அதற்கான சாலமன் பாப்பையாவின் விளக்கத்தையும் வாசியுங்கள்“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்து செய்வதே முறை”இது அந்தக் குறள்”குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பு இல்லாது,நடு நிலையோடு,நூல்வழி ஆராய்ந்து,குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதேநேர்மையான ஆட்சி”இது அந்தக் குறளுக்கு பாப்பையா தரும் விளக்கம்பாப்பையா உங்களுக்க வேண்டப்படாதவரும் அல்லமணிப்பூர் கலவரம் குறித்து ஆராய்ந்து குற்றவாளிகளைத் தண்டியுங்கள்அவர்கள் நமது வாக்குகள் என்று தவறினீர்கள் எனில்காலம் மக்களை சரியாக வழிநடத்தும்#மணிப்பூர்வடகிழக்குஇந்தியாநரேந்திரர்#சாமங்கவிய ஒன்றரைமணி26.07.2023
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2023 10:05

என்ன பயம் திரு நரேந்திரர்?

 அத்தனை ஆயிரங் கோடியைக் கொட்டி நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியாயிற்று

உங்கள் மனங்குளிரப் பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டிடம்புதிய அரண்மனையைத் திறக்கும்போது அந்நாட்டின் சக்கரவர்த்திக்கு தரப்பட்ட அத்தனை மரியாதையையும் ஏறத்தாழ உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி கொடுத்தாயிற்றுஆகமத்திற்கு உட்பட்ட வைணவக் குருக்கள்ஆகமத்திற்குள் வராத சைவ சன்னிதானங்கள் உள்ளிட்டுஅனைவரையும் உள்ளடக்கியஅனைத்து யாகங்களையும் நடத்தி ஏறத்தாழ உங்களுக்காகவே நீங்கள் கட்டிய அரண்மனையொத்த நாடாளுமன்றத்தின் நீங்கள் ஆசைப்பட்டு பெற்ற செங்கோல் இருக்கும் தர்பாருக்குள் வந்து பரிபாலிக்கஎன்ன பயம் திரு நரேந்திரர்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2023 09:14

பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்

 ஒரு மரம் விழுந்தால் கொஞ்சம் சுற்றுப் பகுதியில் அதிர்வுகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

மணிப்பூர் என்பது இந்தியா என்ற ஒரு உடலின் ஒரு அங்கம்ஒரு உடலின் ஒரு அவயத்தில் ஊறு ஏற்பட்டால் அது அடுத்தடுத்த அவயங்களை பாதித்து மொத்த உடலையும் காவு கேட்கும்இந்த உண்மையை மணிப்பூர் கலவரமும் நமக்கு உணர்த்த ஆரம்பித்துள்ளதுமணிப்பூர் கலவரத்தின் அதிர்வுகளை மிசோரமும் அசாமும் உணர ஆரம்பித்திருக்கின்றனமிசோரத்தில் உள்ள பாம்ரா என்ற அமைப்பு மெய்தி மக்கள் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கிறதுசாலை வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் மெய்தி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்மிசோரத்தில் உள்ள மெய்தி மக்களில் பெரும்பாலானோர் அசாமில் இருந்து சென்றவர்கள்எனவே அசாமில் உள்ள ”மணிப்பூர் - அசாம் மாணவர் கூட்டமைப்பு” இதனால் எரிச்சலடைந்துள்ளதுஅசாமில் வசிக்கும் மிசோரம் மக்கள் உடனடியாக அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறதுஇந்த நிலையில்,”பாம்ரா” அமைப்பினரை அழைத்து அவர்களோடு உரையாடலை நடத்திய பின்புமெய்தி மக்கள் மிசோரமைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார்இந்த அளவில் மெல்லிசாக ஒரு அப்பாடா போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தால்அதற்கும் வழி இல்லைமணிப்பூரில் குக்கிகளுக்கு தனி நிர்வாகக் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஜோரம் தங்கா கேட்கிறார்மணிப்பூர் பழங்குடியினருக்கும் மிசோரம் பழங்குடியினருக்கும் உறவு இருக்கும் நிலையில் இது மிசோரத்தை அகண்ட மிசோரமாக்கும் முயற்சி என்று இன்னொரு புகைச்சல் கிளம்பியுள்ளது”நான் இந்தியாவை நன்கு உணர்ந்திருக்கிறேன். என்ன செய்தால் இந்தியாவின் பகுதிகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது எனக்குத் தெரியும்.வடகிழக்கு இந்தியாவில் நீங்கள் ஒரு மோசமான காரியத்தை ஆரம்பித்து விட்டீர்கள். அது இந்தியாவிற்கு நல்லதல்ல. உங்களுக்கும் நல்லதல்ல.எனவே அதை உடனடியாக நிறுத்துங்கள்” என்றுஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் ராகுல் கூறியதாக ”லிபர்டி” யூட்யூப் சேனலுக்கான ஒரு நேர்காணாலில் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் கூறுகிறார்எனில்,இரண்டு புலனாகிறதுஇதை இவர்கள் திட்டமிட்டு ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஒன்றுஇதை நன்கு உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார் ராகுல் என்பது இரண்டுஎன்ன செய்யலாம்?ஒரு மாபெரும் போராட்டம் தேவைஅடிக்கடி சசிகாந்த் சொல்வதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட வேண்டும்பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்அவர்களை நீங்கள் தடுப்பாட்டதை ஆட வையுங்கள்அல்லது தேசம் எரிகிறது. அந்நிய சக்திகள் ஆடுகிறார்கள். எங்களைவிட்டால் ஆளில்லை என்று வந்து விடுவார்கள்நம் மக்கள் இளகியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2023 05:40

July 17, 2023

முகவரிகள்





1பெர்லின்Flat D3 No 148,Parkside Villa,First cross street,Annai Indira Nagar,Okkiyam Thoraipakkam,Chennai 600096
""'""'""""""""""""""""""""""""""""'"""""''"""""""""""""" 
2
EniyanF3, Pasha's residencyNo.12, West Anna Nagar 5th Street, Opposite to Aishwarya Vinayagar temple, Narayanapuram, Pallikaranai, Chennai 600100
**********************************************************
3ஜி.திரேசா கேத்ரின்,20/52, ராமலிங்க நகர்,சுப்பராயுலு நகர் பின்புறம்,கடலூர் 607002
*********************************************************** 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2023 19:52

June 4, 2023

இன்னும் காடாக்க

 



காட்டைஎதற்குதிருத்திக் கொண்டிருக்கிறாய்?இன்னும் காடாக்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2023 00:42

கீழே விழுந்து செத்தவன் பாக்கெட்டிலிருந்து

 



ரயில்கள் மோதிக்கொண்டபோது கீழே விழுந்து செத்தவன் பாக்கெட்டிலிருந்துகீழே விழுந்த செல்போனில் அவனுக்கு முத்தத்தை அனுப்பியிருந்த அந்த இளைய குழந்தைக்கானது என் கண்ணீரும் இரங்கலும்A
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2023 00:41

May 21, 2023

அமைச்சர் மாற்றத்தோடு தேர்தல் வேலையைத் தொடங்கி இருக்கிறது பாஜக

"The shifting of Riijiju from Law Ministery should end conflict with the judiciary"என்ற தலைப்பில் தொடங்குகிறது 20.05.2023 நாளிட்ட THE HINDU வின் தலையங்கம்நேற்று முன்தினம் ஒன்றிய சட்ட அமைச்சர் திரு ரிஜிஜு சட்டத்தில் இருந்து புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்அதைப் பற்றி எழுதும்போதுதான் தனது தலையங்கத்திற்கு “நீதித்துறையோடு உள்ள முரண்களை இந்த மாற்றம் சரி செய்யும் ” என்று தலைப்பிடுகிறதுஅதற்கான காரணங்களைக் குறித்து உரையாடும்போது,"To tone down his penchant for confrontation"முரண்களோடு அவருக்கு இருக்கும் ஆசையை குறைப்பதற்காகவே இந்த மாற்றம் என்கிறதுநிறைய முரண்பட்டார்தான்தொடக்கத்தில் இருந்தே உச்சநீதிமன்றத்தோடு முரண்பட்டவர்தான் ரிஜிஜு. இப்போது ஏன் அவரை மாற்ற வேண்டும்அவரது முரண்களும் விமர்சனங்களும் தவறு என்று பிரதமர் உணர்ந்ததால் இந்த மாற்றமா என்றால் நிச்சயமாக இல்லைநான்காண்டுகளாக அவரது முரண்களை விமர்சனங்களை ரசித்துக் கொண்டிருந்தவர்தான் அவர்தேர்தலுக்கு ஒரு வருடம்தான் இருக்கிறதுஎனவே உச்சநீதிமன்றத்தோடான ஒன்றிய அரசின் இந்த ஒத்திசைவை 2024 தேர்தாலோடு பொருத்திப் பார்க்க வேண்டும்தனது பிரதிநிதி ஒருவர் மூலம் உச்சநீதிமன்றத்தோடு ஒன்றிய அரசு உரையாடியிருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவே ஊடகவியலாளார் கோடீஸ்வரன் கருதுகிறார்அந்த உரையாடலின் விளைவாக நீதித்துறைக்கும் ஒன்றிய அரசிற்கும் ஒரு ஒத்திசைவு ஏற்பட்டிருப்பதாகவே படுகிறதுஅதன் விளைவுதான் சட்ட அமைச்சரின் மாற்றம்ஏற்கனவே நீதியரசர் ஜோசப் உள்ளிட்டோரது உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு தடையாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் ரிஜிஜுசில நீதிபதிகளின் நியமனங்கள்நீதியரசர்கள் பி.கே மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்வந்திருக்கும் சட்ட அமைச்சர் குறித்தும் நிறைய விமர்சனங்கள் உண்டுஅவரைத் தகுதியற்ற அமைச்சர் என்றே 20.05.2023 நாளிட்ட தீக்கதிர் தலையங்கம் கூறுகிறதுஒரினச் சேர்க்கை குற்றமல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் சொன்னபோது அதை எதிர்த்தவர் இன்றைய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால்2012 இல் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தவர் பிறகு உச்ச நீதிமன்றம் 2013 இல் ஓரினச் சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்ததுநீதிபதிகள் நியமனம்நீதித்துறையோடு முரண்பட்ட அமைச்சர் மாற்றம்இந்தப் பக்கம்அதானி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் தற்போதைய நிலைசெந்தில்பாலாஜி மீதான விசாரனைஇப்படி கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பமாகி உள்ளனஇதுமாதிரியான தொடர்நிகழ்வுகள் தேர்தலுக்கான பிஜேபியின் தேர்தல் வேலைகள் என்பதைப் புரிந்துகொள்ளாவிட்டால்எதிர்க்கட்சிகள் அதற்கான விலையை வரும் தேர்தலில் கொடுக்க வேண்டி வரும்[image error]All reactions:7Kalai Mani, Zahir Hussain and 5 others
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2023 00:05

March 7, 2023

02

 



ஒய்யாரமாய் படுத்திருக்கிறதுஅவனுக்கும்அவளுக்குமிடையையே அழகானதொரு நாய்க்குட்டி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2023 08:19

March 6, 2023

01


 


சைக்கிள் ஓட்டுறேனே
சாமி தாத்தா
என்ற
பேரனின் மழலையில் தெறித்த
ஏதோவொரு போதாமையை
இட்டு நிரப்புகிறது
உன்னைவிட ஸ்பீடா என்ற
அவனது அடுத்த வரி


06.03.2023

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 09:40

மூன்று வாரங்கள்... மூன்று நூல்கள்

 கடந்த மூன்று வாரங்களில்

“இவ்வளவுதான்” என்ற எனது இரண்டாவது கவிதை நூல் வேரல் பதிப்பகத்தின் மூலம் வந்திருக்கிறதுஇந்த நூல் இவ்வளவு அழகாக வந்திருப்பதற்கு தோழர் அம்பிகா குமரன்தான் காரணம்கிட்டத்தட்ட 100 கவிதைகளை அவருக்கு அனுப்பியதோடு என் வேலை முடிந்துவிட்டதுஅதை இவ்வளவு செறிவாக எடிட் செய்து கொடுத்தது அவர்தான்மட்டுமல்லஅட்டைப்படத்திற்காக அவர் வைத்துள்ள இரண்டு கவிதைகளையும் சலித்து எடுத்து வைத்திருக்கிறார்பேசப்படுகிற அட்டைப்படத்திற்கு உரியவர் தோழர் Lark Bhaskaranதிண்டுக்கல் Vetrimozhi Veliyeetagam வெளியிட்ட “நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை? என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறதுமட்டும் அல்ல,200 நூல்கள் விற்றிருக்கின்றனஅடுத்ததாகவானம் வெளியீடான “7B னா சும்மாவா?” வின் மூன்றாம் பதிப்பு வந்திருக்கிறதுஎடுத்த எடுப்பிலேயே 650 பிரதிகளை ஒரு பள்ளிக் குழந்தைகளுக்காக வாங்கியிருக்கிறோம்இந்த நூலைப் படித்துப் பார்த்த தோழர் அறச்செல்வன் மே மாதம் 22ஆம் நாள் தனது வீட்டின் திறப்புவிழாவிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக 750 பிரதிகள் கேட்டிருக்கிறார்மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 09:14

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.