பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்
ஒரு மரம் விழுந்தால் கொஞ்சம் சுற்றுப் பகுதியில் அதிர்வுகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே
மணிப்பூர் என்பது இந்தியா என்ற ஒரு உடலின் ஒரு அங்கம்ஒரு உடலின் ஒரு அவயத்தில் ஊறு ஏற்பட்டால் அது அடுத்தடுத்த அவயங்களை பாதித்து மொத்த உடலையும் காவு கேட்கும்இந்த உண்மையை மணிப்பூர் கலவரமும் நமக்கு உணர்த்த ஆரம்பித்துள்ளதுமணிப்பூர் கலவரத்தின் அதிர்வுகளை மிசோரமும் அசாமும் உணர ஆரம்பித்திருக்கின்றனமிசோரத்தில் உள்ள பாம்ரா என்ற அமைப்பு மெய்தி மக்கள் மிசோரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கிறதுசாலை வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் மெய்தி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்மிசோரத்தில் உள்ள மெய்தி மக்களில் பெரும்பாலானோர் அசாமில் இருந்து சென்றவர்கள்எனவே அசாமில் உள்ள ”மணிப்பூர் - அசாம் மாணவர் கூட்டமைப்பு” இதனால் எரிச்சலடைந்துள்ளதுஅசாமில் வசிக்கும் மிசோரம் மக்கள் உடனடியாக அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறதுஇந்த நிலையில்,”பாம்ரா” அமைப்பினரை அழைத்து அவர்களோடு உரையாடலை நடத்திய பின்புமெய்தி மக்கள் மிசோரமைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா கேட்டுக் கொண்டிருக்கிறார்இந்த அளவில் மெல்லிசாக ஒரு அப்பாடா போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தால்அதற்கும் வழி இல்லைமணிப்பூரில் குக்கிகளுக்கு தனி நிர்வாகக் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஜோரம் தங்கா கேட்கிறார்மணிப்பூர் பழங்குடியினருக்கும் மிசோரம் பழங்குடியினருக்கும் உறவு இருக்கும் நிலையில் இது மிசோரத்தை அகண்ட மிசோரமாக்கும் முயற்சி என்று இன்னொரு புகைச்சல் கிளம்பியுள்ளது”நான் இந்தியாவை நன்கு உணர்ந்திருக்கிறேன். என்ன செய்தால் இந்தியாவின் பகுதிகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பது எனக்குத் தெரியும்.வடகிழக்கு இந்தியாவில் நீங்கள் ஒரு மோசமான காரியத்தை ஆரம்பித்து விட்டீர்கள். அது இந்தியாவிற்கு நல்லதல்ல. உங்களுக்கும் நல்லதல்ல.எனவே அதை உடனடியாக நிறுத்துங்கள்” என்றுஏற்கனவே ஒருமுறை நாடாளுமன்றத்தில் ராகுல் கூறியதாக ”லிபர்டி” யூட்யூப் சேனலுக்கான ஒரு நேர்காணாலில் பத்திரிக்கையாளர் கார்த்திகேயன் கூறுகிறார்எனில்,இரண்டு புலனாகிறதுஇதை இவர்கள் திட்டமிட்டு ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஒன்றுஇதை நன்கு உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார் ராகுல் என்பது இரண்டுஎன்ன செய்யலாம்?ஒரு மாபெரும் போராட்டம் தேவைஅடிக்கடி சசிகாந்த் சொல்வதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட வேண்டும்பாஜக விரும்பிகிற ஆட்டத்தை நீங்கள் ஆடாதீர்கள்அவர்களை நீங்கள் தடுப்பாட்டதை ஆட வையுங்கள்அல்லது தேசம் எரிகிறது. அந்நிய சக்திகள் ஆடுகிறார்கள். எங்களைவிட்டால் ஆளில்லை என்று வந்து விடுவார்கள்நம் மக்கள் இளகியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
Published on July 26, 2023 05:40
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)