இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 63

October 13, 2021

செய்யவேண்டும் CPM

 திருவண்ணாமலையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழரை ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்கப் போராடிய தோழர்கைளை மாவட்டம் மாவட்டமாக அழைத்து CPM மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு விழாக்களை நடத்த வேண்டும்

போராட்டம் விரியவும் இது உதவும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 23:09

நானூறு தேவதைகளின் தகப்பன்

மிகுதியான மன இறுக்கத்தோடு அமர்ந்திருக்கிறேன்.

சந்தியா தலைமையில் ஐந்தாறு குட்டித் தேவதைகள் அறைக்குள் படை எடுக்கின்றனர். இந்தப் பிள்ளைகள் பேச ஆரம்பித்தால் நரசிம்மராவே சிரிப்பார். பார்த்த மாத்திரத்தில் இறுக்கம் ஓடிவிட்டது.“வாங்ங்ங்க... வாங்ங்ங்க”“சார், எனக்கு பின்னடி உக்காந்திருப்பாள்ள...”“இப்படி கிட்டக்க வாங்க மேடம்” என்றவாறே பிள்ளையை இடுப்போடு அணைத்தவாறே, “ ம்ம்ம், சொல்லுங்க. என்ன செஞ்சா அவ உங்கள”“தலையிலேயே அடிக்கிறாங்க சார். ஒரு தாட்டினா பரவாயில்ல. அடிச்சுக்கிட்டே இருக்கா. இப்ப வாங்க , என்னானு கேளுங்க”“ இதுக்குத்தான் இத்தன எரும வந்தீங்களா? ( எருமை என்றால் தேவதை என்பது என் பிள்ளைகளுக்குத் தெரியும்)”“அதுக்கு எதுக்கு நான் வந்துக்கிட்டு. அவளுக்கு நான் உன் ப்ரண்டுன்னு தெரியாம இருக்கும். ““ம்”“நேரா போ”“ம்”“போயி, நான் எட்வினோட ப்ரண்டு. என்ன வம்பிழுத்தா எட்வின் வருவான். அடிப்பான்னு சொல்லு போ”போய்விட்டார்கள்.கொஞ்ச நேரம் கழித்து நான் வகுப்புகளைச் சுற்றிப் பார்க்க கிளம்புகிறேன். மரத்தடியில் குழந்தைகளை அமரச் செய்து தம்பிகள் அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் எதையோ வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களோடு நிற்கிற போது அந்த தேவதைப் பட்டாளம் வருகிறது.“என்ன சாமி, சொன்னியா?”“சொன்னேன்”“என்ன சொன்ன?”“நான் எட்வினோட ப்ரண்டு. ஏங்கிட்ட வம்பு வச்சுகிட்டா அவன் வருவான், அடிப்பான்னு சொன்னேன்”“ஐ, அப்புறம்?”“அவ எட்வின் எனக்கும் ப்ரண்டுதான் எனக்கும் வருவான் சொல்றா. வந்து என்னான்னு கேளுங்க”அரவிந்தும் சுந்தரமூர்த்தியும் அதிர்கிறார்கள்.நானூறு தேவதைகளின் அப்பன் நான்.( ஹெட் மாஸ்டர அவன் இவன் என்று சொல்லலாமா என்று யாருக்கேனும் நெருடல் வருமெனில் இந்த தேவதைகளின் அப்பனிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை. ரொம்ப உறுத்துமெனில் அவர்கள் என்னை உதறிச் செல்லலாம்)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 01:41

"MADE IN TAMIL NADU"

 "MADE IN TAMIL NADU" என்கிற கருத்தாக்கத்தை முதல்வர் அறிவித்திருக்கிறார்

கொண்டாட்டத்தோடு இதை கொண்டுபோக வேண்டும்ஆனால் இதே முழக்கத்தை 2017 இல் தோழர் திருமுருகன் காந்தி தொடங்கினார்அதனால் இதற்கான ராயல்டியை அவருக்கு வழங்க வேண்டும் என்றெல்லாம் கோரவில்லை"GREAT PEOPLE THINK ALIKE" என்பதாகவும் இது அமைந்திருக்கக் கூடும்முதல்வருக்கு நாம் சொல்ல வேண்டியது இதுதான்,நீங்கள் தொடங்கியுள்ள முழக்கத்தை நான்காண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தோழர் திருமுருகன் மீதும் அவரது இயக்கத்தினர்மீதும் அன்றைய அரசால் வழக்குகள் போடப்பட்டுள்ளனஇந்த முழக்கத்தின் மீது உங்களுக்கு உண்மையிலுமே பிடிப்பு இருக்குமானால் இதை முழங்கியவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நீங்கள் திரும்பப் பெறவேண்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 00:31

வாக்கு கேட்டுவிட்டு நகரும் உங்கள் கண்களில்...

 டீ மாஸ்டரை கொஞ்சம் ஒதுங்கச் சொல்லி

டீ போட்டுக் கொடுத்துவாக்கு கேட்டுவிட்டு நகரும் உங்கள் கண்களில்இஸ்திரிக்காரர்நாற்றுநடும் அக்காசித்தாள் எனஎல்லோரும் படுகிறார்கள்மலக்குழி இறங்கும்என் தோழர்களைத் தவிர
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2021 00:26

August 17, 2021

எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்




எது கல்வி 20 பிரதிகள் தேவைப்படவே “நற்றிணை” பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டேன்ஒரு பிரதியும் இல்லை என்று கூறினார்கள்அடுத்த பதிப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்எழுதியவனுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2021 20:36

August 14, 2021

August 2, 2021

நிதீஷ் கோரிக்கையின் இடைவெளியில்

 BJP கூட்டணியின் நிதீஷ் பெகாசஸ் குறித்து நீதி விசாரனை வேண்டும் என்கிறார்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நீதி கேட்டுப் போராடிய சந்தில் இன்சூரன்ஸ் தனியார்மயச் சட்டத்தை நிறைவேற்றியதுபோல்நிதீஷ் கோரிக்கையின் இடைவெளியில் முதல்வரை மாற்றிவிடுவார்களோ என்ற அய்யத்தைத் தவிர்க்கமுடியவில்லை
02.08.2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2021 10:32

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.