கனவு இல்லமும், மாமணியும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மகிழ்ச்சிதான்இதைவிட அதிகமாக என்னை ஈர்த்ததுஅந்த அறிவிப்புகளினூடே திருவாரூரில் நெல் கொள்முதல் கிட்டங்கி அமைப்பதற்கு இருபது கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுதான்கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கப்பட்டு மழையில் நனைந்து முளைத்து வீணான சோகம் பார்த்தோம்அந்த வகையில் இது மிக ஆறுதலான செய்திதிருவையாறு பகுதியில் கோடை பயிராக இந்த ஆண்டு 500 ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு நன்கு விளைந்திருப்பதாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்இந்த ஆண்டு ஏக்கருக்கு 5 குவிண்டால் எள் விளையும் என்று மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள்எனில் இந்த ஆண்டு திருவையாறு பகுதியில் ஏறத்தாழ 2500 குவிண்டால் எள் கிடைக்கும்அதாவது 2,50,000 கிலோ எள் கிடைக்கும்ஏக்கருக்கு 8000 ரூபாய் செலவு செய்திருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்இடைத்தரகர்கள் சொல்ப விலைக்கு வாங்கி தங்களை ஏமாற்றிவிடாமல் இந்த அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்நெல்லைப்போலவே எள்ளையும் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் க்கோரிக்கையை திரு ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்இதை செய்தால் டெல்டா பகுதியில் கோடைகால மானாவாரி விவசாயம் செழிக்கும்
#சாமங்கவிய 33 நிமிடங்கள்04.06.2021
Published on June 04, 2021 11:06