திண்டுக்கல் விடுதலை வீரர் கூட்டமைப்பு

 08.06.1800

இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்நான்காம் மைசூர் போரில் திப்பு வீர மரணம் அடைகிறான்எனவே திப்புவோடு தமது இளம் படைவீரர்களோடு களத்தில் இருந்த சின்னமலை பின்வாங்கி ஓடாநிலை வருகிறார்தமது படையை பலப்படுத்தி அங்கிலேயர்களை எதிர்கொள்ள திட்டமிடுகிறார்வேலைகள் நடக்கின்றனஇந்த நேரத்தில் ஆங்கிலேயர்களிடம் இருந்து அவருக்கு ஒரு செய்தி வருகிறதுகோவை பகுதியில் சின்னமலை வரி வசூலித்துக் கொள்ளலாம் என்றும்அதில் 30 விழுக்காட்டை கும்பினியாருக்கு செலுத்தினால் போதும் என்றும் அந்த செய்தி கூறுகிறதுசின்னமலை மறுக்கிறார்ஜெனரல் மெடோஸ் பொறுப்பில் இருக்கும் கோவையை மீட்பதே தன்னுடைய கடமை என்று உறுதி எடுக்கும் சின்னமலைசிவகங்கை சின்னமருது, கேரள வர்மா, திண்டுக்கல் லக்குமநாயக்கர் ஆகியோரோடு கோவையைத் தாக்கத் திட்டம் தீட்டினார் என்றும்இதன்பொருட்டு “திண்டுக்கல் விடுதலை வீரர் கூட்டமைப்பு” உருவானது என்றும்தோழர் சு.போ.அகத்தியலிங்கம் ( Su Po Agathiyalingam) தனது” விடுதலைத் தளும்புகள்” என்ற நூலில் (பக்கம் 45 ) குறிப்பிடுகிறார் விருப்பாச்சி கோபால் நாயக்கர் குறித்து விக்கி பீடியா குறிப்பிலும் இந்தத் திட்டம் குறித்து வருகிறது ஆனால் அந்த விக்கிபீடியா குறிப்பில் சின்னமலை பெயர் இல்லை”கி.பி.1800 ஏப்ரலில் கோபால்நாயக்கர் தலைமையில் இறுதிக்கட்டப் போருக்கு திட்டமிட்டனர். இக்கூட்டத்தில் கேரளவர்மா, மைசூர் கிருட்டிணப்பா, சிவகங்கை சின்னமருது, கோவை ஹாஜிஹான், இராமநாதபுரம் கல்யாணித்தேவர், மற்றும் பெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். கி.பி.1800 சூனில் கோவையிலுள்ள ஆங்கிலேயரின் ராணுவ முகாமை நாலாபுறமும் இருந்து ஒரே சமயத்தில் தாக்குவது என முடிவெடுத்தனர். அதன்படி ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முஹமது ஹாசன், பரமத்தி அப்பாவு, சேசையா ஆகியோர் தளபதிகளாக இருப்பது எனவும் முடிவெடுத்தனர். இச்செய்தி ஆங்கிலேயருக்கு எட்டியது. ஆங்கிலேயர் நாலாபுறமும் பீரங்கிப்படையை நிறுத்தி புரட்சிப்படைகளைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். என்றும் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் விக்கிபீடியா சொல்கிறதுபிடிபட்டவர்களில் 42 பேர் 08.06.1800 அன்று தூக்கிலிடப் பட்டதாகவும் ஏராளமான வீரர்கள் “ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ்” தீவுகளுக்கு நாடு கடத்தப் பட்டதாகவும் தோழர் சு.போ.அகத்தியலிங்கம் கூறுகிறார்இன்று 08.06.2021,இருநூற்றி இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்னால் 42 பேர் தூக்கிலிடப் பட்டிருக்க்ன்றனர்ஆயிரம் பேரை உள்ளிட்ட எண்ணிக்கையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்இதுபோன்ற தியாகங்களால்தான் நாம் இன்று இந்த அளவிற்கேனும் கொஞ்சம் சுதந்திரமாக உள்ளோம்திண்டுக்கல், இடையகோட்டை, விருப்பாச்சி, மணப்பாறை போன்ற ஊர்கள் எல்லாம் இந்த வரலாறோடு தொடர்பில் உள்ளனவரலாற்றின் இந்தத் துண்டில் மாற்றம் இருக்கலாம்கொஞ்சம் கூடலாம் குறையலாம்ஆனால் இது ஒரு வரலாறுலிங்கனை, லெனினை, காந்தியை, மாவோவை ஓரளவிற்கேனும் தெரிந்து வைத்திருக்கும் மணப்பாறை பிள்ளைகளுக்கு அவர்கள் மண்ணின் வீரப் புதல்வன் லக்குமி நாயக்கரையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம் அல்லவா?பின் குறிப்பு*************** திண்டுக்கல் லக்குமி நாயக்கர் என்பவர் மணப்பாறையைச் சேர்ந்தவர் என்றும் இணையவழி கொள்ள முடிகிறது. இவருக்கும் விடுதலைப் போரில் பங்களிப்பு இருக்கிறது என்பதும்கூட மணப்பாறையில் இருந்து 25 கிலோமீட்டரைச் சேர்ந்த ஊர்க்காரனான எனக்கு திமிர் கொள்ள பாத்தியதை உண்டு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2021 12:08
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.