இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 59
June 3, 2022
குற்றமென்றும் கொள்ள இடமுண்டு
மாநில அமைச்சரவை புதியக் கல்விக் கொள்கையை ஏற்காத நிலையில்அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய ஆளுனர் இதைப் பேசுவதைக் குற்றமென்றும் கொள்ள இடமுண்டு

27.05.2022
Published on June 03, 2022 09:46
ஓராண்டு சிறை என்கிறார்கள்
நண்பரோடு சேர்ந்து சித்து தாக்கியதில் முதியவர் இறந்திருக்கிறார்
இது கொலைவழக்கு 35 ஆண்டுகளாக நடக்கிறதுஓராண்டு சிறை என்கிறார்கள்அவ்வளவுதானா?நியாயம்தானா?முகநூல்26.0502022
Published on June 03, 2022 09:43
அண்ணா “டான் டீ”
மதுரை உயர்நீதிமன்றக் கிளையை பேருந்து கடக்கும்போதே மத்தியப் பேருந்து நிலையத்தில் இருக்கும் டான் டீ கடையின் உயர க்ளாஸ் தேநீருக்கு நமது நாக்கு தயாராகிவிடும்
இறங்கியதும் முதல் வேலை அந்தக் கடைக்குப் போவதுதான்ஊர் திரும்பும்போதும் அங்கு தேநீர் அருந்தாமல் நகர்வது இல்லைசமீபத்தில் மதுரை அருளானந்தர் கல்லூரியில் உரையாற்ற சென்றபோதும் அப்படித்தான்அந்த டான் டீ நிறுவனத்தை அண்ணா உருவாக்கியதற்கான காரணம் மிக முக்கியமானது1960 களில் இலங்கைத் தோட்டத் தொழிலாளிகளது குடியுரிமையைப் பறிக்கிறது இலங்கை அரசுபலர் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார்கள்அவர்களுக்கான பலவிதமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார் அன்றைய முதல்வர் அண்ணாஅவர்களில் பெரும்பான்மையானோருக்கு தேயிலைத் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பது அண்ணாவின் கவனத்திற்கு வருகிறது1968 இல் அண்ணா “டான் டீ” நிறுவனத்தை உருவாக்குகிறார்அண்ணா குறித்து பேச நிறைய இருக்குமுகநூல்25.05.2022
Published on June 03, 2022 09:40
மொழி அயோக்கியத்தனம்
குவாட் மாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருக்கிறார் பிரதமர்
அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்பளித்திருக்கிறார்கள்அப்போது ஜப்பான் குழந்தைகள் இருவர் அவரை இந்தியில் வரவேற்றிருக்கிறார்கள்மகிழ்ந்துபோன பிரதமர்எப்படி இந்தி கற்றீர்கள் என்று கேட்டிருக்கிறார்இது இயல்பானதுஇதை வாசிக்கிறபோது எமக்கும் மகிழ்ச்சி ஒட்டிக் கொள்கிறதுஇது மொழி மகிழ்ச்சிசமீபத்தில் இந்தியை ஏற்காவிட்டால் ஒன்றிய நிதி உதவி கிடையாது என்றார் மாண்புமிகு அமித்ஷாஇது மொழித் திணிப்புஎல்லோரும் அயர்ந்திருந்த நேரத்தில் சமஸ்கிருதத்தில் பிள்ளைகளை உறுதியேற்க வைத்தது மொழி அயோக்கியத்தனம்முகநூல்25.05.2022
Published on June 03, 2022 09:12
இங்க அவன் வந்தப்ப அவன் செத்திட்டு இருந்தான் சார்
இதை எழுதுவதா ?
வேண்டாமா?என்று நிறையக் குழம்பிய பின்னரே எழுதுகிறேன்நான் செய்தது தவறென்றால் இதை சரியாக செய்வதெப்படி என்று யோசித்து சரியாக செய்வதற்கு உதவும் என்பதாலும்சரியென்றால் தைரியத்தோடு இதை இன்னும் விரைவாக செய்வதற்கு உதவும் என்பதாலும் எழுதுகிறேன்20.05.2022 வெள்ளி முற்பகல் 10.20 தேர்வறைகளுக்கு கண்காணிப்பாளர்களும் மாணவர்களும் சென்றுவிட்டார்கள்மாணவர்களுக்கு வழங்கியது போக மிச்சம் இருந்த வினாத் தாட்களை பீரோவில் வைத்து பூட்டி சீல் வைத்த பின்புஅறைகளை சுற்றி வருவதற்காக கிளம்புகிறேன்மூன்றாம் எண் அறையில் இருந்த விஜயலட்சுமி அழைக்கிறார்,“சார், ஒரு பையன் அப்படியே சரியறான் சார்”ஓடுகிறேன்கைத்தாங்கலாக பிடித்தபடியே“என்ன ஆச்சு, சாப்டியா சாமி?”சிரிக்கிறான்”ரெண்டு நாளா ஜுரம் சார். மருந்து பையில் இருக்கு என்கிறான்”கைத்தாங்கலாகவே அவனை “கட்டுப்பாட்டு அறைக்கு” அழைத்து வருகிறேன்சரிந்து விழுகிறான்மூச்சு விட இயலாமல் தவிக்கிறான்சூடான தேநீரைத் தருகிறோம். கொஞ்சம் தெம்பு வருகிறதுமீண்டும் தனது பையில் மருந்து இருப்பதாகவும் அது வேண்டும் என்றும் கேட்கிறான்மூச்சுவிட முடியாமல் போகிறதுதேர்வறைக்கு செல்லும் முன் குழந்தைகளின் புத்தகப் பைகளை ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுவோம்தேர்வு முடிந்ததும்தான் அதைத் திறக்க வேண்டும்அதற்கு முன்னர் திறப்பது குற்றம்ஆவது ஆகட்டும் என்று அறையைத் திறக்கிறோம்அவன் சொன்ன மருந்து “நிவாரன் 90”நாங்கள் பஃப் வைத்திருப்பான் என்று எதிர்பார்த்தோம்எங்களது அலுவலக உதவியாளர் தங்கதுரை அவனை எதிரே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துப் போகலாம் என்கிறார்அவரும் இன்னொரு அலுவலக எழுத்தர் மீனா அம்மாவும் கைத்தாங்கலாக அழைத்துப் போகிறார்கள்அப்படியே நாற்காலியில் சாய்கிறேன்கால்மணி ஆகியும் யாரும் வராமல் போகவே எங்கள் துறை அலுவலரிடம்“நேரமாகுது ரமீலா, பயமா இருக்கு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பாத்துக்கப்பா””என்னதிது. போய் பார்த்துட்டு வாங்க சார். பாத்துக்கறேன்”பையனுக்கு ஆக்சிஜன் ஏறிக் கொண்டிருக்கிறதுதங்கதுரை மருத்துவரோடு பேசிக் கொண்டிருக்கிறார்பையன் ஒரு இருதய நோயாளி. 10 வருடங்களாக மருந்துகள் எடுப்பவன். இரண்டு மாதமாக மருந்தெடுப்பதை நிறுத்தி இருக்கிறான்அம்மா வருகிறார்மருத்துவர் அவரோடு பேசி, திருச்சி KMC பரிந்துரைக்கிறார் ECG எடுத்திருக்கிறார்கள்வெளியே வரக்கூடாது சார். வந்துவிட்டேன். போகவா சார்எழுகிறார்கைளைப் பற்றிக் கொள்கிறார்நான் செய்ய நினைத்த காரியம்இங்க அவன் வந்தப்ப அவன் செத்திட்டு இருந்தான் சார்இன்னும் கொஞ்சம் நேரம் வராமல் இருந்திருந்தால் ஒன்று அவன் முடிந்திருப்பான். அல்லது இன்னமும் கிரிட்டிகலாக ஆகி இருக்கும்இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லையே?90 விழுக்காடு இல்லை சார். மிச்சத்த அவன் பார்த்துப்பான் என்று மேலே கைகளை உயர்த்துகிறார். தைரியமா போங்க சார் என்கிறார்அவன் அரசுப்பள்ளி மாணவன்பணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆக்சிஜன், ECG எல்லாம் எடுத்த அந்த மருத்துவரை கை எடுத்துக் கும்பிடுகிறேன்அவன் அம்மா வரவரைக்கும் இங்கேயே அவங்கூட இருக்கட்டுமா சார். அம்மாவத் தேடும் சார் என்று அவன் உடனிருந்த மீனா அம்மாதங்கதுரைரமீலாஎல்லோரையும் கை எடுத்து வணங்கி நன்றி சொல்கிறேன்நடந்ததை எல்லாம் சொல்லியபோது என்னைவிட பதினைந்து வயதாவது இளையவராக இருக்கும் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்சரியா செஞ்சுருக்கீங்க சார் என்கிறார்மாவட்டக்கல்வி அலுவலர்,ஒரு பையனக் காப்பாத்தி இருக்கீங்க சார் என்கிறார்இப்படி தொடர் சிகிச்சையில் இருக்கும் பிள்ளைகளுக்கு மருத்துவர் சொல்லாமல் மருந்துகளை நிறுத்தாதீர்கள்நோய் குறித்த விவரங்களை தேர்வுப் பணிக்கு வருபவர்களிடம் கொடுங்கள்என்ன வேணா சொல்லுங்க,எப்படி அறையைத் திறக்கலாம்?வெளியே மருத்துவமனைக்குப் போகலாம் என்று யாரேனும் கேட்டால்அன்று மாலை அந்தக் குழந்தை மோகன்ராஜோடு பேசிய தெம்பில் தண்டனைக்கான தெம்போடுதான் இருக்கிறேன்முகநூல்21.05.2022
Published on June 03, 2022 09:10
GST COUNCIL எடுக்கிற முடிவை மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை
GST குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு GST குறித்து சொல்லிக்கொள்கிற மாதிரி ஞானமில்லாத என்னைப் போன்றவர்களுக்கும் கொஞ்சம் புரியத் தொடங்கி இருக்கிறது
நமது நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜனின் நேர்காணல்கள் இன்னும் கொஞ்சம் தெளிவு செய்கின்றனஇன்று நான் கேட்ட CPM கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்களின் நேர்காணல் இதை எப்படி நடமுறைப்படுத்த வேண்டும் என்று கூடுதலாகத் தெளிவு செய்திருக்கிறதுGST COUNCIL எடுக்கிற முடிவை மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்அதற்கு எதிரான சட்டத்தையும் மாநிலங்கள் நிறைவேற்ற முடியும் என்றும் தீர்ப்பு கூறியதுஎனில்,ஒரே பொருளுக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான வரியை விதிக்க முடியும்இந்த இடத்தில்தான் தோழர் கனகராஜ் அவர்கள் எந்த ஒரு பொருள்மீது GST விதிக்கும் முன்பும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அது குறித்து ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்றுஇல்லாதுபோனால் ஏற்படும் சிக்கலையும் அவர் தெளிவு படுத்துகிறார்என்ன சிக்கல் வரும்உதாரணமாக சர்க்கரைக்கு 20 சதவிகதம் GST யை தமிழ்நாடு விதிப்பதாகவும்பஞ்சாப் 10 சதவிகிதம் விதிக்கிறது என்றும் கொள்வோம்தமிழ்நாட்டு மக்கள் ஏதோ ஒரு வகையில் பஞ்சாபில் இருந்து வாங்கிக் கொள்வார்கள்இப்படியாக எந்தப் பொருளுக்கு எந்த மாநிலத்தில் விலை குறைவோ அந்தப் பொருளை அந்த மாநிலத்தில் இருந்து வாங்கிக் கொள்வார்கள்இதில் என்ன சிக்கல்சர்க்கரைக்கு தமிழகம் கூடுதலாக GST விதித்தால்தமிழ்நாட்டில் சர்க்கரை தேங்கிவிடும்இதற்காகத்தான் உரையாடல் அவசியம் என்கிறார் தோழர் கனகராஜ்முகநூல்22.05.2022
Published on June 03, 2022 09:07
அமெரிக்க டாலரின் விலை ஏறினால் என்ன ? குறைந்தால் என்ன?
பெட்ரோல், டீசலைக் கடந்து ஒரு அமெரிக்க டாலரின் இந்திய விலையும் விரைவில் 100 ரூபாயைக் கடந்துவிடும் என்று தோன்றுகிறது
பொருளாதாரத்தின் அரிச்சுவடியை மேலோட்டமாக அறிந்த அக்கறையுள்ளவர்களைக்கூட இது தூங்க விடாதுகவலையாக இருக்கிறதுஇந்த நேரத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி உலவுகிறதுசொல்பவர்தான் சொல்லி இருக்கவும் கூடும்இல்லை என்றாலும் அதுகுறித்து உரையாடுவது அவசியம்”நீங்கள் உங்கள் வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இந்திய ரூபாயைக் கொண்டுதான் வாங்குகிறீர்கள்பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை”என்று கேட்டிருக்கிறார் திருமதி நிர்மலா மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மை என்றே படும்பாருங்களேன் அரிசி ,பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட அனைத்தையும் இந்திய ரூபாயைக் கொண்டுதானே மக்கள் வாங்குகிறார்கள்அமெரிக்க டாலரின் விலை ஏறினால் என்ன ?குறைந்தால் என்ன?தேவை இல்லாமல் சாமானிய மக்களை கவலைப்பட வைக்கிறார்களே இந்தப் பாவிகள் என்று நினைக்க வைக்கும்ஆமாம்தான் தாயேகச்சா எண்ணெய் குறைவாக உள்ளபோதே பெட்ரோல் டீசலை இந்த விலைக்கு விற்கிறீர்கள்கச்சா எண்ணெயை அமெரிக்க டாலர் கொடுத்துதான் வாங்குகிறீர்கள்அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்கிறதுஎன்றால், கச்சா எண்ணெயின் விலை உயராதா?எப்படி உயரும்?1000 அமெரிக்க டாலருக்கு கச்சா வாங்குகிறோம்டாலருக்கு இந்திய மதிப்பு 50 ரூபாய் எனக் கொள்வோம்1000 டாலர் எனில் 50,000 ரூபாய் ஆகும்இதுவே 100 ரூபாய் அளவிற்கு டாலர் உயர்ந்தால் 1,00,000 ரூபாய் ஆகும்கச்சா எண்ணெய் 1000 டாலர்தான்டாலர் 50 ரூபாயாக இருந்தபோது நாம் கொடுக்க வேண்டியது 50,000 ரூபாய்டாலரின் மதிப்பு 100 ரூபாய் ஆனால் நாம் கொடுக்க வேண்டியது 1,00,000 ரூபாய்எனில் பெட்ரோல், டீசலின் விலை இன்னும் உயரும்எனில் மளிகை சாமான்களின் விலையும் உயரும்இப்படித்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் இந்திய ரூபாயில் இவர்கள் வாங்கி வைத்துள்ள கடனுக்கான வட்டியையும் டாலரில்தான் தர வேண்டும்அமெரிக்க டாலர் விலை 50 ரூபாய் என்று கொள்வோம்1000 டாலர் வட்டி கட்ட வேண்டும் என்றால் 50,000 ரூபாய் கொடுத்தால் போதும்100 ரூபாய் என்று உயர்ந்தால் 1,00,000 கட்ட வேண்டும்இன்னும் இன்னுமாய் மக்களுக்கு புரிகிற மொழியில் உரையாட வேண்டும்செய்வோம்முகநூல்21.05.2022
Published on June 03, 2022 09:04
என்ன வகையான சுருட்டல் இது?
உச்சநீதிமன்றத்தின் GST குறித்த நேற்றைய நேற்றைய தீர்ப்பை நான் இப்படியாகப் புரிந்துகொண்டேன்
அதாவது,GST குழுவில் வைக்கப்படுகிற அல்லது ஏற்கப்படுகிற GST வரி குறித்த முடிவுகளை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தங்களின் அவைகளில் மசோதாவகக் கொண்டு வந்து நிறைவேற்றினால்தான் அது அமலுக்கு வரும்அத்தகைய முடிவுகள் மாநில அரசுகளை ஒருபோதும் கட்டுப்படுத்தாதுகுறிப்பாக 5 விழுக்காட்டில் இருந்து வரியை 12 விழுக்காட்டிற்கு மாற்றினால்அதை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு சட்டமாக்கினாலும் சட்டமாக்கும் மாநிலங்களில் மட்டுமே அந்த உயர்வினை அமல்படுத்த முடியும்ஆனால் GST குழுவில் 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடு என்று ஒன்றிய அரசு சொன்னாலே போதும் மாநில அரசுகள் சட்டம் இயற்றாமலே அது அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வருகிறது அது எப்படி என்ற அய்யம் இயல்பாகவே வருகிறதுஇப்போது அதற்கான விடையினை மரியாதைக்குரிய பழனிவேல்ராஜன் அவர்களது க்ளிப்பிங் ஒன்றில் பார்க்க நேர்ந்ததுGST குழுவில் 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காட்டிற்கு உயர்த்துவதாக சொல்லிவிட்டுமாநில அரசுகளின் மசோதாக்களுக்களைப் பற்றி பொருட் படுத்தாமல்GST வரி செலுத்துவதற்கான ஆன்லைன் செட் அப்பில் 12 விழுக்காடாக மாற்றிவிடுகிறார்கள்என்ன வகையான சுருட்டல் இது?முகநூல்20.05.20221 comment
Published on June 03, 2022 09:01
பணப்புழக்கமும் சாத்தியம் பழைய பென்ஷன் திட்டமும் சாத்தியம்
அன்புமிக்க நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு,
வணக்கம்புதிய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்களை பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்ற இயலாது என்ற உங்களது நிலையைத் தவிர உங்களது மற்ற அனைத்து திட்டங்களையும் ரசிக்கிறவனாகவே இருக்கிறேன்பென்ஷன் திட்டத்தைப் பொறுத்தவரை உங்களைத் தொடர்ந்து கேட்கிற உரிமை எங்களுக்கும்செய்து தரவேண்டிய கடமை உங்களுக்கு இருப்பதையும் நீங்கள் ஒருபோதும் மறுக்க இயலாதுநாங்கள் கேட்கவும் நீங்கள் செய்து தரவும் ஏதுவாக உச்சநீதிமன்றம் சிலவற்றை இன்று சொல்லி உள்ளதுபிரியத்திற்குரிய சார்பழங்களின் விற்பனை வரலாறு காணாத அளவிற்கு குறைந்திருப்பதாகவும்வாங்கும் சக்தி பழங்களை வாங்க முடியாத அளவிற்கு இறங்கி இருப்பதாகவும் தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருக்கிறார்யெச்சூரியின் இந்தக் கருத்து இந்தியா முழுமைக்குமானது என்ற வகையில் தமிழ்நாட்டிற்கும் பொருந்துவதாகத்தான் உள்ளதுஇது பழ வியாபாரிகளை, பழ உற்பத்தியாளர்களை எப்படி பாதிக்கும் என்பது எங்கள் எல்லோரையும்விட உங்களுக்கு நன்கு தெரியும் என்பதை நான் அறிவேன்இன்று பழம் வாங்க முடியாதவனால் நாளை அரிசியும்நாளை மறுநாள் மருந்தும் வாங்க முடியாமல் போகும் என்பதும் நீங்கள் அறிந்ததுதான்மக்கள் கையில் பணம் புழங்க வேண்டும்எனக்கு விவரம் தெரிந்தவரை நிதிநிலை அறிக்கையில் விழும் பற்றாக்குறையை குறைத்த ஒரே நிதி அமைச்சர் நீங்கள் மட்டும்தான்அதுவும் கஜானா காலியான நிலையில் நிதிப் பொறுப்பெடுத்த நீங்கள்பெருந்தொற்றையும் சமாளித்து பற்றாக்குறையையும் குறைத்தது வியப்பின் விளிம்பிற்கே எம்மை கொண்டு தள்ளி உள்ளதுஇதை எப்படி நீங்கள் செய்தீர்கள் என்பதை விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டபோது உங்களின் அறிவையும்அதை மக்களுக்காக நீங்கள் பயன்படுத்தும் போக்கும் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன்GST கு எதிராக மாநிலங்கள் சட்டங்கள் நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உங்களுக்கானது என்பதையும் நானறிவேன்இன்றைய தீர்ப்பை கையெடுங்கள் சார்பணப்புழக்கமும் சாத்தியம்பழைய பென்ஷன் திட்டமும் சாத்தியம்காத்திருக்கிறோம்நன்றிஎதிர்பார்த்து,இரா.எட்வின்19.05.2022
Published on June 03, 2022 08:58
May 19, 2022
முந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே
முந்தாநாள் பார்த்த
காக்காவைப் போலவே இருக்கிறது இந்தக் காக்காவும்முந்தாநாள் பார்த்தகாக்கா போலவேஇந்தக் காக்காவும் இருப்பதாகஉங்களிடம் நான்சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவேமுந்தாநாள் பார்த்த மனிதனைப் போலவே இருந்தான் அவனென்றுதன் தோழமைகளிடம்சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்அந்தக் காக்காவும்
Published on May 19, 2022 10:38
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)