அத்தனை ஆயிரங் கோடியைக் கொட்டி நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டியாயிற்று
உங்கள் மனங்குளிரப் பார்த்துப் பார்த்துக் கட்டிய கட்டிடம்புதிய அரண்மனையைத் திறக்கும்போது அந்நாட்டின் சக்கரவர்த்திக்கு தரப்பட்ட அத்தனை மரியாதையையும் ஏறத்தாழ உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி கொடுத்தாயிற்றுஆகமத்திற்கு உட்பட்ட வைணவக் குருக்கள்ஆகமத்திற்குள் வராத சைவ சன்னிதானங்கள் உள்ளிட்டுஅனைவரையும் உள்ளடக்கியஅனைத்து யாகங்களையும் நடத்தி ஏறத்தாழ உங்களுக்காகவே நீங்கள் கட்டிய அரண்மனையொத்த நாடாளுமன்றத்தின் நீங்கள் ஆசைப்பட்டு பெற்ற செங்கோல் இருக்கும் தர்பாருக்குள் வந்து பரிபாலிக்கஎன்ன பயம் திரு நரேந்திரர்?
Published on July 26, 2023 09:14