இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 61
April 4, 2022
ரசனை 033
தோழர் காவனூர் சீனிவாசனது தீவிர வாசகன் நான்
நறுக்கு கவிதைகளில் அருக்கென்று ஒரு இடமுண்டுஇப்படியெல்லாம் எழுத இவரால்தான் முடியும்"கால்மடக்கி தரையில் படுத்திருக்கிறது நாற்காலியின் நிழல்"April 1, 2022
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தோழர்கள்
அவ்வப்போது ஜூரியாகவும் செல்லலாம்
தமிழ் இந்து வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதிற்கான நேர்காணலுக்கான ஸ்பெஷல் ஜூரியாக அழைத்திருந்தார்கள்
நேர்காணலுக்கு வந்த ஒவ்வொரு தோழரும் நாம் அறியாமலே நமக்குள் படிந்து கிடக்கும் “நாம்” எனும் அழுக்கை துடைத்து எறிந்தார்கள்அகந்தை அண்டாமல் நம்மை காத்துக்கொள்ளவும்என்னென்ன செய்யலாம் என்பதை போட்டியாளார்களிடம் கற்றுக்கொள்ளவும்அவ்வப்போது ஜூரியாகவும் செல்லலாம்மிக்க நன்றி Susithra Maheswaran01.04.2022
February 28, 2022
அடித்து ஆடுங்கள் தோழர் ஸ்டாலின்
அன்பின் முதல்வருக்கு,
வணக்கம்.
நான் கண்ட இரண்டு சம்பவங்களும்
முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்
ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்
அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன
முதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்தது
புதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்
பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்கு செல்கிறேன்
ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர் நின்றுகொண்டிருக்கிறார்கள்
கைகளிலே தூக்குப்போனி
அவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறது
அவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்
வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்
மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலை கிடைக்கும் என்பது தெரியும்
தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்
அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறது
அவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்
இவர்களுக்கு அன்று வேலை இல்லை
இப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்
அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறது
அந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்
வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.
அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்
வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது
அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்பு
அன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களே
மூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்
ஏறத்தாழ அதே நடைமுறை
இங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லை
ஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லை
வேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்
“இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ”
இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார்
வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில் அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லை
இதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று
“இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை” என்று நீங்கள் போட்ட உத்தரவு
திருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறது
ஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் ”லோட் மேன்கள்” என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்
தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை
அவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்
அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்து
இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்
அவர்கள் கதறட்டும்
இது இழப்பல்ல,
கூடுதல் செலவு,
அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்
வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்
அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு”
“இயற்றவும் ஈட்டவும் ஈட்டியதைக் காக்கவும்”
உங்களால் முடியும்
வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்
ஒன்று சொல்ல வேண்டும்,
எங்கள் பள்ளியின் ஆசிரியைகள் சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்
இதுபோல் ஏராளம்
இவற்றைத் தடுக்கலாம்
தொடருங்கள்
வாழ்த்துகள்
அன்புடன்,
இரா.எட்வின்.
January 4, 2022
ஆன்லைன் சூதாட்டக் காவுகள்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு கல்லூரிக் குழந்தைகள் தொடங்கி பள்ளிக்கூடத்து சிறு குழந்தைகள் வரைக்கும் அடிமையாகிப் போயிருக்கிறார்கள்
சமயபுரத்து கோயில் வாசலில் கண்ணடக்கம் விற்றுப் பிழைக்கும் ஏழைத்தாய்மார்களின் பிள்ளைகள்கூட இதில் சரிந்துபோனதைக் கண்டு உடைந்துபோனவன் நான்இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி ஒரு வெளிநாட்டு வங்கியில் வேலைபார்க்கும் ஒரு அதிகாரியின் குடும்பத்தையே காவு வாங்கியதை ஒட்டிய ஒரு விவாதத்தை சன் தொலைக்காட்சியின் இன்றைய( 03.01.2022) ”கேள்விக் களம்” கொடுத்ததுஆன்லைன் ரம்மி விளையாட்டு எவ்வளவு மோசமானது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.மணிகண்டன் என்பவர் ஒரு அயல்நாட்டு தனியார் வங்கியில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர்மனவி இரண்டு குழந்தைகள் என்று அழகான குடும்பம்ஏதோ ஒரு புள்ளியில் ஆன்லைன் ரம்மியில் கரைகிறார் மணிகண்டன்ஆன்லைன் ரம்மியை நடத்தும் நிறுவனங்கள் நம்மை விளையாடிக்கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் என்கிறார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு சிவபாலன்நாம் விளையாடிக் கொண்டே இருப்பதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் அவர் புரிகிற மொழியில் விளக்கினார்இருவர் விளையாட ஆரம்பிப்பதாகக் கொள்வோம்தொடர்ந்து நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம் எனில் காசு தீர்ந்ததும் நாம் நகர்ந்து விடுவோம்கமிஷன் நிறுவனதிற்குப் போகும் ஜெயித்த தொகை ஜெயித்தவனுக்குப் போகும் நானும் நீங்களும் ஆளுக்கு 10000 ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து உட்காருகிறோம்500 ரூபாய் பந்தயம்எனில், நான் ஐநூறு ரூபாயை கட்டுவேன்நீங்கள் ஐநூறு ரூபாயைக் கட்டுவீர்கள்நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்அநாம் கட்டிய ஆயிரத்தில் 800 உங்களுக்கு வந்துவிடும்மிச்சம் 200 ரூபாய் நிறுவனத்திற்கு கமிஷனாகப் போகும்ஆக,ஆளுக்கு 10000 ரூபாயோடு அதாவது 20,000 ரூபாயோடு உட்கார்ந்தோம்முதலாவது ஆட்ட முடிவில் வென்ற உங்களிடம் 10,300 இருக்கும்தோற்ற என்னிடம் 9,500 இருக்கும் நிறுவனத்தின் கையில் 200 ரூபாய் போயிருக்கும்இரண்டாவது ஆட்டத்தில் நான் வெற்றி பெறுவதாக வைத்துக் கொள்வோம்இப்போது என்னிடம் 9,800 ரூபாயும் உங்களிடம் 9,800 ரூபாயும் இருக்கும்நிறுவனத்திடம் 400 ரூபாய் இருக்கும்ஆட்டம் விறுவிறுப்பாய் நகர்கிறது40 முறை ஆடுகிறோம்ஆளுக்கு இருபதுமுறை வெற்றி பெறுகிறோம் என்றால்80 x 200 = 16,000 ரூபாய் நிறுவனத்திற்கான கமிஷன்40 ஆட்டம் நான், 40 ஆட்டம் நீங்கள் சமமாக வெற்ரி பெற்றிருப்போம்நான் கொண்டு வந்த 10,000 ரூபாயில் 2,000 என்னிடம் இருக்கும்நீங்கள் கொண்டுவந்த 10,000 ரூபாயில் 2,000 உங்களிடம் இருக்கும்விளையாடியது நாம்சமாமாக வென்றிருக்கிறோம்நாம் விளையாட விளையாட அவன் எவ்வளவு சம்பாரிக்கிறான் பாருங்கள்நமக்குள் ஒரு போதை வருகிறது விளையாடாமல் இருக்க முடியவில்லைகையில் இருப்பதை எல்லாம் இழந்துஒருகோடி ரூபாய் கடன் வாங்கி அதை வைத்து விளையாடிதோற்றெல்லாம் இல்லைவிளையாடியதலாயே அனைத்தையும் இழந்து கடனை அடைக்க முடியாமல் மனைவியையும் பிள்ளைகளையும் கொன்றுதானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மணிகண்டன்அரசு இதிலிருந்து இளைஞர்களை மீட்பதற்கு யோசிக்க வேண்டும் #சாமங்கவிந்து 50 நிமிடங்கள்04.01.2022January 3, 2022
ஜனவரி 2025 இல் 5000 சந்தா

January 1, 2022
காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை
அன்பின் முதல்வருக்கு,
வணக்கம்.நான் அத்தனை முறையும் உதயசூரியனுக்கே வாக்களித்த ஒரு இடதுசாரிதேர்தலுக்கு முன்பிருந்த உங்கள் மீதிருந்த அன்பு தேர்தலுக்குபின் பேரன்பானதுஉங்கள் மீதான மரியாதையும் பலமடங்கு கூடியுள்ளதுஉங்கள் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்கள் உடல்நலன் மீதான கவலையைத் தருகிறதுஆனாலும்,உங்களது உழைப்பு விழலுக்கு இழைத்த நீராகிப் போகுமோ என்கிற அச்சத்தில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்பத்திரிக்கையாளர் திரு S.P. லட்சுமணன் அவர்கள் திமுக சார்பாளர் எல்லாம் அல்லஇன்னும் சரியாக சொல்வதெனில் வக்காளத்து எல்லாம் வாங்குகிற நபரெல்லாம் இல்லை என்றாலும்அதிமுகவை எப்போதும் ஈர நெஞ்சோடு பார்ப்பவர்அது செய்கிற தவறுகளையெல்லாம் சொன்னாலும் அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர் உங்களைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது70 வயதை நெருங்கும் ஒருவர் ஆறுமாத காலமாக இப்படி அலைவதைக் கண்டு வியப்பாக இருப்பதாகவும்அத்தனை பயணங்களையும் பயனுள்ளவையாக நீங்கள் மாற்றி வருவதையும் பெருமையோடு குறிப்பிடுகிறார்அத்தனையும் உண்மை29.12.2021 அன்று தஞ்சை வருகிறீர்கள்இலக்கான ஒரு லட்சத்தி ஆறாயிரம் ஏக்கரைத் தாண்டி ஒரு லட்சத்தி அறுபத்தி ஆறாயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை சொல்கிறீர்கள்நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள சுமை தூக்குபவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்டு நிறைய செய்கிறீர்கள்வணங்குகிறேன்30.12.2021 அன்று முன்னிரவு வரை திருச்சியில் இருக்கிறீர்கள்சென்னையில் பேய்மழைவிடிந்து எழுந்தால் அதிகாலை 5 மணிக்கே சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு செய்கிறீர்கள்ஆச்சரியமாயிருக்கிறதுஅறிவிப்புகளை அரசானைகளாக மாற்றும் வேகத்தை லட்சுமணன் அப்படி மெச்சுகிறார்வாசகனை ரசிகனாக்கும் வித்தை உங்களுக்கு இயல்பாகவே இருக்கிறதுஇரண்டு சம்பவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டுவர ஆசைப்படுகிறேன்17.12.2021 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தோழர் சுபவீ அவர்கள் உரையாற்றுகிறார்அதை எதிர்த்து பல்கலைக்கழக வாசலில் மேடைபோட்டு திரு H,ராஜா ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்அதற்கு காவல்துறை அனுமதி வழங்குகிறதுகோவையில் உள்ள ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சி தருகிறதுஅதை எதிர்த்து தோழர் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கைது செய்யப்படுகிறார்இதை எதிர்த்து அய்யா வீரமணி அவர்கள்கூட 01.01.2022 அன்றைய “விடுதலை” யில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிடுகிறார்நீங்கள் சனாதனத்திற்கு எதிராகக் களமாடுபவர் என்பதில் ஆசிரியருக்கும் அய்யம் இல்லைஎனக்கும் அய்யம் இல்லைஆனால்இது மாதிரி சம்பவங்கள் நீங்கள் எவ்வளவுதான் அவர்களுக்கு எதிராக களமாடினாலும் சனாதனத்தை வளர்க்கவே உதவும்கோவை உங்களது கவனத்தில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்ஆனாலும்காவல்துறையின் இந்த காவி சாய்ந்த போக்கை நீங்கள் கண்டு சரி செய்ய வேண்டும்இது,வாக்களிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை உதயசூரியனுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பினைப் பெற்ற ஒரு இடதுசாரியின்கையேந்திய விண்ணப்பம்அருள்கூர்ந்து கவனியுங்கள்அருள்கூர்ந்து உடல்நலத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்நன்றிஅன்புடன்,இரா,எட்வின்#சாமங்கவிய 07 நிமிடங்கள்01.01.20222021 இல் சில நம்பிக்கைகளும் துளிர்த்துள்ளன
இருக்கிற எல்லா திக்குகளில் இருந்தும் ஆம்புலன்ஸ் ஷைரன் ஒலி
மருத்துவப் படிப்புக்கு இடம் கேட்டு அலைந்ததைப் போலவே மருத்துவமனைகளில் ஒரு கிடைத்துவிடாதா என்ற அலைச்சல்மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வரிசைஇவ்வளவு ஏன்,சுகாடுகளில் வரிசையாக அடுக்கிவைக்கப் பட்டிருந்த பிணங்களின் வரிசைகொடும் மழை இப்படி ஏராளம் இருந்தாலும்2021 இல் சில நம்பிக்கைகளும் துளிர்த்துள்ளன2021 மே மாத தேர்தல் முடிவுகள்கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்திய நிகழ்வுஇன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக இருந்த ஜவுளி மீதான GST உயர்வை ஒன்றிய அரசு ஒத்திவைக்க வேண்டிய அவசியத்தைக் கொடுத்ததுஇப்படி முடியும் என்பதற்கான நம்பிக்கைகளையும் இந்த ஆண்டின் இறுதிவாரம் நமக்கு அளித்திருக்கிறது பிடித்துக் கொள்வோம்அந்தி 07.4501.01.2022
மழை AV
எவ்வளவு அதட்டியும்
அடங்காமல்
காட்டுக் கத்தலாய்க் கத்தும்
மழைமீதான கோவத்தில்
வகுப்புத் தலைவியான பேத்தி ஒருத்தி
தனது ரஃப் நோட்டில்
குறித்து வைத்தாள்
மழை AV
December 31, 2021
அவரை இயற்கை இந்தப் பாடு படுத்தக் கூடாது
யாரும் எதிர்பார்க்கவே இல்லை
ஏன்?வானிலை ஆய்வு மையமே அதை கணித்திருக்கவில்லைநேற்று (30.12.2021) அப்படியொரு கடும் மழை சென்னையில் கொட்டித் தீர்த்திருக்கிறதுஒருநாள் மழையில் சென்னை சாலைகளில் மழைநீர் ராட்சஷ மோட்டார்களைக் கொண்டு நீரை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்அந்தப் பணியைப் பார்வையிட வருகிறார் முதல்வர்நேற்று முன்னிரவுவரை திருச்சியில் இருந்தவர் இன்று அதிகாலை சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்அவரை இயற்கை இந்தப் பாடு படுத்தக் கூடாது“பேய்போல கொட்டித் தீர்த்துவிட்டது” என்று அவர் கூறுகிறார்அப்படியொரு மழைநேற்று இப்படி ஒரு மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏன் கணித்து சொல்லவில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனரை ஊடகவியலாளர்கள் கேட்கிறார்கள்இந்த மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறிவிட்டதை திரு புவியரசன் ஒத்துக் கொண்டிருக்கிறார்நிலத்தில் இருந்த வளிமண்டல சுழற்சியை கடலில் இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தவறாகக் கணித்து விட்டதாகக் கூறுகிறார் அவர்போக,தங்களிடம் போதுமான அளவு ரேடார்கள் இல்லாததால் தாங்கள் தரவுகளின் அடிப்படையில்தான் கணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தயாநிதி மாறன் அவர்கள் 2020 டிசம்பர் மாதமே ரேடார் தேவை குறித்து ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும்ஒரு வருடமாக ஒன்றிய அரசிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் சென்ற பெரு மழையின்போது கூறினார்போதுமான ரேடார்களைக் ஒன்றிய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் மாநில அரசு#சாமங்கவிய ஒரு மணி முப்பத்திநான்கு நிமிடங்கள்31.12.2021இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)