இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 57

June 17, 2022

அந்த சரக்குகளை பத்திரப் படுத்துவதிலாவது உதவி இருக்கலாம்

 தானொரு இஸ்லாமியன்

எனவே தனது கடை இடிக்கப்படலாமென்ற அச்சத்தில்தனது கடையில் உள்ள சரக்குகளை குடும்பத்தோடு அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்கிறார்பத்திரப்படுத்தஅந்த வீடியோ அதைமட்டுமே காட்சிப் படுத்தியிருப்பின்அழுதுகொண்டே தூங்கியிருக்கக் கூடும் நான்பக்கத்துக் கடைக்காரர் எந்தச் சலனமும் இன்றிகட்டிய கைகளோடுரோட்டைக் கடந்துபோகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதுபோல அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அந்த வீடியோ காட்டுகிறதுகுறைந்தபட்சம் அந்த சரக்குகளை பத்திரப் படுத்துவதிலாவது உதவி இருக்கலாம்கலங்கிய கண்களோடு நின்றிருக்கலாம்ஆத்திரமாக இருக்கிறதுஎப்படித் தூங்குவது?
முகநூல்13.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2022 10:32

June 16, 2022

தயக்கமோ தயாரிப்போ இல்லாமல்

 தயக்கமோ தயாரிப்போ இல்லாமல் அவர்களது தாத்தா அறைக்குள் அவர்கள் நுழைவது மாதிரி

விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கவனமோவெற்றிபெற வேண்டும் என்ற திட்டமோ இல்லாமல்பக்கத்து வீட்டுக் குழந்தையோடு விளையாடத் தொடங்கும் ஒரு குழந்தையின் மனநிலையோடும்குழந்தைகளை பள்ளிகளுக்குள் அனுப்புவோம்தாங்கல
முகநூல்13.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2022 06:04

இறுதி ஆண்டின் முதல் நாள்

ஆயிற்று

முதல் நாளன்று பள்ளிக்குப் போன அதே மனநிலையில்,முதல் கோடைக்குப் பிறகான முதல் வேலைநாளின்போது சென்ற அதே மனநிலையில், பள்ளிக்குப் போன அதே மனநிலையில்பள்ளிக்குப் போகிறேன்முடிந்த அளவு கற்பித்தலைக் குறைத்துகற்றலுக்கு உதவும் கருவியாக என்னையும் என் நண்பர்களையும் இருத்திக்கொள்ள என்னால் ஆனவரை உதவவும்நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல்என்னோடு பணிபுரியும் நண்பர்களை வாரம் ஒரு புத்தகம் வாசிக்க வைத்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதுகுறித்து ஒரு ரெவ்யூ வாங்கியதுபோல் இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்றும்பள்ளிக்கு வரும் பெற்றோர்களை காக்க வைக்காமல் அழைத்து அமரவைத்துப் பேசும் செயலை நான் தொடரவும்குழந்தைகளின் தகப்பனாய் தாத்தனாய் தொடரவும்நண்பர்கள் என்னை வாழ்த்த வேண்டுகிறேன்முகநூல்13.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2022 06:02

நூபுர்ஷாவின் கருத்து இந்துக்களின் கருத்தல்ல

 நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின்போது கவச உடையில் காவலர்கள் செல்ல வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் வலியிறுத்தி உள்ளதாக 12.06.2022 நாளிட்ட “தமிழ் இந்து” கூறுகிறது

இதன் பொருள் என்ன என்பது தெரியவில்லைஅந்தக் கருத்துக்கு எதிராகப் போராடுபவர்களை நொறுக்குங்கள் என்பதாக இந்த வலியுறுத்தலைக் கொள்வதாஎனில்,அவரது கருத்தை அரசு ஏற்கிறதா?ஏற்கிறது என்றால் அவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள்அவரைக் கட்சியில் இருந்து நீக்கியது என்பது ஒருவகையில் நூபுரின் கருத்திற்கான எதிர்வினைதானேகட்சியின் எதிர்வினை என்பது அவரை கட்சியைவிட்டு வெளியேற்றுவது எனில்தெருவில் வந்து போராடுவதுதானே மக்களுக்கான எதிர்வினைக்கான வாய்ப்புஅதுபோகஏன் அவர்மீது இன்னும் FIR இல்லைஇவை எல்லாம் ஒருபுறம்இன்னொருபுறம் அல்கொய்தா இதற்கான எதிர்வினையாற்றுவதுஇத்தனை முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோதுஅவர்களது பாதுக்காப்பு கேள்விக்கு உள்ளானபோதுஅவர்களது குடியுரிமை கேள்விக்கு உள்ளானபோதுவராத அல்கொய்தாநூபுர்ஷாவின் கருத்தால் பிஜேபி க்கு பின்னடைவு வருகின்றபோது சரியாக உள்நுழைய முயற்சிப்பதுபாஜக விற்கு ஆதரவான நடவடிக்கை என்பதையும்நூபுர்ஷாவின் கருத்து இந்துக்களின் கருத்தல்லஅது,பாஜகவின் RSS இன் கருத்து என்பதையும்இந்துக்களின் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் தங்களோடு இணைந்த அவர்களது களப்போராட்டமும் மட்டுமே தங்களுக்கான உரிமையைக் காக்கும் என்பதும்இந்திய இஸ்லாமியத் தோழர்களுக்குத் தெரியும் #சாமங்கவிய 44நிமிடங்கள்12.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2022 05:53

June 12, 2022

ரெண்டுமே அசிங்கம்

 பழைய சேகர்பாபுவைப் பார்க்க நேரும் என்று சேகர்பாபுவும்

அதற்கு பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்டுபழைய அண்ணாமலையைப் பார்க்க நேரும் என்று அவரது ஆதரவாளர்களும்பேசுவதாகத் தெரிகிறதுரெண்டுமே அசிங்கம்
முகநூல்12.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2022 10:54

பேசித் திருத்தி இருக்கலாம்

 சுறுக்கமா இல்ல

சுருக்கமாத்தானடா லூசு பேசனுமென்றகுறுஞ்செய்திக்கு பதில்ரெண்டே ரெண்டு வார்த்தைகளில் பேசித் திருத்தி இருக்கலாம்எதுவெல்லாம் செய்யும்உனக்கும் எனக்குமான உரையாடல்என்பதறிந்த நீ
முகநூல்10.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2022 10:51

June 10, 2022

சங்கதியே இல்லாத பாடலெனினும்...

 சங்கதியே இல்லாத பாடலெனினும்

உணர்வையும் பாவத்தையும் கொண்டு பாடலை நிரவுவதில் சுசிலா தாயாருக்கு இணை யாரும் இல்லை”உயிரா மானமா” வில் கொடியில் இரண்டு மலருண்டு என்ற பாடலை இந்தப் பிரிவில் கொள்ளலாம்கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும்இதில் நமக்கு எந்த வழக்கும் இல்லைஆனால்மிக மிக எளிமையான பாடலாகவும் தோன்றும்பாடிப் பார்த்தால்தான் தெரியும் இதைப் பாடுவது எவ்வளவு சிரமம் என்றுஉணர்வையும் பாவத்தையும் அவ்வளவு டஃப்பாகக் கொடுத்திருப்பார்கள் தகப்பனும் தாயும்இரண்டாவது சரணம்கண்ணீரிலே தாலாட்டவும்கல்யாணப் பெண்ணாக சீராட்டவும்அண்ணன் உண்டோதங்கை உண்டோஅண்ணி என்னும் எங்கள் அண்ணை உண்டோசங்கடமே இல்லாத எளிய வார்த்தைகள்சிக்கலே இல்லாத சீரான சந்தம்ஆனால் கண்களை மூடிக்கொண்டு கேட்டால்தனது குடும்பத்தின் மேன்மையைஉறவின் பின்னலடுக்கை அதிலும் அண்ணன் எனும்போது அந்த “ண” வை எம் தாயாரைவிட யாரால் அப்படிக் கொடுக்க முடியும்?அண்ணி என்னும்எங்கள் அண்ணை உண்டோஅய்யொ அய்யோஎன்ன ஒரு feelலயித்துக் கிடப்போம் சரணத்தின் இறுதியில் “அம்மா என்னும் தெய்வம் தந்த”இங்கு “அம்மா என்னும்” என்பதை எல்லா அம்மாக்களுக்குமான காணிக்கையாய் அப்படி குழைத்துக் கொடுப்பார் எம் தகப்பன்ஊருல எங்க நாட்டுல எங்ககாட்டுங்க எங்க தாய் போல என்றும் சொல்லலாம்ஊருல எங்க நாட்டுல எங்ககாட்டுங்க எங்கஅப்பனாட்டம் என்றும்காலரைத் தூக்கலாம்
முகநூல்09.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 11:12

FRINGE ELEMENTS ?

 தங்களது இறைதூதர் என்று கிட்டத்தட்ட 200 கோடி மக்கள் நம்பும் ஒருவர் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளார்கள் இருவர் தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள்

அதற்கு எதிராக உலக நாடுகள், குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் எதிர்வினையாற்றுகின்றன இது இந்தியாவிற்கு சங்கடத்தையும் தலைகுனிவையும் அளித்திருக்கிறது என்பதை எல்லாம் பரிசீலிப்பதற்கு முன் இந்திய மக்களே அதை ஏற்கவில்லை என்பதையும்இதை எதிர்க்கும் இந்திய மக்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள் என்பதையும் அருள்கூர்ந்து அனைவரும் கணக்கிலெடுக்க வேண்டும் என்று கோருகிறேன்இதில் நாம் தெளிவாக இல்லாவிட்டால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்கள் இருப்பதாக உலகம் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறதுஇது மிக மிக ஆபத்தானதுஇந்தியா என்பது எல்லோருக்குமானது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடுஅதாவது, பெரும்பான்மை இந்துக்களின் நிலைப்பாடும் அதுதான்எந்த மதத்தோடும் சம்மதம் இல்லாத நாத்திகன் நான்ஆனால் அனைவரோடும் அனைத்துக் கோவில்களுக்கும் செல்பவன்தான்எந்த ஒரு தெய்வத்தையும் வணங்குவதில்லைஎந்த தெய்வத்தோடும் நமக்கு சண்டையுமில்லைஇல்லாத ஒன்றோடு சண்டைபோடுவது எப்படி சாத்தியம்?கடவுள் உண்டு என்று சொல்ல நம்பிக்கையாளர்களுக்கு இருக்கிற உரிமை அப்படி ஒருவர் இல்லை என்று சொல்வதற்கான எங்கள் உரிமையையும் உள்ளடக்கியதுகடவுளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லமக்களின் நம்பிக்கை தவறு என்று சொல்ல உரிமை நிச்சயம் உண்டுஆனால் அதை கொச்சைப் படுத்தவோ கீழ்மைப் படுத்தவோ எவனுக்கும் உரிமை இல்லைஇந்தத் தவறை செய்த தனது செய்தித் தொடர்பாளார்களை பாஜக நீக்கி இருக்கிறதுஅவர்களை FRINGE ELEMENTS என்று கூறி இருக்கிறதுஇந்தியா மத வேறுபாடுகளை ஒருபோதும் சகிக்காது என்று கூறுகிறதுஇதெல்லாம் நடிப்பு என்று கொள்வதற்குதான் வாய்ப்புகள் அதிகம் ஆனாலும்இதை சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு வந்திருக்கிறதுஇதை மதச்சார்பற்ற சக்திகள் பயன்படுத்தி அவர்களிடம் இருந்து மக்களை மீட்க வேண்டும்எந்த விதத்திலும் சிறுபான்மையினரையும் இந்துக்களையும் எதிரெதிர் திசையில் நிறுத்த முயற்சிக்கும் மதவெறிக் கும்பலிடம் பலியாகிவிடக்கூடாதுஇதைப் பயன்படுத்தி இந்தியாவையும் சிறுபான்மையினரையும் எதிரெதிர் திசையில் நிறுத்திவிடவும் கூடாது
#சாமங்கவிந்து34 நிமிடம்07.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 11:05

திராவிடத்திற்கான தடை சனாதனத்திற்கான சிவப்புக் கம்பளம்

 திமுக வின் ஆதி வளர்ச்சியில் பல்கலைக் கழகத்து உரையாடல்களுக்கு பெரும் பங்கு உண்டு

சனாதனத்தை அம்பலப்படுத்தவும் திராவிடத்தை வளர்த்தெடுக்கவும் தலைவர்கள் தேர்ந்தெடுத்த இடங்கள் அவைபல்கலைக் கழகங்களில் அரசியலுக்கான தடை என்பதுதிராவிடத்திற்கான தடைசனாதனத்திற்கான சிவப்புக் கம்பளம்
முகநூல்04.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2022 10:54

June 9, 2022

நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்

 சிறுவாச்சூருக்கும் நம் வீட்டிற்குமான இடைவெளி 9 கிலோமீட்டர்

ஏறத்தாழ 34 ஆண்டுகளாக சிறுவாச்சூரைக் கடந்துதான் பள்ளிக்குப் போகிறேன்பள்ளி முடிந்து சிறுவாச்சூர் வழியாகத்தான் வீடு வருகிறேன்சிறுவாச்சூர் கோவில் புகழ்பெற்ற கோவில்மிகவும் பிரபலமான கோவில்இப்போது சிறுவாச்சூர் தமிழ்நாட்டின் பேசப்படக்கூடிய ஊராக மாறி இருக்கிறதுஇதற்காக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறக் கடமைபட்டிருக்கிறேன்நாத்திகனான நான் இரண்டுமுறை அந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறேன்அது தனியார் கோவில்எனக்கு அந்தக் கோவிலின்மீது மிகப்பெரும் மரியாதையும் ஈர்ப்பும் உண்டுஇந்தக் கோவிலில் பார்ப்பனர்கள் தட்டை நீட்ட நம்ம ஆள் தேங்காய் உடைத்து விபூதி தருவார்கள் என்று கேள்விப்பட்டிருப்பதே இதற்கான காரணம்இந்தக் கோவிலின் சிலையும் உடைக்கப்பட்டுஅதன் காரணமாக எழுந்துள்ள ஊழல், இறை அவமதிப்பு எல்லாம் கடந்து என்னை கேள்விபட்ட நாளில் இருந்து கிழித்துப் போட்டதுதாயா புள்ளையா காலங்காலமாக வாழ்ந்துவரும் எம் மாவட்ட மக்களை பாவிகள் கூறு கூறாக சிதைத்து விடுவார்களோ என்ற அச்சம்அப்படி எல்லாம் நடக்காதுஅந்த பந்தம் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்அந்த நம்பிக்கையைத் தந்திருப்பவர்கள்யூ ட்யூப் சேனல் பிள்ளைகள்அவர்கள் மட்டும் இல்லை என்றால் அந்த ஆபத்து நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இல்லை என்று மறுக்க முடியாதுதோழர் சவுக்கு சங்கர் தலையிட தமிழ் மிண்ட் கரிகாலன் களமிறங்கி உள்ளதை உள்ளபடி அம்பலப்படுத்தநாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்பேரலை யூ ட்யூப் சேனலில் சிறுவாச்சூர் குறித்த பிள்ளை மில்டனோடான நேர்காணலின் இறுதியில் பிள்ளை கரிகாலன் (Karikalan Kiru)மத மோதலை உருவாக்குவதற்காக நடந்தவற்றை கூர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று சொன்னதுசொன்னதைவிட அதை சொன்ன டோன் மிக முக்கியம்இந்த சின்ன வயதில் இந்தப் பிள்ளைக்கு இருக்கும் இந்த பக்குவத்தையும், மனித நேயத்தையும், வித்தியாசங்கள் மீதான மரியாதையையும்இயற்கை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்தோழர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் இருவரையும் மில்டன், கரிகாலன், தமிழ் மிண்ட்டில் இருக்கும் அந்தக் குட்டிப் பாப்பாவையும்இறுகப் பற்றிக் கொள்கிறேன்கையெடுத்துக் கும்பிட்டு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
முகநூல்03.06.2022
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 10:04

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.