இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 70

May 4, 2020

கோயம்பேட்டை மூடினால்...

ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவைத் திறப்பான்ஆள்பவர் கோயம்பேட்டை மூடினால் டாஸ்மாக்கைத் திறப்பார்
04.05.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2020 10:28

லாரி வாடகை கூடினால்...

மதிப்புக் கூட்டு வரியின் மூலம் பெட்ரோல் டீசல் விலை ஏறியிருக்கிறதுடீசல் விலை உயர்ந்தால்லாரி வாடகை கூடும்லாரி வாடகை கூடினால்காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் விலை கூடும்அது ஏழைகளை பாதிக்கும்இரு சக்கர வாகனங்களில் பால் மற்றும் காய்கறி விற்கும் ஏழை வியாபாரிகளையும் பால்காரர்களையும் பாதிக்கும்வாடகைக்கு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்களை பாதிக்கும்கண்டனங்கள்03.05.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2020 10:26

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ....







திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய ஏறத்தாழ 1300 துப்புறவு ஊழியர்களை வேலையில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறது ஆலய நிர்வாகம்காரணம்அவர்கள் ஆலயத்தின் ஊழியர்கள் அல்ல. out sourcing ஊழியர்கள்இத்தகைய இக்கட்டான சூழலில் ஆலய நிர்வாகம் இந்த ஊழியர்களின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும்.கவலையே படாதீர்கள், நிர்வாகம் இருக்கிறது என்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும்ஆலய நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்காக நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்இந்த இடத்தில் எனக்குப் பட்டது சிலவற்றை இங்கு வைக்க விரும்புகிறேன்out sourcing மூலமாக ஆலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இவர்கள் என்றால் இவர்கள் ஏதோ ஒரு நிறுவத்தின் company act இன் கீழ் வரும் ஊழியர்கள் ஆவார்கள்இவர்களுக்கு PF உண்டுஇவர்கள் அந்த தனியார் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள்தான்எப்படி?இவர்களது உடையில் இவர்களது நிறுவனத்தின் இலச்சினை இருக்கும்அந்த இலச்சினைக்கு உரிய நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் இவர்கள்அந்த நிறுவனம் நிறைய ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருக்கும்அந்த நிறுவனம்தான் மாதா மாதம் இவர்களுக்கு ஊதியம் கொடுக்கும்இவர்களுக்கு 5000 அல்லது 6000 என்பதுமாதிரி ஊதியம் கொடுக்கும்இப்போது ஆலய நிறுவனம் இவர்களிடம் 1300 துப்புறவு ஊழியர்கள் வேண்டும் என்று கேட்டால் தாங்கள் எடுத்து வைத்திருந்த அல்லது கூடுதலாக எடுத்து அனுப்பி வைக்கும்ஒரு ஒப்பந்தம் போடப்படும்உதாரணமாக ஒரு ஊழியருக்கு 10000 தருவதாக ஆலயம் ஒப்புக் கொள்ளலாம்இது அந்த நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையேயன ஒப்பந்தம்ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள்அந்த நிறுவனம் போகச் சொல்லும் இடத்திற்கு வேலைக்குப் போக வேண்டும்திடீரென ஆலயம் தனக்கு 1200 ஊழியர்கள் போதும் என்று கூறினால் மிச்சம் இருக்கும் நூறுபேரை வேறு ஏதாவது பணிகளுக்கு அனுப்பும்இந்த ஆயிரத்து முன்னூறு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்பது ஆலயத்திற்கு ஒரு பொருட்டே இல்லைஅதை செய்ய வேண்டும்எது எப்படியோஅந்த நிறுவனம் இந்த ஊழியர்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்அவுட்சோர்சிங் ஆபத்தானது என்று சொல்லி வருகிறோம்ஆனால் அது தவிர்க்க முடியாத பட்சத்தில்அவுட்சோர்சிங் நிறுவனக்களைக் கூட்டாக இந்த ஊழியர்களே அமைத்துக் கொள்வதற்கு ஏன் உதவக் கூடாது
03.05.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2020 10:07

மேலேயிருந்து பூக்கொட்டி

மேலேயிருந்து பூக்கொட்டி அவர்கள் நன்றி சொல்கிறார்களாமாம்கீழே நின்று மேலே ஹெலிகாப்டர்களைப் பார்த்து கைதட்டி அவர்களுக்கு இவர்கள் பதிலுக்கு நன்றி சொல்கிறார்களாமாம்இந்தக் காசில் வெண்டிலேட்டர்கள் வாங்கி இருக்கலாம்என்னென்னவோ செய்திருக்கலாம்என்பதெல்லாம் உண்மைதான் என்பது கடந்துஇத்தனை சிரமங்களுக்கு இடையேயும்இன்னுமொரு சிரமமாகஇந்தப்பூக்களை சுத்தம் செய்யும்துப்புரவு பணியார்களின் வேதனை குறித்தானதோழர் கருப்பு கருணா வின் வேதனை கலந்த கோவத்தில்அவர் கரம்பற்றி நானும் இணைகிறேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2020 10:02

May 2, 2020

ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பது




மும்பைஅன்றைக்கு பம்பாய்அந்தச் சாலையின் இருமருங்கும் கூட்டம்கூட்டத்தோடு கூட்டமாய் நிற்கிறார் பஷீர்அப்போது அவர் எழுதவெல்லாம் தொடங்கி இருக்கவில்லைஒரே பரபரப்பாய் இருக்கிறதுகொஞ்ச நேரத்தில்ஒரு மனிதனை காவல்துறையினர் சங்கிலியால் கட்டி இழுத்து வருகிறார்கள்இவரை அவர்கள் நெருங்க இருக்கிறபோது அந்த மனிதனை பஷீருக்கு அடையாளம் தெரிந்து விடுகிறதுஅந்த மனிதனுக்கு பஷீர் கடன்பட்டிருக்கிறார்எப்படியேனும் அந்த மனிதனது பார்வையில் பட்டு வணங்கி நன்றியைத் தெரிவித்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்முடியவில்லைஅவர்கள் கடந்துபோனதும் பஷீருக்கு பக்கத்தில் நின்றவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே கூறுகிறார்,“அப்பாடா, ஒரு வழியா அந்தத் திருட்டுப் பயல புடிச்சுட்டாங்க. இனி திருட்டு பயம் கொறஞ்சிடும்”திருடனா?அதிர்கிறார்என்றாலும் அவன் செய்த உதவியைத் தன்னால் காலத்திற்கும் மறக்க முடியாது என்று நினைக்கிறார்அப்படி என்ன செய்துவிட்டான் அந்த மனிதன்ஒரு நாள் சாலை ஓரமாக நடந்து கொண்டிருக்கிறார் பஷீர்.பசி மயக்கத்தைத் தரவே மயங்கி கீழே வீழ்கிறார்முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படவே எழுகிறார்ஒரு மனிதனின் மடியில் இவர் தலை இருக்கிறதுஅந்த மனிதன் கடையில் வாங்கி வந்த உணவைத் தருகிறான்உணவு உள்ளே போனதும் தெம்பு வருகிறதுஎழுந்தவரிடம்இன்னொரு பொட்டலத்தைக் கொடுத்து மதியம் சாப்பிட சொல்கிறான்”சாப்பாடு முக்கியம், பசியோடு நடக்காதே”நகர்ந்து விடுகிறான்பொட்டலத்தில் காசு இருக்கிறதுஅவன்தான் அன்று இழுத்துச் செல்லப்பட்ட திருடன்எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கைத் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறீர்கள்இதன் விளைவாய் பசியோடு சுருண்டு கிடக்கிறார்கள் பலர்சொந்த ஊருக்கு வெருங்காலோடும் ஒருவாரப் பசியோடும் நடக்கிறார்கள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள்சிலர் செத்தே போயிருக்கிறார்கள்தன்னார்வளர்கள் மட்டும் இல்லாவிட்டால்இருப்பவர்களில் பலர் செத்திருப்பார்களஅன்பிற்குரிய ஆளும் கனவான்களே,பசியோடு இருக்கக் கூடாது, பசியோடு நடக்கக்கூடாது என்று ஒரு திருடனுக்கு தெரிந்திருப்பதுஉங்களுக்கு ஏன் தெரியாமல் போனது?#சாமங்கவியஒருமணிஐம்பதுநிமிடம்
02.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2020 18:20

என்னதான் அம்பின்மீது நமக்கு கோவம் இல்லை எனினும்





கடலூரில் அண்ணலின் சிலைக்கு நேற்று காலை செருப்பு மாலை அணிவித்தவரை கைது செய்துள்ளது காவல்துறைஅண்ணலின் சிலைக்கு செருப்பு மாலையிட்டவர் இவர்தானென்று தம்பி ஸ்டாலின் தி யின் பக்கவழி அறிய முடிகிறதுபொதுவாக அம்புகளோடு நமக்கு ஒருபோதும் பிணக்கு இல்லைஅம்புகளுக்கும் அவை தைத்துக் கிழிக்கும் உடல்களின்மீது ஒருபோதும் பகை எதுவும் இருப்பது இல்லைபாவமாக இருக்கிறதுஎவர் தலைமீது வேண்டுமாயினும் கைவைத்து சத்தியம் செய்வேன்இந்த மனிதனுக்கு அண்ணல் குறித்து எதுவும் தெரியாதுகொஞ்சம் போதைசில துண்டு கோழி வருவல்கையில் கொஞ்சம் காசுபோதையோடு சேர்த்து சாதி வெறியூட்டல்செய்திருக்கிறார்நமது கோரிக்கை இதுதான்எய்தவன் யாரென்று விசாரிக்க வேண்டும்அவர்களைக் கைது செய்து கடுந்தண்டனை வாங்கித் தரவேண்டும்என்னதான் அம்பின்மீது நமக்கு கோவம் இல்லை எனினும்உடலைத் தைத்ததும் பிடுங்கி உடைத்து எறிவோமல்லவாஆக இவருக்கும் தண்டனை வேண்டும்இனியொருமுறை இதுபோல காரியங்களைத் திட்டமிடக்கூடாதுஅப்படி ஒரு தண்டனை எய்தவனுக்கும்இனியொருமுறை இப்படி ஒரு செயலை எவனும் செய்யக்கூடாதுஅப்படி ஒரு தண்டனை இந்த மனிதருக்கும் வழங்க வேண்டும்

02.04.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2020 08:45

May 1, 2020

அசாதாரணமான சூழல்

அசாதாரணமான சூழல்வருபவர்கள் வரட்டும்வீடியோ கான்பிரன்ஸ் வழி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தோழர் யெச்சூரி கூட்டலாம் என்று படுகிறது
01.05.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:09

நீங்களேதேனும் செய்வீர்களா இல்லையா?

இன்னும் 15 நாள் வீடடங்கச் சொல்கிறீர்கள்சரிசெய்கிறோம்ஏற்கனவே 40 நாள் வீடடங்கினோம்பிரதமர் அவர்களே,இப்போதேனும்நீங்களேதேனும் செய்வீர்களா இல்லையா?
01.05.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:08

இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது





இது இடைச்சாதி ஆதிக்கவெறியின் தெறிப்புஇது தொடர்ந்துகொண்டே இருக்கிறதுஇனியொரு தடவை இப்படி நிகழாதபடிகடுந்தண்டனையாக வழங்கவேண்டும் இதை செய்த சாதி வெறியன்களுக்கு
01.05.2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:07

பூமி சிவக்கும் என்கிறது இந்த மே ஒன்று

முதலாளித்துவத்தின்
செவிட்டில் அறைந்து
அதை
சுருக்கிச் சாய்த்த கொரோனாநம் வேலைகளையும் சாய்த்திருக்கிறதுகொஞ்சம் மெனக்கெட்டால்
இடது வலுக்கும்
பூமி சிவக்கும் என்கிறது
இந்த மே ஒன்றுமெனக்கெடுவோம்
வாழ்த்துக்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2020 20:05

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.