இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 56

June 27, 2022

உங்களுக்குத் தெரிந்தவர்தான் சார்


 


பரியேறும் பெருமாளை நான்கைந்துமுறை பார்த்துவிட்டு
Kaakkai Cirakinile வில் நான்கு பக்கங்களுக்கு படம்குறித்து எழுதுகிறேன்

படாத பாடு பட்டு எப்படியோ மாரிசெல்வராஜின் நம்பரைப் பெற்று பேசுகிறேன்

அந்த உரையாடல் குறித்து ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் மாரி சொன்னதாக தோழர் முத்தையா கூறினார்

அந்த நீண்ட உரையாடலில் ஓரிடத்தில்

“அப்பறம் ஏன் இவனத் தடுக்கறீங்க? ன்னு கேட்பாரே கல்லூரி முதல்வர் அவர் யார் தோழர் என்று கேட்கிறேன்

உங்களுக்குத் தெரிந்தவர்தான் சார் என்கிறார்

ஒருமுறை தோழர் Karuppu Anbarasan அவர்களோடான உரையாடலில் ராமுவை சந்திக்க வேண்டும் என்று கூறினேன்

சந்திக்கலாம் என்றார்

இனி வாய்க்காது

இது மாதிரி தோழர்களை சந்திப்பதற்காகவாவது சொர்க்கம் என்று ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்


முகநூல்

27.06.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2022 10:59

இவன் என்பது ஒருநூறு கோடி



பத்தாதுமிதிஇன்னும் நாலு மிதி நசுக்கு அவன் மூக்கைரத்தம் வரும்வரைதுப்பு அவன் மேல்பக்கத்து ஊருக்கு பேசிஒரு வண்டி கெட்ட வார்த்தைகளைகடன் வாங்கி இறுக்கி நசுக்கு உன் வெறிதீறும் மட்டும்அவன் குரல்வளையைதூக்கிக் கிடாசு அவனை உன் வண்டியில்அடித்த கை வலிக்கும்மிதித்த கால் வலிக்கும்திட்டித் திட்டி வாய் வலிக்கும் உனக்குகொஞ்சம் வோய்வெடுவேலையைஅடுத்த தோழனிடம் கை மாற்று துவைத்து எடுஅவனை சிறை எடுக்கும் வரைவீடேகுமதுகுடிதூங்கித் தொலைநாளையும் அழைக்கும் களமுன்னைநிற்பான் ஒருவன்இவனினும் தெம்பாய்இவனினும் தெளிவாய்தெரிந்துகொள் நண்பாஒருமை அல்ல இவன் என்பதுஒருநூறு கோடி
முகநூல்27.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2022 07:10

”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்”

டி.பி ஜெயின் கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி

சென்னையில் இருக்கிறது

”டி.பி ஜெயின் கல்லூரி பாதுகாப்பு இயக்கம்” என்று ஒரு இயக்கம் உருவாகி இருக்கிறது

அந்த அமைப்பின் சார்பில் 27.06.2022 அன்று காலை அந்தக் கல்லூரியின் வாயிலில் ஒரு போராட்டம் நடக்க இருப்பதாக அறிய முடிகிறது

SFI, DYFI, CITU, AIDWA உள்ளிட்ட அமைப்புகள் இதற்கான முன் முயற்சியில் உள்ளன

போராட்டத்திற்கான காரணம் மிக மிக முக்கியமானது

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பல பிரிவுகள் இருக்கும்

அவற்றில் சிலவற்றிற்கு அரசு உதவி கிடைக்கும்

அந்தப் பிரிவுகள் உதவி பெறும் பிரிவுக்கள் ஆகும்

மற்றவை சுயநிதிப் பிரிவுகள் ஆகும்

உதவிபெறும் பிரிவுகளுக்கான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கும்

சுய உதவிப் பிரிவுகளுக்கு அது கிடையாது

எனவே சுய உதவி பெறும் பிரிவில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை கல்லூரி நிர்வாகம் வழங்கும்

இதற்கான நிதியை மாணவர்களிடம் வசூலித்துவிடும்

செமையாக லாபம் தரும் இடம் இது

ஜெயின் கல்லூரியில் உதவிபெறும் பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களை சேர்ப்பதில்லை என்பது புகார்

புரியும்படி பேசுவதெனில்

இப்போது இயற்பியல் பாடத்திற்கு உதவிபெறும் பிரிவும் சுயநிதிப் பிரிவும் இருப்பதாகக் கொள்வோம்

40 + 40 என்ற வகையில் 80 மாணவர்களைச் சேர்க்கலாம்

தோராயமாகச் சொல்கிறேன்

உதவிபெறும் பிரிவிற்கு 15,000 ரூபாய் கட்டணம் என்றால் சுயநிதிப் பிரிவிற்கு 40,000

கொஞ்சம் கூடலாம் குறையலாம்

இப்போது இந்தக் கல்லூரியில் உதவி பெறும் பிரிவில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்றால்

சுயநிதிப் பிரிவில் சேர்க்கிறார்கள் என்று பொருள்

எனில் சுயநிதிப் பிரிவில் 80 குழந்தைகளும் சேர்க்கப் படுகிறார்கள்

ஆக 80 குழந்தைகளுக்கும் 40,000 கட்டணம் வாங்கி விடுவார்கள்

சட்டப்படி இவர்களுக்கு வரவேண்டிய கட்டணாம்

உதவி பெறும் குழந்தைகள் வகையில் 40 x 15,000 =6,00,000

சுயநிதி வழியில் 40 x 40,000 = 16,00,000

ஆகக் கூடுதல் 6,00,000 + 16,00,000 = 22,00,000

உதவி பெறும் பிரிவில் சேர்க்காததால் அனைவரும் சுயநிதிப் பிரிவு என்பதால் வரும் கட்டணம்

80 x 40,000 = 32,00,000

ஆக ஒரு பிரிவில் தோராயமாக இவர்கள் அடிக்கும் கொள்ளை 10, 00,000

எத்தனைப் பிரிவுகள்?

எத்தனை செமஸ்டர்கள்?

எனில் எவ்வளவு கொள்ளை

போக

உதவிபெறும் பேராசிரியர்களையும் ஊழியர்களையும் கொண்டே சுயநிதி பிரிவுகளுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்

இது பெரும் கொள்ளையும் குற்றமும்

அரசு அவசியம் இதில் தலையிட்டு இந்தப் புகார் உண்மை எனில் கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்

#சாமங்கவிய ஒரு மணி இரண்டு நிமிடங்கள்
26.06.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2022 06:24

June 25, 2022

ஜனநாயக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் திரு பைடனுக்கான கடிதம்

 18.06.2022 அன்று தீக்கதிரில் பைடனுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் குறித்த செய்தி வந்திருந்தது

அந்தக் கடிதம் அப்படி ஒரு மகிழ்ச்சியை எனக்குத் தந்திருக்கிறதுஅந்தக் கடிதத்தை அமெரிக்க அதிபர் பைடனுக்கு அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியின் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதியுள்ளனர்க்யூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பயணம் செய்வதில் இருந்த சில தடைகளை பைன் தளர்த்தி உள்ளதற்காகவும் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பணம் அனுப்புவதில் இருந்த தடைகளையும் தளர்த்தி உள்ளமைக்காகவும் பைடனை அவர்கள் அந்த கடிதத்தின் ஆரம்பத்தில் நன்றியை தெரிவிக்கின்றனர்உலகத்தின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியதின் அவசியத்தை எடுத்து வைக்கின்றனர் இதை அமெரிக்காவும் க்யூபாவும் நட்பைப் பேணுவதின் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்பதை தெரிவிக்கும் அவர்கள்பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலில் இருந்து க்யூபாவை நீக்குமாறும் கோரிக்கை வைக்கின்றனர்இத்தனைத் தடைகளைத் தாண்டியும்பெருந்தொற்று காலத்தில் க்யூபா 42 நாடுகளுக்குத் தமது மருத்துவர்களை அனுப்பி வைத்ததைக் குறிப்பிடும் அவர்கள்உலகச் சுகாதாரக் கழகம் க்யூபாவின் தடுப்பு மருந்திற்கு அங்கீரம் அளிக்க தாமதம் செய்வதாகவும்அதை விரைவுபடுத்த அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தை முடித்திருக்கிறார்கள்க்யூபாவின் மீதான அமெரிக்காவின் அநியாயமான தடைகளையும்க்யூபாவின் உலகளவு நீளும் மருத்துவ சேவையை அமெரிக்காவின் தடைகள் பாதிப்பதையும்க்யூபா மீதான தடைகளை நீக்குவதன் மூலம் உலக நாடுகளுக்கான க்யூபாவின் மருத்துவ சேவை விரியும் என்றும்அமெரிக்காவிற்கும் இது பேருதவியாக அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்தடை விதித்துள்ளது அமெரிக்காஅந்தத் தடையை தற்போது கோரியுள்ளவர்கள் அமெரிக்காவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்கள்பைடன் இதை பரிசீலிக்க வேண்டும்இந்தக் கடிதத்திற்கான முன்முயற்சி எடுத்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அய்யன்னா ப்ரஸ்லே மற்றும் ஸ்டீவ் கோஹன் இருவருக்கும் நமது அன்பும் நன்றியும் #சாமங்கவிய 59 நிமிடங்கள்25.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2022 23:56

June 18, 2022

வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்

  அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்.நான் கண்ட இரண்டு சம்பவங்களும்முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றனமுதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்ததுபுதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்குசெல்கிறேன்ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர்நின்று கொண்டிருக்கிறார்கள்கைகளிலே தூக்குப்போனிஅவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறதுஅவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலைகிடைக்கும் என்பது தெரியும்தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறதுஅவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்இவர்களுக்கு அன்று வேலை இல்லைஇப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறதுஅந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்புஅன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களேமூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்ஏறத்தாழ அதே நடைமுறைஇங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லைஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லைவேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்“இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ”இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார் வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில்அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லைஇதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று“இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை”என்று நீங்கள் போட்ட உத்தரவுதிருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறதுஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் ”லோட் மேன்கள்” என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கைஅவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்துஇதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்அவர்கள் கதறட்டும்இது இழப்பல்ல,கூடுதல் செலவு,அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் வல்லது அரசு”“இயற்றவும்ஈட்டவும்ஈட்டியதைக் காக்கவும்”உங்களால் முடியும்வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்ஒன்று சொல்ல வேண்டும்,ஆசிரியைகள் அரசியல் ஊழியர்கள், வசதிபடைத்தவர்கள் உள்ளிட்ட சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்இதுபோல் ஏராளம்இவற்றைத் தடுக்கலாம்தொடருங்கள்
அன்புடன்,இரா.எட்வின்07.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2022 09:16

உற்பத்தி செய்யப்படும் நெல்லை வீணாகமல்

 அன்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்இலங்கை எரிந்து கொண்டிருக்கிறதுராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்ஆனால் அப்படித் தெரியவில்லைநேற்றைக்கு முந்தாநாள்,இந்தியாவிலும் இதே பொருளாதார நிலைதான் இருக்கிறது.ஆனால் இந்தியர்களைப் பாருங்கள். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இப்படிக் கொந்தளிப்பது நியாயமா?என்று தனது மக்களிடம் கேட்டிருக்கிறார் ஆக, இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையைப் போலவே இருப்பதாகத்தான் அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லாமையும்அதனால் கையில் காசு இல்லைமறுபுறம் விலைவாசி உயர்வும் அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் பற்றாக்குறையும்அவற்றின் விலைவாசி உயர்வும்தான் இலங்கை எரிந்துகொண்டிருப்பதற்கான முக்கிய காரணம்உலக நாடுகள் இலங்கையின் நிலையை சாந்தப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அங்குள்ள மக்கள் தொகை அப்படிஇந்தியாவிலும் இது நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறியாதது அல்ல ஸ்டாலின் சார்இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்திருக்கிறது என்பதே செய்திகள் வழி வரும் உண்மைஇந்திய உணவு கோதுமையை சார்ந்ததுஇறக்குமதியும் இப்போது சாத்தியமில்லைகாரணம் இந்தியப் பணத்தின் மதிப்பு அவ்வளவு வீழ்ந்திருக்கிறது100 ரூபாய்க்கு வாங்கிய கோதுமையை 115 ரூபாய்க்கு வாங்க வேண்டும்இதுவும் இறக்குமதியைப் பாதிக்கும்இந்த நிலையில் அரசின் சேமிப்புக் கிட்டங்கியில் சேமிப்பு இருந்தால் ஓரளவு தப்பிக்கலாம்ஒன்றியத்தில் அப்படி இருப்பதற்கான வாய்ப்பு இல்லைஉங்களிடம் இரண்டு கோரிக்கைகள் முதல்வரேஎதிர்க்கட்சி முதல்வர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கண்ணுக்கு கிட்டத் தெரிகிற பஞ்சத்தைப் பற்றியும் அரசின் கிடங்குகளை நிரப்பவும் வலியுறுத்துங்கள்நெல் உற்பத்தியை அதிகரிக்கவும்உற்பத்தி செய்யப்படும் நெல்லை வீணாகமல் சேமிக்கவும் ஏற்பாடுகளை செய்யுங்கள்அன்புடன்,இரா.எட்வின்11.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2022 09:05

அந்தக் காக்காவும்

 முந்தாநாள் பார்த்த

காக்காவைப் போலவே இருக்கிறது இந்தக் காக்காவும்முந்தாநாள் பார்த்தகாக்கா போலவேஇந்தக் காக்காவும் இருப்பதாகஉங்களிடம் நான்சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவேமுந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே இருந்தான் அவனென்றுதன் தோழமைகளிடம்சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்அந்தக் காக்காவும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2022 09:02

அப்பா மாதிரியான இன்னொருவரும்

 அப்பா மாதிரியான இன்னொருவரும்

ஞாயிற்றுக் கிழமைசெத்துப் போனார்காரியமின்றுவாசலில் தேநீர் பருகிக் கொண்டிருப்பவர்களைக் கடக்கையில்என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் அவர்அவர்தான் செத்துப் போனாரேயாரது பின்ன?யாராவாவது இருக்கும்இருக்கட்டும்அவராகவே கொள்தல் மாயையாகவே இருக்கட்டும்மாயைகள் சமயத்தில் இனிக்கும்
முகநூல்18.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2022 08:57

Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லை

1980 இல் எனக்கு ”Ode on a grecian urn" அறிமுகமாகிறது

அப்போது எனக்கு 17 வயதுநாம் இப்படியாகக் கொள்வதில் யாருக்கும் வழக்கெதுவும் இருக்கப் போவதில்லைஅப்படி யாருக்கேனும் பிராது இருக்கும் பட்சத்தில்முடிந்த இடத்தில் அந்தப் பிராதை அவர்கள் கொடுப்பதில் நமக்கும் வழக்கெதுவும் இல்லைஎந்த இடம் என்று தெரியவில்லைஏதோ ஒரு பாரிலோ தேநீர்க்கடையிலோ அல்லது வேறு எங்கோவோ இருக்கலாம்எங்கோவோ இருந்துவிட்டும் போகட்டும்ஒரு ஜாடியைப் பார்க்கிறான்மிக மிகப் பழங்காலத்து ஜாடிஅதன் கலைநயம் அவனை ஈர்க்கிறதுThou still unravish'd bride of quietness, Thou foster-child of silence and slow time,என்று கவிதையை ஆரம்பிக்கிறான்அந்த ஜாடியில் உள்ள ஓவியத்தில் மரங்கள் இருக்கின்றனகீட்ஸ் அந்த மரத்தைப் பார்க்கிறான்அந்த ஜாடிக்கு 200 வயது இருக்கலாம்என்றால் அந்த மரத்தின் வயது 200இதுவரைக்கும் அவன் அடைந்த ஆச்சரியம் அவனுக்கானது200 வயது மரம் சாத்தியம்ஆனால் 200 வயது இலை, அவன் வியப்பின் உச்சிக்கே போகிறான்மரத்தின் ஜனனத்தோடு பிறந்த இலைகள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழுக்காமல் சருகாகாமல் உதிராமல்அப்பப்பாகலை நிலையானதுசொக்கிப்போகிறான் கீட்ஸ்எழுதுகிறான்,Ah, happy, happy boughs! that cannot shed Your leaves, nor ever bid the Spring adieu;அந்த ஜாடியில் உள்ள படத்தில் ஒரு காதலன் தனது காதலிக்கு முத்தம் கொடுக்க முயல்கிறான்அவள் தப்பித்து ஓட முயற்சி செய்கிறாள்கீட்ஸ் எழுதுகிறான்,பயப்படாதே அவளால் அந்த இடத்தைவிட்டு நகர முடியாது. அவளது வனப்பும் எத்தனை ஆண்டு காலமானாலும் சிதையாதுநமக்கும் புரிகிறதுஒருபோதும் அவளை அவன் முத்தமிட முடியாதுBold Lover, never, never canst thou kiss,Though winning near the goal yet, do not grieve; She cannot fade, though thou hast not thy bliss, For ever wilt thou love, and she be fair!சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு பாடலுக்கான சூழலை கண்ணதாசனிடம் விளக்குகிறார்கள்மகாபலிபுரம்அங்குள்ள சிலைகளைப் பார்த்து அதிலும் அங்குள்ள ஒரு யுவதியின் சிலையைக் கண்டு வியந்து பாடுவதாக பாடல் வேண்டும்வேட்டியை சன்னமாக தூக்கிப் பிடித்தபடி கண்ணதாசன் சொல்லச் சொல்ல எழுதுகிறார்கள் “சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்குகலை கொடுத்தான் அவள் வண்ணாக் கண்ணுக்குஆடை கொடுத்தான் அவள் உடலினிலேஆட விட்டான் இந்தக் கடலினிலே”ஆகா ஆகா“கட்டழகு வாலிபர் தொட்டுப் பார்க்ககவிஞர்கள் தமிழால் தொட்டுப் பார்க்கபொட்டு வைத்தப் பூங்கொடி போட்டி போடபொல்லாத பருவத்தை கல்லாக்கினேன்” என்று நகருவார்அந்த சிலையை பார்த்த வாலிபர்களுக்கு அதைத் தொட்டுப் பார்க்கத் தோன்றுமாம்கவிஞர்களிடம் கவிதை துள்ளுமாம்பெண்களுக்கு போட்டியான அழகாம்இதெல்லாம் விடுங்கள்இதுவரை ஒரு பெண்ணை கல்லில் சிலையாக வடித்ததாகத்தான் வரும்அது பெண் மட்டும் இல்லையாம்பொல்லாத பருவத்தை கல்லாக்கி நிலைக்கச் செய்தானாம் சிற்பிபருவத்தை சிலையாக்கி அய்யோ அய்யோ கண்ணதாசாஅடுத்த சரணத்தில் ஒரு வரி வரும்“பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்”பருவத்தின் சாறை கல்லில் கலையாக்கும் வித்தையை பாடலில் பந்தி வைப்பார் கண்ணாதாசன்அநேகமாக இறுதி சரணம் என்று பார்க்கிறேன்“அன்னமிவள் வயதோ பதினாறுஆண்டுகள் போயின ஆறு நூறுஇன்னும் இவள் முதுமை எய்தவில்லைஎன்னதான் ரகசியம் தெரியவில்லை”கீட்ஸ் ஜாடியில் உள்ள ஓவியத்தைப் பார்த்து கவிதை எழுதுகிறான்கண்ணதாசன் மகாபலிபுரத்து சிலைகளைப் பார்த்து ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதுகிறார்இசை சூப்பர்நடனம் சிறப்புஎல்லாம் கடந்து பிரச்சினை என்னவெனில்Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லைஒரு திரைப்படப் பாடல் உலகம் கொண்டாடிய ஒரு கவிதைக்கு கொஞ்சமும் சளைத்ததாக இல்லாமல்நிமிர்ந்து நிற்கிறதுஆனாலும் அது கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு கொண்டாடப் படவில்லைநம்மிடம் ஏதோ தவறு இருக்கிறதுமொழிபெயர்க்காத தவறாகவும் அது இருக்கக் கூடும் #சாமங்கவிந்து 10 நிமிடங்கள்17.06.2022Active
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2022 00:50

June 17, 2022

சனாதனத்தின் பக்கச் சாய்வாகவும்

 அனைவருக்கும் கல்வி கூடாது என்பது சனாதனத்தின் கூறு

சனாதனம் நல்லதுகடைபிடிக்க வேண்டியது என்று ஆளுனர் பேசுகிறார்அதன்மூலம் எல்லோரும் படிக்கத் தேவை இல்லை என்று சொல்ல வருகிறார்எல்லோரும் படிக்க வேண்டும்படிக்காமல் பெரிதாகலாம் என்பதெல்லாம் பொய்என்று அவரை சரியாக எதிர்கொள்கிறார் முதல்வர்யோகா என்பது சனாதனத்தின் கூறென்ற நிலையில்பள்ளி கல்லூரிகளில் யோகா என்றஉங்களது கூற்று சனாதனத்தின் பக்கச் சாய்வாகவும்உங்கள் ஆட்சிக்கு எதிரானதாகவும் உள்ளது திரு மகேஷ் பொய்யாமொழிபள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள்போதும்
முகநூல்14.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2022 10:35

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.