இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 60

May 19, 2022

மாயைகள் சமயத்தில் இனிக்கும்

 அப்பா மாதிரியான இன்னொருவரும்

ஞாயிற்றுக் கிழமைசெத்துப் போனார்காரியமின்றுவாசலில் தேநீர் பருகிக் கொண்டிருப்பவர்களைக் கடக்கையில்என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் அவர்அவர்தான் செத்துப் போனாரேயாரது பின்ன?யாராவாவது இருக்கும்இருக்கட்டும்அவராகவே கொள்தல் மாயையாகவே இருக்கட்டும்மாயைகள் சமயத்தில் இனிக்கும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2022 10:37

May 17, 2022

எமது திரளின் கடைசி வரிசையில் இருந்து நான் வருகிறேன்

 திரு குருமூர்த்தி அவர்களுக்கு,

வணக்கம்அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில் எமக்கு விமர்சனம் இருந்தாலும் உங்களது எழுத்துக்களுக்கு இருந்த அழுத்தத்தை அறிந்திருக்கிறேன்அன்றைய ஒன்றிய அரசுக்கு அது சங்கடத்தைக் கொடுத்ததையும் நான் அறிவேன்ஆனால் அதற்காக சமீப காலமாக நீங்கள் உளறிக் கொண்டிருப்பதை சகித்துக் கொண்டே கடந்துவிட முடியாதுவங்கியில் வேலைபார்த்த நல்லவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள்கழிசடைகள்தான் இப்போது வங்கியில் இருக்கிறார்கள்என்று கூறி இருக்கிறீர்கள்அதற்கு அந்த மேடையில் இருந்த ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலாதேவி மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வருகின்றனவெளிப்படையாகப் பேசிவிடுவோமேவங்கியில் சூத்திரர்களையும் பட்டியல் இனத்தவர்களையும்தான் நீங்கள் கழிசடைகள் என்று சொல்கிறீர்கள்இன்னும் கொஞ்சம் காலம் கழித்து பார்ப்பனர் தவிர்த்த அனைவரையும் கழிசடைகள் என்று நீங்கள் அழைக்கக் கூடும்உங்களை அதே மாதிரி இழி சொல்லால் விளிக்க எனக்கு என் இயக்கம் ஒருபோதும் அனுமதி தராதுஆகவே உங்களோடும் உரையாடவும் விவாதிக்கவுமே நான் ஆசைப்படுகிறேன்வங்கியில் வேலை பார்ப்பவர்கள் கழிசடைகள் என்று குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள்இல்லை என்கிறேன்உங்களிடம் இருக்கும் தரவுகளோடு வாருங்கள்அவசரம் எல்லாம் இல்லைநேரம் எடுத்துக் கொண்டு தயாரிப்புகளோடு வாருங்கள்எங்கள் தரப்பில்எமது பொதுச் செயலாளர் தோழர் Aadhavan Dheetchanya எல்லாம் இல்லைஎமது குரு Tamil Selvan இல்லைஎமது ஆசான் Sap Marx இல்லைவங்கி ஊழியர்களின் நட்சத்திரம் Mathavaraj இல்லைஎமது திரளின் கடைசி வரிசையில் இருந்து நான் வருகிறேன்விவாதிப்போம்கத்தக் கூடாது,கூச்சலிடக் கூடாது,விவாதத்தை நாகரீகமாக நடத்த வேண்டும்கழிசடை என்ற உங்கள் உளறலை பொய் என்று நிறுவுகிறேன்நிறுவி விட்டால் ரிசர்வ் வங்கிக் குழுவில் இருந்து கழன்றுகொள்ள வேண்டும்எப்போது?எங்கு?எதிர்பார்த்து,இரா.எட்வின்LikeCommentShare31 comments
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2022 10:14

May 13, 2022

அதற்கும் சரக்கு ரயிலுக்கும் என்ன தொடர்பு?

 சரக்கு ரயில் பற்றாக்குறைதான் இந்தியாவின் உ.பி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் மின்வெட்டு நிகழ்வதற்கான காரணங்களுல் மிக முக்கியமானது என்றால் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா?

ஆனால் அதுதான் உண்மைஅனல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது அங்கு நிலவும் மின்வெட்டிற்கான காரணம்அனல் மின் உற்பத்தி குறைவிற்கு காரணம் நிலக்கரி பற்றாக்குறை என்றால் நம்பலாம்ஆனால் இந்தியாவில் 28 சதவிகித அளவிற்கு நிலக்கரி உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும்அதே சமயம் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு கிட்டத்தட்ட 13 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும்”கோல் இந்தியா” கூறுவதை மேற்கோள்காட்டி 12.05.2022 நாளிட்ட ”தீக்கதிர்” கூறுகிறதுஎல்லாம் சரி,அதற்கும் சரக்கு ரயிலுக்கும் என்ன தொடர்பு?போதுமான சரக்கு ரயில்களை கோல் இந்தியாவிற்கு ஒதுக்காததுதான் இதற்கு காரணம் என்றும் அந்த செய்தி கூறுகிறதுசரி இதனால் ஒன்றிய அரசிற்கு என்ன லாபம்?சரக்கு ரயில்களைக் குறைத்தால்,மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி போகாதுஅரசின் மின் உற்பத்தி பாதிக்கும்வேறு வழியே இல்லாமல் ஒன்றிய அரசின் நண்பர்களான பெரு முதலாளிகளிடம் மாநில அரசுகள் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க நேரும்கூட்டிக் கழித்து கணக்குப் பார்க்க வேண்டுகிறேன்#சாமங்கவிய சரியாக 2 மணி 30 நிமிடங்கள்12.032022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 08:31

May 12, 2022

ராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து...

 அன்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்இலங்கை எரிந்து கொண்டிருக்கிறதுராஜபக்‌ஷேவின் வீடு எரியும் வெளிச்சத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்ஆனால் அப்படித் தெரியவில்லைநேற்றைக்கு முந்தாநாள்,இந்தியாவிலும் இதே பொருளாதார நிலைதான் இருக்கிறது.ஆனால் இந்தியர்களைப் பாருங்கள். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இப்படிக் கொந்தளிப்பது நியாயமா?என்று தனது மக்களிடம் கேட்டிருக்கிறார் ஆக, இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையைப் போலவே இருப்பதாகத்தான் அதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லாமையும்அதனால் கையில் காசு இல்லைமறுபுறம் விலைவாசி உயர்வும் அதிலும் குறிப்பாக உணவுப் பொருள் பற்றாக்குறையும்அவற்றின் விலைவாசி உயர்வும்தான் இலங்கை எரிந்துகொண்டிருப்பதற்கான முக்கிய காரணம்உலக நாடுகள் இலங்கையின் நிலையை சாந்தப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அங்குள்ள மக்கள் தொகை அப்படிஇந்தியாவிலும் இது நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறியாதது அல்ல ஸ்டாலின் சார்இந்தியாவில் கோதுமை உற்பத்தி குறைந்திருக்கிறது என்பதே செய்திகள் வழி வரும் உண்மைஇந்திய உணவு கோதுமையை சார்ந்ததுஇறக்குமதியும் இப்போது சாத்தியமில்லைகாரணம் இந்தியப் பணத்தின் மதிப்பு அவ்வளவு வீழ்ந்திருக்கிறது100 ரூபாய்க்கு வாங்கிய கோதுமையை 115 ரூபாய்க்கு வாங்க வேண்டும்இதுவும் இறக்குமதியைப் பாதிக்கும்இந்த நிலையில் அரசின் சேமிப்புக் கிட்டங்கியில் சேமிப்பு இருந்தால் ஓரளவு தப்பிக்கலாம்ஒன்றியத்தில் அப்படி இருப்பதற்கான வாய்ப்பு இல்லைஉங்களிடம் இரண்டு கோரிக்கைகள் முதல்வரேஎதிர்க்கட்சி முதல்வர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கண்ணுக்கு கிட்டத் தெரிகிற பஞ்சத்தைப் பற்றியும் அரசின் கிடங்குகளை நிரப்பவும் வலியுறுத்துங்கள்நெல் உற்பத்தியை அதிகரிக்கவும்உற்பத்தி செய்யப்படும் நெல்லை வீணாகமல் சேமிக்கவும் ஏற்பாடுகளை செய்யுங்கள்அன்புடன்,இரா.எட்வின்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2022 09:11

May 11, 2022

அனைவருக்காகவும் அனைவரும் களமேகும்போதுதான் எதுவும் வசப்படும்

 அன்புமிக்க தோழர் சுகிர்தராணிக்கு,

வணக்கம்பழைய ஓய்வூதியத்திட்டம் வருவதற்கு சாத்தியமில்லை என்று நமது நிதி அமைச்சர் கூறியது ஒட்டிய எனது பதிவிற்கு நீங்கள் பின்னூட்டம் வைத்திருந்தீர்கள்மகிழ்ச்சியாக இருந்ததுஅதில் இரண்டு விஷயங்களை நீங்கள் சொல்லி இருந்தீர்கள்பழைய ஓய்வூதியத்தில் இருப்பவர்கள், அனைவருக்கும் அது வேண்டும் என்று போராடுவதாகவும்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு அந்த அளவிற்கு அக்கறை இருப்பதாகப் படவில்லை என்றும்தேர்வுத் தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பதன் மூலம் அரசின் கவனத்தை இதன் பக்கம் திருப்ப முடியுமா என்றும்கூறி இருந்தீர்கள்இதை முன்வைத்து உங்களோடும் நண்பர்களோடும் கொஞ்சம் உரையாட விருப்பம்மயிலாப்பூரில் ஏழை மக்களின் வசிப்பிடங்களை தரைமட்டமாக்கியபோது தீக்குளித்த மனிதன்“ஊமை ஜனங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கத்தியதாக கேள்விப் படுகிறேன்அதுதான் தோழர் நமக்கான வழிகாட்டும் குரல்அவர்களது மௌனத்தின் பின்னால் பயம் உள்ளிட்ட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்இருக்கட்டும்அவர்களது வலி நமக்குப் புரியும்அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மாவட்டத்தில் பலமுறை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவன் என்ற வகையில் சரியான நேரத்தில் சரியான திட்டம் உங்களிடமிருந்து வருவதாகவே பார்க்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறது அதுவும் வெற்றிகரமாக முடியுமா என்பது சந்தேகம்தான் தோழர்2003 வாக்கில் அனைத்து சங்கங்களும் சேர்ந்து ஒருநாள் தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்தோம்ஜெயலலிதா கோவமடைந்தார்அன்று நாகை முகாம் முற்றாகப் பணியைப் புறக்கணித்ததுமற்றபடி தமிழகம் முழுக்க 13 பேரோ அதற்கு கொஞ்சம் கூடுதலான எண்ணிக்கையிலோதான் புறக்கணித்தோம்எனவே இதில் எனக்கு இந்த நிமிடத்தில் நம்பிக்கை இல்லைநாம் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டிருக்கிறோம் தோழர்எழுபதுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் போராடியபோது அன்றைய முதல்வர் MGR அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை என்றும்தஞ்சை மாவட்டத்து விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கவேஅடுத்தநாளே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் என்றும்போராட்ட காலத்திற்கான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுவிட்டார்கள்ஆனால் அந்த ஒருநாள் கூலி விவசாயத் தொழிலாளிக்களுக்கு இழப்புதான் என்றும்TNPGTA வின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் கே.ராஜேந்திரன் அடிக்கடி சொல்வார்அந்த விவசாயிகள் போராடியபோது இயக்கமாக ஆசிரியர்கள் அவர்கள் பின்னே போகவில்லை தோழர்தூத்துக்குடி போராட்டத்தின்போது உங்களது பங்கெடுப்பு பெருமிதத்தைத் தந்தது ஆனால் ஆசிரியப் பேரினம் அந்த விஷயத்தில் இயக்கப்படவில்லைபோக்குவரத்து ஊழியர்களின் பிஎஃப் உள்ளிட்ட பணம் அவர்களுக்குப் போகாதபோதும் நாம் அங்கே எட்டிப் பார்க்கவில்லைசாதிய ஆணவக் கொலைகள் நடந்தபோது ஆசிரியர்கள் எட்டிப்பார்க்கவில்லைஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது“ஊருக்கு ஒரு ஜல்லிக்கட்டுசேரிக்கொரு ஜல்லிக்கட்டு” என்பது மாதிரி நீங்கள் வலியோடு எழுதியதாக நினைவுஅதைக்கூட நாம் ஒன்றாய் சிந்திக்கவில்லைஅனைத்து பிரிவினரும் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டு கிடக்கும்வரை விடியாது தோழர் சுகிர்தராணிஅனைவருக்காகவும் அனைவரும் களமேகும்போதுதான் எதுவும் வசப்படும்உங்களைப்போன்ற இளைஞர்கள் முன்கை எடுங்கள்தொடர்ந்து வருகிறோம்அன்புடன்,இரா.எட்வின்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2022 09:42

May 9, 2022

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

 

மரியாதைக்குரிய கல்வி அமைச்சருக்கு,

வணக்கம்

“மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பதிந்து அவர்களை நிரந்தரமாக பள்ளியில் நீக்கப்படுவார்கள்”

என்று இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறீர்கள்

ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்தவிதமான பாதிப்பையும் எவரும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற உங்களது அக்கறைக்கு அடி மனசிலிருந்து எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஆனாலும் இதுகுறித்து உங்களோடு உரையாடுவதற்கு கொஞ்சம் இருக்கிறது சார்

ஒரு குழந்தை ஒரு ஆசிரியையை வகுப்பறையில் வைத்து கொலை செய்தான்

ஊடகங்கள், பொதுமக்கள் உள்ளிட்டு ஏறத்தாழ அனைவரும் மாணவர்களுக்கு எதிராகப் பொங்கினோம்

ஏதோ பிள்ளைகள் என்றாலே குறைந்த பட்சம் பொறுக்கிகள் என்பதாக ஒரு பொதுப் புத்தியை கட்டமைப்பதில் பலர் வெற்றி கண்டனர்

அப்படி அன்று பொங்கியவர்களில் சிலருக்கு இன்றைய தேதியில் அன்று கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் மறந்து போயிருக்கும்

பலருக்கு அன்று அந்த ஆசிரியையை கொலை செய்த குழந்தையின் பெயர் மறந்து போயிருக்கும்

அநேகமாக அனைவருக்குமந்த வழக்கின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாது சார்

அப்புறம் பாருங்கள்,

பெண் குழந்தைகளிடம் யாரோ சில ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்துகொள்ள,

ஆசிரியர்கள் அனைவரும் காமக் கொடூரன்கள் போலவும்கூட பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டது

இன்றைய தேதியில் அந்த ஆசிரியர்கள்மீதான வழக்கின் நிலை குறித்தும் கவலையற்றுப் போனோம்

இப்போது எங்கள் சகோதரர்களிடம் சில குழந்தைகள் தகாத முறையில் நடந்துகொள்ள

நீங்கள் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது

இவற்றை தடுப்பதற்கு சில சட்டப் பாதுகாப்பு அனைவருக்கும் தேவைதான் என்பதை நான் ஏற்கவே செய்கிறேன்

ஆனாலும் எங்கள் அன்பிற்குரிய அமைச்சரிடம் உரிமையோடு சிலவற்றை வைப்பதற்கு ஆசைப்படுகிறேன்

பள்ளியில் இருந்து தவறு செய்யும் குழந்தைகளை நிரந்தரமாக நீக்கிவிட்டால் அவன் எங்கு சென்று தன்னை நெறிப்படுத்திக் கொள்வான்?

பல வருடங்களுக்கு முன்னால் எமது பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை மது அருந்திவிட்டு வகுப்பில் வாந்தி எடுத்துவிட்டான்

பெண் குழந்தைகளின் பெற்றோர் அந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால்தான் தங்களது குழந்தைகளை எங்கள் பள்ளியில் படிக்க வைக்க முடியும் என்று துடிக்கிறார்கள்

நாங்கள் அவர்களிடம் அந்த மாணவனுக்காக மன்னிப்போடு மன்றாடுகிறோம்

முடியாது போகவே எங்கள் தலைமை ஆசிரியர் TC தருவதற்கு தயாராகிறார்

அப்போது அவனது தாய் உரத்த குரலெடுத்து,

“அவன் பள்ளிக்கு சரக்கடித்துவிட்டு வந்து வாந்தி எடுத்தான் என்பதற்காக எங்களை அழைத்து இப்படி விசாரிக்கிறீர்களே,

வீட்டிலும் இதை செய்கிறாந்தான். என்றைக்காவது உங்க க்ளாஸ் சார கூட்டிட்டு வாடானு நாங்க சொல்லி இருக்கோமா சார்

பாடம் படிக்க மட்டும் அல்ல பள்ளி. நெறிப்படுத்தவும்தான் “ என்றார்

அனைவரும் அவன் படிப்பதற்கு சம்மதித்து விட்டனர்

அவன் MBA முடித்து நல்ல வேலைக்குப் போனான்

என் அன்பிற்குரிய மகேஷ் சார்,

நாங்கள் இறுக்கத்தோடு வகுப்பிற்குள் நுழைகிறோம்

பிள்ளைகள் இறுக்கத்தோடு எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள்

இறுக்கத்தோடே நடத்துகிறோம்

இறுக்கத்தோடே கேட்கிறார்கள்

இறுக்கத்தோடு வெளியேறுகிறோம்

எதைவிடவும் இறுக்கத்தோடு எழுந்து நன்றி சொல்கிறார்கள்

புன்னகையோடு வகுப்பிற்குள் நுழந்து புன்னகையோடே வெளிவரும் சூழல் வந்தால் இந்த நிகழ்வுகளில் 75 சதம் சரியாகும்

இதை எப்படிக் கொண்டுவருவது?

இதற்கான உரையாடலை ஏற்பாடு செய்யுங்கள்

குழந்தைகளை,

ஆசிரியர்களை,

அலுவலகப் பணியாளர்களை,

பெற்றோரை,

மாணவர் சங்கப் பிரதிநிதிகளை,

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை,

அதிகாரிகளை

அக்கறை உள்ளவர்களை

ஒன்றிணைத்து ஒரு உரையாடலுக்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்யுங்கள்

ஆசிரியர் மாணவர் உறவு செறிவுறும்

உங்களது இன்றைய அறிக்கை எங்கள்மீதான உங்களது அக்கறையில் இருந்து வந்த்து

அதற்காக எம் நன்றிகள்

அன்புடன்,

இரா.எட்வின்.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2022 07:33

May 7, 2022

ஊர்தோறும் தெரு தோறும் தமிழ்ப் பள்ளிகளைத் துவக்கு

”தாயே

தாலாட்டை நிறுத்துபசிக்கிறபோது எப்படி சாப்பிடுவது?தந்தையேஅறிவுரையை நிறுத்துபசிக்கிறபோது எப்படி கேட்பது?ஆசிரியரேபாடத்தை நிறுத்துபசிக்கிறபோது எப்படி படிப்பது?எல்லோரும் எல்லாவற்றையும் நிறுத்துங்கள்முதலில் என் பசிக்குஒரு பதிலை சொல்லுங்கள்”என்ற அண்ணன் எஸ். அறிவுமணியின் கவிதைக்கு 07.05.2022 அன்று சட்டமன்றத்தில் பதிலைக் கூறி இருக்கிறார் முதல்வர்ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்இந்தக் கேள்வியை முதன் முதலாக அறிவுமணிதான் எழுப்பியதாகவும் கொள்ளக் கூடாதுஸ்டாலின்தான் முதன் முதலாக அதற்கான பதிலைத் தந்துள்ளதாகவும் கொண்டுவிடக் கூடாது இந்தப் பசியும் பழசுதான்அதனைத் தீர்ப்பதற்கான சிறு சிறு முயற்சிகளும் பழசுதான்ஒருமுறை அன்றைய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு ஆய்விற்காக ஒரு பள்ளிக்கு செல்கிறார்கூட்டு வழிபாட்டின்போது குழந்தைகள் சிலர் மயக்கம்போட்டு விழுகிறார்கள்காரணம் பசி என்பதும் பசிக்கு காரணம் காலை உணவு வழங்க இயலாத குடும்பச் சூழல் என்பதும் அவருக்குப் புரிகிறதுஅன்றைய முதல்வர் காமராசரோடு இதுகுறித்து உரையாடுகிறார்மதிய உணவுத் திட்டம் வருகிறதுதமிழ்ச் சமூகம் கொண்டாடித் தீர்க்கிறது அன்று அந்தக் குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்தது காலை உணவின்மையால்அவர்களுக்கு கிடைத்ததோ மதிய உணவுஆககுழந்தைகளின் காலைப்பசி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறதுஅதை புரிந்துகொண்டவராக திரு ஸ்டாலின் இருக்கிறார் என்பதை இந்த அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறதுஇந்த அறிவிப்பிற்கான மூன்று காரணங்களை முதல்வர் கூறி இருக்கிறார்1) குழந்தைகள் சீக்கிரமே வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்புவதால் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள்2) வீடு தூரத்தில் இருப்பதால் சாப்பிடாமல் வருகிறார்கள் 3) காலை உணவு தருகிற சூழலில் பல குடும்பங்கள் இல்லைஇதை இரண்டாக குறைக்கலாம்பள்ளிகள் தூரமாக இருப்பதால் குழந்தைகள் சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கிறது. ஆகவே சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது ஒன்றுபல குடும்பங்களில் காலை உணவிற்கு வழி இல்லை என்பது இரண்டுதீர்வு எளிதானவைஅருகமைப் பள்ளிகளை அமைக்க வேண்டும்“ஊர்தோறும் தெரு தோறும் தமிழ்ப் பள்ளிகளைத் துவக்கு” என்றான் பாரதிதமிழ்ப் பள்ளிகளாகத் துவக்க வேண்டும்எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்முடியும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2022 22:48

குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்

 காலை பள்ளியில் தேர்வுப்பணிக்கான கூட்டங்கள் குறித்த பதற்றத்தில் இருந்தால்

அதைவிட பதற்றத்தோடு வருகிறார் தமிழாசிரியை ஜெயாயாராச்சும் வந்து கூப்பிட்டால்தான் பள்ளிக்கு வருவதாக 10 A அனிதா சொல்லி இருக்கிறாள் அதுதான் அவ்வளவு பதற்றம் அவருக்குஅவரது பதற்றத்திற்கு இன்னும் இரண்டு காரணங்களும் இருந்தனநேற்றைய கணக்கு சிறப்பு வகுப்பிற்கு வந்திருந்த அனிதா இன்றைய தனது வகுப்பிற்கு வரவில்லைஆகவே கணக்கில் தேர்ச்சி பெற்று தனது பாடத்தில் கோட்டை விட்டுவிடுவாளோ என்ற பயம் ஒரு காரணம்B க்ளாசில் அனைத்துப் பிள்ளைகளும் வந்துவிட்டபோது தன் பிள்ளை மட்டும் வராத கோபம் இன்னொரு காரணம்பிரச்சினை என்னவெனில்,நேற்று அனிதாவின் தாயார் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அவளை அடித்திருக்கிறார்அந்தக் கோவத்தை பள்ளியின்மீது காட்டியிருக்கிறாள் குழந்தைசரி என்று இரண்டு குழந்தைகளை அனுப்பி வைத்தோம்இவர்கள் போவதற்குள்,பள்ளிக்கூடம் போவதற்கு இவ்வளவு அலும்பா என்று அவளது அம்மா இரண்டு போட கோவத்தின் உச்சத்திற்கே போய்விட்டாள் அனிதாஅழைக்கப் போன குழந்தைகளிடம் டீச்சர் வந்து கூப்பிட்டால்தான் வருவேன் என்று சொலிவிட்டாள்வேறு வழி,டீச்சர் அழைத்து வந்தார்குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2022 08:47

சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை

 முன்குறிப்பு:

இந்தக் கடிதம் எழுதி ஏழு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. ஏனோ வைக்கவில்லை. அரசின் இரண்டாமாண்டு தொடங்கும் வேளையில் இதை வைப்பது சரி என்று படுகிறது.சாஸ்த்ரா, லாக் அப் மரணங்கள், மின்தடை உள்ளிட்டு உரையாட இருக்கின்றன. அவை குறித்தும் உரையாடுவோம். இப்போதைக்கு அந்தக் கடிதம்******************************************************* அன்பின் முதல்வருக்கு,வணக்கம்.நான் கண்ட இரண்டு சம்பவங்களும்முதல்வராகப் பதவியேற்ற நாளில் நீங்கள் போட்ட கையெழுத்துகளில் ஒன்றும்ஒன்றோடு ஒன்றைப் பொருத்திப் பார்க்குமாறும்அது குறித்து தங்களுக்கு கடிதம் எழுதுமாறும் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றனமுதல் சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்ததுபுதுக்கோட்டையில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்றுகொண்டிருக்கிறேன்பேருந்தைப் பிடிப்பதற்குமுன் தேநீர் பருகத் தோன்றியதால் ஆவினுக்குசெல்கிறேன்ஆவினுக்கும் பெரியார் புத்தக நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் ஆண்களும் பெண்களுமாய் இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பேர்நின்று கொண்டிருக்கிறார்கள்கைகளிலே தூக்குப்போனிஅவர்களது கலகலப்பான உரையாடல் என்னை அந்த இடத்திலேயே கட்டிப்போடுகிறதுஅவர்கள் கொத்தனார்களும் சித்தாள்களும்வரப்போகும் மேஸ்திரிகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்மேஸ்திரிகள் வந்தால்தான் அவர்களில் எத்தனைபேருக்கு அன்று வேலைகிடைக்கும் என்பது தெரியும்தேநீரை முடித்துக் காசு கொடுப்பதற்குள் பத்துப் பதினைந்துபேர் அங்கே வருகிறார்கள்அவர்கள் அனைவரும் மேஸ்திரிகள் என்பது புரிகிறதுஅவர்கள் தலைக்கு பத்திலிருந்து பதினைந்துபேர் வரை தேர்ந்தெடுக்க மிச்சம் ஒரு இருபது அல்லது இருபத்தி ஐந்துபேர் சோகத்தோடு ஒதுங்குகிறார்கள்இவர்களுக்கு அன்று வேலை இல்லைஇப்படித்தான்ஒவ்வொரு நாளும் சிலருக்கு வேலை கிடைக்காது என்கிறார்கள்அதுவரை இருந்த கலகலப்பு மாறுகிறதுஅந்தக் கலகலப்பான அரட்டையும் அதன்பிறகான இந்த சோகமும் அன்றாட வாடிக்கை என்கிறார் டீமாஸ்டர்வேலை கிடைக்காத ஆண்கள் மிக சொற்பம்.அவர்கள் தங்களது அல்லது தங்கள் நண்பர்களது இருசக்கர வாகனங்களில் புறப்படுகிறார்கள்வேலை கிடைக்காத பெண்களில் சிலருக்கு கண்கள் கலங்கிவிட்டது அவர்கள் நகரப் பேருந்தில் வந்து திரும்ப வேண்டும். போக வர இருபது ரூபாயாவதும் அன்றைக்கு அவர்களுக்கு இழப்புஅன்றில் இருந்து இன்றுவரை வேலை கிடைக்காது பேருந்துக்கு காசு செலவு செய்ய வேண்டிய அந்தப் பெண்களின் கண்ணீர் என்னை உலுக்கிக்கொண்டே இருக்கிறது முதல்வர் அவர்களேமூன்று நாட்களுக்கு முன்னால் பெரம்பலூர் அய்யங்கார் பேக்கரி அருகே அதே மாதிரி ஒரு கூட்டத்தைக் கண்டேன்ஏறத்தாழ அதே நடைமுறைஇங்கும் இருபது அல்லது இருபத்தி ஐந்து பேருக்கு வேலை இல்லைஆனால் அன்று திருச்சியில் கண்ட சோகம் இல்லைவேலை கிடைத்த ஒரு பெண் வேலை கிடைக்காத தன் தோழியிடம் தனது சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கிறார்“இன்னைக்கு மோல்டு மலரு, சாப்பாடு தருவாங்க. எடுத்துட்டுப் போ”இவரும் கை அசைத்து வழி அனுப்பிவிட்டு பேருந்திற்காக காத்திருக்கிறார் வேலை கிடைக்காத வருத்தம் தெரிகிறது. ஆனால் அன்று திருச்சியில்அந்தப் பண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் சுவடுகளை இப்போது இவர்களிடத்திலே காணவில்லைஇதற்கு காரணம் முதல்வராகப் பதவியேற்ற அன்று“இனி சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை”என்று நீங்கள் போட்ட உத்தரவுதிருச்சியில் அந்தப் பெண்களின் முகத்தில் நான் கண்ட வலியின் தழும்புகளை உங்களது ஒற்றைக் கையெழுத்து துடைத்துப் போட்டிருக்கிறதுஒருமுறை சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் ”லோட் மேன்கள்” என்று அழைக்கப்படும் மூட்டை தூக்கும் தோழர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை ஒரு கோரிக்கையோடு சந்திக்கிறார்கள்தாங்கள் சுமக்கும் மூட்டை ஒன்றிற்கு பத்துப் பைசாவோ இருபது பைசாவோ கூடுதலாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கைஅவர்களுக்கு “TIME SCALE” நிர்ணயித்து அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றுகிறார் கலைஞர்அவர்களை நிரந்தரப்படுத்தி கலைஞர் அன்று போட்ட கையெழுத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நிங்கள் போட்ட இந்தக் கையெழுத்துஇதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு வரும் என்று பொருளாதார மேதைகள் கணக்குப் போட்டு கதறுவார்கள்அவர்கள் கதறட்டும்இது இழப்பல்ல,கூடுதல் செலவு,அவ்வளவுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்அதை வருவாயைக் கூடுதலாக்குவதன் மூலம் சரிசெய்துவிடலாம் என்பதையும்வருவாயை எப்படிக் கூட்டுவது என்பதையும் நீங்களும் அறிவீர்கள்அதை அறிந்தவர்களை கூடவே வைத்திருக்கவும் செய்கிறீர்கள்“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் வல்லது அரசு”“இயற்றவும்ஈட்டவும்ஈட்டியதைக் காக்கவும்”உங்களால் முடியும்வல்லமையோடு வகுத்தலை செய்கிறீர்கள்ஒன்று சொல்ல வேண்டும்,ஆசிரியைகள் அரசியல் ஊழியர்கள், வசதிபடைத்தவர்கள் உள்ளிட்ட சிலரும் கட்டணமில்லா பேருந்தில் வருகிறார்கள்இதுபோல் ஏராளம்இவற்றைத் தடுக்கலாம்தொடருங்கள்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2022 08:37

May 2, 2022

குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்

காலை பள்ளியில் தேர்வுப்பணிக்கான கூட்டங்கள் குறித்த பதற்றத்தில் இருந்தால்அதைவிட பதற்றத்தோடு வருகிறார் தமிழாசிரியை ஜெயாயாராச்சும் வந்து கூப்பிட்டால்தான் பள்ளிக்கு வருவதாக 10 A அனிதா சொல்லி இருக்கிறாள் அதுதான் அவ்வளவு பதற்றம் அவருக்குஅவரது பதற்றத்திற்கு இன்னும் இரண்டு காரணங்களும் இருந்தனநேற்றைய கணக்கு சிறப்பு வகுப்பிற்கு வந்திருந்த அனிதா இன்றைய தனது வகுப்பிற்கு வரவில்லைஆகவே கணக்கில் தேர்ச்சி பெற்று தனது பாடத்தில் கோட்டை விட்டுவிடுவாளோ என்ற பயம் ஒரு காரணம்B க்ளாசில் அனைத்துப் பிள்ளைகளும் வந்துவிட்டபோது தன் பிள்ளை மட்டும் வராத கோபம் இன்னொரு காரணம்பிரச்சினை என்னவெனில்,நேற்று அனிதாவின் தாயார் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு அவளை அடித்திருக்கிறார்அந்தக் கோவத்தை பள்ளியின்மீது காட்டியிருக்கிறாள் குழந்தைசரி என்று இரண்டு குழந்தைகளை அனுப்பி வைத்தோம்இவர்கள் போவதற்குள்,பள்ளிக்கூடம் போவதற்கு இவ்வளவு அலும்பா என்று அவளது அம்மா இரண்டு போட கோவத்தின் உச்சத்திற்கே போய்விட்டாள் அனிதாஅழைக்கப் போன குழந்தைகளிடம் டீச்சர் வந்து கூப்பிட்டால்தான் வருவேன் என்று சொலிவிட்டாள்வேறு வழி,டீச்சர் அழைத்து வந்தார்குழந்தைங்க பள்ளிக்கு வர எந்த அளவிற்கும் குனிவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2022 10:52

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.