இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 73
April 19, 2020
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்
நாளைக்கு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுகிறார் மாண்பமை பிரதமர்அவருக்கு எமது பாராட்டுக்கள்இதை எதிர்க்கட்சிகள் சரியாகப் பயன்படுத்தி மத்திய அரசிற்கு வழிகாட்ட முய்ற்சிக்க வேண்டும்”இது மருத்துவம் சார்ந்த விஷயம். அரசியல் அல்ல. எனவே தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டமாட்டோம்”என்கிறீர்கள் மாண்பமை முதல்வர் அவர்களே,தமிழ்நாட்டிற்கும் ஹைட்ராக்சி க்ளோரோ குயின் தேவைப் படுகிறது.இதன் பற்றாக்குறைகூட தமிழ் நாட்டில் உயிழப்பை அதிகரிக்கச் செய்யலாம்மத்திய அரசோ மருந்தினை அமெரிக்காவிற்கு அனுப்ப இருக்கிறதுஇதனால் தமிழ் நாட்டிலும் அந்த மாத்திரைக்கான தட்டுப்பாடு வரலாம்இந்தப் பற்றாக்குறை மோசமான அரசியலால் வருவதுதானேஒடிசாவிற்கு 800 கோடியும் தமிழ் நாட்டிற்கு 510 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் அக்மார்க் அரசியல்தான் முதல்வர் அவர்களேஎனவே அவசியமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்
07.04.2020
07.04.2020
Published on April 19, 2020 19:41
எம்மால் முடியாது திரு ட்ரம்ப்
குஜராத் கலவரநாள் தொடங்கி அவருக்கெதிரான கருத்தாளனாகத் தொடர்கிறேன்இரண்டுத் தேர்தல்களில் என்னளவில் அவருக்கு எதிராகக் களமாடி இருக்கிறேன்அவரது செயல்பாடுகளை என் வரையறைக்குட்பட்டு கடுமையாக விமர்சிக்கிறேன்ஆனால் ஒருபோதும் அவருக்கான மரியாதையைத் தரத் தவறுவதே இல்லைஅவருக்கு இது புரிகிறதோ இல்லையோ,எனக்கும் அவர்தான் பிரதமர்எமக்கு அவர்மீது 1003 விமர்சனம் இருக்கலாம்.இருக்கலாம் என்ன இருக்கிறதுஆனால்,“பேசினேன்,கேட்டிருக்கிறேன்அனுப்புவார்அனுப்பாமலும் போகலாம்அனுப்பாவிட்டால் அதற்குரிய பின்விளைவுகளை அனுபவிக்க நேரும்”என்று 130 கோடி மக்களின் பிரதமரைப் பார்த்து எகிர எந்த ஒரு கொம்பனுக்கும் உரிமை இல்லைஇதை அவரே துடைத்துக் கொண்டு சமாளிக்கலாம்எம்மால் முடியாது திரு ட்ரம்ப்எங்களது கண்டனம்
07.04.2020
07.04.2020
Published on April 19, 2020 19:39
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்
உத்திரப் பிரதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான திருமதி. மஞ்சு திவாரி விளக்கணைத்து ஏற்றிய அந்த இடைவெளியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்அந்தக் காட்சி வலைதளங்களில் பிரபலமானதும் நடவடிக்கைக்கு பயந்துதீபாவளி போன்ற சூழலாக அது இருந்தது உணர்ச்சி வசப்பட்டு சுட்டுவிட்டேன். மன்னியுங்கள் என்கிறார்நமக்கான அய்யங்கள்1) அவருக்கு எப்படி துப்பாக்கி வந்தது?
2) தீபாவளியின்போது இவர் நிஜத் துப்பாக்கியால்தான் சுடுவாரா?
3) அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
08.04.2020
2) தீபாவளியின்போது இவர் நிஜத் துப்பாக்கியால்தான் சுடுவாரா?
3) அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
08.04.2020
Published on April 19, 2020 19:38
எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்
என் நட்பில் உள்ள மரியாதைக்குரிய தோழியர்கள் சிலர் குடும்பச் சூழலுக்கு கட்டுப்பட்டு அன்றைய தினம் விளக்கேற்றினார்கள்இருவரும் அதற்காக மிகவும் வருந்தி பதிவிட்டு இருந்தனர்அதில் ஒருவர்“என் வீட்டிலும் ஒரு சங்கி இருக்கே. என்ன செய்ய?”இவர்அப்படி ஒரு அழுத்தமான இடதுசாரியாக வாழ ஆரம்பித்திருப்பவர். இந்துத்துவாவை மூர்க்கமாக எதிர்ப்பவர்.கணவர் ஆசாரமான பக்திமான்இன்னொருவர்,“இத செய்யலன்னா என் வீட்டுக்காரர் என்னை அன்பொண்டாட்டி செய்துடுவார்” என்றும் பதிவிட்டிருந்தனர்”அன்பொண்டாட்டி”அய்யோ அய்யோ என்ன ஒரு பகடிசொல்லி சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறேன்இவர் மதவெறிக்கு எதிராக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு பக்தர்நான் சொல்வது இதுதான்இருவருமே இப்படி ஆதங்கப் படுவதற்கு ஏதும் இல்லைஇன்னும் சொல்லப்போனால் ஆண்கள் விளக்கேற்ற விரும்பாமல் இருந்த குடும்பங்களிலும் பெண்கள் ஏற்றி வைத்திருக்கக் கூடும்இது இறைநம்பிக்கை சார்ந்த விஷயம்எங்கள் கிராமத்தில்எங்க அம்மாவும் ஏற்றி
வைத்திருக்கும்என் தம்பி ஏற்றி வைத்திருப்பான்என் அம்மாவும் தம்பியும் அழுத்தமான திமுக காரர்கள்இவர்கள் யாரும் மதவெறி ஆட்கள் இல்லைஇறை நம்பிக்கை உடையவர்கள்நம் தோழியர்களின் கணாவர்களும் இறைநம்பிக்கையாளர்கள்தான்விளக்கு ஏற்றினால் தெய்வம் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கைஅல்லது,ஏற்றாவிட்டால் இறைவன் இன்னும் பேரதிகமாய் சோதிப்பான் என்ற பயம்வெறுக்காதீர்கள்எல்லோருக்கும் சொல்வது இதுதான்,எல்லோரையும் “அவர்கள்” பட்டியலில் சேர்த்து விடாதீர்கள்நமக்கு வேலை அதிகமாக இருக்கிறதுஅவ்வளவுதான்

Published on April 19, 2020 19:37
சும்மா சொன்னேன்
திடீரென்று என் மகளுக்கு திருமணம் ஏற்பாடாகிறது என்று கொள்வோம்கையிலோ பைசா இல்லைஎனில்,என் தம்பியிடம், தங்கைகளிடம், உறவினர்களிடம் புரட்டுவேன்போதாது எனும்பட்சத்தில் வட்டிக்கு வாங்குவேன்வாங்கிய ப்ளாட்டில் வீடு கட்டலாம் என்று சேமிப்புகளை எல்லாம் ஒன்று திரட்டுகிறேன்இருபது லட்சம் தேறுகிறதுவீடு கட்டும் ஏற்பாடுகளைத் தொடங்குகிறேன்இந்த நேரத்தில் திடீரென்று மகளுக்கு திருமணம் ஏற்பாடாகிறதுவீடு கட்டும் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு திருமணத்தை முடிப்பேன்புதிய பாராளுமன்றம் கட்டலாம் என்று இருபதாயிரம் கோடிக்கு திட்டம்இந்த நேரத்தில் கொரோனாசும்மா சொன்னேன்
08.04.2020
08.04.2020
Published on April 19, 2020 19:36
முரண்களை சுமந்து அலைய வேண்டாம்
நேற்று (09.04.2020)பிற்பகல் 01.25விக்டோரியாவின் அலைபேசிக்கு ஷியாமளாவிடம் இருந்து அழைப்புSHYAM CALLINGஎன்பதைப் பார்த்ததுமே கீர்த்தனா அழத் தொடங்கி விட்டாள்விசும்பிக்கொண்டே விக்டோரியா அலைபேசியை வாங்கி“அழாத பாப்பா, அழாத பாப்பா” என்றவாறே சத்தமாக அழத் தொடங்கி விட்டதுஎனக்கும் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டதுஒருமணி நேரத்திற்கு முன்பு பேசிய ஷியாமளா முடிந்ததும் சொல்வதாக சொல்லியிருந்தாள்முடிந்துவிட்டதுவிக்டோரியாவின் அக்காவினுடைய கணவர் இறந்துவிட்டார்ஒருமணி நேரத்திற்குள் எரித்துவிட வேண்டும் என்று நெறுக்குவதாகக் கூறினாள்அதற்குள் கலெக்டரிடம் அனுமதி பெற்று போவது கடினம்எனவே போவதில்லை என்று முடிவெடுத்தோம்வீடியோ பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்தோம்02.15 வாக்கில் மீண்டும் அழைத்தாள்இதற்கிடையே தூய உடல் ஏற்றிச் செல்லும் வண்டிக்கு இன்னொரு உடலை எடுத்துச் செல்ல புக் ஆனதால் வண்டி வர 04.30 ஆகும் என்றாள்ஆகா, அதற்குள் அனுமதி வாங்கி போய்விடலாம் என்று தோன்றவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் விரைகிறேன்அங்கு சென்று பார்மாலிட்டிகளைத் துவங்குவதற்குள் வண்டி வந்துவிட்டதாக பிள்ளை சொல்லவே திரும்பிவிட்டேன்திருமணம் ஆனதில் இருந்து நானும் அவருமாகவே எதற்கானாலும் சேர்ந்தே திரிவோம்எனக்கு திருமணமாகுப் பொழுது ஷியாமளா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்அதற்கப்புறம் அவள் அவள் எனது பிள்ளையாகவே ஆகிறாள்அவளது திருமணத்தின் ஊடாக அவருக்கும் எனக்கும் சிறு ஊடல்நானும் அவரும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை என்றாகிவிட்டதுகோவத்தில் அவளோடும் பேசுவதைத் தவிர்த்து விட்டேன்மற்றபடி குடும்பத்தில் யாருக்கும் யாரோடும் முரணெதுவும் இல்லைரெண்டரை வருடங்களுக்குப் பிறகு ஒரு வாய்ஸ் மெசேஜ் வருகிறதுஎடுத்துக் கேட்கிறேன்“எபீன் தாத்தா”ஒரு ஆண் பிஞ்சின் மழலையார் என யோசிப்பதற்குள்“புவா சாப்டியா?”அய்யோ, தவமே செய்யாமல் வரமா?“பெரம்பலூர் வரேன்
ஒன்ன தூக்கறேன்
கரட்டாம்பட்டி வரேன்”யாரெனப் புரிந்துவிட்டது.பேரன்அம்மா சொல்லி கொடுத்து ரிகர்சல் எடுத்து வந்த குரல்இளகிப் போனேன்இன்னும் கொஞ்ச நாள் கழித்து மகள் மருமகன் பேரன் பேத்தி எல்லோரும் வருகிறார்கள்வாங்க சொல்கிறேன் எப்போதும்போலபிறகு உம்அவர்களுக்கு நான் உம் என்று இருப்பது எந்த விதத்திலும் பாதிக்கவில்லைஎன்னைத் தவிர எல்லோரும் ஒன்றுதான்திடீரென்று பேத்தி வருகிறாள்சத்தமாக,“டேய்”திரும்புகிறேன்“ன்னா”சிரிப்பு தொண்டைக்குழிவரை வந்துவிட்டது“;ஊக்கு” என்று கைகளை நீட்டுகிறாள்அம்மா சொன்னதை செய்கிறாள்தூக்கிவிட்டேன்மகள்களுக்கு அப்பன்களை சுளுவாக வளைக்கத் தெரிகிறதுசகோதரன்களுக்கு இந்தக் கலை வாய்க்க மறுக்கிறதுமகளோடு ராசியாகிவிட்டதுஅவருக்கும் உடல் சரியில்லாமல் போகிறதுஇப்பவும்கூட என் நியாயம் சரி என்றே எனக்குப் படுகிறதுஎன் நியாயம் எனக்கு சரியென்றால் அவர் நியாயம் அவருக்கு சரிதானேபோய் பார்த்துபழசெல்லாம் மறந்துடுவோம் என்று சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறேன்போகவே முடியவில்லைஒருக்கால் அதே மாதிரி அவருக்கும் தோன்றியிருக்கலாம்உடம்பு நன்றாக இருந்தபோது அவரது வந்திருக்கலாம்நானாவது போயிருக்கலாம்இது நடந்திருந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக அவர் வாழ்ந்திருக்கலாம்இனி அவரும் வர இயலாதுநானும் போக முடியாதுஎன் அன்பிற்குரியவர்களே,முரண்களை சுமந்து அலைய வேண்டாம்#சாமங்கவிந்துஒருமணிமூன்றுநிமிடங்கள்
11.04.2020

Published on April 19, 2020 19:34
இலவசமாக பொய்யை விற்க வருகிறார் மதுவந்தி
அவர்கள் குடும்பம் நெடுங்காலமாக தரமான கல்வியை விற்று வருபவர்கள்விற்கப்படும் கல்வியில் தரம் எப்படி இருக்கும்?ஆனாலும் லஞ்சம் கொடுத்தும் அந்தப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்தார்கள் நம் மக்கள்அம்மா பள்ளியில் குழந்தையை சேர்க்க வருபவரிடம் பிள்ளையே லஞ்சம் வாங்குவார்பெற்ற லஞ்சத்திற்கு ஒழுங்காக பணியாற்றாமல் காசும் திருப்பி தராமல் நடந்த பிரச்சினைகளும் உண்டுநல்ல நீச்சல் குளம் இருப்பதாக விளம்பரம் செய்வார்கள் அது பிள்ளையை விழுங்கும் குளம் என்பதை சொல்ல மாட்டார்கள்கேட்டால்பரம்பரை பரம்பரையாக கல்வி விற்பதாக சொல்கிறார்கள்இப்போதுஇலவசமாக பொய்யை விற்க வருகிறார் மதுவந்திஆக அவர்கள் பரம்பரை பரம்பரையாக விற்றுக் கொண்டேதான் இருக்கிறார்கள்இப்போதுதான் கொஞ்சம் சுதாரித்து இருக்கிறோம்
11.04.2020
11.04.2020
Published on April 19, 2020 19:33
0002
நீங்களும் நானும் அவரும் இவரும்கூட பிணங்களாகியிருக்கக் கூடும்கொஞ்சம்
அவர்கள் சுணங்கியிருந்தால்நாம்தான் அவர்களிடம் போனோம்நம்பினோம்
தொற்றகற்றும் கடவுளவர்கள் அவர்கள் என்றுதங்களைத் தொற்றும் என்பதறிவார்கள்ஆனாலும் வைத்தியம் பார்த்தார்கள்தொற்றளித்தோம்நாம் பிழைத்தோம்செத்தார்கள் அவரில் சிலர்நன்றி செலுத்த வேண்டிய நேரம்சுடுகாடு மறுக்கிறோம்சுடுகாடும் இல்லை என்பதுணர்ந்தும்பத்துமணிநேரம் முகக் கவசம் கழற்றாது தொற்றகற்ற உழைக்கிறார்கள்மரணிக்கலாம் இவர்களில் சிலரும்நாமும் சுடுகாட்டை அவர்களுக்கு மறுக்கலாம்
14.04.2020

Published on April 19, 2020 19:31
ஆனந்த் டெல்டும்ப்டே கைது செய்யப் பட்டிருக்கிறார்
நேற்று மாண்பமை பிரதமர் மக்களிடத்திலே உரையாற்றி இருக்கிறார்தனது உரையினிடையே தந்தை அம்பேத்கரை அவர் நினைவு கூர்ந்ததாகவும் கூறுகிறார்கள்மகிழ்ச்சிஆனால்அதே நாளில் தந்தை அம்பேத்கரின் கொள்ளுப் பேரன் முறை கொண்ட பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே கைது செய்யப் பட்டிருக்கிறார்அதே நாளில் என்று நான் அழுத்திச் சொல்வதற்கு ஒரு காரணம்,நேற்று தந்தை அம்பேத்கரின் பிறந்தநாள்நேற்று தோழர் கவுதம் நவ்லக்காவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்இவர்களது கைதினை கண்டிக்கிறோம்அதற்கு எதிர்வினையாகபேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டேயின் “மஹத்” தினை நேற்றிலி இருந்து மறு வாசிப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்நேற்று தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் பதிவின் மூலமாகத்தான் கவுதம் நவ்லக்கா அவர்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்ததுஇந்தக் கைதிற்கான இன்னொரு எதிர்வினையாக கவுதம் நவ்லக்கா குறித்தும் தேடிப் படிக்க முடிவெடுத்திருக்கிறேன்
15.04.2020
15.04.2020
Published on April 19, 2020 19:30
April 8, 2020
ரசிக்கும் மனோபாவனையில் இருப்பது அந்தக் குற்றத்தைவிட பெரும் குற்றம்

04.04.2020 அன்று தனது பக்கத்தில் இந்தப் படத்தையும் செய்தியையும் வைத்திருந்தார் தம்பி ஸ்டாலின் திசெய்தி இதுதான்தனது காதலியான ரம்யாவுடன் கௌதமபிரியன் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.கௌதமபிரியன் ஒரு தலித்ரம்யா இடைசாதியை சார்ந்த பிள்ளைவிசயம் தெரிந்ததும் ரம்யாவின் பெற்றோர் தங்களது உறவினர்களுக்கு தெரிவிக்கிறார்கள்ஈஸ்வரன் என்ற ஏட்டையாவுடன் ஒரு பிரிவு அவர்களை மடக்குகிறதுஈஸ்வரன் வெறுங்கைகளால் கௌதமபிரியனைத் தாக்குகிறார்அதில்;கௌதமபிரியனின் முதுகு மற்றும் தோள்பட்டையில் மிகச் சன்னமான காயம் ஏற்பட்டு அதற்காகஅவர் செங்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக வைத்தியம் பெற்றிருக்கிறார்30.03.2020 முதல் 02.04.2020 வரை தற்செயல் விடுப்பில் இருக்கும் ஈஸ்வரன் மீது வன்கொடுமைத் தடுப்பு பிரிவில் வழக்கு பதியப்பட்டிருக்கிறதுகாவலர் ஈஸ்வரன் தலைமறைவாகி விட்டார் என்கிறது முதல் தகவல் அறிக்கைநமக்கு இருக்கும் சில அய்யங்கள்1) இப்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் ஒரு ஏட்டையாவிற்கு எப்படி மூன்று நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது2) படத்தில் ஈஸ்வரன் கையில் இருக்கும் ஆயுதம் கம்பி போல் இருக்கிறது.3) வெறுங்கையால் அவர் தாக்கியதாக வருகிறது முதல் தகவல் அறிக்கை4) வெறுங்கையால் தாக்கினால் காயம் எப்படி வரும்?5) தந்தை அம்பேத்கார் படத்தை கௌதமப்பிரியன் அணிந்திருந்ததுகூட ஈஸ்வரன் அவர்களது கோவத்திற்கு காரணாம் என்று சொல்லப்படுகிறதுஅரசு கொரோனாவைவிடக் கொடியதாக இதைக் கருத வேண்டும் என்று கோருகிறோம்பின் குறிப்பு: அங்கு நிற்பவர்களில் பெரும்பாலோர் ஏதோ ரசிக்கும் மனோபாவனையில் இருப்பது அந்தக் குற்றத்தைவிட பெரும் குற்றம்
Published on April 08, 2020 11:19
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)