இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 66
June 12, 2021
கவிதை 019
28.01.2021
01
விபத்தில்
எனக்குகால் ஒடிந்ததால்தான்நிகழ்ச்சியைஒத்தி வைக்க நேர்ந்ததென்றுஅவனிடம் சொன்னதைஎன்னிடமும் சொல்லியிருக்கலாம் நீவிந்தி விந்தியாவதுநடந்து தொலைத்திருப்பேன்நேற்றவனை பார்க்க நேர்ந்தபோதுJune 10, 2021
30.01.2021
30.01.2021
01
02
எனக்குத் தெரிய காந்தி இரண்டுமுறை பிறந்திருக்கிறார்போர்பந்தரில் ஒருமுறைஎரவாடா சிறையில் தந்தை அம்பேத்கர் காந்தியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தால் மறுமுறை(தேவைப்படுமானால் இதை விரிவாக இன்றிரவு எழுத வேண்டும்)ஆக,தந்தை அம்பேத்கர் காப்பாற்றிய காந்தியை கோட்சே கொன்ற தினம் இன்று
03
ஆமாம்பாஆமாம்மறுக்கவில்லைஎங்களில் எவரும்டவுசர்கள் புடைத்து நிற்கசத்தியம் செய்கிறோம்கோட்சே தலையில் எங்கள் வலது கைகளால் தொட்டுகொன்றது அவன்தான் அவரைஅதற்கென்ன?சொல்லுங்கள் நெஞ்சைத் தொட்டுஉரமாகவில்லையாகதர் வளரஅவரது கொலைகொல்லப்பட்டவர் பெயர்அவர்களை வளர்க்கலாமெனில்வளரக் கூடாதா நாங்கள்கொன்றவன் பெயரால்?உணர்ந்திருக்கிறீர்களாயாரேனும் உங்களில்வில்லனும் கொலைகாரனுமானஒருவனை முன்னிருத்திநாங்கள் படும் சிரமம்நகர்வதற்குதோண்டும் கரியில் திருடினாலும்வாங்கும் பீரங்கியில் சுரண்டினாலும்பிறை நம்பிகளை பேக்கரி அடுப்பில்எரித்தாலும்பத்து லட்சத்துக்கு கோட்டெடுத்தாலும்அதற்கும் மேல நூறு போட்டு கோவணமெடுத்தாலும்சட்டென மறந்துவிடும் மக்களென்பதால்மூச்சு விடுகிறோம் ஏதோகதரும் காவியும்போகஅவரது பெயரால்அனைத்தையும் விற்க முயன்றார்கள்அவர்களைத்தான் தொடர்கிறோம்காப்பீடு ரயிலென்றுபோக,நாங்கள் இடிப்போம்அவர்கள் பார்ப்பார்கள்அவர்களென்ன நாங்களென்னஒன்றுதான் இருவரும் நகர்வீர்களா...நாடென்பதென்னநீங்கள் இருவர் மட்டுமா?இல்லைதான்...நாடென்பதுநீங்களும் சேர்த்துதான்தெரியுதுல்ல...தெரிந்தென்ன...தெருவில்ரயிலடியில்காவல் நிலையத்தில் போராடிசிறையில்சாவீர்கள்அடிபடுவீர்கள் மக்களுக்காகதேர்தல் வரைக்கும்...???மக்களடிப்பார்கள் உங்களைதேர்தலன்றுநகருங்க பாஸ்பேசாம(எப்போது எழுதியதெனத் தெரியவில்லை)
June 9, 2021
31.01.2021
31.01.2021
*************** *************************
01
திருடனின் கை ரேகையில்தெரியவேயில்லைதிருடனென்று02
தலித்தைவிட சூத்திரன் உசத்தியானவன் என்று சூத்திரர்கள் பலர் கருதுவதும்ஏதோ தாம் பெரிய அவதாரம் என்பதுபோல் கருதி கிடைக்கிற தலித்துகளைத் தாக்குவதுமாக நகர்வது தொடர் கதையாக இருக்கிறதுஆவுடையார்கோவிலுக்கு அடுத்துள்ள குணத்திரான்பட்டியைச் சேர்ந்த இளைஞன் மதன்பொறியியலில் பட்டையம் பெற்றவன்கோவையில் கார் ஓட்டுனராகப் பணி புரிகிறார் பொங்கலுக்காக விடுப்பில் வந்திருக்கிறார்24.01.2021 அன்று மாலை தனது நண்பர்களோடு பட்டமங்கலத்தில் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்அவரை தண்ணிகொண்டான் மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ப்ரதீப், மெய்கண்டன் உள்ளிட்ட இளைஞர்கள் மதனை ஜாதியை சொல்லித் திட்டியும் தாக்கியும் உள்ளனர்ஒருவழியாகத் தப்பித்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பும்போதுமீண்டும் வழி மறித்து தாக்கியுள்ளனர்ஒருகட்டத்தில் நா வறண்ட நிலையில் தண்ணீர் கேட்ட மதனது வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்போதையில் இருந்த அவர்கள் மயங்கியபோதுதான் மதனால் அங்கிருந்து தப்பிக்க முடிகிறதுஎன்கிற செய்தியை தம்பி ஸ்டாலின் தி தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்தலித் என்றால் பரிகசிக்கவும் தாக்கவுமான லைசென்சை இவர்களுக்கு எவன் தந்தது?அவ்வளவு உயர்வானவர்களா இடை சாதியினர்?இவர்களே இன்னும் தங்களுக்கான விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள்தானே?எனில், இவர்களுக்கும் மேல் யாரோ இருக்கிறார்கள்தானே?இன்னும் சொல்லப்போனால் இப்படியான ஒரு அடுக்கு ஏற்பாடே அவர்களுக்கு எதிராக எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகப் பார்ப்பனர்கள் செய்ததுதானேஅடுத்தவனை அடிமையாகக் கருதும் இடைசாதிக் காரன் எப்படி தனது விடுதலைக்காக குரல் கொடுக்க முடியும்இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு கடுமையான தண்டனை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டும்எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்சூத்திர விடுதலைக்கான முன் நிபந்தனை தலித் விடுதலை
03

இது பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் மதுரையிலே கலந்துகொண்ட மாநாடுமக்களோடு உள்ள நாற்காலிகளை மட்டுமே வைத்திருக்கிறேன்வெறும் நாற்காலிகளை வைக்கவில்லைஆயிரத்து ஐநூறு நாற்காலிகளுக்கு ஒருத்தரைத்தான் அவர்களால் சம்பளத்திற்கு அழைத்து வர முடிந்திருக்கிறதுஇவ்வளவுதான் அவர்களது செல்வாக்குஅதிமுக இதைப் புரிந்து கொள்ள வேண்டும்நஞ்சுப் பயிர்களுக்கு உரம் தெளிக்கிற வேலையை அதிமுக செய்யக் கூடாது
04

அன்புத் தோழர் மதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
June 8, 2021
திண்டுக்கல் விடுதலை வீரர் கூட்டமைப்பு
08.06.1800
இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்நான்காம் மைசூர் போரில் திப்பு வீர மரணம் அடைகிறான்எனவே திப்புவோடு தமது இளம் படைவீரர்களோடு களத்தில் இருந்த சின்னமலை பின்வாங்கி ஓடாநிலை வருகிறார்தமது படையை பலப்படுத்தி அங்கிலேயர்களை எதிர்கொள்ள திட்டமிடுகிறார்வேலைகள் நடக்கின்றனஇந்த நேரத்தில் ஆங்கிலேயர்களிடம் இருந்து அவருக்கு ஒரு செய்தி வருகிறதுகோவை பகுதியில் சின்னமலை வரி வசூலித்துக் கொள்ளலாம் என்றும்அதில் 30 விழுக்காட்டை கும்பினியாருக்கு செலுத்தினால் போதும் என்றும் அந்த செய்தி கூறுகிறதுசின்னமலை மறுக்கிறார்ஜெனரல் மெடோஸ் பொறுப்பில் இருக்கும் கோவையை மீட்பதே தன்னுடைய கடமை என்று உறுதி எடுக்கும் சின்னமலைசிவகங்கை சின்னமருது, கேரள வர்மா, திண்டுக்கல் லக்குமநாயக்கர் ஆகியோரோடு கோவையைத் தாக்கத் திட்டம் தீட்டினார் என்றும்இதன்பொருட்டு “திண்டுக்கல் விடுதலை வீரர் கூட்டமைப்பு” உருவானது என்றும்தோழர் சு.போ.அகத்தியலிங்கம் ( Su Po Agathiyalingam) தனது” விடுதலைத் தளும்புகள்” என்ற நூலில் (பக்கம் 45 ) குறிப்பிடுகிறார் விருப்பாச்சி கோபால் நாயக்கர் குறித்து விக்கி பீடியா குறிப்பிலும் இந்தத் திட்டம் குறித்து வருகிறது ஆனால் அந்த விக்கிபீடியா குறிப்பில் சின்னமலை பெயர் இல்லை”கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர். அதன்படி ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முஹமது ஹாசன், பரமத்தி அப்பாவு, சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர். இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது. ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். என்றும் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் விக்கிபீடியா சொல்கிறதுபிடிபட்டவர்களில் 42 பேர் 08.06.1800 அன்று தூக்கிலிடப் பட்டதாகவும் ஏராளமான வீரர்கள் “ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ்” தீவுகளுக்கு நாடு கடத்தப் பட்டதாகவும் தோழர் சு.போ.அகத்தியலிங்கம் கூறுகிறார்இன்று 08.06.2021,இருநூற்றி இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்னால் 42 பேர் தூக்கிலிடப் பட்டிருக்க்ன்றனர்ஆயிரம் பேரை உள்ளிட்ட எண்ணிக்கையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்இதுபோன்ற தியாகங்களால்தான் நாம் இன்று இந்த அளவிற்கேனும் கொஞ்சம் சுதந்திரமாக உள்ளோம்திண்டுக்கல், இடையகோட்டை, விருப்பாச்சி, மணப்பாறை போன்ற ஊர்கள் எல்லாம் இந்த வரலாறோடு தொடர்பில் உள்ளனவரலாற்றின் இந்தத் துண்டில் மாற்றம் இருக்கலாம்கொஞ்சம் கூடலாம் குறையலாம்ஆனால் இது ஒரு வரலாறுலிங்கனை, லெனினை, காந்தியை, மாவோவை ஓரளவிற்கேனும் தெரிந்து வைத்திருக்கும் மணப்பாறை பிள்ளைகளுக்கு அவர்கள் மண்ணின் வீரப் புதல்வன் லக்குமி நாயக்கரையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம் அல்லவா?பின் குறிப்பு*************** திண்டுக்கல் லக்குமி நாயக்கர் என்பவர் மணப்பாறையைச் சேர்ந்தவர் என்றும் இணையவழி கொள்ள முடிகிறது. இவருக்கும் விடுதலைப் போரில் பங்களிப்பு இருக்கிறது என்பதும்கூட மணப்பாறையில் இருந்து 25 கிலோமீட்டரைச் சேர்ந்த ஊர்க்காரனான எனக்கு திமிர் கொள்ள பாத்தியதை உண்டுJune 7, 2021
பொதுவெளியில் வைக்க வேண்டாம்
இறையன்பு சார் அவர்களது உதவியை பொதுவெளியில் வைக்க வேண்டாமென்று விஐபி களை கேட்டுக் கொள்கிறேன்
ஏழைகளுக்கானது இந்த அரசு என்பதை மறுதலிப்பதாகிறது இதுதனது உதவியை பொதுவெளியில் வைக்க வேண்டாமென்று விஐபிகளிடம் சொல்லவேண்டிய கடமையும் இறையன்பு சாருக்கிருக்கிறதுதனக்கு கிடைக்காத விருதை
சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள். பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன். -
என்று ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ளதாக தோழர் மதி கண்ணன் தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்சாகித்திய அகாதமி விருதை ஏற்கும்படி இவரை வற்புறுத்தியவர்கள் யார்?அதை அவர் சொல்ல வேண்டும் அவர் கூறுவது உண்மை எனில் அவர்கள் அகதமியின் பொறுப்புகளுக்கு தகுதியற்ரவர்கள்அவர்களை முறையாக விசாரிக்க வேண்டும்எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்தனக்கு கிடைக்காத விருதை இவர் மலினப்படுத்த முயல்கிறார் என்பதேJune 5, 2021
அவரது மௌனமும் இவரது எதிர்வினையும்
ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் அந்தப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்
100 பக்க வாக்குமூலம் என்கிறார்கள்சினிமாவிற்கு அழைத்துப் போனேன் என்கிறார்கருக்கலைப்பு நடத்தினேன் என்கிறார்சக ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்தேன் என்கிறார்வயிறு பத்திக் கொண்டு எரிகிறதுஇத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள்தான் நெருப்பாய் சுழலும்எதிர்க்கட்சித் தலைவரை இதுகுறித்து கேட்கிறார்கள்எதிர்க்கட்சித் தலைவர் ஏதும் பேசாமல் கடக்கிறார்முன்னாள் அமைச்சர் வளார்மதியோ இதெல்லாம் ஒரு கேள்வியா என்கிறார்அவரது மௌனமும் இவரது எதிர்வினையும் அந்தக் குற்றத்திற்கு சற்றும் சளைத்தது அல்லஇது மாதிரி முக்கியமான தீர்ப்புகள் குறித்து
03.06.2021 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு U.U.லலித் மற்றும் திரு வினித் சரண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒரு முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது
கொரோனா தடுப்பில் மோடியின் நிலை குறித்தும்புல்வாமா வெற்றியை தனது தேர்தலுக்காக மோடி பயன்படுத்திக் கொண்டதை விமர்சித்தும்இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த வினோத் துவா என்ற பத்திரிக்கையாளர் 30.03.2020 அன்று எழுதிய கட்டுரைக்காக அவர்மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில்தான் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது“அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனக்கள் ஒருபோதும் தேசத் துரோகம் ஆகாது “என்பது அவர்கள் அளித்த தீர்ப்புஇதற்கான மேற்கோளாக 1962 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வந்த கேதார்நாத்சிங் வழக்கு எடுத்துக் காட்டப் பட்டது“அரசு எடுக்கும் எந்த நடவடிக்கை குறித்தும் விமர்சிக்க எவருக்கும் அதிகாரம் உண்டு” என்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டிருந்ததுநமக்கு ஒரு கோரிக்கை உண்டு1962 இல் இவ்வளவு தெளிவாக தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்பும்2020 இல் வழக்கு போடப்பட்டு அது உச்சநீதிமன்றம் வந்து சரிப்பட வேண்டியுள்ளதுஎனவே,இது மாதிரி முக்கியமான தீர்ப்புகள் குறித்துமாவட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை ஆய்வாளார்கள் ஆகியோருக்கு அவ்வப்போது கவனப்படுத்தினால் நீதிமன்றங்களின் நேர விரயம் மிச்சமாகும்#சாமங்கவிய 57 நிமிடங்கள்05.06.2021June 4, 2021
இன்னும் இம்சை இருக்கென்கிறார்
பொருளாதார வளர்ச் சிமைனஸ்கு சென்றுவிட்ட நிலையில்
ஒன்றிய அரசு இன்னும் சீர்திருத்தங்களை செய்ய இருப்பதாகவும்அதன்மூலம் நமது பொருளாதாரம் வலுப்படும் என்றும் நமது இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகிறார்இன்னும் இம்சை இருக்கென்கிறார்நெல்லைப்போலவே எள்ளையும்
கனவு இல்லமும், மாமணியும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மகிழ்ச்சிதான்இதைவிட அதிகமாக என்னை ஈர்த்ததுஅந்த அறிவிப்புகளினூடே திருவாரூரில் நெல் கொள்முதல் கிட்டங்கி அமைப்பதற்கு இருபது கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுதான்கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கப்பட்டு மழையில் நனைந்து முளைத்து வீணான சோகம் பார்த்தோம்அந்த வகையில் இது மிக ஆறுதலான செய்திதிருவையாறு பகுதியில் கோடை பயிராக இந்த ஆண்டு 500 ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு நன்கு விளைந்திருப்பதாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்இந்த ஆண்டு ஏக்கருக்கு 5 குவிண்டால் எள் விளையும் என்று மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள்எனில் இந்த ஆண்டு திருவையாறு பகுதியில் ஏறத்தாழ 2500 குவிண்டால் எள் கிடைக்கும்அதாவது 2,50,000 கிலோ எள் கிடைக்கும்ஏக்கருக்கு 8000 ரூபாய் செலவு செய்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்இடைத்தரகர்கள் சொல்ப விலைக்கு வாங்கி தங்களை ஏமாற்றிவிடாமல் இந்த அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்நெல்லைப்போலவே எள்ளையும் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் க்கோரிக்கையை திரு ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்இதை செய்தால் டெல்டா பகுதியில் கோடைகால மானாவாரி விவசாயம் செழிக்கும்#சாமங்கவிய 33 நிமிடங்கள்04.06.2021இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)