இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 55
August 12, 2022
அவரைப் பாதுகாக்க வேண்டும்
எதிரே அமர்ந்திருக்கும் திரு நயினார் நாகேந்திரனிடம்
ஏதோ இந்தியில் கேட்கிறார் சத்யம் தொலைக்காட்சி முக்தார் அஹமதுஎன்ன கேட்டார் என்பது என்னைப் போலவேநயினாருக்கும் புரியவில்லைசிரித்துக் கொண்டேஇதைத் தமிழில் கேட்கலாமே என்ற நயினாரிடம் இப்ப வலிக்குதுல்ல. இதுதான் இப்போது பாராளுமன்றத்தில் நடக்கிறதுஎன்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்அவரைப் பாராட்டுவது அது இதெல்லாம் அப்புறம்அவரைப் பாதுகாக்க வேண்டும்July 30, 2022
முதல் பட்டியலில் தமிழ்நாடும் இரண்டாவது பட்டியலில் தமிழும் இல்லை எனில்
29.07.2022 அன்று நடந்த தேசியக் கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் ஒன்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களது உரை சில அய்யங்களை நமக்கு எழுப்புகிறது
அவற்றின்மீது நமது உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களும்முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறோம்தனது உரையினூடே 10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நடத்த ஒத்துக் கொண்டுள்ளதாகவும்ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் JEE மற்றும் NEET தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்10 மாநிலங்கள் தங்களது மொழியில் பொறியியல் வகுப்புகளை நத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறுவது உண்மை எனில்1) ஒப்புக்கொண்டுள்ளன என்றால் இதைக் கோரியது ஒன்றிய அரசு என்றும் அந்தக் கோரிக்கையை 10 மாநிலங்கள் ஏற்றிருப்பதாகவும் பொருள்இது உண்மையாக இருப்பின் அந்தப் பட்டியலில் தமிழ்நாடும் உள்ளதா?இல்லை எனில் ஏன் இல்லை?ஆங்கிலம் தவிர 12 மொழிகளில் NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறுவதாக அவர் சொல்வது உண்மை எனில் அவற்றுள் தமிழ் உள்ளதா?முதல் பட்டியலில் தமிழ்நாடும்இரண்டாவது பட்டியலில் தமிழும் இல்லை எனில்அவை சார்ந்து அமைச்சரும் முதல்வரும் கவனம் செலுத்த வேண்டுகிறேன்அமைச்சர் சொல்வது உண்மை இல்லை எனில் அதற்கு அமைச்சரும் முதல்வரும் எதிர்வினையாற்ற வேண்டுகிறேன்முகநூல்31.07.2022
இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது
ஒருவர் சரியாகப் பேசினால்
பேசியது மாண்பமை அமித்சாவே ஆனாலும் பாராட்டிவிட வேண்டியதுதான்அதே நேரத்தில் அதை பின்னணியில் உள்ள அரசியல் அய்யங்களையும் சேர்த்தே வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறதுஅதை ஒட்டி சில கோரிக்கைகளையும் வைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறதுமூன்றையும் சேர்த்துதான் நாம் செய்து வருகிறோம் செய்யவும் செய்வோம்நேற்று அதாவது 29.07.2022 அன்று நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 இன் இரண்டாம் ஆண்டு நிறைவுநாளில் இந்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உரையாற்றிய செய்தியை 30.07.2022 நாளிட்ட THE HINDU தருகிறதுமிகச் சரியான தயாரிப்போடு கூடிய மிகச் சரியானதும் தேவையானதுமான உரை அதுஇந்த நாட்டில் 95 சதவிகிதம் குழந்தைகள் தங்களாது தாய்மொழி வழியிலேயே கல்வி பயில்வதாலும்தாய்மொழி வழியிலேயே ஒருவரது இயல்பான சிந்தனை இருக்கும் என்பதாலும்பொறியியல், சட்டம், மருத்துவம் போன்றவற்றை தாய்மொழியிலேயே தருவதுதான் அவசியம் என்கிறார்தாய்மொழி வழியில் ஆராய்ச்சிகள் நடக்காததால்தான் ஆராய்ச்சித் துறையில் இந்தியா இன்னும் போகவேண்டிய இடத்திற்கு போகவில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்நாட்டின் 5 % விழுக்காடு ஆற்றலே கிடைக்கிறது என்றும் கூறுகிறார்அதாவது,தாய்மொழி வழியில் மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி போன்றவை நடக்காததால் 5% விழுக்காடு மட்டுமே வெளி வருகிறது என்கிறார்அதாவது,தாய்மொழியில் படிக்காதவர்களான 95% மட்டுமே சட்டம்,ஆராய்ச்சி,மருத்துவம், மற்றும் பொறியியல் துறையில் படிக்கவும் பணியாற்றவும் செய்கிறார்கள் என்றும்இவர்களால் எந்த முன்னேற்றமும் நாட்டிற்கு இல்லை என்றும்தாய்மொழியில் படித்த 5% பேரால்தான் இந்தத் துறைகளில் வெளிச்சம் இருப்பதாகவும் அவர் சொல்வதாகத்தான் இதைக் கொள்ள முடியும்இந்த விழுக்காட்டு அளவீட்டில் நமக்கு உடன்பாடு இல்லைஅமைச்சரிடம் நாம் கேட்க விரும்புவதுநீங்கள் குறிப்பிடும் இந்த விஷயத்தில் நீங்கள் இப்போது பேசியது மாதிரி தேசியக் கல்விக் கொள்கை உள்ளதா?ஆம் எனில் திறந்த மனதோடு விவாதிப்போமா?ஒருக்கால் இல்லை என்பதை நீங்கள் ஏற்பீர்கள் எனில் மாற்று என்ன?எங்களைப் பொறுத்தவரை அந்த ஐந்து விழுக்காட்டினருக்காக வடிவமைக்கப் பட்டதே தேசியக் கல்விக் கொள்கைஅதே கூட்டத்தில் உரையாற்றியக் கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்ரா ப்ரதாபன் தேசியக் கல்விக் கொள்கை 2020 மெக்காலே திட்டத்திற்கு எதிராகக் கட்டமைக்கப் பட்டது என்பதுஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது இது என்பத்தாகக் கொள்ள வைக்கிறதுஉங்களது கட்சிக் கொள்கை ஒரே மொழி என்பதாக இருக்கிறதுகல்வி அமைச்சர் பேசுவது ஆங்கில வழிக் கல்விக்கு எதிரானது தேசியக் கல்விக் கொள்கை 2020 என்று கொள்ள வைக்கிறதுஎனில்இந்திவழிக் கல்வியை நோக்கியான நகர்வு இது என்றும் கொள்ள வைக்கிறதுஅன்பிற்குரிய அமித் ஷா அவர்களேஎங்களது அய்யத்தைத் தெளிவுபடுத்துங்கள்முகநூல்30.01.2022Active
July 1, 2022
பார்த்தும் மிஸ் பண்ணிவிட்டேனே வெண்மணி தோழர்

எப்போதும் நெகிழ்ந்து உரையாடும் வெண்மணி வரதராஜன் தோழரை பார்க்க வேண்டும் என்று அப்படியொரு ஆசை நேற்று அரியலூர் புத்தகத் திருவிழாவில் சந்திக்கிறார் ஒரு யுகம் பழகிய நண்பரைப் போல பேசுகிறார் படங்களை அவர் அனுப்பியபோதுதான் அது அவரென்று தெரிகிறது பார்த்தும் மிஸ் பண்ணிவிட்டேனே தோழர்
முகநூல்
01.07.2022
அரியலூர் புத்தகத் திருவிழா 30.06.2022
June 30, 2022
தீண்ட...
தீண்ட
விரல்கள் தேவையில்லை
தீண்டாத
விரல்களும் தேவையில்லை
முகநூல்
30.06.2022
June 29, 2022
அழைப்பு 034
பிறகெப்படி கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஒத்துக் கொள்ளும்
அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் எண்ணிக்கையில் எவ்வளவு அதிகமோ
அதைவிட எண்ணிக்கையில் அதிகமானது அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கைஎண்ணிக்கை சற்றுக் குறைவாயினும் அமெரிக்க ஆதிக்க முயற்சிக்கு எதிரான வெற்றிகளின் எண்ணிக்கையும் கொள்ளத்தக்கனவாகவே உள்ளனமுதலாமது வெளித்தெரியுமளவிற்கு மற்றவை வெளித் தெரிவதில்லைஉலக ஊடக தர்மம் அப்படிஅமெரிக்காவின் திமிர்த் தலையில் நச்சென்று கிரீஸ் நீதிமன்றம் கொட்டிய ஒரு மகிழ்சம்பவத்தை 16.06.2022 நாளிட்ட தீக்கதிர் தந்திருக்கிறது19.04.2022 அன்று கிரீசுக்கு சொந்தமான கடற்பகுதியில் ஈரானின் எண்ணெய்க் கப்பலொன்று எப்படியோ நுழைந்துவிட்டதுஅந்தக் கப்பலில் ஒரு லட்சத்து பதினையாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருந்ததுஇந்தக் கப்பலை கிரீஸ் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுஅந்த 1,15,000 பீப்பாய்களாஇயும் அமெரிக்காவிற்கு அனுப்பப்போவதாக கிரீஸ் அறிவித்ததுஈரான் கப்பல் அத்துமீறியே கிரீஸ் எல்லைக்குள் நுழைந்துவிட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்அதன்பொருட்டு கிரீஸ் அந்தக் கப்பலைக் கைப்பற்றியதைக்கூட நியாயம் இல்லை என்றுகூட நாம் சொல்லவில்லைஆனால் அந்த எண்ணெய் முழுவதையும் அமெரிக்காவிற்கு அனுப்புவது என்ற முடிவைஎவ்வளவுதான் நியாயத்திற்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவராக இருந்தாலும்மோடியேகூட ஒத்துக் கொள்ள மாட்டார்பிறகெப்படி கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஒத்துக் கொள்ளும் மக்களைத் தெருவிற்குள் திரட்டியது அதுஇந்தக் கோரிக்கையோடு சேர்த்துஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தனது ஈனத்தனமான நடவடிக்கைகளுக்கு தமது மண்ணை நரித்தனத்தோடு அமெரிக்க பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்து போராடினார்கள்ஈரான் கிரீஸ் நீதிமன்றத்தை நாடியதுஈரான் வசம் கப்பலை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுஅந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கிரீஸ் அரசாங்கத்திற்கு உரிமை இருந்த நிலையில்மக்கள் தங்களது போராட்டத்திற்கான கோரிக்கைகளில் மேல்முறையீடு கூடாது என்பதையும் சேர்த்துக் கொண்டனர்கிரீஸ் அரசாங்கம் பணிந்ததுகப்பலை திருப்பித் தருவது என்று முடிவெடுத்திருக்கிறதுகப்பல் கிரீசுக்குள் நுழைந்ததை,கிரீஸ் அதைக் கைப்பற்றியதை,எண்ணெய் பீப்பாக்களை அமெரிக்காவிற்கு வழங்க கிரீஸ் முடிவெடுத்ததை,அதற்கு எதிராக மக்களை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டியதைகிரீஸ் பணிந்ததைஊடகங்கள் சொல்லாதுநாம் உரத்து சொல்வோம்#சாமங்கவிய இரண்டுமணி பதினைந்து நிமிடங்கள்29.06.2022
June 28, 2022
நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்

சன்னஞ் சன்னமாய் உலகம் சிவந்து கொண்டிருக்கிறதுஅதைப் பார்க்க நாங்கள் இல்லாமல் வேண்டுமானால் போகலாம்
ஆனால் நிச்சயம் இந்தியாவும் ஒருநாள் சிவக்கும்
திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,
திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி அருகில் உள்ள பூங்கா இது
குழந்தைகளும் பெரியவர்களும் கணிசமாக வருகிறார்கள்நடைபயிற்சியும் நடக்கிறதுஅழகாகவும் அமைதியாகவும் இருக்கிறதுசின்னச் சின்ன குறைகள்சில இடங்களில் சன்னமோ சன்னமான புதர் எழுகிறதுசரி செய்யாவிட்டால் புதர் பெருக்கும்பூச்சிகள் அண்டக்கூடும்

சறுக்குப் பலகைகள் பிடுங்கப்பட்டு சாத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்குழந்தைகளின் குதூகலத்தை சறுக்கு விளையாட்டில்தான் காண முடியும்

குழந்தைகள் அமர்ந்து விளையாட ஸ்பிரிங்கின் மேல் பறவைகளோடு உள்ள இரண்டில் ஒன்றைக் காணோம்எதிரெதிரே இரண்டு குழந்தைகள் அமர்ந்து விளையாடும்போதுதான் அந்த இடம் மலர்ந்து சிரிக்கும்12 வயதுக் குழந்தைகளுக்கு மட்டுமே என்று அறிவிப்பு இருக்கிறது ஆனால் 35 வயது யுவதிகளும் இளைஞர்களும் அதில் விளையாடுகிறார்கள்இதனால் என்றாவது ஒருநாள் ஊஞ்சல் சங்கிலி அறுந்துபோக வாய்ப்பு உள்ளதுஇது நடந்தால், ஊஞ்சலும் குழந்தைகளுக்கு இல்லாமல் போகும்

இறுதியாக உள்ள சின்ன அழகான குளத்தில் நீர் இருந்தால் அழகாக இருக்கும்திருச்சி மாநகராட்சிக்கு நமது கோரிக்கைகள்,சறுக்குப் பலகையை நிறுவுவதுஅந்தப் பறவை பொம்மையை ஸ்ப்ரிங்கில் வைப்பதுஊஞ்சலில் பெரியவர்கள் ஆடாமல் ஒரு காவலரைக் கொண்டு தடுப்பதுஅந்தக் குளத்தில் நீரை நிரப்புவதுபுதரை நீக்குவதுஇதற்கான பட்ஜட் திருச்சி மாநகராட்சிக்கு ஒரு பொருட்டானதே இல்லைஇவற்றை திருச்சி மாநகர நிர்வாகம் கவனிக்க வேண்டும்CMOTamilNaduM. K. Stalin
முகநூல்28.06.2022
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)