இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 58

June 9, 2022

இடை இசைக்கு நாகேஷ் ஆடியிருப்பார் பாருங்கள்

 “பத்துப் பதினாறு முத்தம் முத்தம்”

என்ற படலை ஒவ்வொரு நாளும் நான்கைந்துமுறையேனும் கேட்பவன் நான்அவ்வப்போது அந்தப் பாடலைக் கேட்பதில் இருந்து கடந்து போய்விடுதும் உண்டுபிறகு எப்போதாவது அந்தப் பாடலைக் கேட்கிற வாய்ப்பு கிட்டினால் மீண்டும் பைத்தியம்போல் தினமும் தினமும் பலமுறை கேட்க ஆரம்பித்துவிடுவேன்அப்படித்தான் இப்போதும் அந்தப் பாடலுக்குள் விழுந்து கிடக்கிறேன்இந்தப் பாடலில் சொல்வதற்கு குறிப்பாக இருவர் உண்டுஇந்தப் பாடலைப் பாடியவர்கள் TMS, மற்றும் L.R. ஈஸ்வரிஇதற்கு நடித்தவர்கள் சிவாஜி மற்றொருவர் சரோஜா தேவிநான் குறிப்பிட்ட இருவர் L.R.ஈஸ்வரி மற்றும் நாகேஷ்“மழைத் தாரகை குளிர் ஓடையில்விழும்போதிலேஒரு இன்பம்”என்ற பகுதியை ஈஸ்வரி அம்மா அப்படிப் பாடி இருப்பார்கள்மழைத் தரகை எனும்போது விரிந்து கிடக்கும் உள்ளங்கை அளவு சன்னச் சன்ன கீறல்களோடு சவ்வு மாதிரி விரியும் அந்தக் குரல்குளிர் ஓடையில் எனுபோது சன்ன சன்ன பிசிறுகளோடு கூடிய நூலாக மாறும்அய்யோ சாமி,நான் போகும் வரைக்குமாச்சும் நீங்க இருக்கனும் ஈஸ்வரித் தாயேசரணங்களுக்கிடையாலான இடை இசைக்கு நாகேஷ் ஆடியிருப்பார் பாருங்கள்முகத்தில் சிறு கீறல் அளவுக்கேனும் உணர்ச்சி இல்லாது இருக்காதுI MISS YOU NAKESH SIR
முகநூல்03.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 10:02

எட்டு கிலோ பட்டர்ஃப்ளையின் முத்த எச்சில்

 கீழே கிடந்த வண்ணத்துப்பூச்சி ஸ்டிக்கரை எடுத்த கிரிஷ்

இந்தா தாத்தா பட்டர்ஃப்ளை பிடிநீட்டியவாறே ஓடிவருகிறான்தூக்கி அணைக்கிறேன்பட்டர்ஃப்ளை படத்திற்கு முத்தமிட்டவன்எனக்கும் ஒரு முத்தம் தருகிறான்எட்டு கிலோ பட்டர்ஃப்ளையின் முத்த எச்சில் வரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 09:59

June 8, 2022

அந்த ஆசிரியர் எனது சகோதரன் அந்த மாணவன் எனது பிள்ளை

ஒரு குட்டிக் காணொளி சமீபத்தில் மிக வைரலாகப் பரவியதோடு, காய்ந்துக் கிடந்த சமூக விறகடுக்கில் ஒரு தீக்குச்சியைக் கிழித்துப் போட்டது

 

அவ்வளவுதான், மொத்த சமூகமும் படபடவென எரியத் தொடங்கி விட்டது

 

ஒரு ஆசிரியரை அவரது வகுப்புக் குழந்தை ஒருவன் அசிங்கமாகப் பேசுவதும் தாக்க முயற்சிப்பதுமான காட்சி அந்த காணொளியில் இருந்தது

 

பெரும்பான்மை சமூகமும் மாணவர்களுக்கெதிராக வாளைச் சுழற்ற ஆரம்பித்து விட்டது

 

ஒரு ஆசிரியரை ஒரு குழந்தை அசிங்கமாகப் பேசுவதும், தாக்க முயற்சிப்பதும் நிச்சயமாக ஒரு பெருங்குற்றம்தான்

 

மொத்த சமூகமும் கவலைப்பட வேண்டிய குற்றம்தான்

 

சிலர் மிகுந்த கோவத்தோடு கோருவதுபோல் அந்தக் குழந்தகளுக்கு கடும் தண்டனையும் தேவைதான்

 

ஆனால், அந்தக் குழந்தைகளைத் தண்டிப்பதற்கு முன்னர் சிலவற்றை நாம் அனைவரும் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை

 

ஒரு ஆசிரியர் பாதிக்கப்பட்டதும் பெரும்பான்மையான சமூகம் அவரைத் தமது சகோதரனாக பாவித்து அவரோடு நிற்பதும் அவருக்காக குரல் கொடுப்பதும் ஒரு ஆசிரியரான எனக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது

 

அதற்காக கை எடுத்து வணங்கி எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

பாதிக்கப்பட்ட ஆசிரியரை சகோதரராகப் பாவிப்பதுபோலவே அந்தக் குழந்தையை நமது குழந்தையாகவே பாவிக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை

 

பாதிக்கப்பட்ட ஆசிரியர் நமது சகோதரர்

 

அந்த மாணவன் நமது குழந்தை

 

என்கிற நிலையில் இருந்து கொஞ்சமும் பிசகாமல் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே அனைவருக்குமான எனது அன்பான கோரிக்கை

 

அந்தக் குழந்தையின்மீது கடும் தண்டனையைக் கோருகிற கோவம்கூட வரலாம். ஒருபோதும் அந்தக் குழந்தையின்மீது ”உறவு துறப்பு” நோக்கி நகருமளவிற்கு வெறுப்பு வந்துவிடக் கூடாது

 

மாறாக, ஆசிரியர் மாணவர் உறவு ஏன் இப்படி நார் நாராய் கிழிந்து கிடக்கிறது என்பதையும்

 

ஏனிப்படி இவ்வளவு கோரமாய் அவ்வப்போது அது வெளிப்படுகிறது என்பதையும் உள்நுழைந்து கண்டுணர முயற்சிக்க வேண்டும்

 

“மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பதிந்து அவர்கள் நிரந்தரமாக பள்ளியில் இருந்து நீக்கப்படுவார்கள்”

 

என்று 09.05.2022 அன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் மரியாதைக்குரிய நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்தவிதமான பாதிப்பையும் எவரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அவரது அக்கறைக்கு அடி மனசிலிருந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

 

ஆனாலும் இதுகுறித்து அவரோடும் உரையாடுவதற்கு கொஞ்சம் இருக்கிறது

 

”உடனடியாகப் பள்ளியைவிட்டு நீக்குவோம். மாற்றுச் சான்றிதழில் அவன் பள்ளியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணத்தைப் பதிந்து தருவோம்” என்ற அமைச்சரது குரல் ஒரு கார்ப்பரேட் பள்ளியின் முதல்வருடைய குரலாகக் கேட்கிறது

 

ஏற்கனவே ஒருமுறை எழுதி இருக்கிறேன். ஆனாலும் தேவை கருதி மீண்டும் வைக்கிறேன்

 

15 ஆண்டுகளுக்கு முன்பு எம் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருவன் சரக்கடித்துவிட்டு வந்து வகுப்பில் வாந்தி எடுத்துவிட்டான்

 

பெண் குழந்தைகளின் பெற்றோர் அந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால்தான் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்ப முடியும் என்றும்

 

அப்படி அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ்களைத் தருமாறும் பிடிவாதமாக நிற்கிறார்கள்

 

நான் உள்ளிட்ட சில ஆசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் தரக்கூடாது என்றும் மாணவனை சரிசெய்து கொள்ளலாம் என்றும் ஒற்றைக்காலில் நிற்கிறோம்

 

தலைமை ஆசிரியர் தடுமாறுகிறார்

 

ஒரு கட்டத்தில் மாற்றுச் சான்றிதழைக் கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கு தலைமை ஆசிரியர் வருகிறார்

 

அப்போது குறுக்கிட்ட அந்த மாணவனின் தாய்

 

“TC கொடுங்க சாமி.

 

இது என்ன பள்ளிக்கூடம்னே தெரியல. ஒரு பய சரக்கடுச்சுட்டு ஸ்கூலுக்கு வந்து வாந்தி எடுத்துட்டான்னு அப்பா அம்மாவ கூப்டு திட்டறீங்க

 

ஒனக்கும் இந்தப் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லைன்னு TC தரோங்கறீங்க

 

வீட்டுக்கும்தான் சரக்கடிச்சுட்டு வரான். வாந்தி எடுக்கறான்.

 

என்னைக்காச்சும் யாருடா உங்க க்ளாஸ் சார். கூட்டிட்டு வாடானு சொல்றமா

 

இல்ல, ஒனக்கும் எங்களுக்கும் ஒறவந்துபோச்சு வீட்ட விட்டு கிளம்புன்னு தொறத்தறோமா?

 

நல்ல பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்ல ஸ்கூல். இதுமாதிரி தறுதலைங்களையும் திருத்தி சொல்லித் தரதுக்குதான் அது”

 

நாங்களும் பெற்றோர்களிடம் கெஞ்சுகிறோம்

 

சம்மதிக்கிறார்கள்

 

அந்த மாணவன் முதுகலை படித்து இப்போது நல்ல சம்பளத்தில் அழகான குடும்பத்தோடு வாழ்கிறான்

 

எங்கள் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி

 

இதுவே கார்ப்பரேட் பள்ளியாக இருந்தால், அதன் தலைமை ஆசிரியர், விழுந்துகிடந்த அவனைத் தூக்கி வகுப்புக்கு வெளியே கொண்டு வருவதற்குள் மாற்றுச் சான்றிதழைக் கிழித்திருப்பார்

 

“எனக்கு டிசிப்ப்ளின்தான் முக்கியம். ஏதாவது ஏடாகூடமா பண்ணின டிசிய கிழிச்சுடுவேன். கான்டக்ட் சர்டிஃபிகேட்ல கைய வச்சுடுவேன்”

 

என்பதுதான் கார்பரேட் முதல்வர்களின் வழமையான குரல்.

 

அமைச்சருடைய குரலும் கார்பரேட் பள்ளி முதல்வர்களின் குரலோடு ஒன்றிணைவது கவலையைத் தருகிறது 

 

இன்னொரு பக்கம் இது கார்ப்பரேட் முதலாளிகளின் கோட்பாட்டுக் குரலாகவும் இருப்பது மிக மிக ஆபத்தானது

 

”கல்விக்கூடங்கள், முதலாளித்துவ வகுப்பு மனநிலையால் முழுமையாக ஆழ்த்தப்பட்டு விட்டன. முதலாளிக்கு கீழ்ப்படிந்த கை ஆட்களையும், திறமையான தொழிலாளிகளையும் வழங்குவதுதான் அவற்றின் நோக்கம்”

 

என்று 1918 இல் லெனின் கூறியதை அருள்கூர்ந்து அனைவரும் இந்தப் புள்ளியில் கவனத்தில் கொள்ள வேண்டும்

 

குடும்பத்திற்கு உகந்த ஒரு பிள்ளையாக, சமூகத்தைக் குறித்த அக்கறையையும், சமூகத்திற்கான தனது பங்களிப்பை ஒருபோதும் புறக்கனிக்காதவனாகவும் ஒருவனை உருவாக்க வேண்டிய பள்ளி

 

கார்ப்பரேட் முதலாளிகளுக்கான கை ஆட்களை உருவாக்குகிற வேலையை இன்னும் இன்னுமாய் வேர்பிட்டிக்கச் செய்கிற காரியத்திற்கே அமைச்சர் அவர்களின் அறிவிப்பு முன்னெடுக்கும்

 

தப்பு செய்தால் தூக்கி எறிவோம், மாற்றுச் சான்றிதழில் காரணம் குறிப்பதன் மூலம் வேறு எந்தப் பள்ளியிலும் சேர வாய்ப்பற்ற சூழலையும் அது உருவாக்கும்

 

இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்களைத் தாயாரிக்கும் பட்டறைகளாக பள்ளிகளை மாற்றும் என்பதை இப்போது நாம் உணராவிட்டால் மிகப்பெரிய சமூகச் சிக்கலை இது உருவாக்கும்

 

நெறிப்படுத்துதல் சமூகத்திற்கான மனிதனை உருவாக்கும்

 

தண்டனை முதலாளிகள் எதிர்பார்க்கும் தொழிலாளிகளை உருவாக்கும்

 

சகோதரி உமா என்ற ஒரு இளைய ஆசிரியை பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குழந்தையால் வகுப்பில் வைத்து கொலை செய்யப்பட்டார்

 

ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்டு ஏறத்தாழ அனைவரும் மாணவர்களுக்கு எதிராகப் பொங்கினோம்

 

ஏதோ பிள்ளைகள் என்றாலே குறைந்த பட்சம் பொறுக்கிகள் என்பதாக ஒரு பொதுப் புத்தியை கட்டமைப்பதில் பலர் அப்போது வெற்றி கண்டனர்

 

அப்படி அன்று பொங்கியவர்களில் சிலருக்கு இன்றைய தேதியில் அன்று கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் மறந்து போயிருக்கும்

 

பலருக்கு அன்று அந்த ஆசிரியையை கொலை செய்த குழந்தையின் பெயர் மறந்து போயிருக்கும்

 

அநேகமாக அனைவருக்கும் அந்த வழக்கின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாது

 

அப்புறம் பாருங்கள்,

 

பெண் குழந்தைகளிடம் யாரோ சில ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்துகொள்ள,

 

ஆசிரியர்கள் அனைவரும் காமக் கொடூரன்கள் போலவும்கூட பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டது

 

இன்றைய தேதியில் அந்த ஆசிரியர்கள் மீதான வழக்கின் நிலை குறித்தும் கவலையற்றுப் போனோம்

 

இப்போது எங்கள் சகோதரர்களிடம் சில குழந்தைகள் தகாத முறையில் நடந்துகொள்ள

 

அமைச்சர் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது

 

இவற்றை தடுப்பதற்கு சில சட்டப் பாதுகாப்பு அனைவருக்கும் தேவைதான் என்பதை நான் மறுக்கவில்லை

 

ஆனால்,

 

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

 

சகோதரி உமா கொலை செய்யப்பட்ட அன்று கேட்டதையே இன்றும் கேட்பதற்கான தேவை இருக்கிறது

 

சிரித்த முகத்தோடு வகுப்பிற்குள் எப்போதாவது ஆசிரியர்களால் நுழைய முடிகிறதா?

 

இறுக்கத்தோடு வகுப்பிற்குள் நுழைகிறோம். நம்மைவிட இறுக்கத்தோடு பிள்ளைகள் எழுந்து நின்று வணங்குகிறார்கள். இன்னும் கொஞ்சம் அதிகமான இறுக்கத்தோடு அவர்களை அமர்த்துகிறோம்.

 

பெரும்பாலும் இறுக்கமாகத்தான் பாடம் கற்பிக்கிறோம்.

 

இறுக்கமாக எழுந்துநின்று குழந்தைகள் நம்மை வழியனுப்ப இறுக்கத்தோடே வெளியேறுகிறோம்

 

இது ஏன் இப்படி என்று எப்போதேனும் சிந்தித்திருக்கிறோமா? இப்படி சிந்திப்பதற்கு நமது கல்வித் திட்டமும் தேர்வுகளும் எப்போதேனும் இடங்கொடுத்திருக்கிறதா?

 

உமா கொலை செய்யப்பட்ட அன்று என்ன நடந்தது?

 

வெளியிலிருந்து வகுப்பிற்குள் முதல் ஆளாக நுழைந்த பிள்ளை இர்ஃபானிடம் அந்தக் கொலைக்கான திட்டம் இருந்தது என்னவோ உண்மைதான்.

 

எப்போதும்போல் இல்லாமல் முதல் ஆளாக வகுப்பிற்குள் நுழைந்த இர்பானை சிரித்த முகத்தோடு அனைத்து வாழ்த்தி இருந்தால் ஒருக்கால் இப்போது சகோதரி உமா உயிரோடு இருந்திருக்கவும் கூடும்.

 

இப்படிக் கொண்டாடி பிள்ளைகளை வரவேற்கவிடாமல் நம்மைத் தடுப்பது எது?

 

30.01.1948 அன்று காந்தியார் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

 

நாடெங்கிலும் பார்ப்பணர்கள் தாக்கப்படுகிறார்கள். வேறெந்த மாநிலத்தையும்விட பார்ப்பணரல்லாதார் இயக்கம் வலுவாக உள்ள மண் தமிழ் மண். காந்தியாரின் கொலையை முன்னிட்டு தமிழ் மண்ணில் பிராமணர்கள் தாக்கப்பட்டுவிடக் கூடாது என்று துடிக்கிறார் பெரியார்.

 

31.01.1948 அன்று திருச்சி வானொலியில் உரையாற்றி மண்ணை அமைதிப் படுத்துகிறார். அதற்கு ஒன்றிரண்டு நாட்களில் திருவாரூக்கு அருகில் உள்ள சன்னாநல்லூரில் தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது

 

அந்தக் கூட்டத்தில் பேசிய அன்றைய தேதியில் 14 வயதே நிரம்பிய அன்றைய சிறுவனான  கலைஞர் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்.

 

வழக்கத்திற்கு மாறாக கலைஞரின் கருத்தை மறுக்கிறார் பெரியார்

 

“சுட்டதற்காக நாம் துப்பாக்கிமீது ஆத்திரங் கொள்ளலாங்களா கருணாநிதி?” என்று ஆரம்பிக்கிறார்

 

காந்தியை சுட்டதற்காக ஆத்திரங்கொண்டு அந்தத் துப்பாக்கியை ஒடித்துப் போட்டால் கோட்சே வேறு ஒரு துப்பாக்கியை வாங்கிவிட மாட்டானா?

 

கோட்சேவைக் கொன்றாலும் இன்னுமொரு கோட்சேயை அவனது அமைப்பு உருவாக்கிவிடாதா?

 

அந்த அமைப்பை அழித்துப் போட்டாலும் அந்த சித்தாந்தம் இன்னொரு அமைப்பைக் கட்டி விடாதா? 

 

ஆகவே அந்த சித்தாந்தத்தோடு போரிட்டு அதை இல்லாமல் செய்ய வேண்டும் கருணாநிதி” என்கிறார் பெரியார்

 

பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியரின் சங்கடத்தை என்னால் உணர முடிகிறது.

 

“இந்த நல்ல மனுஷனையா?” என்கிறரீதியில் பார்க்கப்படுகிற பரிதாபப் பார்வைகளே அந்த மனுஷனைக் கொன்று போடும்.

 

ஒட்டுமொத்த சமூகமும் அவரது பின்னால் நின்று அவரைப் பாதுகாக்க வேண்டும்.

 

ஆனால், அந்தக் குழந்தையை சிறைப்படுத்தியே தீரவேண்டும் என்பதல்ல அதன் பொருள்

 

கோட்சே கையில் இருந்த துப்பாக்கியை முறித்துப் போடுவதால் மட்டும் எப்படி கொலைகளைத் தடுக்க முடியாதோ 

 

அதேபோல்தான், இந்த ஒரு குழந்தையை அல்லது சில குழந்தைகளைத் தண்டிப்பதன்மூலம் மட்டுமே பள்ளிகளில் எதிர்காலத்தில் இதுமாதிரி சம்பவங்களைத் தடுத்துவிட முடியாது

 

ஆசிரியர்கள் சிரித்துக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைகிற மாதிரியும் சிரித்துக்கொண்டே வாங்க சார் என்று பிள்ளைகள் நம்மை வரவேற்கிற மாதிரியும் ஒரு வகுப்பறைச் சூழல் வேண்டும்

 

பாடத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் சிரித்துவிட்டால்,

 

“என்ன அங்க இழிப்பு?”

 

என்பது மாதிரி எரிச்சல்களைத் தவிர்த்து, குழந்தைகளின் குதூகங்களினூடே பாடத்தை நகர்த்தும் பக்குவமும் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு அவசியம் வேண்டும்

 

“அங்க என்ன சத்தம்?” என்பது மூன்று கெட்ட வார்த்தைகளின் மசாலாக் கூட்டு என்பதை உணர வேண்டும்

 

எந்த மந்திரமும், எந்த சூத்திரமும் இதற்கான தீர்வை ஒருபோதும் தராது

 

அதற்கு நீண்டதொரு உரையாடல் அவசியம்

 

ஆசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள், மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், பெற்றோர்கள், படைப்பாளிகள், கல்விமீது அக்கறை கொண்டோர் ஆகியோரை ஒருங்கிணைத்த ஒரு நீண்ட ஆழமான தொடர் உரையாடல் நிச்சயமாக இதற்கு ஒரு தீர்வைத் தரும்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2022 10:54

சுசீலாம்மான்னா சும்மாவா?

 கோவை சென்றுகொண்டிருக்கிறோம்

அருமையான பாடல்கள்"அன்னமிட்ட கைகளுக்கு"இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஏனென்றே தெரியாது கண்கள் முட்டிக் கொள்ளும்இன்றும்அதில் ஒரு வரி"தாய்வழி நீ நடக்கதந்தைவழி பேரெடுக்க"இது ஆணாதிக்கத்தின் கூறுஇந்த கருத்திற்கெதிராகத்தான் இத்தனை ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்இத்தனை ஆண்டுகளாக எந்தக் கருத்துக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோஅதே கருத்தை சொல்லும் வரிகளுக்காக இத்தனை ஆண்டுகளாக நெகிழ்ந்து கொண்டும் அழுதுகொண்டும் இருக்கிறேன்சுசீலாம்மான்னா சும்மாவா?
முகநூல்01.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2022 10:50

June 6, 2022

பொய்யைக் குறையுங்கள் அண்ணாமலை சார்

 தமிழகத்திற்கு வரவேண்டிய GST நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு பிரதமரிடம் முதல்வர் கேட்கிறார்

இது உங்களுக்கும் சேர்த்தான குரல்இது பொய்சண்டைவிடமாட்டேன் என்று கத்துகிறீர்கள்9602 கோடி GST நிலுவையை ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறதுபொய்யைக் குறையுங்கள் அண்ணாமலை சார்
முகநூல்31.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2022 07:57

ஊடகவியலாளர்கள் ஏன் திரு அண்ணாமலையைப் புறக்கணிக்கக் கூடாது

 திரு அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து பத்திரிக்கையாளார்களை மிரட்டும் தொனியிலும் அவமரியாதை செய்யும் விதமாகவும் நடந்துகொள்வதைத் தொடர்ந்து

ஊடகவியலாளர்கள் ஏன் திரு அண்ணாமலையைப் புறக்கணிக்கக் கூடாது என்று நாம் கேட்கிறோம்இதில் ஒரு நியாயம் இருக்கிறதுஆனால்,ஊடக வெளிச்சம் மட்டுமே ஊதிப் பெரிதாக்கிய அண்ணாமலை அவர்களும்வேண்டுமானால் என்னைப் புறக்கணித்துக் கொள்ளுங்கள் என்று உடக நண்பர்களிடம் கூறுகிறார்இதுஆதிக்க மனநிலையின் உச்சம்அவருக்குத் தெரியும் மெயின்ஸ்ட்ரீம் ஊடக நண்பர்களால் அவரைப் புறக்கணிக்க முடியாது என்பதுமெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தைத் தீர்மானிக்கிற இடத்தில் இருப்பது அவற்றின் முதலாளிகள்ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்களல்லஊடக முதலாளிகளை அவர்களால்வாங்கவும் முடியும்வாடகைக்கு எடுக்கவும் முடியும்சமூக வலைதளங்களைகுறிப்பாக யூ ட்யூப் சேனல்களைஇன்னும் இன்னுமாய் வலுவாக்குவதும்மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் மட்டுமே இதற்கு மாற்றாக முடியும்
முகநூல்30.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2022 07:56

June 5, 2022

யூ ட்யூபில் அது வாய்க்காது

 ”யூ ட்யூப்” ஊடகங்கள்மீது திரு அண்ணாமலை இவ்வளவு ஆத்திரப்பட காரணம் இருக்கிறது

”மெயின் ஸ்ட்ரீம் மீடியா” என்று சொல்லப்படும் ஊடக செய்தியாளர்கள்தனக்கு விடை தெரியாத கேள்விகளைக் கேட்டாலோ,அல்லது தன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளைக் கேட்டாலோஅவர்களது முதலாளிகள் மூலம் அவர்களைபணிநீக்கம் செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும்ஊடக முதலாளிகள் அரசாங்க மற்றும் கட்சிகளின் விளம்பரங்களை உண்டு வாழ்பவர்கள்யூ ட்யூபில் அது வாய்க்காதுஇவற்றில் பெரும்பாலானவை மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலிருந்து பலிவாங்கப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை
முகநூல்29.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2022 05:59

June 4, 2022

திரு அண்ணாமலை கோவப்படவோ பதறவோ இதில் ஏதும் இல்லை

 நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காகப் பிரதமர் சென்னை வருகிறார்

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்,இப்படியான நலத் திட்டங்கள் கோலோகலமாகத் தொடங்கப்படுவதாகவும்ஆரம்பக்கட்டங்களில் இதற்கான ஒன்றிய அரசின் நிதி முறையாக விடுவிக்கப் படுவதாகவும்காலம் செல்ல செல்ல,ஒன்றிய அரசின் நிதி நிறுத்தப்படுவதாகவும்,எனவே,அந்தத் திட்டங்களை கொண்டு செல்வதற்கான செலவையும் மாநில அரசே சுமக்க வேண்டியதாக இருப்பதாகவும்மாநில அரசிற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் ஒன்றிய அரசு தராமல் இழுத்தடிப்பதால்மாநில அரசுகள் சிரமப்படுவதாகவும் உரையாற்றுகிறார்இது இயல்பானதுசிரமமாக இருக்கிறதுஎனவே,தொடங்குகிற திட்டங்களுக்கான நிதியையும், வரவேண்டிய ஏனைய நிதியையும் தந்து உதவுங்கள் என்கிற கோரிக்கை இதுஇதை முதல்வர் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்கேட்டிருக்கிறார்இதற்கு பிரதமர் தருவதாக,அல்லது தருவதில் ஒன்றிய அரசிற்கு இருக்கக்கூடிய சிரமங்களை அடுக்கி நிச்சயம் விரைவில் தருவதாக கூறி இருக்கலாம்அல்லது முதல்வர் சொல்வது தவறு எனில்அப்படி நிலுவை எதுவும் இல்லை என்று நிறுவி இருக்கலாம்அனைத்திற்கும் வாய்ப்பிருந்ததுஇதை முதல்வர் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்திரு அண்ணாமலை கோவப்படவோ பதறவோ இதில் ஏதும் இல்லை
முகநூல்29.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2022 10:45

வெளிச்சம் கிடைக்கும்வரை உரையாட வேண்டும்

 வரும் 02.06.2022 அன்று 20 ஆசிரியர் சங்கங்களோடு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த இருப்பதாக ஒரு தோழர் ட்விட்டரில் சுட்டியிருந்தது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

இப்படியான உரையாடலுக்காக தொடர்ந்து கத்திக்கொண்டிருப்பவன் என்கிற வகையில் இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறதுகோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் தொடங்க இருப்பதால் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்வதுஆசிரியர்களுக்கான பயிற்சிEMIS பணிப்பளுபோன்றவை பேசுபொருட்கள் என்றும் அறிய முடிகிறதுமே மாதம் 31 ஆம் தேதிவரை பொதுத் தேர்வுஜூன் முதல் தேதி முதல் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி துவங்குகிறதுஅரசு என்னதான் அவசரம் காட்டினாலும் ஜூன் இருபதாம் தேதிக்குள் தாள் திருத்தும் பணி நிறைவுபெற வாய்ப்பில்லைஜூன் 13 அன்று ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது ஜூன் 20 அன்று 12 ஆம் வகுப்பு குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பது ஜூன் 27 அன்று பதினோராம் வகுப்பு குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பது என்பதில் சில நடைமுறை சிக்கல் இருந்தாலும் சரியாகத் திட்டமிட்டால் ஓரளவு இதை செய்துவிட முடியும்நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பதுவரை சிக்கலே இல்லைஉயர்நிலைப்பள்ளிகளில் பெரும்பாலும் பட்டதாரி ஆசிரியர்களே உள்ளனர்அவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வுத்தாள் திருத்தும் பணியை 11.06.2022 குள் முடித்தால்தான் 13.06.2022 அன்று உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்க முடியும்01.06.2022 அன்று CE மற்றும் SO மட்டுமே திருத்துவார்கள் என்ற வகையில் 02.06.2022 அன்றுதான் திருத்தும் பணி தொடங்கும் என்று கொள்ள வேண்டும்02.06.2022 முதல் 12.06.2022 வரையிலான இடைவெளியில் வரும் இரண்டு ஞாயிறுகளைத் தள்ளினால் சரியாக 10 நாட்களே கிடைக்கின்றனஇந்தப் பத்து நாட்களுக்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தாள்களைத் திருத்திவிட முடியுமா?அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்களா?இல்லை என்றே சொல்லலாம்எனில்,எப்படி இதை சமாளிக்கப் போகிறார்கள்?இரண்டு வாய்ப்புகள் உள்ளனகாலை மற்றும் மாலையில் இருபதில் இருந்து முப்பது என்ற வகையில் அறுபது தாள்களை ஒரு ஆசிரியரை திருத்த வைப்பது என்பது ஒன்றுதேர்வு நடத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பெரும்பாலும் பயன்படுத்தாத நிலையில் திருத்தும் பணியிலும் இதே நிலை தொடரக்கூடும்எனில்,அதிகத் தாள்களை திருத்த வைப்பதுதான் கையிலிருக்கும் ஒரே வழிஇது அழுத்தத்தை ஆசிரியர்களுக்கும் இதனால் விளையும் பாதிப்பை பிள்ளைகளுக்கும் கொடுக்கும்என்ன மாற்று?தனியார் பள்ளி ஆசிரியர்களையும் பணியில் இறக்க வேண்டும்தனியார் பள்ளி ஆசிரியர்கள் அவ்வளவு கவனமாகத் த்கிருத்த மாட்டார்கள்அப்படி தவறு நிகழ்ந்தால் அவர்களைக் கேட்க முடிவதில்லை என்று ஒரு கருத்து உண்டுஇதை நான் நிராகரிக்கிறேன்சரியாகத் திருத்த மாட்டார்கள்,அப்படி தவறு நிகழும் பட்சத்தில் அவர்களை ஏதும் கேட்க முடியாது என்றால்அவர்கள் பாடம் நடத்தும்போது தவறு செய்ய மாட்டார்களா?அப்படி நடக்கும் தவறுகளை கேட்க முடியாதுதானேஎனவே இந்தக் காரணத்தை சொன்னால்தனியார் ப:ள்ளிகளை மூடிவிட வேண்டும்தானேஆகவே தனியார் பள்ளி ஆசிரியர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும்புரிகிறமாதிரி சொல்வதென்றால்திருச்சியில் உள்ள தனியார் பள்ளிகளில் குறைந்த பட்சம் 500 அறைகள் இருக்கும்இந்த 500 அறைகளிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்இந்த 500 வகுப்பறைகளிலும் பாடம் நடத்திய ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் இல்லை என்றால்அந்தச் சுமை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தோள்களில்தானே விழும்ஆகவே அனைவரையும் தாள்திருத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்இந்தக் கூட்டத்தின் பேசுபொருளாக இது இடம்பெற வேண்டும்போக,ஆசிரியர் சங்கங்கள் மட்டும் போதாதுமாணவர் பிரதிநிதிகள், பெற்றோர்கள், கல்விமீது அக்கறை கொண்டோர் அனைவரையும் அழைத்து பேச வேண்டும்மாணவர் ஆசிரியர் உறவை எப்படி சீர்படுத்துவது என்பது குறித்து உரையாட வேண்டும்மீண்டும் உரையாட வேண்டும்மீண்டும் மீண்டும் உரையாட வேண்டும்வெளிச்சம் கிடைக்கும்வரை உரையாட வேண்டும்
முகநூல்27.05.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2022 10:39

June 3, 2022

ஏற்றியவரா இறக்குகிறார்கள்?

 அந்த நண்பரோடான உரையாடல் ஒரு கொடிக்கம்பத்தின் கீழே நிகழ்ந்தது சத்தியமாக தற்செயலானதுதான்

பெட்ரோலுக்கான வரியை குறைக்கச் சொல்லி எங்களிடம் கத்துவதுபோல் ஏன் திமுக விடம் கத்த மறுக்கிறீர்கள்?எற்றியது நீங்கதானே?உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லவா?ம்விழாக்களில் உங்க பள்ளிக் கொடிய யார் ஏற்றுவார்கள்?யாராவது விருந்தினர்இறக்குவது?நாங்கள்பார்த்தீர்களா அந்த நண்பரோடான உரையாடல் ஒரு கொடிக்கம்பத்தின் கீழே நிகழ்ந்தது சத்தியமாக தற்செயலானதுதான்பெட்ரோலுக்கான வரியை குறைக்கச் சொல்லி எங்களிடம் கத்துவதுபோல் ஏன் திமுக விடம் கத்த மறுக்கிறீர்கள்?எற்றியது நீங்கதானே?உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லவா?ம்விழாக்களில் உங்க பள்ளிக் கொடிய யார் ஏற்றுவார்கள்?யாராவது விருந்தினர்இறக்குவது?நாங்கள்பார்த்தீர்களா ஏற்றியவரா இறக்குகிறார்கள். அதுபோலதான் நமக்குத் தேவை வருமெனில் வரியை நாம்தான் இறக்கனும்ஆனா நண்பரே இறக்கிய கொடியை நாங்களே எடுத்துக் கொள்வோமேவரியையும் நாங்களே எடுத்துக்கலாமா?2 commentsமுகநூல்27.05.20222 comments
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2022 09:52

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.