இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 74

April 8, 2020

நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போவோம்

அமெரிக்கா மருந்து கேட்டு மிரட்டுகிறதுபிரதமர் பணிகிறார்எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?மீண்டும் சொல்லத் தோன்றுகிறதுமக்களது அறியாமையை, இறைநம்பிக்கையைப் பயன்படுத்தி அறுவடை செய்ய ஆள்பவர்கள் முனைகிறார்கள்மருந்தனுப்புவதைத் தடுத்து மக்களைக் காக்க நீங்கள் தவறினால்நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போவோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 11:15

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்

நாளைக்கு (08.04.2020) அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுகிறார் மாண்பமை பிரதமர்அவருக்கு எமது பாராட்டுக்கள்இதை எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிற்கு வழிகாட்ட முய்ற்சிக்க வேண்டும்”இது மருத்துவம் சார்ந்த விஷயம். அரசியல் அல்ல. எனவே தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டமாட்டோம்”என்கிறீர்கள் மாண்பமை முதல்வர் அவர்களே,தமிழ்நாட்டிற்கும் ஹைட்ராக்சி க்ளோரோ குயின் தேவைப் படுகிறது.இதன் பற்றாக்குறைகூட தமிழ் நாட்டில் உயிழப்பை அதிகரிக்கச் செய்யலாம்மத்திய அரசோ மருந்தினை அமெரிக்காவிற்கு அனுப்ப இருக்கிறதுஇதனால் தமிழ் நாட்டிலும் அந்த மாத்திரைக்கான தட்டுப்பாடு வரலாம்இந்தப் பற்றாக்குறை மோசமான அரசியலால் வருவதுதானேஒடிசாவிற்கு 800 கோடியும் தமிழ் நாட்டிற்கு 510 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் அக்மார்க் அரசியல்தான் முதல்வர் அவர்களேஎனவே அவசியமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 11:14

அவ நேத்து அடிச்சா

விளையாடிக் கொண்டிருந்த லேஷந்த் திடீரென அழத் தொடங்கினார்என்ன நடந்தது என்று தெரியாமல் மிரண்டு போனோம்“என்ன தம்பி?”கோரசாகக் கேட்டோம்லேகா அடிச்சுட்டாலேகா தூங்கிக் கொண்டிருந்தாள்பொய் சொல்லாதடா. அவதான் தூங்கறாளேஅவ நேத்து அடிச்சாஅடேய்....
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 11:11

130 கோடி மக்களின் பிரதமரைப் பார்த்து...

குஜராத் கலவரநாள் தொடங்கி அவருக்கெதிரான கருத்தாளனாகத் தொடர்கிறேன்இரண்டுத் தேர்தல்களில் என்னளவில் அவருக்கு எதிராகக் களமாடி இருக்கிறேன்அவரது செயல்பாடுகளை என் வரையறைக்குட்பட்டு கடுமையாக விமர்சிக்கிறேன்ஆனால் ஒருபோதும் அவருக்கான மரியாதையைத் தரத் தவறுவதே இல்லைஅவருக்கு இது புரிகிறதோ இல்லையோ,எனக்கும் அவர்தான் பிரதமர்எமக்கு அவர்மீது 1003 விமர்சனம் இருக்கலாம்.இருக்கலாம் என்ன இருக்கிறதுஆனால்,“பேசினேன்,கேட்டிருக்கிறேன்அனுப்புவார்அனுப்பாமலும் போகலாம்அனுப்பாவிட்டால் அதற்குரிய பின்விளைவுகளை அனுபவிக்க நேரும்”என்று 130 கோடி மக்களின் பிரதமரைப் பார்த்து எகிர எந்த ஒரு கொம்பனுக்கும் உரிமை இல்லைஇதை அவரே துடைத்துக் கொண்டு சமாளிக்கலாம்எம்மால் முடியாது திரு ட்ரம்ப்எங்களது கண்டனம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 11:10

சுட்டுவிட்டேன் மன்னியுங்கள் என்கிறார்

உத்திரப் பிரதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான திருமதி. மஞ்சு திவாரி விளக்கணைத்து ஏற்றிய அந்த இடைவெளியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்அந்தக் காட்சி வலைதளங்களில் பிரபலமானதும் நடவடிக்கைக்கு பயந்துதீபாவளி போன்ற சூழலாக அது இருந்தது உணர்ச்சி வசப்பட்டு சுட்டுவிட்டேன். மன்னியுங்கள் என்கிறார்நமக்கான அய்யங்கள்1) அவருக்கு எப்படி துப்பாக்கி வந்தது?
2) தீபாவளியின்போது இவர் நிஜத் துப்பாக்கியால்தான் சுடுவாரா?
3) அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 11:09

எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்

என் நட்பில் உள்ள மரியாதைக்குரிய தோழியர்கள் சிலர் குடும்பச் சூழலுக்கு கட்டுப்பட்டு அன்றைய தினம் விளக்கேற்றினார்கள்இருவரும் அதற்காக மிகவும் வருந்தி பதிவிட்டு இருந்தனர்அதில் ஒருவர்“என் வீட்டிலும் ஒரு சங்கி இருக்கே. என்ன செய்ய?”இவர்அப்படி ஒரு அழுத்தமான இடதுசாரியாக வாழ ஆரம்பித்திருப்பவர். இந்துத்துவாவை மூர்க்கமாக எதிர்ப்பவர்.கணவர் ஆசாரமான பக்திமான்இன்னொருவர்,“இத செய்யலன்னா என் வீட்டுக்காரர் என்னை அன்பொண்டாட்டி செய்துடுவார்” என்றும் பதிவிட்டிருந்தனர்”அன்பொண்டாட்டி”அய்யோ அய்யோ என்ன ஒரு பகடிசொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறேன்இவர் மதவெறிக்கு எதிராக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு பக்தர்நான் சொல்வது இதுதான்இருவருமே இப்படி ஆதங்கப் படுவதற்கு ஏதும் இல்லைஇன்னும் சொல்லப்போனால் ஆண்கள் விளக்கேற்ற விரும்பாமல் இருந்த குடும்பங்களிலும் பெண்கள் ஏற்றி வைத்திருக்கக் கூடும்இது இறைநம்பிக்கை சார்ந்த விஷயம்எங்கள் கிராமத்தில்எங்க அம்மாவும் ஏற்றி
வைத்திருக்கும்என் தம்பி ஏற்றி வைத்திருப்பான்என் அம்மாவும் தம்பியும் அழுத்தமான திமுக காரர்கள்இவர்கள் யாரும் மதவெறி ஆட்கள் இல்லைஇறை நம்பிக்கை உடையவர்கள்நம் தோழியர்களின் கணாவர்களும் இறைநம்பிக்கையாளர்கள்தான்விளக்கு ஏற்றினால் தெய்வம் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கைஅல்லது,ஏற்றாவிட்டால் இறைவன் இன்னும் பேரதிகமாய் சோதிப்பான் என்ற பயம்வெறுக்காதீர்கள்எல்லோருக்கும் சொல்வது இதுதான்,எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்நமக்கு வேலை அதிகமாக இருக்கிறதுஅவ்வளவுதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 11:08

சும்மா சொன்னேன்

திடீரென்று என் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகிறது என்று கொள்வோம்கையிலோ பைசா இல்லைஎனில்,என் தம்பியிடம், தங்கைகளிடம், உறவினர்களிடம் புரட்டுவேன்போதாது எனும்பட்சத்தில் வட்டிக்கு வாங்குவேன்வாங்கிய ப்ளாட்டில் வீடு கட்டலாம் என்று சேமிப்புகளை எல்லாம் ஒன்று திரட்டுகிறேன்இருபது லட்சம் தேறுகிறதுவீடு கட்டும் ஏற்பாடுகளைத் தொடங்குகிறேன்இந்த நேரத்தில் திடீரென்று மகளுக்கு திருமணம் ஏற்பாடாகிறதுவீடு கட்டும் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு திருமணத்தை முடிப்பேன்புதிய பாராளுமன்றம் கட்டலாம் என்று இருபதாயிரம் கோடிக்கு திட்டம்இந்த நேரத்தில் கொரோனாசும்மா சொன்னேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 11:07

April 7, 2020

ஒடிசாவின் நிலபரப்பை விட தமிழ்நாட்டின் நிலபரப்பு அதிகம்

ஒடிசாவின் நிலபரப்பை விட தமிழ்நாட்டின் நிலபரப்பு அதிகம்ஒடிசாவின் மக்கள் தொகையைப்போல ஏறத்தாழ இரண்டு மடங்கு மக்கள் தொகை தமிழ்நாட்டில்என் அன்பிற்குரிய பிரதமர் அவர்களேநீங்கள் கொரோனா நிவாரணத் தொகையினை அறிவித்த நேரத்தில்கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைஒடிசாவில் 21தமிழ்நாட்டில் 475நீங்கள் வழங்கியதுஒடிசாவிற்கு ஏறத்தாழ 800 கோடிதமிழ்நாட்டிற்கு 510 கோடிபிரச்சினை என்னன்னா தேசபக்தி குறித்து நீங்களும் மாண்பமை அமித்ஷாவும் எங்களுக்கு வகுப்பெடுப்பதுதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2020 04:32

நாட்டில் 144 தடைச்சட்டம் இருக்கிறது

நாட்டில் 144 தடைச்சட்டம் இருக்கிறதுநேற்று தீப்பந்தத்தோடு ஊர்வலம் போனதாகப் படங்கள் வருகின்றனபட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள்நமக்கிருக்கும் அய்யங்கள் எளிதானவை1) 144 நடைமுறையில் இருக்கும்போது ஊர்வலத்தை எப்படி அனுமதித்தார்கள்?2) அனுமதித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?3) மாத்திரை வாங்கப் போகிறேன் என்றாலே மருந்துச்சீட்டை காட்டச்சொல்லும் நேரத்தில் இவ்வளவு பட்டாசு எப்படி இவர்களுக்குப் போனது?4)தடையை மீறி ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்களை ஏன் கைது செய்யவில்லை?5) இவ்வளவு கூட்டமாகத் திரண்டவர்களை ஏன் தொற்று சோதனைக்கு உட்படுத்தவில்லை?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2020 03:04

April 2, 2020

”நினைத்திருக்கிறோம் சார்” (உதிரிப்பூக்கள் மகேந்திரன்)

“உதிரிப் பூக்கள்” மகேந்திரனின் எதிரிகளும் வியந்து சிலாகிக்க வேண்டிய படம்அவரது எதிரிகள் யார் என்பது நாமறியோம்ஆனால் சினிமா தெரிந்த எல்லோரும் அந்தப் படத்தை வியந்து கொண்டாடுகிறார்கள்அதுகுறித்து ஒருமுறை மகேந்திரன் சார் இப்படி சொன்னதாக நியாபகம்“குறைந்த அளவிலான தவறுகளோடு எடுக்கப்பட்ட படம் “உதிரிப் பூக்கள்”என்ன ஒரு மதிப்பீடுஅவரைப் பொறுத்தவரை அவர் வேறு அவரது படம் வேறு அல்லஎனில்,தன்னை விட்டு கொஞ்சம் வெளியே சென்று நின்று தன்னை மதிப்பீடு செய்வது என்பது இதுதான் போலும்அந்த மகா கலைஞனின் முதலாவது நினைவு தினம் இன்று”நினைத்திருக்கிறோம் சார்” சொல்வதேகூட அவருக்கான மரியாதையும் அஞ்சலியும்வணக்கம் சார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2020 19:20

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.